Saturday 16 May 2020

ஏன் மனுநூல் கொளுத்தப்படவேண்டும்? #May17ManuBurningDay #மனுதர்ம_எரிப்பு_நாள்_மே17

ஏன் மனுநூல் கொளுத்தப்படவேண்டும்? #May17ManuBurningDay
#மனுதர்ம_எரிப்பு_நாள்_மே17


நாலாம் வருணத்தாரும் நாத்திகருமே மிகுந்து, இரு பிறப்பாளர் இல்லாமற் போகின்ற நாடு வறுமை வாய்ப்பட்டு விரைவில் அழிந்து போகும் (8 : 22).

அந்தணனுடன் அவனுக்குரிய உயர்ந்த ஆசனத்தில் அகங்கரித்துச் சமதையாக அமர்ந்த நாலாம் வருணத்தவனை, அவனது உயிர்க்கு ஊறு நேராத வகையில் இடுப்பிற் சூடு போட்டோ, உட்கார்ந்த உறுப்பிற் சிறிது சேதப்படுத்தியோ ஊரை விட்டு ஓட்ட வேண்டியது (8 : 281).

பிரம்மஹத்தியை விடப் பெரும் பாவம் உலகில் இல்லையாகையால், பிராமணனைக் கொல்ல மன்னன் எண்ணவும் கூடாது (8 : 379).

எந்தப் பாவம் செய்த போதிலும், பிராமணனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டுத் துரத்துக (8 : 379).

பிராமணர் உயர்வு '’மனிதராசி பல்கும் பொருட்டாகவே, பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நால் வருணத்தையும் வேதஞானம், புவிபுரத்தல், செல்வமீட்டல், ஏவல் புரிதல் என்ற கடப்பாடுகளின் வழியே வகுத்து வைத்தார். இவர்கள் இறைவனுடைய முகம், தோள், தொடை, பாதம் ஆகிய பகுதிகளினின்றும் தோற்றமுற்றனர் (மனு 1 : 31).


வேத எதிர்ப்பாளர்கள் அன்றாடக் கடமைகளை செய்யாதவர்கள்; இவர்களின் பிறப்பே வீண்; திருட்டுத்தனமாக சாதி மாறிப் பிறந்தவர்கள்; வேதத்தை கேள்வி கேட்டு நிந்தனை செய்யும் துறவிகளுக்கும் தற்கொலை செய்து கொண்டவர்களுக்கும் அவர்களின்ஆத்மாக்களுக்காகதர்ப்பணம்’ (செத்தப் பிறகு ஆத்மா சாந்தியடைவதற்கான புரோகிதச் சடங்கு) செய்யக் கூடாது”. (அத்.5; சுலோகம் 89)

என்று பவுத்தர்களுக்கு எதிராகவே மனு சாஸ்திரத்தில் பல ஸ்மிருதிகள் திணிக்கப்பட்டன. எனவே, பவுத்த கொள்கைகளை ஒழித்து மீண்டும் வேத பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட வந்ததே மனு சாஸ்திரம்.

இது புரட்சியாளர் அம்பேத்கர் தனது ஆய்வின் வழியாக கண்டறிந்த உண்மைகள்.


வேதத்தை பார்ப்பனியத்தை எதிர்த்து வந்த புத்தமதத் தவர்களைவேத நிந்தனையாளர்கள்என்று மனு சாஸ்திரம் கூறியதோடு அவர்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள். ஆபத்தானவர்கள், திருடர்கள் என்று வசை பாடுகிறது. வேத எதிர்ப்பாளர்களை அரசன் தனது எல்லையிலிருந்து வெளியேற்ற வேண்டும். (அத்.9: சுலோகம் 225) அரசனின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மாறு வேடத்தில் இவர்கள் பதுங்கி வாழ்கிறார்கள். இவர்கள் தீயவர்கள்; ஒழுக்கமற்றவர்கள் மக்களுக்கு கேடு செய்பவர்கள். (மனு-அத்.9; சுலோகம் 226)


உயிர்ப்பலி யாகங்களில் நம்பிக்கை கொண்ட சுங்க வம்சம் என்ற பார்ப்பன வம்சம் ஆட்சியைப் பிடித்தது. புஷ்யமித்திரசுங்கன் என்ற பார்ப்பான் அரசனாக வந்தான். அதிகாரத்தைப் பிடித்த சுங்க வம்ச பார்ப்பனர்கள், புத்தத் துறவிகளை தேடித் தேடிக் கொலை செய்தார்கள். ஒவ்வொரு புத்த துறவியின் தலைக்கும் 100 தங்கக் காசுகள் விலையாக அறிவிக்கப்பட்டது. புத்தர்களைக் கொன்று ஒழித்ததோடு மட்டுமல்லாமல், மக்களை அடிமைப்படுத்தும் பார்ப்பனக் கருத்துகளை கட்டளைகளாக சமூகத்தின் சட்டங்களாக்க விரும்பினர். அப்போது புஷ்யமித்திரன் ஆட்சியில் அரசின் சட்டமாக அறிவிக்கப்பட்டதுதான்மனு சாஸ்திரம்’.


8 ஆவது அத்தியாயம்; 415 ஆம் சுலோகத்தில் மனுதர்மத்தில் உள்ள செய்தியை உங்களுக்குச் சொல்கிறோம்.

யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட் டவன்

பக்தியினால் வேலை செய்கிறவன்

தன்னுடைய தேவடியாள் மகன்

விலைக்கு வாங்கப்பட்டவன்

ஒருவனால் கொடுக்கப்பட்டவன்

குலவழியாகத் தொன்றுதொட்டு வேலை செய்கிறவன்

குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என்று சூத்திரர்களுக்குப் பொருள் சொல்லியிருக் கிறார்கள்.

இதைவிட மானக்கேடு, இதைவிட அவமானம் வேறு இருக்க முடியுமா?


1927,1981, 2017, 2019 என மனுதர்ம எரிப்புத் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. இனியும் தொடரவே செய்யும். அது சட்டப்படி தடை செய்யப்படும் வரை நம் பணி ஓயப் போவதில்லை.ஏன் மனுநூல் கொளுத்தப்படவேண்டும்

மனுவின் கொடுமைக்கு வரலாற்று ரீதியாக ஓர் எடுத்துக்காட்டைக் கூறினால் போதும்.

மதுரையில் திருமலை நாயக்கர் ஆட்சி புரிந்து வருங்கால் "ஸ்ஹஸ்ர சீர்ஷா புருஷ" என்ற வேத வாக்கியத்திற்குப் பொருள் தெரிவிக்கும்படி பார்ப்பனரல்லாதானொருவன் அரசனது குருவைக் கேட்கவும், இரக்கம் என்பது சிறிதுமில்லாத பார்ப்பனராகிய குருவானவர், அரசனிடம் சென்று, ஒரு முகூர்த்த காலத்திற்குச் செங்கோலை தன்னிடம் ஒப்பு விக்கும்படிக் கேட்டுப் பெற்றுக் கொண்டு தன்னிடம் வேதத்திற்குப் பொருள் கேட்டவனை வரவழைத்து, அவனது ஆசனத் துவார வழியாக ஒரு கழு ஊசியை உச்சிக்குமேல் எழும்பி இருக்கும்படி ஏற்றி, இந்தச் சூத்திரப் பயல் வேதத்திற்குப் பொருள் கேட்டான்: சூத்திரர்களுக்கு வேதத்தின் பொருள் இத்தன்மையதாகும் என்று கூறினார் (ஞான சூரியன் பக்கம் 62-63).


காஞ்சிக் கோயில் பூசாரியான பரிமேலழகர் என்ற பார்ப்பனர் திருக்குறளுக்கு உரை எழுதுவதாகக் கூறி என்ன எழுதினார்?

'அறம் என்பதற்கு மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒதுக்கலும் ஆகும்!' என்று எழுதிடவில்லையா?

ஒரு குலத்துக்கொரு நீதி என்று கூறும் மனுவும் , பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற 
திருக்குறளும் எப்படி சமமாகும்


சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதைமனு.


இப்போதும்மனுதான்நமது அரசியல் சட்டத்தில் இந்துக்களுக்கான சட்டங்களில் மூல  நூலாக உள்ளது.

மனு அநீதி, மனுநூல் மனித அறத்திற்கு விரோதமானது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் மனு எரிக்கப்படுகிறது


கணவன் தீயகுணம், செயல் உள்ளவனாக விருந்தாலும், பல பெண்களோடு உறவு கொள்பவனாக இருந்தாலும் பெண்ணானவள் அவனை தெய்வமாக எண்ணிப் பூசிக்க வேண்டும். (தொழவேண்டும்)’’ (மனு 5 : 154)

பெண்களுக்கு சுயவாழ்வு இல்லை. அவர்கள் பிள்ளைப் பருவத்தில் பெற்றோரையும், அடுத்து கணவனையும், பின் பிள்ளைகளையும் சார்ந்தே வாழவேண்டும்.’’ (மனு 148, அத் _ 5)

மனுதர்மம்  எப்படிப்பட்டது?    “பிராமணன் சாப்பிட்ட மிச்சம், பழைய துணிகள், ஒதுக்கித் தள்ளும் தானியங்கள், பாத்திரங்கள் இவையே சூத்திரனுக்குரிய கூலி”   (மனு _ 125, அத் _ 10)

#May17ManuBurningDay
#மனுதர்ம_எரிப்பு_நாள்_மே17

- வழக்கறிஞர். கனிமொழி ம.வீ

No comments:

Post a Comment