Friday 17 April 2020

முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்: ஆனந்த் தெல்தும்ப்டே

முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்: ஆனந்த் தெல்தும்ப்டே 

ங்கப்பரிவாரத்தால் தலித்துகள் ஒருபோதுமே ஈர்க்கப்பட்டதில்லை. வெறிகொண்ட இந்துத்துவ மற்றும் பார்ப்பனிய சக்திகளால் முறையாகவும் அடிக்கடியும் தலித்துகள் பாதிப்புக்குள்ளாகியே வந்துள்ளனர். தலித்துகளிடம் இந்நிகழ்வுகள், இச்சக்திகள் பற்றிய எவ்விதமான மாயைகளுக்கும் இடமின்றி செய்துவிட்டன. முசுலீம்கள் மற்றும் கிறித்துவர்கள் பற்றி என்ன மனப்பான்மையை இந்துத்துவ சக்திகள் கொண்டுள்ளனவோ, அதே போன்ற மனப்பான்மையைத்தான் தலித்துகளைப் பற்றியும் கொண்டுள்ளன. "எங்களது விருப்பம் மற்றும் தாட்சண்யத்தின் கீழ் நீங்கள் இந்நாட்டில் அமைதியாகவும் பாதுகாப்புடனனும் இருக்கலாம்" என்பதே இப்பிரிவினருக்கு இந்துத்துவ சக்திகள் தரும் " வாக்குறுதி".

"நாங்கள் சில சலுகைகளையும் உரிமைகளையும் உங்களுக்கு வழங்கலாம்; ஆனால் அவற்றுக்காக நீங்கள் கிளர்ச்சி செய்யத் துணிந்து விடக்கூடாது; எல்லாவற்றுக்கும் மேலாக சாதி, அடக்குமுறை, தீண்டாமை, தொடர்ந்து வரும் சாதிய அட்டூழியங்கள் பற்றி குறிப்பிடுவதன் மூலம் - பெரும்பாண்மையினரின் உணர்வுகளை ஒரு போதும் புண்படுத்துக்கூடாது." தலித்துகளுக்கு எதிரான ஒவ்வொரு அட்டூழியத்திற்கும் ஒருவகையிலோ இன்னொரு வகையிலோ தலித்துகளே காரணமென்று இந்துத்துவ சக்திகள் பழிபோட்டு வருகின்றன. "குஜராத்திலுள்ள முஸ்லிம்கள், அவர்களுக்கு என்ன உரியதோ, அதற்கேற்ப நடத்தப்பட்டனர்" என்று அவர்கள் கூறுவது இதே கண்ணோட்டத்தில் தான்

டாக்டர் அம்பேத்கரை காவிமயமாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியை அம்பலப்படுத்தி எதிர்க்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகிறது. பிற்போக்கு சக்திகள் டாக்டர் அம்பேத்கரை அபகரிப்பதற்கோ, அவரது போதனைகளைத் திரிப்பதற்கோ அல்லது அவரது இலட்சியத்தைச் சிதைப்பதற்கோ அனுமதிக்க கூடாது; இது மிக மிக அவசியம்.

இந்த நூலில் டாக்டர் ஆனந்த் தெல்தும்ப்டே இந்தப்பணியைத் தான் செய்துள்ளார்.
-சந்தீப் பென்ட்சே (முன்னுரையில்)  

இந்து மதம் சார்ந்த ஒவ்வொன்றையும் அம்பேத்கர் தீவிரமான திறனாய்வுக்கு உட்படுத்தியபோது, தொடக்கத்தில் இந்துத்துவ சக்திகள் அவரிடம் கடுப்புக்கொண்டன. இந்துமதத்தைக் கைவிட்டு அவர் புத்த சமயத்தைத் தழுவியபோது அதற்காக அவரிடம் பிணக்கம் காட்டின. ஆனால், இந்த நாட்டின் மொத மக்கள் தொகையில் குறைந்தது 16% ஆக இருக்கக்கூடிய தலித்துகளில் மிகப்பெருமான்மையானவர்களின் நாட்டங்களின் குறியீடாக அவர் விளங்குகிறார் என்பதையும், எனவே அம்பேத்காரைப் பற்றிய எவ்வித விமர்சனமும் ஒட்டுமொத்த தலித் மக்களையும் சங்கப்பரிவாரத்திலிருந்து அந்நியப்படுத்தி விடக்கூடும் என்பதையும் விரைவிலேயே அவை கண்டுக்கொண்டன. உடனே அம்பேத்காரை தம்மவராகச் சேர்த்துக்கொள்ளும் நரித்தந்திரத்தை அவை கைக்கொண்டன. இத்திட்டம் ஒரு சமுதாய இணைப்பு மேடையை (சமாஜிக் சம்ரட்சத மஞ்ச்) நிறுவதற்கு இட்டுச் சென்றது. தலித்துகளிடையே உள்ள எளிதில் இணங்கும் மனிதர்களை சங்கப்பரிவாரம் மூளைச்சலவை செய்வதற்கு இது இடமளித்தது.  

தன் அவதாரக் கூட்டத்துக்குள் அம்பேத்காரையும் பொருந்துமாறு செய்வதிலேயே - அவரின் அடையாளத்தை தந்திரமான முறையில் உருசிதைத்து மாற்றி அமைப்பதிலேயே சங்கப்பரிவாரம் பெருமளவான முனைப்புக் காட்டுகிறது. தலித் மக்களிடையே அம்பேத்காருக்கு உள்ள மதிப்பை அது அறிந்துள்ளது. தான் உருசிதைத்து மாற்றி அமைத்துள்ள அம்பேத்கரை பரந்துபட்ட தலித் மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி செய்வதில் மட்டும் அவர்கள் வெற்றி பெற்று விட்டாலே, சண்டையில் அவர்கள் ஏறக்குறைய வென்றுவிட்ட மாதிரி தான்; தலித் இயக்கம் முழுவதையும் அது காயடித்துவிடும்; அதன் புரட்சிகர உயிராற்றலையே அது உறிஞ்சி விட்டுவிடும். அது மட்டுமல்ல, அரசியல் அதிகாரத்தை உறுதியாக வெல்வதிலும் அதை நிலைநிறுத்துவதிலும் சங்கப்பரிவாரத்துக்குத் தேவையான எண்ணிக்கை பலத்தையும் அது அவர்களுக்குப் பெற்றுத்தந்துவிடும்.

 இந்தத் திட்டத்தின் அடிப்படையில்தான் பாபாசாகேப் அம்பேத்காரை அவர்கள் ப்ராத்தா ஸ்மரணியா ஆக (ஒரு நாளைத் தொடங்கும் முன்பக்தி வணக்கத்துடன் நினைவு கூற வேண்டிய ஒருவராக) ஆக்கியுள்ளார்கள். அவரை இந்துக்களுக்கு மிகப் பெரும் நலம் புரிந்தவராகவும், உண்மையான தேசியவாதியாகவும், பண்பாட்டுத் தேசியவாதியாகவும், முஸ்லிம்களை வெறுத்தவராகவும், பொதுவுடைமையை எதிர்த்தவராகவும் அவர்கள் முன்னிறுத்தத் தொடங்கி உள்ளார்கள். மெதுவாக என்றாலும் இடைவிடாமல் அம்பேத்கரின் உருவத்தின்மேல் அடுக்கடுக்காக காவியைப்படியச் செய்து வருகிறார்கள். பேரணிகள் (சந்தேஷ் யாத்ரா) நடத்துகிறார்கள்; ஏராளமான கருத்தரங்குகளையும் விவாத அமர்வுகளையும் நடத்துகிறார்கள். மூட்டை மூட்டையாக, மிகப்பெரும் அளவிலான கருத்துப் பரப்பு வெளியீடுகளை உருவாக்கி விநியோகித்து வருகிறார்கள்.

ஒரு கும்பல், அம்பேத்கர் செய்த கிளர்ச்சியின் பரவலாகத் தெரிந்துள்ள வடிவத்துக்குத் தந்திரமான முறையில் அறிவாளித்தனமான விளக்கம் தரும் ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளது; இதுவரை அவரைத் தாங்கள் புரிந்து கொள்ளாமல் போனதற்காகத் தம்மைத்தாமே விமர்சித்துக் கொள்வதிலும் நொந்து கொள்வதிலும் திளைப்பதன் மூலமாக நியாயத் தன்மையைக் கொண்டுவரப் பார்க்கிறது. இன்னொரு கும்பல் வெறுமனே பொய்களை அள்ளி வீசிக்கொண்டே  போவதில் ஈடுபட்டுள்ளது. மூன்றாவது கும்பல் (இது அருண் சோரி போன்ற போலி அறிவாளிகளைக் கொண்டது) அவ்வப்போது அம்பேத்காரை தூண்டில் இரையாகப் பயன்படுத்தித் தன் அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்க்கிறது.

பாபாசாகேப் அம்பேத்கரை சங்கப்பரிவாரம் தன் தரப்பில் சேர்த்துக்கொண்டால், சாதிகள் ஒழிப்பு என்ற அவரது குறிக்கோளைப் பற்றியோ, சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவக்கொள்கை என்ற அடிப்படையில் இந்தியாவை உருவாக்கும் அவரது தரிசனத்தைப் பற்றியோ பேசுவதைக் கவனமாகத் தவிர்க்கிறது. எந்த சிக்கலின் தீர்வுக்காக தன் முழு வாழ்க்கையையும் அம்பேத்கார் பணயமாக வைத்தாரோ, அதனை தன் வசதிக்கேற்பத் திரித்துக் கூறுவதே சங்கப்பரிவாரப் பிரச்சாரத்தின் மொத்தப் போக்காகவும் உள்ளது. தனக்கே உரித்தான இரட்டை நாக்கு பேச்சுப்பழக்கப்படி, சில நேரங்களில் சாதிகள் என்ற நிறுவனத்தைத் தீவிரமாக ஆதரித்து வழக்காடுகிறது. சில நேரங்களில் அது, இடைக்காலத்தில் நடைபெற்ற 'முசுலீம்' தாக்குதல்களில் இருந்து இந்து சமுதாயத்தைக் காப்பதற்காகப் கையாளப்பட்ட ஒரு தற்காப்புக்கு கருவியே சாதி என்ற கேலிக்குரிய சாக்குபோக்கு பேசுவதையும் காண முடிகிறது.

தன் கடந்தகால ஒடுக்குமுறை குறித்து தெளிவான சொற்களில் தன் வெட்கத்தையோ வேதனையையோ ஒருபோதும் அது தெரிவித்ததில்லை. அல்லது, சாதிகளை ஒழிப்பதற்கு எந்த ஒரு உருப்படியான திட்டத்தையும் முன்வைப்பதில் ஒருபோதும் அது அக்கறை செலுத்தியதும் இல்லை. மாறாக, தன் கட்டுப்பாட்டுக்குள் இருத்தி நன்மை செய்வதாக தந்தை வழி ஆணவ எண்ணத்துடன்,"நாம் அனைவரும் இந்துக்கள், இதில் தீண்டாமை எங்கே இருக்கிறது? சாதிகள் எங்கே வருகின்றன? நாம் அனைவரும் அன்று. நம்மிடம் இருப்பது ஒரே வருணம் - ஒரே சாதி - அது தான் இந்து!" என்ற சொற்களையே கிளிப்பிள்ளை போலத் திரும்பத் திரும்ப ஒப்பித்து வருகிறது. சாதி பிரச்சனைக்கு எவ்வளவு எளிமையான தீர்வு! சாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த டாக்டர் அம்பேத்காருக்கு 'சரியான' அவமதிப்பு ஆகும் இது. சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவக் கொள்கை என்னும் அம்பேத்காரின் தரிசனத்தைப் பொறுத்தவரையிலோ, பாசிசக் கொடுங்கோன்மையையே பாரம்பரியமாகக் கொண்ட சங்கப்பரிவாரம், அத்தரிசனத்துக்கு எதிர்நிலையிலேயே நிற்கிறது.
தலித்துகளுக்கும் முசுலீம்களுக்கும் இடையில் பகைமையை உருவாக்கவும், தலித்துகளை இந்துத்துவப் பட்டிக்குள் இழுத்துப்போடவும், மக்களை 'நாம்' என்றும் 'அவர்கள்' என்றும் எதிரெதிர் அணிகளாகப் பிரிக்கவும் சங்கப்பரிவாரம் உருவாக்கியுள்ள திட்டம் அது. குஜராத்தில் மோடி நடத்திய கேடுகெட்ட சோதனையின் விரிவாக்கம் அது. பிணங்கள் வேகும் சிதை தன் சமைத்துக்கொள்ளும் உலை நெருப்பாக்கும் தன் உள்நோக்கத்தை சங்க பரிவாரத்தின் குயுக்தித் திட்டம் எப்போதும் வலியுறுத்துகிறது.

அம்பேத்கரின்எழுத்துக்களில்இசுலாத்தையும்முசுலீம்களையும்பற்றிய குறிப்புகள்தொடக்க காலத்திலிருந்தே மிகுதியாக உள்ளன. தனது இயக்கமான பகிஷ்கிரிதகா ஹிசதகாரணி
சபாவின்பிரச்சார ஏடாக மராத்தியில்அவர்தொடங்கிய ஏடு பகிஷ்கிரிதா பாரத்என்பது. மகாராட்டிர சீர்திருத்தவாதிகளில்ஒருவரானலோகித்தாவதி என்பவர்இசுலாம்பற்றி எழுதிய கட்டுரைகள்அதில்வெளியிடப்பட்டன. அவை பல இதழ்களில்தொடர்கட்டுரைகளாக
வெளிவந்தன.” அம்பேத்கர்அவர்கள்இசுலாத்துக்கோ முசுலீம்களுக்கோ எதிரானவராக இருந்திருந்தால்தன்ஏட்டின்மதிப்புமிக்க பக்கங்களில்அவர்களுக்கு இவ்வளவு அதிகமான இடத்தை அளித்திருக்க மாட்டார். இசுலாத்தின் சமத்துவக் கொள்கைகளைக் கண்டு அம்பேத்கர் உண்மையாகவே நெஞ்சம் நெகிழ்ந்தார். இந்தியாவில் அது உள்நாட்டு இந்துமதத்தின் கேடுகளை உள்வாங்கி சீர்குலைந்து விட்டதைக்கண்டு உளம் வருந்தினார். இந்தச் சீரழிவைப் பற்றி பல இடங்களிலும் அவர் பேசி உள்ளார். ஆனால் முடிவில், அதற்கான பழியை எப்போதும் அவர் இந்துமதத்தின் மீதே சுமத்தி உள்ளார்.  

நடைமுறை மட்டத்திலும்கூட்‌. இசுலாமை - அதன்ஒற்றுமை சமரச; உணர்வுக்காகப்போற்றும்போக்கினராகவே இருந்துள்ளார்‌. முசுலீம்களிடையே காணப்படும்ஒட்டுறவுத்தன்மையால்அவர்உணர்வுந்தல்பெற்றார்எனவும்‌, மதம்மாறுவதற்காக அம்மதத்தைத்தேர்வதற்கு - பொதுக்கருத்துக்கு மாறாக - முன்னுரிமை தந்தார்எனவும்தெரிகிறது. தான்இறப்பதற்குமுன்இந்து அமைப்பில்இருந்து வெளியேறி ஒரு புதிய மதத்தைத்தழுவுவதாக்‌ 1935-(இல்இயோலில்வைத்து அவர்அறிவித்தார்‌. அப்போது அவரது சீடர்களில்சிலர்தாமும்மதம்மாற முடிவு செய்து அவரை அணுகினார்கள்‌. அவர்களிடம்அவர்இசுலாத்தைதீ தழுவுமாறு அறிவுரை கூறினார்‌. அவரது பகிஷ்கிரிதா பாரக்ஏடும்‌ (மார்ச்‌ 15, 1929) மக்கள்தம்மதத்தை மாற்றிக்கொள்ள விரும்பினால்இசுலாத்துக்கு மாறிக்கொள்ளும்படி அவர்களுக்கு வலியுறுத்துகிறது. பல்வேறு மதங்களுக்கும்தன்குறிக்கோள்களுக்கும்இடையிலான உறவு குறித்த ஆழமான ஆய்வுகளுக்குப்பிறகுதான்அவர்புத்தரின்தம்மத்தை ஏற்பதென முடிவு செய்தார்‌. எனவே, அவர்முசுலீம்களுக்கு எதிராக இருந்தார்என்று கூறுவது முற்றிலும்தீயநோக்கம் கொண்டதாகும்‌.

இந்து ஆட்சி ஒரு மெய்யான நிலவரமாகுமானால், அது இந்த நாட்டுக்கு மிகப்பெரிய துன்பமாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்துக்கள் என்ன உறுதி கூறினாலும், உண்மையில் சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவத்துக்கு இந்து மதம் ஒரு அச்சுறுத்தலாகவே உள்ளது. அவ்வகையில் ஜனநாயகத்துக்கு அது இசைவானதல்ல.

இந்து ஆட்சி
என்ன விலை கொடுத்தேனும்
தடுக்கப்பட்டாக வேண்டும்.”

- டாக்டர் அம்பேத்கர்

(மேற்காணும் எழுத்துகள் டாக்டர். ஆனந்த் தெல்தும்ப்டே அவர்கள் எழுதிய முசுலீம்கள் குறித்து அம்பேத்கர் என்ற புத்தகத்தில் உள்ளது. இந்த புத்தகம் 2003 ல் வெளியானது. கீழைக்காற்று பதிப்பகம் தமிழில் வெளியிட்டு இருக்கிறது)  

No comments:

Post a Comment