Wednesday 19 August 2020

என்னை முற்றிலும் அறிந்தவர் கருணாநிதி - பேரறிஞர் அண்ணா

 


என்னை முற்றிலும் அறிந்தவர் கருணாநிதி - பேரறிஞர் அண்ணா

 

ம்பி கருணாநிதியினுடைய ஆற்றல் பற்றியும், ஆற்றல் காரணமாகப் பெற்ற வெற்றிகள்பற்றியும், பெற்ற வெற்றிகளெல்லாம் நாட்டு முன்னேற்றத்துக்குப் பயன்பட்டன என்பது பற்றியும் அந்த ஆற்றலும் வெற்றியும் நாட்டுக்கு இனியும் நல்ல முறையில் பயன்படும் என்பது பற்றியும், நண்பர்கள்பலர் எடுத்துச் சொல்லக் கேட்பதில் எனக்கு மிகப்பெருமிதம் உண்டாகும் என்பதில் யாருக்கும் ஐயப்பாடில்லை!

 

கருணாநிதியின் எழுத்து வல்லமை – பேச்சு வல்லமை – நாடக நூல்களை எழுதிய வல்லமை- நாடகங்களில் நடித்த திறமை இவைகள் ஒவ்வொன்றையும் பற்றி எடுத்துச் சொன்னார்கள்.

 

கருணாநிதி இத்தகைய திறமைகளைப் பெற்றிருப்பது எவ்விதம் என்பதை உணர்ந்தால்தான்இந்தப் பாராட்டு விழாவின் உட்கருத்து புரியும். கருணாநியைப் போல இந்தத் திறமைகளைப் பெறவேண்டும் என்பது மட்டுமல்ல; அந்தத்திறமைகளை அவர் எப்படிப் பெற்றார் என்பதைப் பற்றியும் நாம் ஆராய வேண்டும்.

 

ஒரு நாளைக்குக் கருணாநிதி எத்தனை மணி நேரம் தூங்குகிறார் என்பதே அவருக்குத் தெரியாமல் அவர் உழைக்கிறார். அதை கருத்தில் கொண்டால், இந்தத் திறமை பெற்றதன் அடிப்படை உழைப்பு என்பதை உணர்வீர்கள். உழைக்காமல் இந்தத் திறமை வந்துவிடவில்லை!

 

நமக்குத்தான் ஒரு புகழ் வந்து விட்டதே; இனி நமக்கு தமிழ் இலக்கணம் தேவையில்லை என்று எடுத்தெறிந்து விட்டு காரியங்களை செய்கின்ற முறையில் அல்லாமல், அவருக்கு கிடைக்கக்கூடிய நேரம் குறைவாக இருந்தாலும் அதிலே தாம் பெற்றிருக்கிற அறிவாற்றலை வளப்படுத்திக் கொள்வதற்கு அதனை மிக நல்ல முறையிலே பயன்படுத்துவார்கள்.

 

என்னை முழுவதும் அறிந்தவர்கள்தான் கழகத்திலே இருக்கிறார்கள். அதிலே முற்றிலும் அறிந்தவர் என்று சொல்லத்தக்கவர்களிலே கருணாநிதிக்கு மிகச் சிறந்த இடமுண்டு. நான் கவலையோடு இருக்கிறேன் என்றால் முதன் முதல் கண்டுபிடிக்கக்கூடியது கருணாநிதிதான். கோபமாக இருக்கிறேன் என்றால் முதன்முதலாக கண்டுபிடிக்கக் கூடியது கருணாநிதிதான்.

 

தண்டவாளத்திலே தலை வைத்துப்படு என்று சொன்னாலும், பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்று என்று சொன்னாலும், இரண்டையும் ஒரேவிதமான ஆணை என்று ஏற்றுக்கொண்டு அதை நிறைவேற்றிக் கொடுப்பதில் தன் திறமையை வெளிப்படுத்துவார். இந்த முறையில், தம்பி கருணாநிதியிடத்தில் எனக்கு பாசமும், மரியாதையும் நிச்சயமாக உண்டு என்பதை நாடறியும்.

 

கருணாநிதி மூலமாக நானும், நாடும் இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோம். இப்பொழுது செய்திருக்கின்ற காரியங்களைப் போல் பல மடங்கு அதிகமான காரியங்கள் அவருடைய திறமையின் மூலம் நாட்டுக்குக் கிடைக்க வேண்டியிருக்கிறது.

1 comment:

  1. Our various portfolio is rich with iconic online slot titles and beloved homegrown characters, including Viking™ video slot, Lost Relics™, Gonzo’s Quest™, Starburst™, tons of|and lots of} more. An estimated total value for slot game improvement is $25,000. However, the fee can climb shortly with the elements described above. So, essential to|it could be 카지노사이트.online very important|you will want to} do correct analysis and planning of the slot improvement. Thus, find a way to|you presumably can} keep a verify on the costs and remove wasteful spending. Registration and Profile Management – Allow slot gamers to create and handle their profiles within the slot game.

    ReplyDelete