Thursday 20 February 2020

இந்திய மத்திய அரசு பட்ஜெட் 2020 பற்றிய பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் அவர்கள் தொலைக்காட்சி விவாதங்களிலும் மக்கள் கூட்டங்களிலும் பேசிய கருத்துகளின் தொகுப்பு

இந்திய மத்திய அரசு பட்ஜெட் 2020 பற்றிய பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் அவர்கள் தொலைக்காட்சி விவாதங்களிலும் மக்கள் கூட்டங்களிலும் பேசிய கருத்துகளின் தொகுப்பு  
ஆக்கம்  : யூசுப் பாசித் 

ட்ஜெட் 2020. இதுவரை இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே மிக நீண்ட பட்ஜெட் உரையை இரண்டே முக்கால் மணி நேரமாக நிகழ்த்திவிட்டுஉரையை முடிக்க முடியாமல் இடையிலேயே சோர்ந்து அமர்ந்துவிட்டார்நம்முடைய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்கள். இவ்வளவு நீண்ட நெடிய உரை - ஏகப்பட்ட அறிவிப்புகள்.- விவாதிப்பதற்கு நிறைய விசயங்கள் இருக்க வேண்டுமே என்று நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால்உங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
ஒரு பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமானால்முதலில் பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் மருத்துவரிடம் ஒரு உடல் உபாதைக்கு வைத்தியம் பார்க்க செல்கிறீர்கள். மருத்துவரிடம் உங்களுக்கு இருக்கும் உபாதைகளை முதலில் கூறுவீர்கள். பின்னர் அவர் அதற்கான சோதனைகள் செய்துஅதற்கேற்ற மருத்துவத்தை உங்களுக்கு அளிப்பார். அதை பின்பற்றினால் உங்களுக்கு நோய் குணமாகும். இந்த நிகழ்வுகள் எல்லாவற்றுக்கும் துவக்கப்புள்ளி எது என்று பார்த்தால்உங்களுக்கு உடல் உபாதை உள்ளது என்று நீங்கள் ஏற்றுக் கொண்ட அந்த தருணம் தான்.
பட்ஜெட்டிற்கு முந்திய நாள் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கைஇந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைந்துள்ளதற்குஉலகச் சந்தையில் நிகழும் பொருளாதார மந்த நிலை ஒரு பகுதி காரணி என்று கூரியுள்ளது. மற்றொரு பகுதி என்னவென்று அதிலும் சொல்லவில்லை. நிதியமைச்சர் அதற்கும் ஒரு படி மேல் சென்று மந்தநிலை என்ற வார்த்தையே வராமல் உரையை முடித்துவிட்டார்!!!?
பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்த்ததுஇந்தியப் பொருளாதாரம் இருக்கும் மந்தநிலையின் தன்மைஅதற்கான காரணங்கள்அதிலிருந்து மீள்வதற்கான திட்டங்கள் என இந்த பட்ஜெட் இருக்கும் என்று. அப்படி இருந்திருந்தால் மந்தநிலையின் தன்மை என்னஅதற்கு இவர்கள் கொடுத்திருக்கும் தீர்வு என்னஇந்த தீர்வு அந்த மந்தநிலையைப் போக்குமாஎன்றெல்லாம் விவாதித்திருக்கலாம்.
ஆனால்இந்த பட்ஜெட்டில் நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலையை ஏற்றுக்கொள்ளவே இல்லை. பொருளாதார மந்தநிலையை ஏற்றுக் கொள்ளாத போதுஅதற்கான தீர்வை அவர்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது அறிவீனம்.
எந்த ஒரு விசயத்தையும் செய்யத் துவங்கும்முன்ஏன் (Why?) இதைச் செய்கிறோம்என்று ஒரு கேள்வி எழும். அந்த கேள்விக்கு சரியான பதில் இருந்தால்தான்அந்த விசயத்தை உங்களால் முழுமையாக செய்து முடிக்க முடியும். அப்படி இல்லாமல் தொடங்கினால்உங்களால் அதை முழுமையாக செய்து முடிக்க முடியாது. உதாரணத்திற்கு ஒரு புத்தகத்தையோ அல்லது கட்டுரையையோ வாசிக்க வேண்டுமானால் அதற்கு அதில் சொல்லப் பட்டிருக்கும் கருத்துக்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆரம்பித்தால் அந்த புத்தகத்தை முழுமையாக படிப்பீர்கள். இல்லாவிட்டால் 10, 20 பக்கம் (சிலருக்கு 1, 2 பக்கம்)போன பின்பு புத்தகத்தை மூடிவிடுவீர்கள். பிறகு அதைத் திறக்கவே மாட்டீர்கள்.
அதேபோல இந்த பட்ஜெட்டிற்கு ஒரு மைய நோக்கம் இருந்திருக்க வேண்டும். நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கூறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதையுமே நிதியமைச்சர் தன்னுடைய 2 ¾ மணி நேர உரையில் கூறவில்லை. எல்லா விமர்சகர்களும் பட்ஜெட் உரையிலிருந்து தாங்களாக இதுதான் பிரச்சினைஇதுதான் அதற்கான தீர்வு என்று அவர்களாக ஊகித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் ஒரு ஊகத்தை முன் வைக்கலாம். மேற்சொன்ன உதாரணத்தில் நீங்கள் மருத்துவரிடம் போன உடன் உங்களை நிமிர்ந்து கூட பார்க்காமல் ஒரு மருந்துச்சீட்டை எழுதிக் கொடுத்தால் எப்படி இருக்குமோஅப்படித்தான் இந்த பட்ஜெட் உள்ளது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்த பட்ஜெட்டிற்கு மைய நோக்கம் என்று எதுவுமே இல்லை.
அரசாங்கம் பட்ஜெட்டை தயார் செய்வதால் அதுதான் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு மக்களைக் காப்பாற்றும் ஆபத்பாந்தவன் என்று  நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இந்த பட்ஜெட் மூலம் அந்த நினைப்பு முற்றிலும் தவறானது என்று உறுதியாகியுள்ளது. “அரசாங்கம் எதுவும் செய்யாது. நாங்கள் ஒரு கொள்கைக் கட்டமைப்பை (Policy Framework) உருவாக்குவோம். அதற்குள் யார்யார் என்னென்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளது. ஏனெனில் இப்போது இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வாக எந்த நேரடித் திட்டமும் அறிவிக்கப் படவில்லை. அறிவிக்கப்பட்ட திட்டங்களின் இரண்டாம் நிலை/மறைமுகப் பலனாக ஏதாவது வந்தால்தான் உண்டு.
இந்த பட்ஜெட்டிற்குள் போகும் முன்பு சென்ற ஆண்டுக்கான பட்ஜெட்டில்  எவ்வளவு ஒதுக்கப்பட்டதுஅதற்கான திருத்திய மதிப்பீடு இப்போது என்ன அறிவிக்கப்பட்டிருக்கிறது என்று சில முக்கியமான துறைகளுக்கு மட்டும் பார்த்து விடுவோம்.
1.மாநிலங்களுக்கு நிதிக்குழு பரிந்துரையின் படி சென்ற ஆண்டு கொடுக்க வேண்டியது 8 இலட்சத்து 9 ஆயிரம் கோடிஆனால் கொடுத்தது 6 இலட்சத்து  56 ஆயிரம் கோடி. 
சென்ற பட்ஜெட் தாக்கல் செய்த ஓரிரு வாரங்களில்கார்ப்பரேட்டுகளுக்கு வரியை தள்ளுபடி செய்ததால் அரசுக்கு இழப்பு 2 இலட்சம் கோடி.
மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மாநில நிதியில் இருந்தே செயல்படுத்தப்படுகின்றன. இதைக் குறைத்தால் நேரடியாக மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படும்.
2.உணவுக்கான மானியமாக வழங்க வேண்டிய 1இலட்சத்து 92 ஆயிரம் கோடிக்கு பதிலாக 1 இலட்சத்து 15 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இது நியாய விலைக்கடைகளில் விற்கப்படும் பொருட்களுக்கான மானியம்.
3.ஒருங்கினைந்த குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டத்திற்கு 27 ஆயிரம் கோடி கொடுக்காமல் 22 ஆயிரம் கோடி மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. 
இந்தியாவில் 50% குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
4.பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 11 ஆயிரம் கோடி. ஆனால் கொடுத்தது  9 ஆயிரம் கோடி.
5.வேளாண்மைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கியது 1இலட்சத்து 30 ஆயிரம் கோடி. ஆனால் இப்பொழுது கூறப்பட்டுள்ள திருத்திய மதிப்பீடு 1 இலட்சத்து ஆயிரம் கோடி. இது திருத்தப்படது மட்டுமே. உண்மையான மதிப்பீடு அடுத்த வருடம்தான் தெரியவரும்.
6.உள்துறை அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி மதிப்பீடு 4,896 கோடி. இப்பொழுது வெளியிடப்பட்டுள்ள திருத்திய மதிப்பு  19,955 கோடி. காஷ்மீரில் 370 பிரிவை இரத்து செய்துஅந்த மாநிலத்தையே இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக செலவு செய்யப்பட்ட தொகை.
மேலே சொல்லப்பட்டுள்ள விபரங்களைப் பார்க்கும் போது இது யாருக்கான அரசு என்று தெளிவாகிறது. நிச்சயமாக இந்து மக்களுக்கான அரசு இல்லை.
இந்த வருட பட்ஜெட்:
பட்ஜெட் உரை தொடங்கியவுடன் நிதியமைச்சர் அரசின் சாதனைகளை விளக்கிப் பட்டியலிட்டார். இது எல்லோரும் செய்வது. ஏனெனில் நீங்கள் இருந்து என்னத்தைக் கிழித்தீர்கள் என்று யாராவது கேட்டுவிட்டால்அதற்காக அது. அதில் கூறப்பட்டவை சாதனையாவேதனையாஎன்பது இப்போது முக்கியமல்ல. அறிவிப்புகளுக்குள் செல்லுவோம்.
விவசாயம்:
முதல் அறிவிப்பு. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம்.
பட்ஜெட்டிற்கு முந்திய நாள் அளிக்கப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில் இது குறித்து ஒரு பத்தி இருந்தது. இந்த இந்த  பயிர்களுக்கு இவ்வளவு விலை நிர்ணயம் செய்துள்ளோம் என்று சொல்லியிருந்தார்கள்.
நிதியமைச்சர் தன்னுடைய பட்ஜெட் உரையில் 2022-க்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்றார். அதைத் தொடர்ந்து அதற்காக 16 திட்டங்கள் அறிவித்தார். அதன்படி நடந்தால், 2022-ல் இந்திய விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக ஆகிவிடும் என்று கூறினார். உண்மையில் அந்த 16 திட்டங்களையும் செயல்படுத்தினாலும் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க முடியாது.
சுகாதாரம்:
எங்கெல்லாம் சுகாதார வசதிகள் இல்லையோஅங்கு (மிகவும் பின் தங்கிய மாவட்டங்களில்) இருக்கும் அரசு மருத்துவமனைகளைமருத்துவக் கல்லூரிகளாக தனியாருடன் சேர்ந்து விரிவாக்கம் செய்து சுகாதார வசதிகளை வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். ஆக அரசு மருத்துவமனை என்ற ஒன்றே இல்லாமல் போகப் போவதற்கான அபாயச் சங்கு இது.
இப்படியாக நிறைய திட்டங்கள்துறை சார்ந்த அறிவிப்புகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
முந்தைய பட்ஜெட்டுகளில் துறை வாரியாக வரவுசெலவுசென்ற ஆண்டைவிட எவ்வளவு அதிகம் போன்ற விபரங்கள் இருந்தன. ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக இந்த விளக்கங்கள் எதுவும் பட்ஜெட் உரையில் இடம் பெறவில்லை. மாறாக பட்ஜெட் உரை ஒரு தேர்தல் பரப்புரை போல வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுகிறார்கள். விபரங்கள் பிற்சேர்க்கை என்று ஒரு ஆவணத்தில் கொடுத்து விடுகிறார்கள். ஆக அதை விரிவாகப் படித்து ஆராய்ந்து கருத்துக்கள் வெளிவர சில நாட்கள் ஆகலாம்.
நீண்ட கால கொள்கை முடிவுகள்:
அடுத்ததாகஇந்த பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டிருக்கும் திட்டங்கள் எல்லாம் நீண்ட கால நோக்கமுடையவை. உடனடியாக பலனை எதிர்பார்க்கக் கூடாது என்று சில நட்ட நடுநிலை குமார்கள் கம்பு சுற்றுவார்கள்.
ஏற்கனவே இந்த அரசு எடுத்த கொள்கை முடிவுகளின் பலன்களை கண்ணால் கண்டு கொண்டிருக்கிறோம். பண மதிப்பிழப்பு – GST என்ற இரண்டு அஸ்திரங்களால் அடுத்தடுத்து தாக்கப்பட்டுதான் இந்தியப் பொருளாதாரம் இன்று இந்த நிலைமையில் இருக்கிறது. பண மதிப்பிழப்புக்கு சொல்லப்பட்ட காரணங்கள் கருப்புப் பணம் ஒழிப்புகள்ள நோட்டு ஒழிப்புடிஜிட்டல் இந்தியா. புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களில் 99.7%வங்கிகளுக்கு வந்துவிட்டது. கருப்பு பணம் ஒழியவில்லை. ஏற்கனவே இருந்ததைவிட அதிகமான கள்ள நோட்டுகள் 2000 ரூபாயில் உள்ளது என்று அரசாங்கமே அறிக்கையில் கூறியுள்ளது. ஆக அதுவும் நடக்கவில்லை. டிஜிட்டல் பேமெண்ட் இவர்கள் பணமதிப்பிழப்பு செய்யாதிருந்தாலும்காலப் போக்கில் தானாக வந்திருக்கும். மக்கள் தொழில் நுட்பத்தால் வசதிகள் மேம்படும்போதுஅதைப் பயன்படுத்த தொடங்கி விடுவார்கள். ஆக தானாக நடந்த ஒன்றை இவர்களே இது தான் எங்களின் நோக்கம் என்று சொல்லிகோல் போஸ்ட்டை நகர்த்தி வைத்து கோல் போட்டுக் கொள்கிறார்கள்.
இந்த பணமதிப்பிழப்பின் தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்குள், GST என்ற புதிய வரிவிதிப்பு முறையை நள்ளிரவில் அமல்படுத்திபணத்தை மட்டுமே நம்பி தொழில் செய்து கொண்டிருந்த சிறுகுறு தொழில்களுக்கு நிரந்தரமாக மூடுவிழா நடத்தியதை எல்லாம் இன்னும் யாரும் மறக்கவில்லை.
திட்டங்கள் இல்லாத இலக்கு:
இந்த பட்ஜெட்டில் இந்த வருடம் ஒட்டுமொத்த வளர்ச்சியை (பணவீக்கம் + வளர்ச்சி) 10% ஆக உயர்த்துவோம் என்று கூறியுள்ளர்கள். ஆனால் அதற்கான திட்டங்கள் எதுவுமே அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை பணவீக்கத்தின் உதவியோடு 10%-ஐ எட்டிவிடலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார்களோஎன்னமோ. மந்திரவாதி ஏதோ உளறிவிட்டு உனக்கு எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்வதை சிலர் நம்பலாம். ஆனால் பட்ஜெட் போன்ற விவகாரங்களில் திட்டங்கள் எதுவும் இல்லாமல் வெறும் நம்பிக்கை மட்டும் கொள்வதுவெறும் கையில் முழம் போட்ட கதைதான்.

வேலைவாய்ப்பு:
வேலைவாய்ப்பு குறித்து பெரிதாக எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. புதிதாக அறிவிக்கப்படும் அனைத்துத் திட்டங்களிலும் கடைசியாக இதன் மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று ஒரு வரியை மட்டும் மறக்காமல் சேர்த்துவிடுகிறார்கள்.
புதியதாக “Assemble in India” என்று ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். ஏற்கனவே, “Make in India” திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட(?) வேலை வாய்ப்புகளால்தான்நாட்டில் இன்று 45ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் நிலவி வருகிறது. இப்போது அதனுடைய இந்த மேக்-அப் போட்ட வெர்சனால் என்ன ஆகுமோ?
இளைஞர்களின் திறமை(skill)-யை வளர்க்கும் விதமாக கிராமப் புறங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் தொழிற்பயிற்சி(apprenticeship) வழங்கப்படும் என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். அதே நிதியமைச்சர் உள்ளாட்சி அமைப்புகளில் ஆள் பற்றாக்குறை உள்ளது என்றும் கூறியுள்ளார். “ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்திக் கொண்டிருக்கிறார்” என்று நமக்குத் தெரியவில்லை. சரிஇது ஒரு நிலையான வேலை வாய்ப்பா என்று பார்த்தால் அதுவும் இல்லை. தொழிற்யிற்சி ஓராண்டுக்கு மட்டுமே வழங்கப்படும்.
அதே போல கடற்கரையோர மக்களுக்கு சாகர் மித்ரா என்று ஒரு திட்டம். அதன் மூலம் மீன் பிடிப்பு மற்றும் மீன் பதப்படுத்தும் தொழில்களை ஊக்குவிப்போம் என்றும் கூறியுள்ளார்.
இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்” – “இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும்” என்று ஏதோ சாமியார் அருள் வாக்கு சொல்வது போல சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.

தனிநபர் வருமான வரி:
ஏற்கனவே இருந்த தனிநபர் வருமான வரி விதிமுறைகள் சாமானியனுக்கு புரியக்கூடியவை அல்ல. அதனால் பலரும் ஆடிட்டர் மூலமாகவே வருமான வரி தாக்கல் செய்து வந்தார்கள். இந்நிலையில்இதை மாற்றி எளிதாக்குகிறோம் என்ற பெயரில் புதிதாக ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
இந்த புதிய திட்டத்தின் படிவரிவிதிப்பின் சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரம்ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பல கழிவுகள்(deductions) நீக்கப்பட்டுள்ளன. அனைத்தும் நீக்கப்படவில்லை. நிதியமைச்சரின் உரையில் கூறப்பட்டுள்ளது, ”கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட கழிவுகள் இருக்கின்றனஅவற்றுள் 70 வகைகளை புதிய முறையில் இரத்து செய்துள்ளோம்”. 
பழைய முறையில் 3 அடுக்குகளாக வரி விதிக்கப்பட்டதுபுதிய முறையில் 6 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த புது முறை அமுலுக்கு வந்ததால் பழைய முறை உடனடியாக இரத்து செய்யப்படமாட்டாது. இரண்டில் எதை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மேலும் குழப்பியுள்ளார்கள். 
இந்த புதிய முறையினால் யாருக்கு இலாபம்:
கணக்காண்டு 2018-19-ல் 75% பேர் 5இலட்சத்திற்கும் குறைவான வருமானத்திற்குள் உள்ளவர்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளார்கள்.                                        90% பேருக்கு மொத்த வருமானம் (வரி விலக்குகளுக்கு முன்) 10இலட்சத்திற்கும் குறைவு. இவர்கள் வரி விலக்குகளுக்குப்பின் வருமான வரி கட்டியிருக்கிறார்கள். 
இந்த புதிய முறைப்படி, 12 இலட்சத்திற்கும் குறைவாக வருமானம் உள்ள அனைவரும் பழைய முறையில் செலுத்தியதைவிட அதிகமாக வரி செலுத்த வேண்டும். 
ஆக இந்த புதிய முறையினால் மேல் தட்டு வர்க்க மக்களுக்கு நன்மையும்நடுத்தர வர்க்க மக்களுக்கு தீமையும் விழைந்துள்ளது.
நிலைமை இப்படியிருக்கநிதியமைச்சர் இந்த புதிய முறையினால் அரசுக்கு 4000 கோடி வரி இழப்பு ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி இல்லாதவர்களிடம் இருந்து பிடுங்கி இருப்பவர்களிடம் கொடுப்பதற்குத்தான் இந்த அரசா?
கீழ்தட்டு மக்கள் பாவம் வருமானத்திற்கே வழியில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த வகையில் இது எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.
பொதுத்துறை நிறுவனங்கள்:
LIC-ன் 25% பங்குகள் தனியாருக்கு விற்கப்படும்.
Air India-வை விற்க நாங்கள் தயார். வாங்குவதற்கு ஆள் இல்லை. அதனால் திட்டமிட்டபடி கடந்த நிதியாண்டில் விற்கமுடியாமல் போய்விட்டது. எப்படியும் இந்த ஆண்டில் விற்று விடுவோம்.
BPCL-க்கும் நல்ல விலை கிடைத்தால் விற்று விடலாம் என்று இருக்கிறோம்.
இந்த அரசாங்கம்பொதுத்துறை நிறுவனங்களில் எவ்வளவு பங்குகளை விற்க வேண்டுமென்று இலக்கு வைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த ஆண்டுக்கான இலக்கு 2.1 இலட்சம் கோடி.
வாஜ்பாய் அவர்கள் பிரதமராய் இருந்த போது, “Disinvestment Ministry” என்று ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. அரசு/பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்காக ஒரு அமைச்சகம் வைத்து நடத்தியவர்களின் வழியில் நடக்கும் இந்த அரசின் பட்ஜெட்டில் இது போன்ற அறிவிப்புகளைப் பார்த்து அதிர்ச்சியடையக் கூடாது. மாறாக இந்த வருடம் இந்த நிறுவனம் தப்பித்து விட்டதே என மீதம் இருக்கும் நிறுவனங்களை நினைத்து மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டும்.
LICன் 100% உரிமையும் இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் அனைத்து LIC பாலிசிகளுக்கும் அரசாங்கத்தின் உத்திரவாதம் (Sovereign Guarantee) உள்ளது. ரூபாய் நோட்டிற்கு உள்ள உத்திரவாதம் போல்.
LIC ஒரு பொன் முட்டையிடும் வாத்து. அரசாங்கத்திற்கு அதிக லாபம் ஈட்டிக் கொடுக்கும் நிறுவனங்களில் முதன்மையானது. அதனிடம் கிட்டத்தட்ட 30 இலட்சம் கோடி பணம் உள்ளது. எப்போதெல்லாம் அரசுக்கு பணம் அதிக அளவில் தேவையோ அப்போதெல்லாம் அந்த தேவையை பூர்த்தி செய்து வந்ததுஇந்த LICதான். அதனால் இதை முழுமையாக விற்காமல்அதன் ஒரு பகுதியை பங்குச் சந்தை மூலம் விற்க அரசு முடிவு செய்துள்ளது.
அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள்தனியாருக்குக் கொடுத்தால் நிர்வாகம் திறம்பட நடக்கும்வெளிப்படைத்தன்மை இருக்கும். வெளிப்படைத்தன்மை என்றால்நாம் பாலிசிகளுக்காகக் கட்டிய பிரீமியம் தொகையை எங்கு முதலீடு செய்தார்கள்எவ்வளவு வருமானம் வந்ததுபோன்ற தகவல்கள் அனைவருக்கும் தெரியும்.
LIC அரசாங்கத்திடம் இருப்பதைவிடதனியாரிடம் பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே பல தனியார் நிறுவனங்கள்தணிக்கையாளர்களின் உதவியுடன் பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நிகழ்வுகள் பலவற்றை கடந்த காலத்தில் பார்த்திருக்கிறோம்.
இந்த வருடம் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையில்இது போன்ற தனியார் நிறுவனங்கள் கணக்குகள் தணிக்கைகளில் சரியாக கவனிக்கப் படாததால் வந்த விளைவுகள் குறித்து ஒரு அத்தியாயமே உள்ளது. எந்த எந்த நிறுவனங்களில்எந்த எந்த தணிக்கையாளர் கொடுத்த தவறான/பொய்க் கணக்கினால்  எப்படி திவாலானது என்று பட்டியலிடப்பட்டுள்ளது. 2009 நடந்த சத்யம் முறைகேடு முதல் சென்ற ஆண்டு நடந்த ஜெட் ஏர்வேஸ் முறைகேடு வரை உள்ளது. 
ஜெட் ஏர்வேஸ் முறைகேட்டில் 90 போலி நிறுனங்கள் மூலம் 5000 கோடி மடை மாற்றி கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. இது ஒரே நாளில் நிகழ்ந்தது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக கணக்காளர்தணிக்கையாளர்களின் உதவியுடன் வருடக் கணக்கில் நடத்தப் பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களின் நிதி நிர்வாகத்தில்  இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கும் காலத்தில்தனியாரிடம் கொடுத்தால் நிர்வாகம் திறம்பட நடக்கும்என்று சொன்னால்எப்படி நம்ப முடியும்?
எந்த ஒரு நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளவர்கள் சென்று அனைத்து வரவு செலவுகளையும் சரி பார்ப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. அதற்காகத்தான்தணிக்கையாளர்கள் இருக்கிறார்கள். தணிக்கையாளர்கள் அனைத்து முதலீட்டாளர்களின் சார்பாக கணக்குகளை சரி பார்த்துதணிக்கை அறிக்கையை வெளியிடுவார்கள். இந்த தணிக்கை அறிக்கையைத்தான் முதலீட்டாளர்கள் அனைவரும் படித்து வரவுசெலவுநிகர இலாபம் எவ்வளவு என்று அறிந்து கொள்வார்கள்.
இந்த தணிக்கையாளர்கள் அறம் பிறழ்ந்தால்அனைவரின் முதலீட்டுக்கும் மோசம் வந்துவிடும்.
ஏன் இந்த பொருளாதார மந்த நிலையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்?
அவர்கள் சொல்லும் ஒரு முக்கியக் காரணம்உலகப் பொருளாதாரமே ஒரு மந்தநிலையில்தான் உள்ளது. அதன் தாக்கம் இந்தியாவின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கிறது. இது காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதைதான். இரண்டும் தற்செயலாக ஒரே நேரத்தில் நடந்த வேறு வேறு நிகழ்வுகள்.
இந்தியப் பொருளாதாரம் எந்த அளவுக்கு உலகப் பொருளாதாரத்துடன் இணைக்கப் பட்டுள்ளதுநாம் உற்பத்தி செய்யும் பொருட்களில் எவ்வளவு உள்நாட்டில் பயனப்டுத்தப்படுகிறதுஎவ்வளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறதுஇந்தியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19.74% ஏற்றுமதி செய்கிறது. அதே நேரம் 23.64% இறக்குமதி செய்கிறது. ஆக நாம் ஒரு நிகர இறக்குமதியாளராக உள்ளோம். நாம் உருவாக்கும் பொருட்கள்/சேவைகளில் பெரும்பான்மையான பகுதி உள்நாட்டின் தேவைக்கே.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் உலகச் சந்தையின் வளர்ச்சி குன்றித்தான் இருந்தது. ஆனால் அப்போது இதே அரசுஉலகப் பொருளாதாரத்தில் நிலவும் மந்தநிலை எந்தவகையிலும் நம்மை பாதிக்கவில்லை. நாம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம். சீனாவை முந்திவிட்டோம் என்றெல்லாம் சொன்னார்கள்.
இந்தியப் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதற்குக் காரணம் உள்நாட்டில்வாங்கும் சக்தி குறைந்துசந்தை குன்றியது மட்டுமே காரணம்.
இன்று உண்மையிலேயே பொருளாதார மந்தநிலை உள்ளதாஇதை எப்படி சமாளிப்பது?
கிட்டத்தட்ட எல்லா மக்களும் ஒரு நெருக்கடியான பொருளாதாரச் சூழ்நிலையில்தான் உள்ளார்கள். சிலருக்கு அது இல்லாமல் இருக்கலாம். உங்களின் வருமானம் மற்றும் தேவைகளைப் பொறுத்து அது மாறுபடும். மக்கள் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில்நாளை என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இருக்கும் போது செலவினங்கள் தானாகக் குறையத் தொடங்கும். இன்று இருக்கும் இந்த மந்தநிலை மாறாமல் தொடர்வதற்கு இந்த அச்சமே முக்கியக் காரணம். இந்த அச்சத்தை அரசாங்கம் இந்த பட்ஜெட்டின் மூலம் நீக்கியிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒரு சிறு நம்பிக்கையையாவது விதைத்திருக்க வேண்டும். இரண்டுமே நடக்கவில்லை. 
இந்த பட்ஜெட்டைப் பொறுத்தவரை குறுகிய காலத்தில்இப்பொழுது இருக்கும் மந்தநிலையைச் சரி செய்யும் நோக்கில் மக்களின் அச்சத்தைப் போக்கும் விதத்தில்எந்தத் திட்டங்களும் இல்லை. உதாரணத்திற்கு ஊரக வேலைவய்ப்பு திட்டம் மூலம் வழங்கப்படும் 100 நாள் வேலையை, 200 நாளாக உயர்த்தியிருந்தால் பல கோடிப் பேருக்கு அந்த திட்டத்தின் பலன் உடனடியாக சென்று சேர்ந்திருக்கும். விவசாய விளைபொருட்களின் கொள்முதல் விலையை அதிகப்படுத்தியிருந்தால்விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டுக்கு ₹6000 உதவித் தொகையை உயர்த்தியிருந்தால் பல கோடி விவசாயிகளுக்கு பலன் கிடைத்திருக்கும். ஆனால் இது போன்ற எந்த திட்டங்களோ அறிவிப்புகளோ இந்த பட்ஜெட்டில் இல்லை.
தமிழுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம்:
நிதியமைச்சர் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசியிருக்கிறார்ஆத்திச்சூடியைச் சொல்கிறார் என்று புளகாங்கிதம் அடைபவர்களுக்குஇவையெல்லாம் வெறும் அலங்காரத்திற்காகச் சொல்லப்படுபவை. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் திருக்குறள் இல்லாமல் பட்ஜெட் உரை நிகழ்த்தியதே கிடையாது. வி.பி.சிங் காலத்தில் உருது கவிதைகளை மேற்கோள் காட்டினார்கள். ஆகஇவை எல்லாம் வெறும் அலங்காரத்திற்காக மட்டுமே. நீங்கள் கவனிக்காத ஒரு விசயம்இராமனின் தாத்தா விதித்த வரி முறையைப் பின்பற்றி வரி விதித்திருப்பதாகவும் கூறினார். இதைப் பற்றி யாருமே பேச மாட்டார்கள்.
ஆதிச்ச நல்லூரில் உலகத்தரத்தில் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். இது போல இந்தியாவில் மொத்தம் 5 இடங்களில் அமைக்கவுள்ளார்கள்.
கீழடியை பாரத நாகரிகம் என்று இந்த அடிமைகள் கூறியபோது பொங்கியெழுந்த நாம்இந்த ஆதிச்சநல்லூர் விவகாரத்திலும் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். தமிழ் இனத்தையும் பண்பாட்டையும் மறைக்க முயலும் ஆரியர்களின் சூழ்ச்சியில் சிக்காமல் இருக்க வேண்டும்.
2014-ல் ஆட்சியில் அமர்ந்தவுடன் பா.ஜ.க. சொன்னது - விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது. 6 வருடத்தில் ஆன இரட்டிப்பை இப்போது 2 வருடத்தில் மீண்டும் இரட்டிப்பாக்கப் போகிறார்களாம்.
அவர்களுக்கு இன்று ஒரு பேச்சுநாளை ஒரு பேச்சு என்றெல்லாம் இல்லை. எப்போதும் ஒரே பேச்சுதான். “தாமரை மலர்ந்தே தீரும்”. நமக்கும் ஒரே பேச்சுதான் “தாமரை ***லதான் மலரும்”.

யூசுப் பாசித்

No comments:

Post a Comment