Saturday 30 May 2020

இந்தியா எனும் பழம்பெரும் கலாச்சார நாடு! - ராஜராஜன் ஆர். ஜெ

இந்தியா எனும் பழம்பெரும் கலாச்சார நாடு! - ராஜராஜன் ஆர். ஜெ

ன் இரண்டாம் குழந்தையின் பிஞ்சுப்பாதத்தை
தடவிப்பார்க்கிறேன். எத்தனை மிருதுவாக இருக்கிறது. அவன் காலில் ஒரு கல் குத்தினால் அவனுடன் சேர்ந்து எனக்கும் வலிக்கும்.
அதோ, மொட்டை வெயிலில், வெட்ட வெளியில், தார் சாலையில் ஒரு தாய் இழுக்க ஒரு குழந்தை செருப்பில்லாமல் ஓடுகிறது.
சாப்பிட மாட்டேன் என்று சொல்லி குழந்தை அழுகிறது. அத்தனை ஆர்பாட்டம் செய்து அதற்கு சோறூட்டுகிறோம்.
அதோ, பசியில் ஒரு குழந்தை அழுகிறது. என்ன செய்து அதன் பசியை தாய் தீர்ப்பாள்!?
மிருதுவான கால்களுக்கும் வெயிலில் வெடித்து கொப்பளம் வந்த கால்களுக்கும் உள்ள வித்தியாசம் தான் இந்தியா.
மிருதுவான இதயம் கொண்டவர்கள் கண்களை மூடிக்கொள்கிறார்கள். கொஞ்சம் தைரியமானவர்கள் பார்த்து கண்ணீர் விடுகிறார்கள். பெரும்பான்மையானவர்கள் கரோனோ வைரசுடன் வாழ பழகுவதைப்போலவே, இந்த ஏற்றத்தாழ்வுடன் வாழ பழகி விட்டனர்!
இந்தியா எனும் பழம்பெரும் கலாச்சார நாடு!
- ராஜராஜன் ஆர்.ஜெ

No comments:

Post a Comment