Wednesday 22 January 2020

பேரறிஞர் பார்வையில் பொதுவுடைமை - விக்னேஷ் ஆனந்த்


சாதி மத-குல பேதங்கள்‌, நம்‌ மக்களை முன்னேற
ஒட்டாதபடி மூச்சுத்‌ திணறும்படி-முதுகெலும்பை
- முறிக்கும்படி அழுத்துகின்றன ! இந்நிலையில்‌, நம்‌ நாட்டில்‌ சமதர்மம்‌ 
மலருவது எங்கே? சமத்துவம்‌தோன்றுவது எப்படி? அதன்‌ முழுப்‌ பயனாகிய தோழமையைக்‌ காண்பது எங்ஙனம்‌? இதை கேட்ட மாமனிதர்தான் அன்னை தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய தலைமகன்  பேரறிஞர் அண்ணா . 

எந்த ஒரு முன்முடிவுடன் இந்த கட்டுரையைப் படிக்க வேண்டாம் .  பேரறிஞர் அண்ணா பொதுவுடைமை சித்தாந்தத்திற்கு  எதிரானவர் அல்ல . அண்ணாவிற்கு என்று ஒரு கனவு இருந்தது . 

அந்த கனவு என்ன ? 

திராவிட சமதர்ம கூட்டரசு (Dravidian Socialist Federation) .

1954 ஆம் ஆண்டு அண்ணாவின் “வேங்கையை விரட்ட வாரீர் “ என்ற 
கட்டுரை ஒன்று வெளியானது . அதில் வருணமா? வர்க்கமா  ? என்று விவாதிக்காமல் தன்னுடைய அழகு தமிழில்பொதுவுடைமை  தத்துவத்தை உள்ளடக்கியது தான் திராவிடத்தின் தத்துவம் என்கிறார் :வேங்கையை விரட்ட வாரீர்!
————————————
நமக்கு வாழ்வு கிடைக்காததற்குக் காரணம் மூன்றுண்டு, ஒன்று, நம் சக்தி நமக்குத் தெரியவில்லை, இரண்டு நாம், நம் உழைப்பைத் திருடுபவர்கள் யார் என்று கண்டுபிடிக்கவில்லை, மூன்று நம்மைக் கவனிக்கவும் அக்கறை கொண்ட சர்க்கார் நமக்கில்லை, - இவை மூன்றும் நாட்டு மக்களால் நன்கு புரிந்து கொள்ளப்பட்டால் வாழமுடியும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் நம்புகிறது.

உயிரோட்டமுடைய லட்சியத்தைக் கொண்ட தி.மு.கழகம் பெற்று 
வரும் முன்னேற்றத்தை, யாரும், எந்தச்சக்தியும் அழித்துவிட 
முடியாது. தி.மு.கழகத்தாரிடம் நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்றும் 
பாசமும், மக்களிடம்   
இத்தனை செல்வாக்கும் ஏற்பட்டுள்ளதற்குக் காரணம், நாங்கள் இதுவரை எடுத்துச் சொல்லிய கருத்துக்களில் உண்மை இருப்பதாகப் பொதுமக்கள் நம்பியிருக்கிறார்கள் 
என்பதைத்தான் சொல்கிறது.

தி.மு.கழகம் சமுதாயத்தில் நிலவுகிற சீரழிவுகளைப் போக்கவும் 
பொருளாதாரத் துறையில் நிலவும்ஏற்றத்தாழ்வுகளை நீக்கவும், 
நல்லதோர் அரசு காணவும் பாடுபட்டு வருகிறது.

நாட்டிலே மருத்துவர்கள் பலர் இருப்பர், அவர்களிலே சிலர் கண் 
வைத்தியத்தைப் பிரத்தியேகமாகப்படித்திருப்பர், அவரிடம் கண் 
நோய்களுக்கு மட்டும்தான் மருத்துவம் பெற முடியும், வேறு நோய்களுக்குஅவரிடம் மருந்துகேட்டால், தரமாட்டார், மருந்து தரத் தெரியாததால் அல்ல, அவர், 
கண் நோய்களைக் கவனிப்பதற்கென்றே பிரத்தியேகமாகப் படித்தவர்.

அதைப்போலவே, பிரசவம் போன்றவைகட்கும் மருத்துவம் செய்யப் 
பிரத்தியேகப் படிப்புப் படித்தவர்கள் இருப்பர், எல்லா வியாதிகளுக்கும் 
மருந்து தரும் வைத்தியர்களும் இருப்பர் அவர்களிடம் உடலில் வரும் எந்தவியாதிக்கும் மருந்து பெற முடியும்.

அதேபோன்று தான், இந்த நாட்டில், சில கட்சிகள் குறிப்பிட்ட சில 
துறைகளில் மட்டும் மக்களுக்கு வாழ்வு தரமுயல்கின்றன.

தி.மு.க. மருத்துவமனை!
——————————-
உதாரணமாக, கம்யூனிஸ்ட் கட்சியை எடுத்துக் கொண்டால் அவர்கள், இந்த நாட்டில் நிலவும்பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை மட்டும் போக்க முயல்கிறார்கள் 
– கண் வைத்தியர்களைப் போல்!

ஆனால், தி.மு.கழகமோ, எல்லா வைத்தியமும் பார்க்கிற 
மருத்துவமனையாக விளங்குகின்றது.

தி.மு.கழகம்தான் இந்த நாட்டில் எல்லாத் துறைகளிலும் உள்ள 
சீர்கேடுகளையும் எடுத்துக் காட்டுகிறது.

இவ்வாறாகப் பேரறிஞர் தான் கட்டி எழுப்பிய தி.மு.கழகம் பொதுவுடைமை தத்துவத்தை உள்ளடக்கியது என்றார் . 

பசுவையும் குரங்குகளையும் வணங்குகிற மூடத்தனம் இருக்கின்ற 
தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில், மனிதனை இன்னொரு 
மனிதன் கருவியாகக் கருதுகிற தெற்காசியாவில் குறிப்பாக இந்தியாவில்புரட்சிவருவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை என்று 1848 இல் காரல்மார்க்ஸ் சொன்னார். 

1966 இல் கோவை நரசிம்மபுரத்தில் தொழிலாளர் ஆற்றிய உரையில் 
பேசிய அண்ணா அவர்கள் : 

      பாட்டாளி வர்க்கத்தைக்‌ கொண்டு மட்டுமே முதலாளி சமூகத்தை 
ஒழித்துவிடலாம் ‌கம்யூனிஸ்ட்டுகள் என்கிறார்கள்‌; ஆனால்‌ நாம்‌, “இந்த இரண்டு சமூகங்களுக்கும்‌ இடையில்‌ உள்ள நடுத்தரவகுப்பினர்‌, 
முதலாளிபக்கம்‌ இழுக்கப்படாமல்‌ பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌' என்று கூறுகிறோம்‌.

இந்த நடுத்தர வகுப்பினர்‌, அச்சத்திற்கும்‌ -
அசைக்கும்‌ இடையில்‌ ஊஞ்சலாடிக்‌ கொண்டிருப்பவர்கள்‌ !

“நிலை தாழ்ந்தால்‌, எங்கே பாட்டாளியாகி
விடுவோமோ' என்ற அச்சமும்‌, ஒரு “சான்ஸ்‌' கிடைத்தால்‌ “ முதலாளி ஆகமாட்டோமா' என்ற ஆசையும்  அவர்களைப் பிடித்தாட்டுகிறது !
 என்று சொன்னார் அறிஞர் அண்ணா . இதே முறையைத் தான் அவர் 
தேர்தல் பாதையிலும் பயன்படுத்தினார் . நாம் இன்று நடக்கும் நீட் தேர்விற்கு எதிராக , தேசிய கல்விக் கொள்கைக்கு 
எதிராக , குடியுரிமைக்கு எதிரான சீர்திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடக் கற்றுக்கொள்ள வேண்டிய     யுக்தியாகும் . 

தொழிலாளர்களுக்கும் நடுத்தர வகுப்பாருக்கும் இடையே ஓர் அன்பு       பாலம் வேண்டும் என்று விரும்பியவர் அண்ணா. 

“ஒரு சிலரின்‌ ஆசைக்கு மிகப்‌ பலரைப்‌ பலியாக்குவது தான்‌ 
முதலாளித்துவத்தின்‌ முடிந்த கொள்கை! சக்திக்‌கேற்ற உழைப்பு-தேவைக்கேற்ற வசதி என்பதுதான்‌
சமதர்மத்‌ திட்டத்தின்‌ அடிப்படை நோக்கம்‌!” என்று முதலாளித்துவத்தை 
பற்றி சுருக்கமாக சொன்னவர் பேரறிஞர் அண்ணா . 

நம் நாட்டின் சமூக ,பொருளாதார நிலையை நன்றாக அறிந்த பின்னும்‌ 
பணக்காரனை மட்டுமே குறைகூறும்‌ சமதர்மம்‌ வெறும்‌ பொறாமைச்‌ சமதர்மமேயாகும்‌. ஏன்‌ இப்படிச்‌  
சொல்கிறேன்‌ என்றால்‌, நம்  நாட்டின்‌ சமுதாயஅமைப்பானது, பிறவியின்‌ காரணமாகவே - ஏழையையும் , பணக்காரனையும் அதாவது , உழைப்பாளியையும் சுகபோகியையும் உண்டாக்கி இருக்கிறது என்றார் பெரியார் . 

அண்ணாவின் பொதுவுடைமை வாதிகள் மீதான விமர்சனம் என்ன ? 

பொதுவுடைமை வாதிகட்கு, 'முதலாளி யார்‌?’ 
என்பது புரியவில்லை - ' தெரியவில்லை; ' 
சரிவரப்‌ புரிந்துகொள்ள மனமுமில்லை; 'பணக்காரன்தான்‌ முதலாளி' என்று அவர்கள்‌ தவறாகக்‌ கருதுகின்றனர்‌;

பணக்காரனுக்கும்‌ - முதலாளிக்கும்‌ உள்ள வேறுபாட்டை அவர்கள்‌ அறியவில்லை பணக்காரன்‌ முதலாளி அல்ல; பணக்காரன்‌--குளம்‌
குட்டைகளுக்குச்‌ சமமானவன்‌; முதலாளி ஆற்றுக்குச்
சமமானவன்‌; மழை பெய்தால்தான்‌ குளம்‌-குட்டைகளில்‌நீர்‌இருக்கும்‌--இன்றேல்‌ வற்றிவிடும்‌; ஆனால்‌ ஊற்றோ  என்றும்‌ நீர்‌ சுரந்துக் கொண்டே இருக்கும்‌; இத்தகைய வேறுபாடு  இருக்கிறது, பணக்காரனுக்கும்‌- முதலாளிக்கும்‌. இந்த 
விமர்சனத்தை மத்திய அரசுஊழியர்
“கோரிக்கை நாள்” பொதுக்கூட்டத்தில் 1960 ஆம் ஆண்டு சொன்னார். 

முதலாளித்துவம்‌ ஒரு மதம்‌ பிடித்த யானை; அந்த
யானையைப்‌ பிடித்து-வாழை நாரினால்‌ அதன்‌
துதிக்கையைப்‌ பிணைத்து--ஒரு வாழை மரத்தில்‌ கட்டிவிட்டு, “பார்‌, பார்‌; நான்‌ முதலாளித்துவத்தைக்‌ கட்டிப்‌
போட்டு விட்டேன்‌' என்று கூறினால்‌ சரியாகாது !

“யானை ஓர்‌ இழுப்பு இழுத்தால்‌, அதன்‌ கட்டு
அறுந்து விடும்‌; அதுமட்டுமா? விடுபட்ட யானை, தான்‌ கட்டப்பட்டிருந்த 
வாழை மரத்தையேகூட வாயில்‌போட்டுக்‌கொள்ளும்‌!

“ஆகவே, வெறும்‌ நாரினால்‌-வாழை மரத்தில்‌
யானையைக்‌ கட்டுவதில்‌ பயன்‌ இல்லை!”

சரி தீர்வு என்ன ? முதலாளித்துவத்தின்‌
முதுகெலும்பு முறிய என்ன செய்ய வேண்டும் என்று அண்ணா 
சொல்கிறார்? 

முதலாளிக்குக்‌ கிடைக்கும்‌ இலாபம்‌ அவர்கள்‌ மேனி மினுமினுக்கப் ‌ பயன்படுத்தும்‌ அளவுக்கு இருக்கக்‌ கூடாது!

காப்பாற்றுவதற்குப்‌ போதுமானது‌ தவிர, மீதிப்‌ பணத்தை வரிபோட்டு 
அரசாங்கம்‌ வாங்கிக் கொள்ள வேண்டும்‌!

அப்படிச்‌ செய்தால்‌, முதலாளிகள்‌ பெருகமாட்டார்‌
கள்‌- அவர்களிடம்‌ பொருளும்‌ குவியாது; வரிபோட்டு அவர்களிடம்‌ இருந்து வாங்கும்‌ பணத்தில் ‌மக்களுக்கு நல்லது செய்யலாம்‌; இதனால்‌ முதலாளித்துவம்‌ ஒழிந்து
விடும்‌-ஒங்கி வளராது!

முதலாளித்துவத்தைக்‌ குழி தோண்டிப்‌ புதைக்க
இன்னொன்றும்‌ செய்யலாம்‌; தனிப்பட்ட எவரும்‌ எந்தத்‌ தொழிற்சாலையையும்‌ நடத்த அனுமதிக்கக்‌ கூடாது;

முதலாளிகளிடம்‌ இருக்கும்‌ எல்லா ஆலைகளையும்‌ அரசாங்கம்‌ 
கைப்பற்றிக்‌ கொள்ள வேண்டும்‌; எல்லாத்‌தொழிற்சாலைகளையும்‌ 
சர்க்கார்‌ ஏற்று நடத்த வேண்டும்‌

அவ்விதம்‌ செய்தால்‌, அதில்‌ கிடைக்கும்‌ இலாபம்‌
அரசாங்கத்தைச்‌ சாரும்‌ - எந்தத்‌ தனிப்பட்ட
முதலாளிகளையும்‌ சாராது; அதனால்‌ முதலாளித்துவம்‌ வளராது-பூண்டே இல்லாமல்‌ ஒழிந்து விடும்‌! அப்படித்தான்‌ இன்றைய உலகில்‌ பலர்‌ செய்து வருகிறார்கள்‌ !

முதலாளித்துவத்தின்‌ முதுகெலும்பை முறிக்க
அவ்வப்போது அதைத்‌ தடுக்க வேண்டும்‌. அளவுக்கு மீறி வளர இடம்‌ 
தராமல்‌ தலைமேல்‌ தட்டிச்‌சரிப்படுத்திக்‌கொண்டே வர வேண்டும்‌!
இவ்வாறாக அண்ணா முதலாளித்துவத்தை முறிக்கும் வழியையும் பொதுவுடைமை பற்றிய தனது கருத்துக்களைக் கடிதங்களாகவும் எழுச்சி உரைகளாகவும் தமிழ் சமுதாயத்திற்கு எடுத்துக்கூறியுள்ளார் .

No comments:

Post a Comment