Wednesday 19 August 2020

தி.மு.க 360° – கலைஞரின் பெண்கள் மேம்பாட்டு திட்டங்களும், சமூக மறுமலர்ச்சியும் - Vetri Selvan, B.E,PMP

 தி.மு. 360° – கலைஞரின் பெண்கள் மேம்பாட்டு திட்டங்களும், சமூக மறுமலர்ச்சியும் - Vetri Selvan, B.E,PMP

ரு சமூகத்தின் வளர்ச்சியை, பெண்களின் முன்னேற்றத்தை கொண்டே மதிப்பிடுவேன்என்கிறார் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார். இப்படி அம்பேத்கார் காட்டிய வழியில் பயணித்து பெண்களின் வளர்ச்சிக்கு பலதிட்டங்களை தீட்டியும் ,வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டியதும் திராவிட இயக்கம் ஆகும். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் ,சமூகத்தின்  ஒருங்கிணைந்த வளர்ச்சியில், பெண்களின் பங்கும் இருக்கவேண்டும் என்று திட்டங்களை தீட்டியவர் டாக்டர் காலைஞர். பெண்களின் வளர்சிக்கு பலதிட்டங்களை திராவிட இயக்கத்தின் சார்பில் கலைஞர் கொண்டு வந்திருக்கிறார். அவற்றுள் 5 முக்கிய ,பெண்களின் வாழ்வை மாற்றியமைத்த திட்டங்களை குறிப்பிடவேண்டுமானால் , கீழ்காணும் திட்டங்களை குறிப்பிடலாம்.


  • ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்தில் சமஉரிமை
  • வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு
  • மகளிர்மன்றம்
  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவிதிட்டம்
  • முத்துலெட்சுமிரெட்டி நினைவு மகப்பேறு உதவிதிட்டம்

சொத்துரிமை

ஆண்களை போலவே பெண்களுக்கும் சொத்தில் சமஉரிமை என்கிற முன்னெடுப்பு என்பது நீண்ட வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டது. 1929 ஆண்டு செங்கல்பட்டில், தந்தை பெரியார் தலைமையில் நடந்த முதல்சுயமரியாதை மாநாட்டில் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்கு சொத்துரிமை ,விவாகரத்துஉரிமை என்று பெண்களின் உரிமைகளை காக்க ஹிந்துசட்டத்தை (Hindu Code Bill) கொண்டுவர அம்பேத்கார் மிகவும் போராடினார். நேரு அம்பேதகரை இழக்கதயராக இருந்தாரே ஒழிய, ஹிந்துசட்டத்தை நிறைவேற்ற முயலவில்லை. விளைவு 1951 அம்பேத்கார் பதவியை ராஜினாமா செய்யவேண்டி இருந்தது.

இப்படி  பெரியாரின் கனவை, அம்பேத்கர் சாதிக்க நினைத்ததை , 1989 ஆண்டு , மேமாதம் , 6ம் நாள் நிறைவேற்றிக் காட்டினார் கலைஞர். ஆம், 1989-90 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரில் ,ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமஉரிமை கொடுக்கும்சட்டம் ஒருமனதாக நிறைவேறியது. அப்போது பேசிய கலைஞர்எந்த ஒரு சமூகமறுமலர்ச்சியும் ,பெண்களின் முன்னேற்றம் இல்லாமல் ஏற்படாதுஎன்று குறிப்பிடுகிறார். ஆயிரம் வருடங்களாக பார்பனீயத்தால் மறுக்கப்பட்ட உரிமையை பெண்களுக்கு சட்டத்தின் மூலம்மீட்டுக் கொடு