Wednesday 22 January 2020

குழப்பவாதிகளின் குரல்வளையை நெரிக்கும் குறள் - போதி சத்வா




ப்படி ஒரு கட்டுரை நான் எழுதுவதற்குக் காரணம்,  எங்கோ ஒரு நாட்டில் (தாய்லாந்து) பிரதமர் மோடி திருக்குறளைப் பற்றி  பேசிவிட்டாராம்! உடனே திடீரென்று  இங்குள்ள இந்துத்துவ வாதிகளுக்குத் திருக்குறளின் மீது பாசம் பொங்கியெழுந்து சில தினங்களாக திருவள்ளுவர் படத்தின் வெள்ளுடைக்குக் காவி வண்ணம் அடித்தும்அவரின் சிலைக்கு ருத்ராட்சம் அணிவித்தும்காவி உடை போர்த்தியும் தனது அப்பட்டமான காவி மதவாத அரசியலை முன்னெடுத்து வருகிறது ஆளும் பாஜக அரசு. இத்தனை நாட்களாக இவர்கள் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. இதற்குத் துணைபோனவர்களில் பெரும்பாலானவர்கள் சூத்திரர்கள்தான். இதில் ஆச்சர்ப்படுவதற்கோஅதிர்ச்சியடைவதற்கோ ஒன்றுமில்லை. இந்தியாவின் பெரும்பான்மை சமூகத்தைஆரியச் சிறுபான்மைக் கூட்டம் "இந்து" என்று ஒரு பொய்யான கருத்தின் பெயரால் ஏமாற்றி வந்திருக்கிறது. (வருகிறது). இந்த இந்து என்ற பெயரோ ஆங்கிலேயன் கொடுத்த பெயராக இருந்தாலும்... இந்த சனாதன கோட்பாட்டிற்கான விதையோ ரிக் வேதத்திலேயே(புருஷ சூக்தம்) தூவப்பட்டு "மனு"வினால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. அதன் விளைவுகள்தான் இப்படியெல்லாம். சரி அப்படி எந்தத் திருக்குறளைச் சொல்லி அசத்திவிட்டார் மோடி?
"தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
 வேளாண்மை செய்தார் பொருட்டு" குறள்:212
இதன் பொருள்: தகுதியுடையவருக்கு உதவிடும் பொருட்டேஒருவன் உழைத்துத் திரட்டிய பொருள் பயன்பட வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. இந்தக் குறளை மேற்கோள் காட்டிப் பேசுவதற்கு பிரதமர் மோடி எந்தவிதத்தில் தகுதியுடையவராவார்?
இந்த குறளின் பொருளுக்கு நேர் முரணாகவே பிரதமர் மோடி தமது சொந்த நாட்டு மக்களிடம் செயல்படுகிறார். அவர் இந்திய மக்களிடம் "கொடுங்கோன்மை" அதிகாரத்தைப் பின்பற்றிக்கொண்டு...அங்குச் சென்று "ஒப்புரவறிதல்" பற்றி பேசுகிறார். இது வேடிக்கையானது!
"முத்தலாக்" தீர்ப்பு என்ற பெயரில் இஸ்லாமிய மக்களின் உளவியல் தாக்குதல் நடத்துவது,
சட்டப்பிரிவு 35 & 370 ரத்து செத்து ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் உரிமையினை பறித்தது,
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் ஒருதலை பட்சமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டு இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பறித்தது
குடியுரிமை சட்ட மசோதா என்ற பெயரில் ஒரு சட்டத்தை நிறைவேற்றித் திட்டமிட்டு மறைமுகமாக இஸ்லாமிய மக்களைச் சொந்த இந்நாட்டிலேயே அகதிகளாக அலையவிடுவது போன்ற அப்பட்டமான மதவெறி மற்றும் மனித உரிமை மீறல் போன்ற ஆட்சியினையே இங்கு நடத்திவரும் ஆர்எஸ்எஸ் பாஜக அரசின் ஆட்சி எப்படி என்றால்.... வள்ளுவர் பாணியில் சொல்வதென்றால்...
"கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து" -                                        குறள்:551
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டுமுறையில்லா செயலை செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைச் செய்பவனைவிடக் கொடியவன் என்கிறார் வள்ளுவர்.  ஏன் மோடி அவர்கள் இந்த குறளினை தாய்லாந்தில் பேசியிருக்கலாமே!
  "பார்ப்பனர்களின் சூழ்ச்சி"
ஆதிமுதலிலேயே... பார்ப்பனர்களை பொருத்தமட்டில் அவர்களே அறிவில் சிறந்தவர்கள். மற்ற யாவரும் அவர்களின் கீழானவர்கள்தான் என்கிற அற்பத்தனமான புத்தியுடையவர்கள்.  ஏன் தற்போது கூட ஒய். ஜி. மகேந்திரனின் மகளான ஒய். ஜி. மதுவந்தியின் திமிரான நேர்காணலை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படி எவரேனும் அவர்களை விஞ்ச முற்பட்டால்... அவர்கள் எங்களைச் சார்ந்தவர்கள்தான் என்று முத்திரை குத்துவதுதான் அவர்களின் வழக்கம். 
பேராசிரியர் சுபவீ அவர்களின் பாணியில் சொல்வதென்றால்... முதலில் எதிர்ப்பதுஅவ்வாறு எதிர்க்க முடியாவிட்டால்அவர்களினூடே பயணித்து அவர்களின் தத்துவத்தை சிதைப்பது. இது வரலாறு நெடுக்க நடந்துவருகிறது. உதாரணமாக வைதீக பிராமண மதம் யாகத்தில் உயிர்க்கொலை செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தபடியாலும்நால்வகைச் சாதிப்பாகுபாடுடையதாய் பிராமணர்மட்டும் உயர்ந்தவர் என்னும் கொள்கையுடையதாயிருந்த படியாலும்இவற்றிற்கு மேலாகபிராமணர் தவிர மற்றவர்கள் வேதத்தை படிக்கக்கூடாது என்று தடுத்துவந்த படியாலும்இவ்விதக் குறுகிய கோட்பாட்டினையுடைய வைதீக மதத்தில் மக்களுக்கு மனம் செல்லவில்லை. இந்த வேத வேள்விஉயிர்பலிதீண்டாமை ஆகியவற்றை எதிர்த்துக் கிளம்பிய பௌத்தம் மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றது. இந்த பௌத்தத்தை ஒழிக்க வைதீக மதம் வேள்வி என்ற பெயரில் நடத்திய உயிர்க்கொலையைக் கைவிட்டுசைவத்திற்கு மாறியது. அதாவது பௌத்தத்தின் "கொல்லாமை" யினை தனதாக்கிக்கொண்டது. ஆனாலும் வைதீக மதம் மக்களிடையே அவ்வளவாகச் சென்று சேரவில்லை. அந்தளவிற்குப் பௌத்தம் வேரூன்றி நின்றது!  பொல்லாத நாடகமெல்லாம் நடத்திய வைதீக மதம் இறுதியாகப் பகவான் புத்தரையே விஷ்ணுவின் அவதாரமாக மாற்றிஇறுதியில் பௌத்த கொள்கையினையே சிதைத்துவிட்டது. இதைப்பற்றி எழுதினால் கட்டுரையின் தலைப்பு திசைமாறி சென்றுவிடும். இப்போது செய்திக்கு வருகிறேன்.  
இது வரலாற்றில் நிகழ்ந்திருந்தாலும்... இன்றுவரை வைதீக பார்ப்பன மதத்திற்கு இன்றுவரை பெரும் சவாலாக இருப்பது தமிழகம். காரணம் இது மொழியாலும்இனத்தாலும்பண்பாட்டாலும் ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. அந்த வரலாற்றினைச் சிதைத்து அதிலும் தனது இந்துத்துவ பார்ப்பனீய கருத்தினை நுழைத்திட வேண்டும் என்பதின் முன் முயற்சியாகத்தான் பாருங்கள் திருக்குறள் இந்து நூல்தான்,
அதில் "வாலறிவன்இந்திரன்தாமரைக்கண்ணன்திருமகள் என்றெல்லாம் வருகிறது என்று திரித்துச் சிதைப்பதற்குத் தமிழனின் மிகமுக்கியமான பதிணென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான "திருக்குறளை" தற்போது கையில் எடுத்திருக்கிறது. எல்லா இடங்களிலும் நுழைந்து தனது மதத் துவேஷத்தை பரப்பிக்கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் கும்பலால் தமிழகத்திற்குள் நுழையவில்லை. அந்த ஆத்திரம் அவர்களால் இப்படிச் செய்யத் தூண்டுகிறது.
என்னதான் "இந்துக்களே ஒன்றுசேருங்கள்" என்று இன்றுவரை கூலிக்கு ஆளவைத்துக் கூவியும்கூட தற்போதுவரை அதனால் ஒரு ஆணியும் இங்கு பிடுங்க முடியவில்லை. காரணம் திருக்குறள் என்பதே வைதீக பார்ப்பனீய மதக் கருத்துகளை எதிர்த்து தமிழனுக்கு மட்டுமல்ல உலக மானுடத்திற்கே சமத்துவத்தையும்அறநெறிகளையும் போதிக்கக் கிளம்பிய நூல் என்பது அவர்களுக்கே தெரியாது என்பதுதான் வேடிக்கை! மேலே அவர்கள் குறிப்பிட்ட வார்த்தைகளுக்கெல்லாம் பின்னால் விளக்கமளிக்கிறேன்.
            "திருக்குறள் பற்றி சில தகவல்கள்"
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi69oxplw8AFAFtkDufLmemMnvQb2OefTUvUFS3fQuHFX6N2KckF5TNyBIGXtbO8z2OJk5Bfdn1NMSPG0D0MO1GmUxJrICsHFI_9RONO4-YbagNPUXkPaU6hZJZNbYQwArRuSY99bHepNVJ/s1600/1577870346601035-1.png
திருக்குறள் வெள்ளைக்காரர்களின் காலத்தில் அன்றைய சென்னை நகர மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றிய "எல்லீஸ் துரை" அவர்களிடம் பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பாட்டனார் கந்தப்பனார் அவர்களால் கொடுக்கப்பட்டுபின்னர் அது 1812 ல் அச்சிடப்பட்டு பிறகு 1840 ல் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது நூல். கிட்டத்தட்ட 160 ஆண்டுகளுக்குமேல் கடந்து விட்டது. இந்நூல் பௌத்தர்களின் நூல் என்று பண்டிதர் அயோத்திதாசர் தன் வாதத்தை முன்வைக்கிறார். காரணம் பௌத்தர்களின் தத்துவ கோட்பாடான "வினயபீடகம்தம்மபீடகம்சுக்தபீடகம்" குறளும் முப்பாலினை விளக்குகிறது. என்றும் முதலில் இதன் பெயர் "திரிக்குறள்" காலத்தால் திரிந்து பின் திருக்குறளானது என்றும் கூறுகிறார். அதுமட்டுமல்லாது அவர் 55அதிகாரங்களுக்கு விளக்கவுரையும் எழுதியிருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மயிலை சீனி. வேங்கடசாமி போன்றோர் பௌத்த கருத்துக்கள் இருந்தாலும்... அதில் அதிகம் சமணக் கருத்துக்களே நிரம்பக் காணப்படுகின்ற...ஆதலால் அவர் சமணராக இருக்கலாம் என்று துணிகின்றனர்.
     "திருக்குறள் இந்து மத நூலா" 
பள்ளிக் காலகட்டங்களில் போகிற போக்கில் ஒரு பத்துக் குறளை மனப்பாடம் செய்துவிட்டு இதுதான் குறள் என்று ஒரு குறுகிய எண்ணத்துடன் இருந்த நான்தற்போது திருக்குறள் இந்துமத நூல்தான் என்று ஒரு விசமத்தனமான பிரச்சாரத்தினை பரப்பி வருகிற பார்ப்பனர்களையும்அவர்களின் ஏவலர்களையும் கடுமையாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்கிறார்கள் பேராசிரியர்களும்பாமர மக்களும். 

ஏன் அப்படி என்னதான் குறளில் சொல்லப்பட்டிருக்கிறது என்று திருக்குறளை முழுமையாகப் படிக்க ஆரம்பித்தேன். திருக்குறளுக்கு மணக்குடவர் தொடங்கி  கலைஞர் கருணாநிதி அவர்கள் வரை ஏராளமான அறிஞர்கள் உரையெழுதியிருக்கிறார்கள். அதில் சிறந்தது என்று இன்றும் பேசப்படுவது பரிமேலழகரின் உரை. ஒருவகையில் நான் முதலில்  பாஜகஆர்எஸ்எஸ் கூட்டத்திற்கு நன்றி சொல்லவேண்டும். அவர்கள் இப்படியொரு பரபரப்பை கிளப்பாவிட்டால் நான் முழுமையாகத் திருக்குறளைப் பற்றியும்பரிமேலழகர் யார் என்பதையும் நிச்சயமாக தெரிந்திருப்பேன் என்று சொல்லமுடியாது.  நான் ஏன் பரிமேலழகர் உரையைத் தேர்ந்தெடுத்தேன் என்றால் அவர் காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாள் கோயிலின் அர்ச்சகர் பரம்பரையில் பிறந்தவர். ஏனென்றால் அவர்கள்தான் திரிப்பதில் வல்லவர்களாயிற்றே அதனால்தான். முதலில் நான் "வள்ளுவர் நாத்திகராஆத்திகராஎன்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதினேன். ஆனால் திருக்குறளை முழுமையாக படித்தபிறகுதான் என்னால் உணரமுடிந்தது. அவர் நாத்திகருமில்லைஆத்திகருமில்லை. அவர் ஒரு வாழ்வியல் சிந்தனையாளர் என்று.
  வரலாறு  இருவேறுபட்ட மனிதர்களை நம்மிடம் மறக்கமுடியாதபடி பதிவு செய்துள்ளது. ஒன்று மக்களை கொடுமை செய்து அவர்களின் துன்பங்களில் இன்பத்தைக் காணும் சர்வாதிகாரப் போக்குடையவர்களையும்,
அவர்களுக்கு நேர் எதிராகத் துன்பத்தில் உழலும் மக்களின் உரிமைக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து மறைந்துபோன மாமனிதர்களையும் வரலாறு எப்போதும் நம்மிடம் நினைவூட்டிய கொண்டிருக்கிறது.
காரணம்... நாம் எப்படி வாழவேண்டும்... எப்படி வாழக்கூடாது என்கிற பாடத்தினை நாம் படித்துக் கற்றுக்கொள்வதற்காக.

திருக்குறளைத் திரிப்பதற்கு அவர்களுக்குக் கிடைத்த வார்த்தைகளோ நான் மேற்கூறிபடி 
வாலறிவன்இந்திரன்தாமரைக்கண்ணன்திருமகள் போன்றவைகள். ஆனால் இந்த வார்த்தைகளையெல்லாம் வள்ளுவர் எந்த நோக்கில் பயன்படுத்தியுள்ளார் என்பதுதான் முக்கியம்.
குறிப்பாக...
"தாம்வீழ்வார் மென்றோள் துயிலின்
இனிதுகொள் தாமரைக் கண்ணான் உலகு" - குறள்:1103
"புணர்ச்சிமகிழ்தல்" என்கிற அதிகாரத்தில் சொல்கிறார்.
அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து உறங்குங்குவதைவிட... தாமரைக்கண்ணனின் உலகம் என்ன அவ்வளவு இனிமையானதாஎன்று கேட்கிறார் வள்ளுவர்.
இதில் யாரைப் பெருமையாய் பேசுகிறார்காதலியினையாஅல்லது நீங்கள் சொல்லும் தாமரைக் கண்ணனையா?
தாமரைக்கண்ணன் என்பது விஷ்ணு என்கிற கடவுளின் இன்னொரு பெயர். அவனுக்குத் திருமால் என்கிற இன்னொரு பெயரும் உண்டு.
இந்தக் குறளுக்கான பொருளைக் காவிகள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. (ஏதாவது இருந்தால்தானே)
அடுத்ததாக...
"மடியுளாள் மாமுகடி என்ன மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்" - குறள்:617
எந்த முயற்சியும் செய்யாத ஒருவனின் சோம்பலில் மூதேவி இருக்கிறாள். ஊக்கத்தோடும்முயற்சியோடும் உள்ளவனிடம் திருமகள்(லட்சுமி) தங்குவாள் என்று வள்ளுவர் கூறுகிறார்.
மேற்கண்ட குறளை வள்ளுவர் "ஆள்வினையுடைமை" என்கிற அதிகாரத்தில் வைத்துள்ளார். இந்தக் குறளில் வள்ளுவர் முதன்மைப் படுத்துவது  சோம்பலையும்முயற்சியினையும் தானே தவிர லட்சுமியை அல்ல. வள்ளுவர் உயர்ந்த ஒரு செயலினை சுட்டுக்காட்ட... வேறொரு தாழ்ந்த மற்றும் இயல்பாகவே மக்களிடம் புழக்கத்தில் உள்ள பெயர்களையே எடுத்தாள்கிறார்.
இயல்பாகவே கிராமப்புறங்களில் பார்க்கலாம் யாரவது சோம்பேறித்தனமாக உட்கார்ந்திருந்தால்... " ஏய் ஏன்டா மூதேவி மாதிரியிருக்கிற போய் வேலையப்பாருடா" என்று சொல்வார்கள் இதைத்தான் வள்ளுவரும் சொல்கிறார். லட்சுமியை (பணம்பொருள்) மட்டும் பேசுகிற இவர்கள் அதில் முக்கியமாக சொல்லப்படுகிற முயற்சிஊக்கம் இவற்றை ஏன் பேசுவதில்லை?
சோம்பலில்லாமல் முயற்சிசெய்தால் திருமகள் (லட்சுமி) மட்டுமல்ல பணம்பெயர்புகழ் எல்லாம் வந்துசேரும். லட்மியை போற்றுவதாக இருந்திருந்தால் வள்ளுவர் ஏன் இந்தக் குறளை "ஆள்வினைவுடைமை" என்ற அதிகாரத்தில் பேசவேண்டும்? "தவம்" என்ற அதிகாரத்தில் வைத்து தவம் செய்தால் திருமகள்(லட்சுமி) வருவாள் என்று எழுதியிருக்கலாமே!
         மேற்கூறிபடி அதிகாரத்திலேயே வள்ளுவர்
"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்" குறள் :619
என்று தெளிவுபடக் கூறுகிறார்.
கடவுளே (திருமகளே!) என்று நீங்கள் மண்டியிட்டு வேண்டியும் எதுவும் நடக்காமல் போனாலும்... கடுமையாக முயற்சி செய்தால் உங்களின் முயற்சிக்கேற்ற பலன் நிச்சயம் கிட்டும் என்று முயற்சியினை தானே முதன்மைப்படுத்துகிறார்! இந்த எளிதான வார்த்தைகளை கூடவா இவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை!
ஆர்எஸ்எஸ் குழப்பவாதிகள் எல்லாவற்றையும் குழப்புவதுபோல் குறளையும் குழப்ப முயல்கிறார்கள்.
"அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்" குறள் :30
இந்தக் குறள் இருப்பதோ "நீத்தார் பெருமை" என்னும் அதிகாரத்தில்.
எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்   
(நீதி வழுவாத்தன்மை கொண்டவர்) 
அவரே அந்தணர். ஆனால் பரிமேலழகரோ அந்தணர் என்பவரைத் துறவி என்று சொல்கிறார். அந்தணர் என்ற சொல்லுக்கு" குளிர்ந்த தன்மை"கொண்டவர் என்ற பொருளும் உண்டு.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு" குறள் :21
தமக்குரிய ஒழுக்கத்தில் உறுதியாக நின்று ஆசைகளைத் துறந்து உயர்ந்த மேன்மக்களின் பெருமையே சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் துணிந்து சொல்கின்றது.
இது இறந்த காலத்தைக் குறித்துச் சொல்லப்படுகிறது.
அடுத்து...
"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி" குறள்:25
"நீத்தார் பெருமை" என்கிற அதிகாரத்திலிருக்கும் மேற்கண்ட குறளில் வரும் இந்திரனுக்கு விளக்கம் சொல்வதற்கு முன்...
"பிறனில் விழையாமை" என்கிற அதிகாரத்தில் வள்ளுவர் எழுதிய கீழ்காணும் குறளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி" குறள் :145
பிறருடைய மனைவியிடம் நெறிதவறி நடக்கின்ற செயல் எளியது என்றெண்ணி செல்கிறவன் எப்போது அழியாத நிலைநிற்கும் பழியினை அடைவான். என்று சொல்கிறார். நான் ஏன் இந்த குறளினை சுட்டிக்காட்டுகிறேன் என்றால்...
இப்போது" இந்திரன் "என்ற தேவேந்திரனை மேற்கண்ட குறளோடு பொருத்திப் பாருங்கள்.
தன் ஐம்புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றால் மனிதனுக்கு என்ன நடக்கும் என்பதற்குச் சான்றாகத் தேவர்களின் தலைவனான இந்திரனே சான்றாக நின்று ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தி வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக்காட்டுகிறான்.  என்று பொருள் கொண்ட அந்தக் குறளில்...  
இவர்கள் பெருமை பேசும் "இந்திரனை" எந்தக் கண்ணோட்டத்தில் வள்ளுவர் பார்க்கிறார் என்று பாருங்கள். 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlM58NMbqw5YnRKdYMA9u9oxphfRFzhIoWKjwzMglkX-pmLRE5X1RGWxbXEEsmAacfY80iPKUdLJYZXhX4057uqBFS4m_sKjrg_QvWT2KKeKR0QLdcajFD8cp70c6dk27a8N0I_Qe2o-nE/s1600/1577870342901933-2.png
இந்திரனுக்கு சாபம் தரும் கௌதம முனிவர்
கௌதம முனிவரின் மனைவியாகக் காட்டில் தவம் புரிந்து கொண்டிருந்த அகலிகை தன் கணவனின் நிழலாக அவனுக்குப் பணிவிடை புரிந்து பிறிதொரு நினைப்பே இல்லாமல் வாழ்ந்தாள். பேரழகியான அவளைக் கண்டு காதல் கொண்டான் "இந்திரன்" . ஒவ்வொரு நாளும் கௌதமர் விடியற்காலையில் எழுந்து கங்கைக்குச் சென்று நீராடி பூஜைகளையும் தியானத்தையும் முடித்துவிட்டுத்தான் வருவார் என்பதைக் கண்டு கொள்கிறான்.
ஒருநாள் பின்னிரவில் விடிவெள்ளி எழுவதற்கு முன்னரே கௌதமரின் குடில் வாயிலில் வந்து நின்று ஒரு சேவலாக மாறி குரலெழுப்புகிறான். பொழுது விடிந்தது என்று எண்ணி கௌதமர் தன் ஆடையையும் பூசைக்கான பொருட்களையும் எடுத்துக் கொண்டு அகலிகையிடம் விடை பெற்று கங்கைக்குச் செல்கிறார். உடனே கௌதம முனிவரின் வேடம் தாங்கி அரையிருளில் குடிலுக்குள் நுழைந்தான் இந்திரன்.
இன்னும் பொழுது விடியவில்லை” என்று சொல்லிவிட்டு அகலிகையை அணுகி அவளை அணைத்து உறவு கொண்டான். சற்று தூரம் சென்ற பின்னர் தான் உண்மையில் பொழுது விடியவில்லை ஏதோ தவறு நடந்துவிட்டது என்று உணர்ந்த கௌதம முனிவர் தன் குடிலுக்குத் திரும்பி வந்தார். அங்கு இந்திரனுடன் அவள் காமத்திலாடிக் கொண்டிருப்பதைக் கண்டு கடும் சினம் கொண்டு கங்கை நீரை எடுத்து இந்திரன் மேல் தெளித்து உன் உடலெங்கும் பெண்குறிகள் முளைக்கட்டும் என்றார். அவன் காலில் விழுந்து மன்னிப்பு கோரியபோது அவை கண்களாக மாறட்டும் என்று மறுசொல் கொடுத்ததாகப் புராணங்கள் கூறுகிறது. 
இதில் வரும் இந்திரனின் யோக்கியதையினையே வள்ளுவர் குறிப்பிட்டு நமக்கான வாழ்வியலைப் போதிக்கிறார்.
வள்ளுவரின் ஒவ்வொரு குறளுக்கு பின்னும் ஒரு நாசுக்கான பொருள் பொதிந்திருக்கும்.
வள்ளுவரின் காலத்தில் மக்களுக்கு அறிவுக்வொவ்வாத புராணங்களிலிருந்து எவையெல்லாம் உண்மை என்று கற்பிக்கப் பட்டிருக்கிறதோ! அவையெல்லாம் அறிவுக்குப் புறம்பானது மனித ஒழுக்கத்திற்கெதிரானது என்று மக்களுக்குப் புரியும் வகையில் புராணங்களில் வரும் கதை மாந்தர்களையும் அவர்களின் ஒழுக்கமில்லா செயல்களையும் வள்ளுவர் அவருக்கே உரித்தான பாணியில் எடுத்தாள்கிறார். 
  "வள்ளுவர் போதிக்கும் ஒழுக்கம்" 
ஒழுக்கம் தவறினால் என்ன நடக்கும் என்று வள்ளுவர் கூற்றினை மேலே இரு குறள்களின் வாயிலாகப் பார்த்த நாம். அதனை மேலும் சில குறள்கள் வாயிலாகப் பார்க்கலாம்.
"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்" - குறள்:140
இந்தக் குறளுக்குப் பலரும் பலவிதத்தில் உரை எழுதினாலும்... பரிமேலழகரோ ஒருவர் பல்வேறு நூல்களை கற்றிருந்தாலும் உலகத்தோடு ஒத்துப்போகவேண்டும். இல்லையேல் அவர்கள் கல்லாதவர்கள் என்று பொருள் தருகிறார்.
ஒழுக்கம் தவறிய இந்திரனை நிலையைக் குறிப்பிட்ட வள்ளுவர். மேற்கண்ட பரிமேலழகரின் கருத்துடன் ஒன்றிப்போவாராஇல்லை அது வள்ளுவரின் கருத்தாகத்தான் கொள்ள முடியுமா?
அதுவும் வள்ளுவர் வழியிலே சிந்திப்பது இன்னும் சிறப்பு.
("எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" - குறள் :423

என்ற வள்ளுவரின் குறள் வழியே சிந்திக்கவேண்டும்.)
மேற்கண்ட குறள் இருப்பதோ "ஒழுக்கமுடைமை" என்னும் அதிகாரத்தில். ஒழுக்கத்தைப் பற்றிப் பேச முற்பட்ட வள்ளுவர்எப்படி ஒழுக்கத்திற்கெதிராக அந்தக் குறளை எழுதியிருப்பார்?
மேற்கண்ட குறளில் ஏற்படும் சந்தேகத்திற்குப் பதிலையும் வள்ளுவர் வைத்திருக்கிறார்.
"ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்" குறள்:131
ஒழுக்கமே எல்லோருக்கும் மேன்மேதருவதாக இருப்பதால்,அந்த ஒழுக்கமே உயிரை விட
சிறந்ததாக போற்றப்படும் என்றும்...
"ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கும்
இழிந்தப் பிறப்பாய் விடும்" குறள்:133
ஒழுக்கத்தோடு வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மை. ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும் என்று அதே அதிகாரத்தில் ஒழுக்கம் இல்லாதவர்களைச் சாடுகிறாரே! மேற்கண்ட குறள் ஒழுக்கம் தவறிய இந்திரனின் பிறப்பினை சாடுகிறது.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளவேண்டும்
குறளினை முழுமையாக வாசிக்கும்போதுதான் வள்ளுவர் நமக்கு என்ன சொல்லவருகிறார் என்பதினை நம்மால் உணரமுடியும். திருக்குறளில் தொடர்ச்சியாக உணர்த்தப்படும் (ஒழுக்கம்கல்விமுயற்சிஅறம் என்கிற) நான்கு செய்தியினை நாம் மனதில்கொள்ள வேண்டும்.
"ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்" குறள் :834
தான் படித்து உணர்ந்தும்உணர்ந்த செய்திகளைப் பிறருக்கு உணர்த்தியும் வருகிற ஒருவர்...
தான் மட்டும் அடங்கி ஒழுகாமல் நடக்கிறார் என்றால்... அவரைவிடப் பேதையிலும் பேதையார் யாரும் இல்லை என்கிறார். மேற்கண்ட குறள் இந்திரனின் முட்டாள்தனத்தைக் குறிக்கிறது.
குறள்:133 மற்றும் குறள் :834  இந்தக் குறளினை
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் " குறள் :140 என்ற குறளோடு பொருத்திப் பார்க்கவேண்டும்.
முதலில் எனக்கும் இந்தக் குறள் சிறு சந்தேகத்தினை ஏற்படுத்தியது. பிறகு பேராசிரியர் சுபவீ  அவர்களிடம் தொடர்புகொண்டு கேட்டபோதுதான் அவர் கூறினார்...உங்களின் சந்தேகம் சரியானதுதான். அந்தக் குறளினை நிறுத்தி வாசியுங்கள். அந்தக் குறளில் வருகிற "பலகற்றும்" என்கிற சீர்தான் அந்தக் குறளுக்கான முழு விளக்கத்தினையே அளிக்கிறது. என்று கூறிவிட்டு அவருக்கு ஏற்பட்ட சிறுசிறு அனுபவங்களைச் சுட்டி விளக்கம் அளிக்க... நான் உடனே புரிந்துகொண்டு... அய்யா அப்படியென்றால் வள்ளுவர் இந்தக் குறளின் வாயிலாக கற்றவர்களின் அகந்தையைச் சாடுகிறராஎன்றேன். அவர் ஆம் ச‌ரியாகப் புரிந்துகொண்டீர்கள் என்றார்.
ஆம் தோழர்களே... நம்முடன் வசிப்பவர்களில்
(உலகத்தோடு சேர்ந்து பழகாமல்)
படித்தவர்களும் இருப்பார்பார்கள் படிக்காத பாமரர்களும் இருப்பார்கள். நாம் நிறைய படித்துவிட்டோம் என்றெண்ணிக் கொண்டு...படிக்காதப் பாமரர்களிடமிருந்து விலகி நின்றால் நீங்கள் கற்ற கல்வி யாருக்கும் பயன்படாமல் போய்விடும். அப்படி உங்களின் கல்வியறிவு உங்களைச் சார்ந்தவர்களுக்குப் பயன்படவில்லையெனில்...
நீங்கள் எவ்வளவு கற்றிருந்தாலும்... படித்த முட்டாளாகவே கருதப்படுவீர்கள் என்று வள்ளுவர் கூறுகிறார்.
வள்ளுவர் வாழ்ந்த காலத்தில் மக்களிடம் மந்திரம் ஓதும் பார்ப்பனர்கள் ஒழுக்கமானவர்தெய்வீகமானவர்கள் என்கிற தவறான பார்வையிருந்தது.
(இப்போதும்கூட சிலர் அப்படித்தான் இருக்கிறார்கள். அண்ணன் "அர்ஜூன் சம்பத்"அவர்களைப்போல! இல்லையென்றால் உலக மானுடத்திற்கே வாழ்வியலைப் போதித்த வள்ளுவருக்குக் காவியுடை போடுவாரா...? என்ன செய்வது?) சரி அதுபோகட்டும் விடுங்கள்.
அப்படியொரு தவறான பார்வைகொண்ட மக்களைக் கீழ்க்காணும் குறளினால் எச்சரிக்கிறார்!
"மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்" குறள் :134
மேற்கண்ட குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர். வள்ளுவரின் கருத்தினை எடுத்துக்கூறாமல் தன் சொந்தப் பார்ப்பனீய  கருத்தினையே கொஞ்சமும் கூசாமல்
கூறுகிறார்.
கற்ற வேதத்தை மறந்தாலும்அவ்வருணம் கெட்டுப்போகாமல் பின்பு மீண்டும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் அந்தணர் தம் உயர்ந்த குணம்;தன்னொழுக்கம் குன்றக் கெடும். என்று தன் பார்ப்பனீயக் கருத்தை எப்படி நுழைக்கிறார் பாருங்கள்.
வள்ளுவர் தான் எழுதிய எந்தக் குறளிலும் வேதம் என்கிற சொல்லினை எங்கும் பயன்படுத்தவில்லை. அதுமட்டுமல்ல   "அந்தணர்" என்றாலே அவர்கள் பார்ப்பனர்தான் என்று வள்ளுவர் நினைத்திருந்தால்... மேற்கண்ட குறளில் "அந்தணர்" பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் என்று எழுதியிருக்கலாமே.!
ஏன் அவர் பார்ப்பனர் என்று குறித்து எழுதவேண்டும்? "அந்தணர்" என்ற வார்த்தையை வள்ளுவர் பல இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். "அந்தணர் என்போர் அறவோர்" என்பதுதான் அவர் கருத்து.
நீதி தவறாமல் அறத்தின் வழியே (அறம்) பொருள் சேர்த்து (பொருள்) அதனை உலக மானுடத்திற்குப் பயன்படும்படி செய்வதில் மகிழ்ச்சி (இன்பம்) காண்பவர்களே" அந்தணர்" இப்படித்தான் தனது "முப்பாலின் "வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.
ஆனால் இவர்களாகவே  ஏதேதோ பொருள்கொள்கிறார்கள். இதற்கு வள்ளுவர் பொறுப்பல்ல. காரணம் அவர் பார்ப்பனர்களின் வேத வேள்விகளை எதிர்த்தவர்.
இதோ வள்ளுவரே "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் அவரே கூறுகிறார்...
"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுந் துண்ணாமை நன்று" குறள் :259
நெய் போன்ற பொருள்களை தீயிலிட்டு ஆயிரம் வேள்விகள் செய்வதைக்காட்டிலும்ஒரு உயிரைக் கொன்று அதன் ஊணை தின்னாமலிருப்பது நன்று என்கிறார்.
இந்த குறளினை பரிமேலழகர் மட்டுமல்ல வேறு எந்தப் பார்ப்பனர்களாலேயும் திரிக்கமுடியாது. காரணம் பார்ப்பனர்கள் யாகவேள்வி என்பதே... பசுகுதிரை போன்ற விலங்குகளை தீயிலிட்டு யாகம் செய்வதுதான். அதைப்பற்றி நாம் பின்னால் பேசலாம்.
மேற்கண்ட குறள் :134. இந்த குறளுக்கான பொருளோ...
பார்ப்பான் ஒருவன் தான் கற்றதை மறந்தாலும் மீண்டும் கற்றுக்கொள்ளலாம்.  ஆனால் அவன் பிறப்பு "ஒழுக்கத்திலிருந்து" தவறினால் கெட்டுவிடும். என்றுதான் வள்ளுவர் சொல்லியிருக்க முடியும்.
எந்தவொரு மனிதனின் பிறக்கும்போதும் உடம்பில் ஒன்றுமில்லாதான் பிறக்கமுடியுமே தவிர... ஒழுக்கத்தோடு பிறக்க முடியாது. அவன் வளர்ந்து வாழும்போதுதான் அவன் ஒழுக்கமானவனா அல்லது ஒழுக்கம் கெட்டவனா என்பதைக் காணமுடியும். அப்படியிருக்க பார்ப்பனன் மட்டும் எப்படி ஒழுக்கத்தோடு பிறக்கமுடியும்இந்தக் கூற்று பார்ப்பனனுக்கு மட்டுமல்ல நண்பர்களே... பொதுவாகவே எந்தவொரு மனிதனும் ஒழுக்கம் குன்றினால் கெட்டுவிடுவர்.  வேதம் படித்தவனெல்லாம் ஒழுக்கமா இருப்பான் என்று பரிமேலழகர் வேண்டுமென்றே திணிக்க முயல்வது குறளுக்குச் செய்யும் பச்சைத் துரோகம் இல்லையா!
கீழ்வரும் இந்தக் குறளை கவனியுங்கள்..
பரிமேலழகர் போன்ற யாராவது ஒருவர் எதிர்காலத்தில் கிளம்பி குறளினைத் திரியக்கூடும் என்று கருதினாரோஎன்னவோ! தெரியவில்லை. கீழ்காணும் குறளினால் திரிபு வாதிகளுக்கு
சம்மட்டி அடி கொடுக்கிறார்.
"ஒழுக்க முடைமை குடிமை இழுக்கும்
இழிந்த பிறப்பாய் விடும்" குறள் :133
ஒழுக்கமுடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மை. ஒழுக்கம் குன்றினால் இழிந்த பிறப்பாய் விடும். என்று வள்ளுவர் கூறுகிறார். மேற்கண்ட குறளில் எங்கே வேதம் வருகிறதுஎங்கே பார்ப்பனன் வருகிறான்ஒழுக்கநெறி தவறுகிற எவராயினும் அவர்கள் இழிவானவர்களே! என்பதுதான் வள்ளுவரின் அசைக்கமுடியாத சிந்தனை. மேற்கண்ட குறளுக்குக் கூட பரிமேலழகர் உயர்ந்த வருணம்தாழ்ந்த வருணம் என்கிற வார்த்தைகளையே பயன்படுத்துகிறார். என்ன செய்ய அவர் பிறந்த பார்ப்பனீயத்தை எப்படியும் முட்டுக்கொடுத்துத் தூக்கி நிறுத்திவிடலாம் என்று முயற்சித்துப் பார்த்திருக்கிறார். ஆவர் வேடிக்கை என்ன தெரியுமா..? "கம்பியில் போற கரண்ட்ட கக்கத்தில புடிச்சி விட்டுகிட்ட மாதிரி" உறங்கிக் கிடந்த வள்ளுவனை உசுப்பி விட்டுவிட்டார்கள்.
             - தொடர்ந்து குரல்வளை நெரிக்கப்படும்
                      (போதிசத்வா - 27.12.2019)

No comments:

Post a Comment