Saturday, 30 May 2020

பாத யாத்திரை - ரூபன் ஜெ

பாத யாத்திரை - ரூபன் ஜெ

து தான் சரி,
இப்படி ஓரமாக நடப்பதுதான்
உனக்கு
நல்லது.
இதுதான் உன் இடம்,
ராஜபாட்டைகளை விட்டு
விலகியே இரு,
அது அவர்களின்
ரதயாத்திரைக்கானது.
அதை நீ வேடிக்கை
பார்க்கலாம்,
வியந்து வாக்களிக்கலாம்.
அதற்காக,
நீ பாத யாத்திரை போகும்போது
அந்த ரதங்கள் எதிரே
வருமென்று எதிர்பார்க்க கூடாது.

நன்றி: ரூபன் ஜெ

No comments:

Post a Comment