Thursday 20 February 2020

எங்கள் நாடு தனிநாடு எங்கள் மொழி தனிமொழி -புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

திராவிட கவிதைகள் 
எங்கள் நாடு தனிநாடு எங்கள் மொழி தனிமொழி -புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

கொதிப்புள்ள வீரர்களே
கொள்கைமிகு தோழர்களே
மிதித்திடும் வஞ்சகரை வீழ்த்துவீர்!
'மேல்வருணநஞ்சினரைத் தாழ்த்துவீர்!
மதிதமிழ் தன்மான
மறவரை நாடொறும் நீ வாழ்த்துவீர்!

பாடுபடும் பாட்டாளி
பணம் சுரண்டும் பொருளாளி
நாடுகெடும் இரண்டினத்தை மாற்றுவீர்!
நல்லுழைப் பாளர்களைப் போற்றுவீர்!
கேடுகெட்ட கொள்கையினர்
கீழ் அறிவு திருந்த அறிவூட்டுவீர்!

செந்தமிழை எண்ணாமல்
சேர்மொழிக்குப் பாய்விரிக்கும்
வந்தேறிகள் கங்காணிகள் ஓட்டுவீர்!
வரிப்புலிகள் நாங்களென்று காட்டுவீர்!
இந்தியாட்சி கொள்ளாதென்றே
எங்கள்நாடு தனி நாடென்றே நாட்டுவீர்!

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

No comments:

Post a Comment