Wednesday 17 June 2020

திராவிட நாட்காட்டி - ஜூன்

‪*திராவிட நாட்காட்டி - ஜூன் *‬

‪* 1 ஜூன் *‬
‪1888 - சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் பிறப்பு‬
‪1917 - நீதிக்கட்சி சார்பில் ‘திராவிடன்’ நாளிதழ் வெளியிடப்பட்டது.‬
‪1935 - உலகின் முதல் நாத்திக நாளேடு (வாரம் இருமுறை) ‘விடுதலை’ துவக்கம்‬
‪1951 - பெரியாரால் இந்திய அரசியல் சட்டம் முதல் திருத்தம் செய்யப்பட்ட நாள்‬
‪பன்னாட்டு குழந்தைகள் நாள்‬

‪* 2 ஜூன் *‬
‪1948 - காங்கிரஸ் ஆட்சியில் புலவர் குழந்தையின் ‘இராவண காவியம்’ நூலுக்குத் தடை‬
‪1951 - முதலாவது அரசியல் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட நாள் ‬

‪*3 ஜூன் *‬
‪1924 - டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பிறப்பு‬
‪1938 - இந்திப் போர் துவக்கம்‬

‪*4 ஜூன் *‬
‪1887 - டாக்டர் வரதராசுலு பிறப்பு‬

‪*5 ஜூன்* ‬
‪1960 - தமிழ்நாடு நீங்கிய “இந்திய தேசப்படம் எரிப்பு’க் கிளர்ச்சி மறுநாள் அறிவிக்கப்பட்ட நிலையில் தந்தை பெரியார் முன்கூட்டியே கைது‬
‪உலக சுற்றுப்புறச் சூழல் நாள் 1974 முதல்‬

‪* 5 ஜூன் * ‬
‪1960 - திராவிடர் கழகத்தினர் சார்பில் தமிழ்நாடு நீங்கிய இந்தியப் படம் எரிப்புப் போராட்டம்‬

‪* 8 ஜூன் *‬
‪உலகப் பெருங்கடல்கள் நாள்‬

‪* 10 ஜூன் *‬
‪1986 - புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு - திருச்சி‬

‪*12 ஜூன் * ‬

‪1912 - என்.வி.நடராசன் பிறப்பு ‬
‪1980 - திருவைகுண்டம் பொதுக்கூட்டத்தில் ‘மானமிகு’ என்ற சொல்லை பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்களால் அறிமுகம்.‬
‪2006 - தஞ்சையில் முதல்வர் கலைஞருக்குப் பாராட்டு விழா (அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உரிமை)‬

‪*14 ஜூன்* ‬
‪ரத்த தானம் செய்வோர் நாள் ‬

‪*15 ஜூன் * ‬
‪1948 - கல்வி வள்ளல் ராஜா சர். அண்ணாமலை மறைவு ‬

‪*16 ஜூன் *‬
‪1947 - ‘இராவணப் பெரியார்’ எழுதிய பூரணலிங்கனார் மறைவு ‬
‪1963 - வாலண்டினா விண்வெளிப் பயணம்‬

‪*17 ஜூன்* ‬
‪பாலைவனமாதல் மற்றும் வறட்சியைக் கட்டுப்படுத்தும் உலக நாள் ‬

‪*18 ஜூன்* ‬
‪1936 - மார்க்சிம் கார்க்கி மறைவு ‬
‪1951 - குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் முதலாவது திருத்தம் இந்திய அரசியல் சட்டத்திற்கு ஒப்புதல் கையொப்பம் இட்டார்.‬

‪*20 ஜூன்*‬
‪1932 - இங்கிலாந்து தொழிலாளர் கூட்டத்தில் பெரியார் முழக்கம்.‬
‪உலக அகதிகள் நாள்‬

‪*21 ஜூன்*‬

‪1906 - ப.ஜீவானந்தம் பிறப்பு ‬
‪1986 - புதிய கல்விக் கொள்கை நகலைக் கொளுத்தும் போராட்டம் ‬
‪2007 - சென்னை கலைவாணர் அரங்கில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு பிரச்சார ஊர்தி வழங்கும் விழா ‬

‪*22 ஜூன் *‬

‪1633 - விஞ்ஞானி கலிலியோவிற்கு கிறித்துவ திருச்சபை தண்டனை வழங்கிய நாள்‬
‪1988 - லிபரேட்டர் ஆசிரியர் ஆர்க்காடு டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி மறைவு ‬

‪* 23 ஜூன் *‬
‪1957 - குடந்தையிலிருந்து ஜாதி ஒழிப்புப்படை சென்னை நோக்கிப் புறப்பாடு.‬
‪1984 - நுழைவுத் தேர்வு அரசாணை எரிப்பு ‬

‪* 24 ஜூன்* ‬
‪1958 - ஜாதி ஒழிப்பு வீராங்கனை இடையாற்று மங்கலம் தெய்வானை அம்மையார் மறைவு ‬

‪*25 ஜூன் * ‬
‪1931 - சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிறந்தநாள் ‬
‪1975 - அவசர நிலை பிரகடனம் ‬
‪1994 - 31 (சி) சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கக் கோரி டில்லியில் பிரதமரை தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் முதல்வர் தலைமையில் சந்திப்பு ‬
‪1997 - முதன்முதலாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவராக பதவியேற்ற நாள். பதவி நிறைவுற்றதும் இதேநாள் (2002)‬

‪*26 ஜூன்*‬
‪உலக போதை ஒழிப்பு நாள்‬

‪*27 ஜூன்* ‬
‪உலக நீரிழிவு நாள்‬
‪1962 - மூவலூர் இராமாமிர்தம்மையார் மறைவு ‬
‪1970 - தந்தை பெரியாருக்கு ‘யுனெஸ்கோ’ விருது‬

‪*28 ஜூன்*‬
‪1712 - தத்துவஞானி ரூசோ பிறந்தார்  ‬
‪ஏழைகள் நாள் ‬
‪1974 - கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரைவார்த்த கொடிய நாள் ‬

‪*29 ஜூன்* ‬
‪மீனவர் நாள் ‬

‪*30 ஜூன்* ‬
‪1948 - புதுமைப்பித்தன் மறைவு‬
‪1953 - முத்தையா முதலியார் மறைவு ‬
‪1975 - விந்தன் மறைவு ‬
‪வகுப்புரிமை நாள்‬

‪தொகுப்பு : ராஜராஜன். ஆர்.ஜெ‬

No comments:

Post a Comment