Thursday 20 February 2020

CAA, NRC, NPR எதிர்ப்பும் - திமுக கையெழுத்து இயக்கமும்: பிலால் அலியார் கடந்த 2019ம் வருடம், டிசம்பர் 11ந்தேதி இந்திய ஒன்றிய பாசிச பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா தமிழக அதிமுக, பாமக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துவதாகவும், பூர்வகுடி இஸ்லாமிய சிறுபான்மையினரின் குடியுரிமையை கேள்வி எழுப்புவதாகவும் பல தரப்பினரின் சார்பில், அறிஞர்களின் சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அசாம் மாநிலத்தில் பெரும் பொருட்செலவில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் நடைமுறையினால் அம்மாநில முன்னாள் பெண் முதல்வர், இந்திய குடியரசு தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமது குடும்பத்தினர், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் உள்பட பலர் குடியுரிமை அற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். மாநிலத்தில் இலட்சக்கணக்கானோர் தடுப்புகாவல் மையத்தில் (Detention Center) வாழக்கூடிய துயரம் நிகழ்ந்திருக்கிறது. இம்மாதிரியான கொடூர உண்மைகளால் இந்த சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மக்களும், மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட இயக்கங்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தமிழகத்திலும் இந்த சட்டம் குறித்த எதிர்ப்புகள் வலிமையாகவே இருக்கின்றன. திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் நடந்த கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில், ஒன்றிய அரசின் பாசிச சட்டமான குடியுரிமை தடைச் சட்ட மசோதாவை நீக்க கோரி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என அறிவித்து, பிப்ரவரி மாதம் 2ந் தேதி முதல் 8ந் தேதி வரை தமிழகம் முழுதும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினரால் பொது மக்களிடம் முறையான அச்சு படிவம் வழங்கப்பட்டு அவர்களின் அனுமதியுடன் விபரங்களும் கையெழுத்தும் பெறப்பட்டது. சாதி, மத வேறுபாடின்றி தமிழகமெங்கும் சட்டத்திற்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக தங்களின் ஆதரவை வழங்கினர். இரண்டு கோடி கையெழுத்து இலக்காக நிர்ணயித்து செயல்பட ஆரம்பித்தோம், ஆனால் நான்கு நாட்களிலேயே இலக்கை நெருங்கி விட்டோம், இன்னும் இருக்கும் நாட்களில் அதிகமான மக்களை சந்தித்து CAA சட்டத்திற்கு எதிராக உள்ள மக்களின் உணர்வுகளை ஆவணப்படுத்துவோம் என்றார், திமுக தலைவர். இறுதியாக இரண்டு கோடியே ஐந்து லட்சத்து அறுபத்தாராயிரத்து எண்பத்தி இரண்டு கையெழுத்துகள் (2,05,66,082) பெறப்பட்டு, அவை மாவட்ட வாரியாக மிக கவனவமாக, நேர்மையுடன் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இவையனைத்தும் திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்திய குடியரசு தலைவரிடம் நேரிடையாக ஒப்படைக்கப்படும் என்றும், இந்த மக்கள் விரோத குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்க குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவும் தமிழகத்தின் சார்பில் வழங்கப்படும் என திமுக தலைமை அறிவித்திருக்கிறது. வழக்கம்போல பாசிச பாஜகவும், அதன் அடிமையான அதிமுக அமைச்சர்களும் திமுகவின் கையெழுத்து இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று ஆரம்பத்தில் சொல்லி விட்டு பின்பு மக்களின் பெருத்த ஆதரவை கண்ட பிறகு, இந்த கையெழுத்துகளால் என்ன பிரயோசனம் என ஆணவமாக உளற ஆரம்பித்தனர். ஜனநாயகம் என்றால் என்னவென்றே அறியாத பாஜகவினருக்கு ஒரு விசயம் புரியவில்லை, ஆறு கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் சரிபாதி மக்கள் அரசின் சட்டத்திற்கு எதிராக வெளிப்படையான ஒரு எதிர்ப்பை ஆவணத்துடன் பதிவு செய்திருக்கின்றனர் என்பதை. இதன் மூலம் பெரும்பான்மை, சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மதிப்பளிப்பதில்லை என்பதையும் திமுக ஆதாரத்துடன் பதிவு செய்திருக்கிறது தன் தீவிரமான களப்பணிகளால். ஒரு எதிர்கட்சியாக அறிக்கைகள், பேட்டிகளை மட்டும் கொடுத்து விட்டு அமைதியாக இருக்காமல், மக்களை நேரிடையாக சந்தித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான மக்களின் எதிர்ப்புணர்வை, மக்களின் வாயிலாகவே பதிவு செய்ததில் திமுக மிகப்பெரிய பாராட்டத்தக்க கடமையை செய்திருக்கிறது. அதில் பெரு வெற்றியும் பெற்றிருக்கிறது. தற்போதைய தாரளமய சந்தை பொருளாதாரத்தால் மக்களின் போராட்ட உணர்வு மங்கி வருகிறது என்ற குற்றச்சாட்டும், தங்களின் மீது அரசு செலுத்தும் வல்லாதிக்கத்தை எதிர்க்க தங்களாலான எதிர்ப்பை தெரிவிக்க வழிதெரியாமல் இருக்கும் வெகுஜன மக்களுக்கு, மிக எளிய, ஜனநாயகத்தன்மை கொண்ட பெண்களை, இளைஞர்களை, மாணவர்களை, சிறுபான்மையினரை பங்கு கொள்ள வைத்ததன் மூலம் அவர்களுக்குண்டான பொறுப்பையும் உணர வைத்திருக்கிறது திமுக. இந்த சட்டம் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஆபத்தானது என்ற மாயத் தோற்றத்தை, அரசுகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்களிடம் நேரடியாக விளக்கி, ஈழத்தமிழர்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தமிழர்களுக்கும் இந்த சட்டம் அபாயகரமானது என்பதை உணரவைத்தது திமுக . ​Go to the people. Live with them. Learn from them. Love them. Start with what they know. Build with what they have. But with the best leaders, when the work is done, the task accomplished, the people will say 'We have done this ourselves. என்ற சீன தத்துவதேதையின் வரிகளுக்கேற்ப மக்களால், மக்களின் பங்களிப்புடன் பிரிவினைவாத, அடக்குமுறை சட்ட எதிர்ப்பை தன் அரசியல், சமூக கடமையாக பதிவு செய்திருக்கிறது திமுக. திமுக தலைவரும் நேரிடையாக இந்த கையெழுத்து இயக்கத்தில் தன்னை உணர்வு பூர்வமுடன் இணைந்து கொண்டு அனைத்து நாட்களிலும் பெண்கள், இளைஞர்கள், வியாபாரிகளை பேருந்துகளிலும், நடைபாதைகளலும் சந்தித்தும், சட்டம் குறித்து உரையாடியும், தன் சமூகவலைத் தளங்களில் புகைப்படங்களுடன் பதிவிட்டு, அதன் மூலம் தன் இயக்கத்தினருக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்திருக்கிறார். உலக அளவில் பிரிட்டன் போன்ற நாடுகளில் குடிமக்களின் கையெழுத்து இயக்கம் மூலம் முக்கிய பிரச்சனைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த ஜனநாயக ரீதியிலான நகர்வு ஆளும் பாசிச பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியை உருவாக்குவதுடன், அடக்குமுறை சட்டம் குறித்த தன் பார்வையை மாற்றிக்கொள்ள வைக்கும் வலிமையும் கொண்டதாக இருக்கும். உலக அளவில் அதிகமான (இருபது மில்லியன்) குடிமக்கள் கையைழுத்து இயக்கமாக திமுகவின் கையெழுத்து இயக்கமும், திமுகவும், திமுக தலைவரும் வரலாற்றின் பக்கங்களில் நினைவுகூறப்படுவார்கள் என்பது நிச்சயம். - பிலால் அலியார்CAA, NRC, NPR எதிர்ப்பும் - திமுக கையெழுத்து இயக்கமும்பிலால் அலியார்

டந்த 2019ம் வருடம், டிசம்பர் 11ந்தேதி இந்திய ஒன்றிய பாசிச பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்த மசோதா தமிழக அதிமுக, பாமக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் மதத்தின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துவதாகவும், பூர்வகுடி இஸ்லாமிய சிறுபான்மையினரின் குடியுரிமையை கேள்வி எழுப்புவதாகவும் பல தரப்பினரின் சார்பில், அறிஞர்களின் சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அசாம் மாநிலத்தில் பெரும் பொருட்செலவில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் நடைமுறையினால் அம்மாநில முன்னாள் பெண் முதல்வர், இந்திய குடியரசு தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமது குடும்பத்தினர், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர்கள் உள்பட பலர் குடியுரிமை அற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.


மாநிலத்தில் இலட்சக்கணக்கானோர் தடுப்புகாவல் மையத்தில் (Detention Center) வாழக்கூடிய துயரம் நிகழ்ந்திருக்கிறது. இம்மாதிரியான கொடூர உண்மைகளால் இந்த சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மக்களும், மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட இயக்கங்களும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தமிழகத்திலும் இந்த சட்டம் குறித்த எதிர்ப்புகள் வலிமையாகவே இருக்கின்றன.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் நடந்த கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில், ஒன்றிய அரசின் பாசிச சட்டமான குடியுரிமை தடைச் சட்ட மசோதாவை நீக்க கோரி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என அறிவித்து, பிப்ரவரி மாதம் 2ந் தேதி முதல் 8ந் தேதி வரை தமிழகம் முழுதும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினரால் பொது மக்களிடம் முறையான அச்சு படிவம் வழங்கப்பட்டு அவர்களின் அனுமதியுடன் விபரங்களும் கையெழுத்தும் பெறப்பட்டது.
சாதி, மத வேறுபாடின்றி தமிழகமெங்கும் சட்டத்திற்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக தங்களின் ஆதரவை வழங்கினர். இரண்டு கோடி கையெழுத்து இலக்காக நிர்ணயித்து செயல்பட ஆரம்பித்தோம், ஆனால் நான்கு நாட்களிலேயே இலக்கை நெருங்கி விட்டோம், இன்னும் இருக்கும் நாட்களில் அதிகமான மக்களை சந்தித்து CAA சட்டத்திற்கு எதிராக உள்ள மக்களின் உணர்வுகளை ஆவணப்படுத்துவோம் என்றார், திமுக தலைவர். இறுதியாக இரண்டு கோடியே ஐந்து லட்சத்து அறுபத்தாராயிரத்து எண்பத்தி இரண்டு கையெழுத்துகள் (2,05,66,082) பெறப்பட்டு, அவை மாவட்ட வாரியாக மிக கவனவமாக, நேர்மையுடன் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.
இவையனைத்தும் திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களால் இந்திய குடியரசு தலைவரிடம் நேரிடையாக ஒப்படைக்கப்படும் என்றும், இந்த மக்கள் விரோத குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்க குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவும் தமிழகத்தின் சார்பில் வழங்கப்படும் என திமுக தலைமை அறிவித்திருக்கிறது.

வழக்கம்போல பாசிச பாஜகவும், அதன் அடிமையான அதிமுக அமைச்சர்களும் திமுகவின் கையெழுத்து இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று ஆரம்பத்தில் சொல்லி விட்டு பின்பு மக்களின் பெருத்த ஆதரவை கண்ட பிறகு, இந்த கையெழுத்துகளால் என்ன பிரயோசனம் என ஆணவமாக உளற ஆரம்பித்தனர்.


ஜனநாயகம் என்றால் என்னவென்றே அறியாத பாஜகவினருக்கு ஒரு விசயம் புரியவில்லை, ஆறு கோடி மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் சரிபாதி மக்கள் அரசின் சட்டத்திற்கு எதிராக வெளிப்படையான ஒரு எதிர்ப்பை ஆவணத்துடன் பதிவு செய்திருக்கின்றனர் என்பதை. இதன் மூலம் பெரும்பான்மை, சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் மதிப்பளிப்பதில்லை என்பதையும் திமுக ஆதாரத்துடன் பதிவு செய்திருக்கிறது தன் தீவிரமான களப்பணிகளால்.


ஒரு எதிர்கட்சியாக அறிக்கைகள், பேட்டிகளை மட்டும் கொடுத்து விட்டு அமைதியாக இருக்காமல், மக்களை நேரிடையாக சந்தித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான மக்களின் எதிர்ப்புணர்வை, மக்களின் வாயிலாகவே பதிவு செய்ததில் திமுக மிகப்பெரிய பாராட்டத்தக்க கடமையை செய்திருக்கிறது. அதில் பெரு வெற்றியும் பெற்றிருக்கிறது.

தற்போதைய தாரளமய சந்தை பொருளாதாரத்தால் மக்களின் போராட்ட உணர்வு மங்கி வருகிறது என்ற குற்றச்சாட்டும், தங்களின் மீது அரசு செலுத்தும் வல்லாதிக்கத்தை எதிர்க்க தங்களாலான எதிர்ப்பை தெரிவிக்க வழிதெரியாமல் இருக்கும் வெகுஜன மக்களுக்கு, மிக எளிய, ஜனநாயகத்தன்மை கொண்ட பெண்களை, இளைஞர்களை, மாணவர்களை, சிறுபான்மையினரை பங்கு கொள்ள வைத்ததன் மூலம் அவர்களுக்குண்டான பொறுப்பையும் உணர வைத்திருக்கிறது திமுக.

இந்த சட்டம் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு மட்டும் ஆபத்தானது என்ற மாயத் தோற்றத்தை, அரசுகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை மக்களிடம் நேரடியாக விளக்கி, ஈழத்தமிழர்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தமிழர்களுக்கும் இந்த சட்டம் அபாயகரமானது என்பதை உணரவைத்தது திமுகGo to the people. Live with them. Learn from them. Love them. Start with what they know. Build with what they have. But with the best leaders, when the work is done, the task accomplished, the people will say 'We have done this ourselves. என்ற சீன தத்துவதேதையின் வரிகளுக்கேற்ப மக்களால், மக்களின் பங்களிப்புடன் பிரிவினைவாத, அடக்குமுறை சட்ட எதிர்ப்பை தன் அரசியல், சமூக கடமையாக பதிவு செய்திருக்கிறது திமுக. திமுக தலைவரும் நேரிடையாக இந்த கையெழுத்து இயக்கத்தில் தன்னை உணர்வு பூர்வமுடன் இணைந்து கொண்டு அனைத்து நாட்களிலும் பெண்கள், இளைஞர்கள், வியாபாரிகளை பேருந்துகளிலும், நடைபாதைகளலும் சந்தித்தும், சட்டம் குறித்து உரையாடியும், தன் சமூகவலைத் தளங்களில் புகைப்படங்களுடன் பதிவிட்டு, அதன் மூலம் தன் இயக்கத்தினருக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்திருக்கிறார்.

உலக அளவில் பிரிட்டன் போன்ற நாடுகளில் குடிமக்களின் கையெழுத்து இயக்கம் மூலம் முக்கிய பிரச்சனைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த ஜனநாயக ரீதியிலான நகர்வு ஆளும் பாசிச பாஜக அரசுக்கு கடும் நெருக்கடியை உருவாக்குவதுடன், அடக்குமுறை சட்டம் குறித்த தன் பார்வையை மாற்றிக்கொள்ள வைக்கும் வலிமையும் கொண்டதாக இருக்கும்.

உலக அளவில் அதிகமான (இருபது மில்லியன்) குடிமக்கள் கையைழுத்து இயக்கமாக திமுகவின் கையெழுத்து இயக்கமும், திமுகவும், திமுக தலைவரும் வரலாற்றின் பக்கங்களில் நினைவுகூறப்படுவார்கள் என்பது நிச்சயம்.

- பிலால் அலியார்

No comments:

Post a Comment