Friday 17 April 2020

தியாகராயரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் - புலவர் ம. அய்யாசாமி எம். ஏ

தியாகராயரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் - புலவர் ம. அய்யாசாமி எம்.

27.4.1852       தியாகராயரின் பிறப்பு
1876            இளங்கலைப்பட்டம் (பி. ) பெறுதல்
1876            அட்சய ஆண்டுப் பஞ்சம் - துன்புற்ற மக்களுக்கு உணவளித்தல்
1882- 1920    சென்னை நகராட்சி உறுப்பினராதல்
2.2.1920        நகராட்சிமன்ற தலைவராதல்
16.5.1884       சென்னை மகாஜன சபையின் தோற்றம்
1912             வரை உறுப்பினராக இருத்தல்
1884            மணியக்காரர் சத்திரத்தின் சிறப்புச் செயலாளராகப் பணியாற்றுதல்
1885             அனைந்திந்தியக் காங்கிரசுப் பேரவைத் தோற்றம்
1885 - 1917    காங்கிரசின் உறுப்பினராகப் பணியாற்றுதல்
1887             சென்னையில் நடைபெற்ற மூன்றாவது காங்கிரசு மாநாட்டில் கலந்துக்கொண்டு
ரூ.200 நன்கொடையும் வழங்குதல்
1887             விக்டோரியா மகாராணியாரின் பொன்விழா ஆண்டு.
1887 1924     பச்சையப்பர் அறக்கட்டளையின் உறுப்பினராகவும் தலைவராகவும்
பணியாற்றுதல்
26.3.1889      அரசு விக்ட்டோரியா தொழிற் பயிற்சிக்கூடம் நிறுவுதல்
3.12.1897       தியாகராயர் தொடக்கப்பள்ளி நிறுவப் பெறுதல்
3.12.1897       சென்னை ஆரியன் கிளப் தோற்றுவித்தல்
1898            சென்னைப் பல்கலைக் கழகப் பங்கேற்பு
1901 1902,     கைத்தறிப்பற்றி ஆராய்ச்சி - ஆல்பிரட் சார்ட்டருடன்
1904            தியாகராயர் தொடக்கப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாதல்
1905            வேல்ஸ் இளவரசர் (ஐந்தாம் ஜார்ஜ்) வருகை தியாகராயர் அவரைத் தமது
வளமனையில் வரவேற்றல்
1905            செங்கல்வராய நாயக்கர் தொழில் நுட்பப் பயிற்சிப் பள்ளி தொடங்கப் பெறுதல்
செப் 1908 அகில இந்திய நெசவுப்போட்டியில் பரிசுகள் பெறுதல் (மாநாடும் நடைபெறுதல்)
1908            உதகை தொழில் மாநாடு
1908 1920     உலகப் பொதுப்பற்றாளர் கழகத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றுதல்
1909            இராவ் பகதூர் பட்டம் பெறுதல்
1909 1912     சென்னை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றுதல்
1912             சென்னை திராவிடச் சங்கத்தின் தோற்றம்
                   அதில் ஈடுபாடு கொண்டு சொற்பொழிவாற்றுதல்
1912 1918      சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் உறுப்பினராகப் பணியாற்றுதல்
1912 1925      கூட்டுறவு வீட்டு வசதி நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றுதல்
1914             அனைத்திந்திய தொழில் மாநாடு - சென்னை
15.4.1915        உலகப் பொதுப் பற்றாளர் கழகத்திற்கு ஊறுகாய் தந்த காந்தியடிகளுக்கு மாலை
அணிவித்து வரவேற்பு அளித்தல்.
1916             சர் வில்லியம் பெயரைச் சந்தித்துத் தொழில் வளர்ச்சி பற்றி உரையாடுதல்       
1916 1921      சென்னைப்புரி ஆந்திர மகாசபை நிறுவித் தலைவராகப் பணியாற்றுதல்
1916 1917      டாக்டர் டி. எம் நாயருடன் இணைந்து தென்னிந்திய நலவுரிமைச்சங்கம் (நீதிக்கட்சி) தோற்றுவித்து அதன் பொதுச் செயலராகப் பணியாற்றுதல். தென்னிந்திய மக்கள் சங்கம் தோற்றுவித்து அதன் தலைவராகப் பணியாற்றுதல் ஜஸ்டிஸ், திராவிடன், ஆந்திரப்ரகாசிகா இதழ்களை வெளியிடுதல்
1917             பிராமணரல்லாதாரின் உரிமைச்சாசனம் என்றழைக்கப்படும் தமது கொள்கை
அறிவிப்பை வெளியிடுதல்
19.5.1917        தமது குடும்பச் சொத்தில் ஒரு பகுதியைக் கல்வி வளர்ச்சிக்காக வழங்குதல்
19.8.1917       கோயம்பத்தூர் பிராமணரல்லாதார் இயக்கத்தின் முதல் மாநாடு
27,28.10.1917 பிக்காவொல் மாநாடு
3,4.11.1917      புலிவெந்தலா மாநாடு
30.11.1917,
1.12-1917        திருநெல்வேலி மாநாடு
15.12.1917       சென்னைக்கு வந்த மாண்டேகு செம்ஸ்போர்டுக்கு வரவேற்பளித்துக்
                   கோரிக்கையைக் கொடுத்தல்
டிசம்பர் 1917         சேலம் மாநாடு
22.12.1917      சென்னை மாகாணச் சங்கத்தின் தோற்றம்; இந்தச் சங்கம் நீதிக்கட்சிக்கு எதிராகத் தோற்றுவிக்கப் பட்டது
29.12.1917      நீதிக்கட்சியின் முதல் மாநில மாநாடு சென்னை தலைவராகப் பொறுப்பேற்று நடத்துதல்
1.9.1918         இந்திய அமைச்சருக்கும் அரசுப்பிரதிநிதிக்கும் கடிதம் எழுதுதல்
13.10.1918      மதுரை மாநாடு
20.10.1918     நீதிக்கட்சியின் சிறப்பு மாநாடு - தியாகராயர் தலைமை தாங்குதல்
1.1.1919         திவான் பகதூர் பட்டம் தரப் பெறுதல்
11.1.1919        நீதிக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு
12.1.1919        சவுத் பரோக் குழுவைப் புறக்கணித்துத் தமது மறுப்பைக் கடித்த மூலம்
தெரிவித்தல்
16.5.1919       வாக்குரிமைக் குழு அறிக்கை வெளியீடு
19.6.1919       டாக்டர் டி. எம். நாயரை இங்கிலாந்துக்கு அனுப்புதல்.
17.7.1919        டாக்டர் டி. எம். நாயர் இங்கிலாந்தில் மறைவு
19.9.1919       நீதிகட்சிக் கூட்டம் கூட்டி வகுப்பு வாரிப் பிரதிநித்துவத்தை வலியுறுத்தித்
தீர்மானத்தை அரசுக்கு அனுப்புதல்
29.12.1919      நீதிக்கட்சியின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை
1.1.1920         தியாகராயருக்கு அரசு சர் பட்டம் தருதல்
27.2.1920       முதன்முதலில் சென்னையில் மலர்க்கண்காட்சி நடைபெறுதல்
18.3.1920       மெஸ்டன் குழுவின் முடிவு வெளியீடு
20.7.1920      புதிய அரசியல் சட்டம்
நவம்பர் 1920       முதல் பொதுத் தேர்தல் - நீதிக்கட்சியின் வெற்றி அமைச்சரவை அமைத்தல்.
சென்னை மாநகராட்சி மன்றத்தின் தலைவராகத் தியாகராயர் தேர்வு.
18.1.1921        நான்காவது மாநில, மாநாடு - ஜஸ்டிஸ் அலுவலகம்
1921             தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - இவரது முயற்சியால் தொழிலாளர்கள்
வேலைக்குத் திரும்புதல்
1921             கானாட் பிரபுவின் வருகை - தியாகராயர் வரவேற்பளித்தல்
1921 - 1924    உலகப் பொதுப்பற்றாளர் கழகத் தலைவராகப் பணியாற்றுதல்
13.1.1922        வேல்ஸ் இளவரசர் (எட்டாம் எட்வர்ட்) வருகை.
தியாகராயர் துறைமுகத்தில் வரவேற்பளித்தல்
13.1.1922        சட்டமன்றத்திற்குச் செல்லாதவாறு ஒத்துழையாமை இயக்கத்தினர் தியாகராயரைத் தாக்குதல். அவரது இல்லத்தைச் சேதப்படுத்துதல்.
15.1.1922        நீதிக்கட்சியின் ஐந்தாவது மாநில மாநாடு - சென்னை
9.5.1922        சென்னை மாநகட்சிக்குச் சொந்தமான தென்னை மரங்களில் கள் இறக்குவதற்கு
அனுமதிப்பதில்லை என்னும் தீர்மானம் தியாகராயரின் தலைமையில்
நிறைவேறுதல்
டிசம்பர் 1922 நீதிக்கட்சியின் ஆறாவது மாநில மாநாடு - சென்னை
1923             இரண்டாவது பொதுத்தேர்தல் - நீதிக்கட்சி மீண்டும் வென்று அமைச்சரவை
அமைத்தல்
20.10.1923     மருத்துவ மாநாட்டில் வரவேற்புக்கு குழுத் தலைவராகப் பணியாற்றுதல்
23.10.1923     மாநகராட்சி மன்றத் தலைமைப் பதிவினியின்றும் விலகுதல்
1923             பச்சையப்பர் மன்றத்தில் தியாகராயரின் உருவப்படம் திறத்தல்
27.11.1923      நீதிக்கட்சி அமைச்சரவை மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டுவர
பெற்றுத் தோல்வியுறுதல்.
1924            பிராமணரல்லாதார் மாநாடு - பெல்காம் நகர்
1924            சீனியர் தியாகராயரின் மறைவு
13.4.1925       தேவாங்கர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கைத்தறிக் கண்காட்சியைத் தொடங்கி
வைத்தல்
27.4.1925       தமது இல்லத்திற்கு வந்த (பிறந்த நாளில்) ஆளுநரிடம் சந்தித்துக் கூவம் கால்வாய் சீரமைப்பு பற்றி உரையாடுதல்
28.4.1925       தியாகராயரின் நினைவைப் போற்றுமுகமாக உலகப் பொதுப்பற்றாளர் கழகத்தில் மதுவகைகளை அனுமதிப்பதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பெறுதல்
28.4.1925       சட்டசபையில் பொதுக்கிணறு, குளங்களில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் முகக்க சட்டம் செய்யப்பட்டதை முதல்வர் பனகல் அரசர் வந்து அறிவித்தல். தியாகராயர் மறைவு
31.10.1931      சென்னை மாநகராட்சி வளாகத்தில் தியாகராயரின் முழு உருவச் சிலையை சென்னை மாநில ஆளுநர் திருமிகு. சர். ஜியார்ஜ் பேரெட்ரிக் ஸ்டான்லி அவர்கள் திறந்துவைத்துச் சிறப்பித்தல். தியாகராயருக்கு அரசு விழா எடுத்து, நினைவைப் போற்ற- அனகாபுத்தூர் சி. ராமலிங்கம் வேண்டுதலால் எம்.ஜி.ஆர் ஆணையிட்டு தொடங்கினார்.
27.4.1985       முதல் தியாகராயர் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுதல்
17.9.2008      சர். பிட்டி. தியாகராயர், டாக்டர் நடேச முதலியார், டாக்டர். டி. எம். நாயர் - மூவரின் அஞ்சல் தலைகளை முதலமைச்சர் கலைஞர். கருணாநிதி அவர்கள் வெளியிடுதல்.         


-    புலவர் ம. அய்யாசாமி எம்.

No comments:

Post a Comment