தி.மு.க 360° – கலைஞரின் பெண்கள் மேம்பாட்டு திட்டங்களும், சமூக மறுமலர்ச்சியும் - Vetri Selvan, B.E,PMP
“ஒரு சமூகத்தின் வளர்ச்சியை, பெண்களின் முன்னேற்றத்தை கொண்டே மதிப்பிடுவேன்” என்கிறார் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார். இப்படி அம்பேத்கார் காட்டிய வழியில் பயணித்து பெண்களின் வளர்ச்சிக்கு பலதிட்டங்களை தீட்டியும் ,வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டியதும் திராவிட இயக்கம் ஆகும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் ,சமூகத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில், பெண்களின் பங்கும் இருக்கவேண்டும் என்று திட்டங்களை தீட்டியவர் டாக்டர் காலைஞர். பெண்களின் வளர்சிக்கு பலதிட்டங்களை திராவிட இயக்கத்தின் சார்பில் கலைஞர் கொண்டு வந்திருக்கிறார். அவற்றுள் 5 முக்கிய ,பெண்களின் வாழ்வை மாற்றியமைத்த திட்டங்களை குறிப்பிடவேண்டுமானால் , கீழ்காணும் திட்டங்களை குறிப்பிடலாம்.
- ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்தில் சமஉரிமை
- வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு
- மகளிர்மன்றம்
- மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவிதிட்டம்
- முத்துலெட்சுமிரெட்டி நினைவு மகப்பேறு உதவிதிட்டம்
சொத்துரிமை
ஆண்களை போலவே பெண்களுக்கும் சொத்தில் சமஉரிமை என்கிற முன்னெடுப்பு என்பது நீண்ட வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டது. 1929 ஆண்டு செங்கல்பட்டில், தந்தை பெரியார் தலைமையில் நடந்த முதல்சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்கு சொத்துரிமை ,விவாகரத்துஉரிமை என்று பெண்களின் உரிமைகளை காக்க ஹிந்துசட்டத்தை (Hindu Code Bill) கொண்டுவர அம்பேத்கார் மிகவும் போராடினார். நேரு அம்பேதகரை இழக்கதயராக இருந்தாரே ஒழிய, ஹிந்துசட்டத்தை நிறைவேற்ற முயலவில்லை. விளைவு 1951 அம்பேத்கார் பதவியை ராஜினாமா செய்யவேண்டி இருந்தது.
இப்படி பெரியாரின் கனவை, அம்பேத்கர் சாதிக்க நினைத்ததை , 1989 ஆண்டு , மேமாதம் , 6ம் நாள் நிறைவேற்றிக் காட்டினார் கலைஞர். ஆம், 1989-90 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் ,ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமஉரிமை கொடுக்கும்சட்டம் ஒருமனதாக நிறைவேறியது. அப்போது பேசிய கலைஞர் “எந்த ஒரு சமூகமறுமலர்ச்சியும் ,பெண்களின் முன்னேற்றம் இல்லாமல் ஏற்படாது” என்று குறிப்பிடுகிறார். ஆயிரம் வருடங்களாக பார்பனீயத்தால் மறுக்கப்பட்ட உரிமையை பெண்களுக்கு சட்டத்தின் மூலம்மீட்டுக் கொடுத்தார் தலைவர் கலைஞர்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
கல்விதான் ஒருவரை உயர்த்தும், பெண்கள் கல்வி கற்றால்தான் சமூகம் மறுமலர்ச்சி பெரும். கல்வியின் மீது தீராத தாகம் இருந்தததால் தான் அண்ணல் அம்பேத்காரால் இவ்வளவு படிக்கமுடிந்தது. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்ததால்தான் , திராவிட இயக்க முன்னோடிகளான டிம்.எம்நாயர், நடேசமுதலியார் , பன்னிர்செல்வம் , பெரியார் போன்றவர்கள், நம்மக்களுக்கு கல்வி கிடைக்க அரும்பாடுபட்டனர். இப்படிப்பட்ட பிண்ணனி கொண்ட திராவிட இயக்கத்தில் இருந்துவந்த கலைஞர் சும்மா இருப்பாரா? 1989ம் ஆண்டு மே மாதம் 2ம்நாள், வறுமைக்கோட்டுக்கு கீழ்உள்ள குடும்பங்களையும், நடுத்தரவர்க்க குடும்பங்களையும் சேர்ந்த பெண்களுக்கு ஆரம்பபள்ளிமுதல் , பட்டப்படிப்புவரை இலவசகல்வி வழங்கும் ஈ.வெ.ரா. நாகம்மையார் கல்வித்திட்டத்தை கொண்டுவந்தார். இந்ததிட்டத்தின் நோக்கம் என்பது வறுமை அல்லது பணம் இல்லாததால் பெண்களின் கல்வி தடைபட்டுவிட கூடாது என்பதாகும். இதன்மூலம் 1991 ல் 51.3% இருந்த பெண்களின் கல்வியறிவு விகிதம், 2011ல் 73.4 % ஆக அதிகரித்தது. 22% வளர்ச்சி.
சரி ,படித்தாகிவிட்டது, வேலைக்கு என்ன செய்வது என்பதற்கான விடைதான் கலைஞர் கொண்டுவந்த, அரசுவேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு என்பதாகும். ஏராளமான பெண்கள் இந்த இடஒதுக்கீட்டின் மூலம் அரசுப்பணிகளில் சேர்ந்தனர். வேலைக்கு செல்லும் பெண்கள் எங்கு தங்குவார்கள் என்கிற கேள்வி எழலாம். இதற்காக பெண்கள் விடுதியை (Working Women Hostel) சென்னை ,புதுக்கோட்டை , கடலூர் , திருச்சி , மதுரை , ஓசூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்களில் ஏற்படுத்தினார். இதோடு நிற்காமல், பெண்கள் விடுதியை மற்றவர்கள் தொடங்கினால் 15,000 ரூபாய் அரசுமானியம் (Govt., Aid) அளிக்கும் திட்டத்தையும் கொண்டுவந்தவர் தலைவர் .
கல்வியில் அளப்பரிய பணிகளை செய்ததன் காரணமாகத்தான், முனைவர். அனந்தகிருஷ்ணன், முனவைர். அவ்வைநடராசன், முனைவர். பொன்னவைக்கோ, புலவர். ராமசந்திரன் உள்ளிட்ட பதிமூன்று முன்னாள் துவைவேந்தர்கள் நினைவஞ்சலி மற்றும் புகழ்வணக்கம் செலுத்தினார்கள். தென்னாப்பிரிக்க விடுதலைப் போராளி நெல்சன்மண்டேலாவிற்கு ஒன்பது துணைவேந்தர்கள் அஞ்சலி செலுத்தியதே இதுவரை சாதனையாக இருந்தது. ஆனால், பதிமூன்று முன்னாள் துணைவேந்தர்கள் ஒன்றுகூடி புகழ்வணக்கம் செலுத்தியதன் மூலம், நெல்சன்மண்டேலாவின் சாதனையையும் முறியடித்திருக்கிறார் தலைவர். கலைஞர் அவர்கள்.
அரசு சேவையில்லங்கள்
சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பெண்களுக்கு கல்வி ,தொழிற்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் சேவை இல்லத்தை (Service Homes) ஏற்படுத்தினார் கலைஞ்சர். சென்னை, கடலூர், தஞ்சை, திருநெல்வேலி , சேலம் மற்றும் காரைக்குடி ஆகியநகரங்களில் அரசின் சமூகநலத்துறையின் சார்பில் சேவையில்லங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த சேவை இல்லங்களின் நோக்கம் என்பது, 8ம்வகுப்பு, 10ம்வகுப்பு, 12ம்வகுப்பு தேர்வுகளுக்கு பெண்களை தயார்செய்வது. கல்வியோடு தையல், தட்டச்சு போன்ற தொழிற்கல்விகளும் கற்றுக் கொடுக்கப்பட்டன. இதோடு மட்டுமல்லாமல், மாதம் 120 ரூபாய் உதவித்தொகை, இலவச புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்கப்பட்டது. 12ம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற பெண்கள், இடைநிலை ஆசிரியர் பயிற்ச்சிபள்ளியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆசிரியர் பியற்ச்சியை முடித்த பெண்கள் ,நேரடியாக ஆசிரியர்களாக பணிநியமனம் செய்யப்பட்டனர்.
மகளிர் மன்றங்கள் மற்றும் சுயவேலைவாய்ப்பு
கிராமப்புற மக்களின் குறிப்பாக பெண்களுக்கு சமூகம் குறித்தும் ,அரசின் நலத்திட்டங்கள் , சுகாதாரம் ஆகியவற்றை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மகளிர்மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த மன்றங்களில் ,குடும்ப நலஆலோசனை, குழந்தைவளர்ப்பு , சிறுசேமிப்பு, விட்டுத்தோட்டம் ஆகியன குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் பெண் தொழில் முனைவோர்கள் அதிகமான எண்ணைக்கையில் இருக்கின்றார்கள், நாட்டிலேயே முதலிடம். மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டின் சிறப்பு என்னவென்றால், தமிழ்நாட்டில் இருக்கும் தொழில் முனைவோர்கள் நகரங்களில் இருக்கிறர்கள். தமிழ்நாட்டின் இந்த வெற்றிக்கு காரணம், பெண்களுக்கான கல்வியும், மகளிர் சுயஉதவிகுழுக்களும். இந்தியாவிலே முதல் முறையாக பெண்களுக்கான மேம்பாட்டு நிறுவனத்தை 1990 (Tamilnadu Women Development Corporation) கலைஞர் ஏற்படுத்தினார்.