Sunday 12 January 2020

அண்ணாவின் திராவிடநாடு - விக்னேஷ் ஆனந்த்


அண்ணாவின் திராவிடநாடு - விக்னேஷ் ஆனந்த்
    தமிழ் சமுதாயத்தில் உள்ள வளைவு நெளிவுகளை நிமிர்ந்தவும் இந்த சமுதாயத்தின் அடிப்படை அமைப்பு முறை மாற்றவேண்டும் என்ற உறுதியில் 1949 ல் உருவாக்கிய இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம் .

       1917 -நவ் 7ஆம் ஒரு முழக்கத்தை வைத்தார் டி.எம்.நாயர்கேரளம் , கண்ணடம், ஆந்திரம் , தமிழ் பிரதேசங்களின்  அடங்கியதுதான் தென் இந்தியா . இந்த தென் இந்தியாவில் வாழும் மக்கள் யாவரும் ஒரே கூட்டத்தவர். அதாவது திராவிடர். இந்த நான்கு சகோதரர்கள் பேசும் பாஷை ஒரு மூலக்கூரிலுருந்து பிரிந்தவை . இந்த தென் இந்தியா இந்திய மத்திய அரசிடமிருந்து விலகி , நான்கு  பிரதேங்களும் சேர்ந்த கூட்டு அரசு ஏற்பட வேண்டும் . எங்கள் தென்னிந்தியர் விடுதலை கழகம் அதற்காகவே தொடங்கப்பட்டது . அதற்காகவே இந்த சங்கம் பாடுபட போகிறது  ..

    எனக்கு பாஷ அபிமானமும் கிடையாது தேச அபிமானமும் கிடையாது மனிதாபிமானம் மட்டுமே உண்டுனு சொன்ன Mr.கலகக்காரர் பெரியார் என்ன சொன்னார்

பந்தயம் வேண்டுமானாலும் கட்டுவேன்!

    மத்திய அரசாங்க பிடியில் இருந்து திராவிடநாடு தனிநாடாக பிரியாவிடில் சுதந்திரம் இல்லை,சோறு இல்லை,மான வாழ்வு இல்லை.

இது உறுதி!உறுதி!உறுதிஎன்று ...

    அண்ணா ஒருவர் தான் 1962 வரையிலும் திராவிட நாடு கோரிக்கையை கைவிடாமல் இருந்தவர் . தமிழ் தேசியம் பேசிய எந்த ஒரு மகானும் தனி நாடு கோரிக்கையை முன் வைக்கவில்லை.

    ஆனால் அண்ணா திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டதால் தான்  தனி ஈழம் அமையவில்லை என்று இன்றும் வெறுப்பு அரசியல் செய்வோர் ஒருபுறம் விஷம பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சரி அண்ணா கேட்ட திராவிட நாடு தான் என்ன ?

    மொழிவழிப்பிரிந்து, இனவழி கூடிய பிரிந்து செல்ல உரிமையுள்ள கூடிய சமதர்ம திராவிட கூட்டரசு. இது தான் பேரரக்கன் அண்ணா அவர்கள் முன் மொழிந்த திராவிட நாடு .

1953 சென்னை மாகனத்திலிருந்து ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டது.

1955 - தேவிகுளம் , பீர்மேடு பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டது .. 

    இதற்கிடையில் திராவிட நாடு கோரிக்கை இன்னும் வலு பெற்றபோது நேரு அவர்கள் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டால்
தேசிய உணர்வு மலுங்கி விடும் என்ற பதட்டத்துடன் மேற்கு, கிழக்கு, உத்தர, தட்சிண, மத்திய மாகாணங்களாக பிரிக்கும் திட்டத்தை நேரு வெளியிட்டார்.

    கடுமையான போராட்டத்தை தமிழகம் சந்தித்தது ... தட்சனை பிரதேச திட்டத்திற்கு தமிழகத்தில் அண்ணாவும் பெரியாரும் மிக கடுமையாக எதிர்த்தனர். பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில், 1961ம் ஆண்டு ஜனவரி மாதம் சர் சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் தேசிய ஒருமைபாட்டுக்குழு என்கிற ஒரு ஆலோசனைக்குழுவை காங்கிரஸ் அமைத்தது

    இதற்கிடையில், தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் (NIC) என்கிற அனைத்து மாநில முதல்வர்களை உள்ளடக்கிய இந்திய அளவிலான அமைப்பை 1961 செப்டம்பரில் நேரு உருவாக்கினார்.

       1962 ஆகஸ்டில் விலைவாசி உயர்வைக் கண்டித்து நடத்திய போராட்டத்திற்காக, அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி உள்ளிட்ட திமுகவின் முக்கியமான தலைவர்கள் அனைவரும் சிறையில் இருந்த நேரத்தில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் கம்யூனிஸ்ட்  உட்பட அனைத்துக் கட்சிகளும் காங்கிரஸை ஆதரித்தனர். திமுக தனித்துப் போட்டியிட்டது. கடும் போட்டிக்கு இடையே திமுக வென்றது.

    திமுகவின் இந்த வெற்றி மாநில காங்கிரஸாரை கடுமையாக பாதித்தது. பிரிவினை தடுப்பு மசோதா கொண்டுவரப்பட திருச்செங்கோடு வெற்றியும் ஒரு காரணம்.

    திமுக தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து 1951 செப்டம்பர் 17 முதல், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ம் தேதியை திராவிடர் விடுதலை நாளாக கொண்டாட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

       1962 அக்டோபர்நவம்பர் வரை
இந்திய -சீனப்போர் நடைபெற்றது. போருக்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சி.பி.ராமசாமி அய்யர் பரிந்துரை மற்றும் தேசிய ஒருமைபாட்டுக்குழு முடிவுகளின் அடிப்படையில் பிரிவினைவாத தடுப்புச் சட்ட மசோதா கொண்டுவரப்பட்டது.

    மசோதாவின் மீது பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரன், திராவிட நாடு அடைவதே திமுகவின் லட்சியம் என்று குறிப்பிட்டார்.

    நாடாளுமன்றத்தில் இம்மசோதா முன்வைக்கப்பட்ட போது, இதை பிரிவினை எதிர்ப்பு மசோதா என்பதைவிட, திமுக எதிர்ப்பு மசோதா என்றே தென்னகத்தில் மக்கள் நினைக்கிறார்கள் என்று ஆந்திராவைச் சேர்ந்த நரசிம்ம ரெட்டி என்கிற உறுப்பினர் குறிப்பிட்டார்

    ஒரே ஒரு கட்சிக்கு எதிராக மசோதா கொண்டுவரப்படுவதாக விமர்சனம் எழுந்த நிலையில், அவையில் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் .கே.சென், “ யாரெல்லாம் வெளிப்படையாக பிரிவினை கேட்கிறார்களோ, யாரெல்லாம் வெளிப்படையாக தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசுகிறார்களோ, பஞ்சாப்பிலிருந்து தென்னிந்தியா வரை, அவர்களுக்காகத்தான் இம்மசோதா
என்று விளக்கமளித்தார

உயிர் கொடுத்தாவது பிரிவினைத் தடுப்போம் என்று பேசியவரகளுக்கு பதில் தர 1963 ஜனவரி 25-ம் தேதி இம்மசோதாவை எதிர்த்து அண்ணா பேசினார்

    உயிர் கொடுத்தாவது திராவிட விடுதலையைத் தடுப்போம் என்று பேசியவர்கள் மீது ஓரு துளியும் எனக்கு கோபம் இல்லைதெளிவு பிறக்கும் சூழ்நிலையை நாம் உண்டாக்க வேண்டும் . உயிர் கொடுக்குற பிரச்சனைதான் இது ! பெறுவதற்கும் உயிர் கொடுக்க வேண்டும்.தடுப்பதற்கும் உயிர் கொடுக்க வேண்டும். உயிர் கொடுப்பது எப்படி என்றால் ஒருவருக்கொருவர் குத்துக்கொண்டு சாவது என்று நாங்கள் எண்ணவில்லை

    பாகிஸ்தான் கேட்டபோது உயிரை கொடுத்து தடுப்போம் என்றவர்கள் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார்கள்.

       திராவிடஸ்தான் கோரிக்கையைஎதிர்த்து பேசிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பூபேஸ்குப்தா - திராவிடஸ்தான் என்கிற அபாயகரமான குருட்டுத்தனமான, கருத்தைப் பரப்பும் மேடையாக பாராளுமன்றத்தை பயன்படுத்த கம்யூனிஸ்ட் கட்சி அனுமதிக்காதுஎன்று முழங்கினார்.. 

    பாகிஸ்தானிலிருந்து பக்டூனிஸ்தான் பிரியவேண்டுமெனக் கூறுகிற கம்யூனிஸ்டுகள் ,இந்துஸ்தானிலிருந்து திராவிடநாடு பிரியக்கூடாது என்பதற்குக காட்டுகிற காரணங்கள் என்ன? என்று கேள்வி எழுப்பினார் அண்ணா ... பதில் இல்லை.. 

    இந்த மசோதாவைத் (பிரிவினை சட்ட மசோதாவை) திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் .இல்லையென்றால் இது சட்டபுத்தகத்தில் ஏறிவிட்டால்-இப்போது மட்டுமல்ல,என்றைக்கும் கருதுவராக ; இந்தியாவிலே ஒரு நிலைமை ஏற்பட்டது . அப்போது ஒரு கட்சியினரைச் சமாளிக்க - அல்லது என் நண்பர் புபேஷ் குப்தாவின் வார்த்தைகளைப் பயன்படுத்துவதனால் ,ஒரு தன்னந்தனி ஆளைச் சமாளிக்க - இந்திய அரசியல் சட்டத்திற்கே ஒரு திருத்தம் கொண்டு வர நேரிட்டது என்பர் என்றார் அண்ணா ..

    தேசிய ஒருப்பாட்டினை எப்படி ஏற்படுத்துவது என்பதற்கான வழி கூறும்படி , இந்தக் கமிட்டி பணிக்கப்பட்டது - பிரிவினை பிரச்சாரத்தை ஒடுக்கமட்டும் அல்ல . தேசிய ஒருப்பாட்டினை ஏற்படுத்த இந்த கமிட்டி தந்த யோசனைகள் யாவை? தேசிய ஒருப்பாடு கமிட்டியுடைய யோசனையிலிருந்து பிறந்துள்ள பிரிவினை தடைச்சட்டம் தவிர ஆக்க வேலைத்திட்டங்கள் யாவை ? என்று தெரு முச்சந்தியிலோ .. கட்சி கூட்டத்திலையோ ..கட்சி மாநாட்டிலோ கேட்கவில்லை .. நிறைந்த பாராளுமன்றத்தில் கேட்டவர் தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணா .. 

    அன்றிருந்த பிரபல நாளேடானஇந்துஸ்தான் டைம்ஸ்இவ்வாறாக கேலிச்சித்திரம் போட்டிருந்தது - ஒரு  காங்கிரஸ்காரர் நம் அண்ணாவுடன் தொலைபேசியில்பலே மிஸ்டர் அண்ணாதுரை ! உங்களுக்கு எதிராகவாவது நாடு ஒன்றுப்பட்டு ஒருமைபாடு ஏற்படட்டும்என்று தலையங்கம் வெளியிட்டிருந்தது

    பிரிவினைவாத தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், 1963 ஜூன் 8,9,10 ஆகிய தினங்களில் திமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டப்பட்டு, திமுகவின் விதி 2 திருத்தப்பட்டது. அதன்படி, “தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத்தன்மை, அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு, இயன்ற அளவு கூடுதல் அதிகாரங்களைப் பெற்று, நெருங்கிய திராவிட கூட்டமைப்பாக இருக்க பாடுபடுவதுஎன்பது கொள்கையானது.

No comments:

Post a Comment