Tuesday 31 March 2020

அன்னை மணியம்மையார் கடிதங்கள்

கடிதங்கள்
அய்யா உடல்நிலை குறித்து 1943ல் அன்னை மணியம்மையார் எழுதிய கடிதம்

(23.10.1943 ‘குடிஅரசு’ வார ஏட்டில் ஒரு சிறு அறிக்கை, வேலூர் அ.மணி எழுதுவது என்ற தலைப்பில் எழுதப்பட்டது)
“பெரியாருடன் குற்றாலத்திலும், ஈரோட்டிலும் ஒரு மாத காலமிருந்தேன். அவர் உடல் நிலை மிக்க பலவீனமாகவும், நாளுக்கு நாள் மெலிவாகியும் வருகிறது. அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்குப் பின், இயக்கக் காரியங்களைப் பார்க்க, தகுந்த முழு நேரக்காரரும், முழு கொள்கைக்காரர்களும் கிடைப்பார்களா? என்கிற கவலையிலேயே இருக்கிறார். இயக்கத்துக்காக என்று தன் கைவசமிருக்கும் சொத்துக்களை என்ன செய்வது என்பது அவருக்கு மற்றொரு பெருங் கவலையாய் இருப்பதையும் கண்டேன். அதோடு இயக்கத்துக்கு வேலை செய்ய சில பெண்கள் வேண்டுமென்றும் அதிக ஆசைப்படுகிறார். அப்பெண்களுக்கு ஜீவனத்துக்கு ஏதாவது வழி செய்து விட்டுப் போகவும் இஷ்டப்படுகிறார். இந்தப்படி, பெரியாரை நான் ஒரு மாத காலமாக ஒரு பெருங்கவலை உருவாகக் கண்டேன். அவர் நோய் வளர, அவை எருப்போலவும் தண்ணீர் பாய்வது போலவுமே இருக்கிறது. நான் ஒரு பெண், என்ன செய்ய முடியும்?
இன்னும் சில பெண்கள் முன்வர வேண்டும். அவர்கள் பாமர மக்களால் கருதப்படும், “மானம், ஈனம்Ó ஊரார் பழிப்பு யாவற்றையும் துறந்த நல்ல கல்லுப் போன்ற உறுதியான மனதுடைய நாணயவாதிகளாகவும், வேறு தொல்லை இல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களது முதல் வேலை, பெரியாரைப் பேணுதலும், பெரியார் செல்லுமிடங் களுக்கெல்லாம் சென்று இயக்க மக்களை அறிமுகம் செய்துகொள்ள வேண்டியதும், இயக்கப் புத்தகங்களைப் படிக்கவும், எழுதவும், நன்றாய்ப் பேசவும் தெரிந்து கொள்ள வேண்டும். வீடுகள் தோறும் இயக்கப் புத்தகங்களும், ‘குடிஅரசு’ம் இருக்கும் படியும் செய்து அவற்றை நடத்தும் சக்தி பெற வேண்டும். இந்நிலையில் சுயமரியாதை இயக்கம் இருக்கிறது. பெண் மக்களே யோசியுங்கள்Ó என்று அம்மா மணியம்மையார் எழுதியுள்ளார்.
ராஜாஜி பெரியாருக்கு எழுதிய கடிதம்
அந்தரங்கம் 21.02.1949
அன்புக்குரிய ஆப்த நண்பருக்கு,
தங்களுடைய கடிதம் இன்றுதான் வெளியூரிலிருந்து திரும்பியதும் பார்த்தேன்.
என்பால் தாங்கள் காட்டும் அன்பைக் கண்டு நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அன்பு நாட்டுக்கு எந்தவிதத்திலாவது உதவும்.
தங்களுடைய கடிதத்தில் கண்டிருக்கும் விஷயத்தில் ஒரு கஷ்டம் இருக்கிறது. அதாவது என்னுடைய பதவி, இந்தப் பதவியை வகிப்பவன் அந்தப் பதவியை வகித்து வரும் காலத்தில் சாட்சி கையொப்பமிடுவது அல்லது அதிகாரிகள் முன்னிலையில் அத்தாட்சியாக நிற்பது இதற்கெல்லாம் பெரும் பதவியை ஒட்டிய வழக்கத்திற்கும், பதவியின் கவுரவத்துக்கும் ஒவ்வாத காரியம் என்று இவ்விடத்திய உத்தியோகக் கூட்டம் அபிப்பிராயப்படுவார்கள். என் அன்புக்கு அடை யாளமாக வேறு ஏதேனும் செய்ய வேண்டுமேயொழிய சாட்சி கையொப்பத்துக்காகப் போவது அசாத்தியம். இது ஒரு விஷயம்.
இரண்டாவதாக, உலக அனுபவத்தில் என்னைவிட தங்களுக்கு அனுபவம் அதிகம். 30 வயது பெண் தங்களுக்குப் பின் தங்களிடம் எவ்வளவு பக்தியும் அன்பும் இருந்த போதிலும் சொத்தைத் தாங்கள் எண்ணுகிறபடி பரிபாலனம் செய்வாள் என்று நம்புவதில் பயனில்லை. அதற்காக நிபந்தனைகள் வைத்துச் சாசனம் எழுதினால், அது தகராறுகளுக்கும், மனோ வேதனைக்கும் நீடித்த வியாச்சியங்களுக்கும் தான் காரணமாகும். இதையெல்லாம் யோசித்து எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்வீர்கள். தங்களுடைய வயதையும், நான் தங்கள்பால் வைத்திருக்கும் அன்பையும் கருதி, ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த வயசில் விவாக எண்ணம் வேண்டாம் என்பது என் அபிப்பிராயம். ஆகையால், ஒரு வருடமாவது ஒத்தி வைத்து பிறகு மனதில் எண்ணங்கள் ஊர்ஜிதப் பட்ட பின் செய்வது நலம்.
எழுதத் தோன்றியதெல்லாம் எழுதினேன். மன்னிக்க வேண்டும்.
இவை அன்புடன்,
இராசகோபாலாச்சாரி
புன்மை மனச்சநல்லூராரும் அன்னை மணியம்மையாரும்  - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 

ஓரஞ்சல் நமக்குக் கிடைத்தது. அதில்: 
திரு. குயில் ஆசிரியர் பாவேந்தர்க்கு, 
மணச்சநல்லூர் அம்பட்டன் வணக்க மாகத் தெரிவித்துக் கொள்வது. புகழக்கூடாத மணியம்மையாரை அன்னை எனப் புகழ்ந்தும் புகழத்தக்க விடுதலை ஆசிரியர் குருசாமியவர்களை இகழ்ந்தும் பேசியும் எழுதியும் வருகின்றீர் இது சரியா? 
(கையெழுத்தில்லை) 
இது கலக உள்ளம் படைத்தவரும், இயக்கத்தைக் கீழறுக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவரும் ஆகிய ஒருவரால் எழுதப்பட்டதாக இருக்கலாம். ஆயினும் நாம் மணியம்மையாரை ஏன் புகழ்கின்றோம் குருசாமியை ஏன் இகழ்கின்றோம் என்பதை விரிவாக விளக்கிச் சொல்வதானால் இதை மகிழ்ச்சிக்குரிய அஞ்சல் என்றே கொள்ளுகின்றோம். 
நாம் இளமைப் போதில் முருகனைப் புகழ்ந்தோம். - பாடினோம் - ஆனால் நாளடைவில் முருகன் புகழத்தக்க ஒரு பொருளன்று. பாடத்தக்க ஒரு பொருளன்று எனக் கண்டோம். முருகனைப் புகழ்வதை விட்டோம் முருகனைப் பாடுவதை விட்டோம். 
பாரதி தமிழ்ப்பாட்டுக்கு ஒரு புதுநடை கண்ட புலவன். பாரதியைப் புகழ்ந்தோம் - பாடினோம் - இதைச் சிலர் எதிர்த்தார்கள். பாரதிதாசன் என்று பெயர் வைத்துக் கொண்டிருப்பதை எதிர்த்து வருகின்றார்கள். அவர்களின் எதிர்ப்பை நாம் பொருட்படுத்தவில்லை. அனால் நாம் புகழ்வதற்கும் புகழ்ந்து பாடுவதற்கும் பாரதியை விட ஒருவர் இருக்கிறாரா? அவர் யார் என்று ஆராய்ந்து கொண்டிருந்தோம். 
தாம் போகும் வழியை மறித்துக் கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குத்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு கோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறிவருகின்ற நெருப்பு மழையைச் சிரித்துக்கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். 
தமிழ் நெறிகாப்பேன் தமிழரைக் காப்பேன். ஆரிய நெறியை அடியோடு மாய்ப்பேன் என்று அறையில் அல்ல; மலை மேல் நின்று மெல்ல அல்ல தொண்டை கிழிய முழுக்கமிடும் ஓர் இருடியதால் செய்த உள்ளத்தைக் கண்டோம். 
அது மட்டுமல்ல. 
குன்று உடைக்கும் தோளும் நெருப்பு மழைக்குச் சிரித்த உதடுகளும் இருடிய உள்ளமும் ஒரே இடத்தில் கண்டோம். இந்த அணு குண்டுப் பட்டறை தாம் பெரியார் என்பதும் கண்டோம். பெரியாரைப் புகழ்ந்து பேசினோம் புகழ்ந்து எழுதினோம் புகழ்ந்து பாடினோம். ஆயினும் நாம் புகழ நாம் பாட இன்னும் ஒரு மேலான ஒரு பொருள் வேண்டுமென்று ஆராய்ந்து கொண்டிருந்தோம். 
பெரியார் செத்துக் கொண்டிருந்தார்! தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். 
பெரியாரை உடனிருந்து சாகடித்துக் கொண்டிருந்த விரியன் பாம்புகள்: அவர் முதுமை அல்ல ; அவருடைய பிணிகளை அல்ல. குருசாமி, குஞ்சிதம் அம்மையார், அண்ணாதுரை, பொன்னம்பலனார். 
ஆனால் பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்துபோக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு. மக்கள் மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று. 
ஆயினும், காற்றிறங்கிப் பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒரு பால் ஒட்டிய ஆண் குறியினின்று முன்னறிவிப்பின்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலம் ஏந்திக் காக்கும் ஓர் அருந் தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது. அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது; பெரியார் சாகட்டும் என்று தவங்கிடக்கும் அண்ணாதுரை, குருசாமி, குஞ்சிதம் அம்மையார்,  பொன்னம்பலனார்களின் எண்ணத்தில் மண்ணாய் போட்டுப் பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை அன்னை என்று புகழாமல் நாம்வேறு என்ன என்று புகழவல்லோம்? 
பெரியார் மேடைமேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப் பொருளாலும் அழகுபெறக் கட்டிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள். 
அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார், ஏதுங்கெட்ட வேலைக்காரி போல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள். 
ஒரே ஒரு மாலையை என் துணைவியாருக்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை; எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டைக்கட்டுவதன்றி அம்மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தம் தலையில் வைத்தார் என்பதும் இல்லை. 
பெரியாரை அணுகும் சிறுக்கிகள் சிலரையும் நாம் கண்டதுண்டு. அவர்கள் பெரியாரே நீவீர் எம்மைப் பிடியுங்கள் என் ஆம்படையான் மார், உங்கள் கோட்டையைப் பிடித்துக் குட்டிச் சுவராகட்டும் என்று சொல்வதன்றி நல்ல எண்ணம் மருந்துக்கும் காணப்படுமா? 
மணச்சநல்லூராரே, நான் யாரைப் புகழ வேண்டும்? 
- பாரதிதாசன் 
    (10.5.1960) 
(தாய்க்கோழி - பெரியார் இலக்கியம்) 

ஆய்வும் பதிப்பும் - இரா. அறவேந்தன்

அமெரிக்காவிலிருந்து அண்ணா‌எழுதிய அஞ்சல்‌
பேரன்புடைய பெரியார்‌அவர்கட்கு,
வணக்கம்‌, 
என்‌உடல்நிலை நல்லவிதமாக முன்‌னேறி வருகிறது. 
வலியும்‌அதற்குக்‌காரணமாக இருந்து வந்த நோய்க்குறியும்‌இப்‌போது துளியும்‌இல்லை. 
பசியின்மையும்‌, இளைப்பும்‌இருக்கிறது. டாக்டர்‌மில்லரின்‌யோசனையின்படி இத்திங்கள்‌முழுவதும்‌
இங்கு இருந்துவிட்டு, நவம்பர் முதல்‌வாரம்‌ புறப்பட எண்ணியிருக்கிறேன்‌. இங்கு ராணி பரிமளம்‌, செழியன்‌, ராஜாராம்‌, டாக்டர் சதாசிவம்‌ஆகியோர்‌உடனிருந்து கனிவுடன்‌என்னைக்‌கவனித்துக்கொள்கிறார்‌கள்‌. சென்னை மருத்துவ மனையிலும்‌, விமானதளத்திலும்‌தாங்கள்‌. கவலையுடனும்‌, கலக்கத்துடன் இருந்த தோற்றம்‌ இப்போது என்‌மூன்‌தோன்றியபடி இருக்‌கிறது. ஆகவேதான்‌. கவலைப்பட வேண்டிய நிலை முற்றிலும்‌நீங்கிவிட்டது என்‌பதனை விளக்கமாகத்‌தெரிவித்திருக்‌கிறேன்‌.
தங்கள்‌அன்புக்கு என்‌நன்றி.
தங்கள்‌பிறந்தநாள்‌மலர்‌கட்டுரை ஒன்‌றில் “மனச்சோர்வுடன்‌துறவியாகிவிடுவேனோ என்னவோ” என்று எழுதியிருந்ததைக் கண்டு மிகவும்‌கவலைகொண்டேன்‌. தங்கள்‌ பணி, மகத்தான விழிப்புணர்ச்சியைச்‌சமூகத்தில்‌ கொடுத்திருக்கிறது. புதியதோர்‌பாதை மக்களுக்குக்‌கிடைத்திருக்கிறது. நான்‌ அறிந்தவரையில்‌, இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும்‌கிடைத்ததில்லை. அதுவும்‌நமது நாட்டில்‌. 
ஆகவே, சலிப்போ, கவலையோ துளியும்‌தாங்கள்‌கொள்ளத்‌ தேவையில்லை. 
என்‌வணக்கத்தினை – திருமதி. மணி அம்மையார்‌ அவர்களுக்கு தெரிவிக்‌கவும்‌.
அன்பு வணக்கங்கள்‌. 
தங்கள்‌அன்புள்ள,                                              நியூயார்க்., 
அண்ணாதுரை.                                                     10-10-68. 

No comments:

Post a Comment