Wednesday 22 January 2020

புத்தக அறிமுகம்: பேலியோ உணவின் அறிவியலும் உளவியலும் - மருத்துவர். ப்ருனோ


புத்தக அறிமுகம்: பேலியோ உணவின் அறிவியலும் உளவியலும் - மருத்துவர். ப்ருனோ


மிழில் அறிவியல் புத்தகங்கள் குறைவு. அதிலும், உடலை குறித்தும், உணவை குறித்தும் அறிவியல் பூர்வமாக விளக்கும் ஒரு புத்தகம் டாக்டர் புருனோவின் பேலியோ குறித்த புத்தகம். நம் உடலுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பையும், நாம் உண்ணும் உணவு எப்படி நம் உடல் எடையை குறைக்கவோ/ கூட்டவோ செய்கிறது என்பதை மிக எளிமையாக, எல்லோருக்கும் புரியும் வண்ணம், அதே வேளையில் சுவாரசியமாகவும் எழுதி இருக்கிறார். உடல் நலத்தை பேண நினைக்கும் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம். இதில் உடல், உணவு, ஆரோக்கியம் என்பதை தாண்டி உளவியல், தத்துவம், அறிவியல், மரபணுக்கள், தமிழகத்தின் சமூக நீதி அரசியல் என பல விஷயங்களை மருத்துவர். புருனோ தொட்டு எழுதி இருப்பதால் இது மிக முக்கிய புத்தகமாக இருக்கிறது.
புத்தகத்தை கிண்டிலில் வாசிக்கலாம்: https://amzn.to/2Re7JfJ

No comments:

Post a Comment