Saturday 25 July 2020

கடும்சொற்கள் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து சான்றுகளோடு மறுத்து கொண்டே இருக்க வேண்டும். - மருத்துவர். பூவண்ணன் கணபதி

கடும்சொற்கள் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து சான்றுகளோடு மறுத்து கொண்டே இருக்க வேண்டும். - மருத்துவர். பூவண்ணன் கணபதி

அமேசான் நடத்திய கிண்டில் போட்டியில், TRANSVERSE LIE: Delivery in Tamenglong

என்கிற ஆங்கில புத்தகத்தை எழுதிய மருத்துவர். பூவண்ணன் அவர்களிடம் சில கேள்விகளை திராவிட வாசிப்பு சார்பாக முன் வைத்திருந்தோம். அவரது பதில்கள் கீழே:

கிண்டில் போட்டியில் கலந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?
நண்பர் மருத்துவர் சென் பாலன்

Transverse Lie என தலைப்பிட்டது ஏன்?
நார்மல் டெலிவரி செய்யவே முடியாத குழந்தை வயிற்றில் குறுக்காக இருக்கும் நிலை தான் Transverse lie.
கதையில் வரும் அனைத்து சூழல்களும் அதில் சிக்கி கொண்டு வாழும் மனிதர்களும் இருக்கும் நிலையை உணர்த்தும் சொல்லாக அதனை கருதினேன்.

ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது?

கதை ராணுவம் சார்ந்த நாட்டின் பல்வேறு பகுதிகளின் பிரச்சினையை பேசும் கதை என்பதால் அனைவரையும் சென்றடையும் வாய்ப்புகள் ஆங்கிலத்தில் அதிகம் என்று கருதி எழுதினேன்.

போட்டிக்காக எழுதியதால் தமிழ் ஜாம்பவான்களோடு போட்டி போட வேண்டாம் என்பதும் ஒரு காரணம். நாவல் போல Transverse lie உருவாக முக்கிய காரணமான நண்பர் பன்னீர் செல்வமும் ஆங்கிலத்தில் எழுதினால் உதவுகிறேன் என்று உதவியதும் முக்கிய காரணம்.

 தமிழில் எழுத பயமாக இருக்கிறது என்பதும் முக்கிய காரணம். இது சீத்தலை சாத்தனார்கள் நிரம்பிய ரத்த பூமி

தமிழர்கள் ஆங்கிலத்தில் பேச/எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறதா?

இல்லை. அது போன்ற சூழல் இருப்பதாக கருதும் நிலையே கிடையாது. தமிழில் எழுத வேண்டும் என்று முயற்சிக்கும் ஒரு பெரும் கூட்டம் உருவாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியான சூழல்

நீங்கள் சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படிப்பார்க்கிறீர்கள்? புத்தக வாசிப்பை இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வளர்க்குமா? தடுக்குமா?

மிக பெரும் மாற்றங்களை எளிதாக பேரிழப்புகள் இன்றி நிறைவேற்றும் கருவியாக சமூக ஊடகங்களை பார்க்கிறேன். பொய் செய்திகளை எளிதில் கண்டு கொள்ளும், கண்டு கொண்டு அவற்றை நிராகரிக்கும் சூழலை உருவாக்கினால் இவற்றின் தாக்கம் மிக நன்மையான ஒன்று என்று கூற தயக்கமே கிடையாது

சமூக ஊடகத்தில் ஒருவர் எப்படி இயங்க வேண்டும். எப்படி தங்களை வளர்த்துக்கொண்டு சமுகத்திற்கும் பங்களிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

சமூக ஊடகங்கள் இது போன்ற விதிகளுக்கு அப்பாற்பட்டவை. கட்டற்ற சுதந்திரத்தை தருபவை. அதன் பலமே இது தான். இங்கு விதிகளுக்கு இடம் கிடையாதது. பொய்கள் இல்லாமல் எதனை எழுதினாலும் நல்லது தான்

உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார்? புத்தகங்கள் எது?
பிடித்த எழுத்தாளர்கள் என்று பட்டியல் போடும் அளவுக்கு வாசிப்பு இல்லை. வளர்த்து கொள்ள வேண்டும்.

திராவிட இயக்கம், பெரியார், திமுக, கலைஞர், இன்றைய தலைவர் முக ஸ்டாலின் குறித்து பல்வேறு தவறான தகவல்கள், அவதூறுகள் வந்தவண்ணம் இருக்கிறது. இதை நம்புவர்களுக்கும் இருக்கிறார்கள். இதை எப்படி அணுக வேண்டும்? 
கடும்சொற்கள் இல்லாமல் பொய் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து சான்றுகளோடு மறுத்து கொண்டே இருக்க வேண்டும். அதனை தளர்ச்சியோ முயற்சியோ இல்லாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

புதிதாக எழுத வருபவர்களுக்கு என்ன கூறவிரும்புகிறீர்கள்?
இது எல்லாம் உங்களுக்கே நியாயமா? என்னை பார்த்து இப்படி ஒரு கேள்வியா?

அடுத்து புத்தகம் எழுத இருக்கிறீர்களா? எதிர்கால திட்டங்கள் என்ன?
அடுத்த நாவலாக ஆங்கிலத்தில் piggyback takeoff எழுதி கொண்டிருக்கிறேன். மீனம்பாக்கம் விமான நிலையம் சார்ந்த 1980 களில் துவங்கும் கதை

மருத்துவர் பூவண்ணன் கணபதி அவர்களின் புத்தகத்தை வாசிக்க: https://amz.run/3KBP


No comments:

Post a Comment