Tuesday 29 September 2020

ஒருமைத்துவமும் பன்மைத்துவமும் - தோழர். திருமா அவர்களின் அமைப்பாய் திரள்வோம் கட்டுரையை முன்வைத்து - ராஜராஜன் ஆர். ஜெ

ஒருமைத்துவமும் பன்மைத்துவமும் - தோழர். திருமா அவர்களின் அமைப்பாய் திரள்வோம் கட்டுரையை முன்வைத்து - ராஜராஜன் ஆர். ஜெ  


பக்கம் 298 - அமைப்பை திரள்வோம் - 34 வைத்து கட்டுரை


னிந்த கட்டுரையை தேர்வு செய்தேன்:


நாட்டின் பன்மைத்துவம் அழிக்கப்படுகிறது என்பது ஒவ்வொரு ஜனநாயகவாதியின் கவலையாக இருக்கிறது. ஒரே நாடு - ஒரே மதம் - ஒரே மொழி என்பது தான் இன்றைய ஆதிக்க அரசியலாக இருக்கிறது. இந்த ஆதிக்கத்திற்கு பல மாநிலங்கள், பல கட்சிகள் அடிபணிந்து போய்விட்டனர். அடிபணியாத ஓரிரு மாநிலங்களில் தமிழகம் ஒன்றாக இருக்கிறது. அடிபணியாத ஓரிரு கட்சிகளில் விடுதலை சிறுத்தைகள், திமுக உள்ளிட்ட சில கட்சிகள் இருக்கின்றன. இன்றைய இந்தியாவில் வேறெந்த மாநிலங்களுக்கும் இல்லாத சிறப்பு தமிழ்நாட்டிற்கு உண்டு. 


அது ஏன் என்று ஒரு சிறிய அனுபவத்தை வைத்து சொல்கிறேன். 


நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தேன். வேலைநிமித்தமாக பல்வேறு நாடுகளுக்கு செல்லும் படி இருக்கும். அப்படி, நான் ஒரு முறை ஒரு பெரிய ப்ராஜெக்டிற்காக இலங்கை செல்வதாக இருந்தது. ஓர் ஆண்டு இலங்கையில் தங்க நேர்ந்தது. அந்த நிறுவனத்தின் தலைமையிடம் கொழும்பில் இருந்தாலும், அவர்களின் முக்கிய பணியிடங்கள் இந்தியாவாக இருந்தது. ஆகவே நான் இலங்கையில் இருந்தாலும், நிறைய இந்தியர்களுடன் இணைந்தே வேலை பார்க்கவேண்டி இருக்கும். பல நாட்டு மக்களுடன் வேலைபார்க்கும் போது, அவர்களது பழக்கவழக்கங்கள், பண்பாடு ஆகியவை குறித்து நாம் அறியலாம். குறிப்பாக, இந்தியா போன்ற ஒரு சாதிய கட்டுமானம் கொண்ட ஏற்ற தாழ்வு கொண்ட, பிறப்பில் உயர்வு தாழ்வு கற்பிக்கின்ற ஒரு சமூக அமைப்பில் இருந்து, பிற நாடுகளை பார்க்கும் போதும், பிற மக்களை பார்க்கும் போது நமக்கு ஒப்பிட்டு பார்க்க தோன்றும். அப்படி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் என்ற பல நாட்டு மக்களுடன் பழகி இருக்கிறேன். அவர்களிடம் சாதி போன்ற எதாவது வேற்றுமை உணர்வு இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டு இருப்பேன். 


உண்மையை சொல்லவேண்டுமானால், எனக்கு எப்போதுமே, இந்தியர்களுடன் பழகுவதுடன் மற்ற நாட்டு மக்களுடன் பழகுவது தான் பிடித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் இலங்கையில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள்.   


சரி விசயத்திற்கு வருகிறேன்...


இலங்கையில் இருந்த நான், ஒரு அலுவல் விஷயமாக ஹைதெராபாத் செல்ல வேண்டி இருந்தது. அதே நிறுவனம் தான். இந்திய கிளை ஒன்று ஹைதராபாதில் இருந்தது. அங்கு 3 நாட்கள் தங்க வேண்டி இருந்தது. 


சில வாரங்களுக்கு முன்னர் என் கஸ்டமர் ஒருவரை பார்க்க நேர்ந்தது. அவர் இந்தியர். தெலுங்குக்காரர். அவரை அப்போது தான் முதன்முதலில் பார்க்கிறேன். என்னை பார்த்ததும் எந்த ஊர் என்றார். நான் தமிழ் நாடு என்றேன். தமிழ்நாட்டில் எங்கே என்று கேட்டார். இப்போது சென்னை என்றேன். சொந்த ஊர் எது என்று கேட்டார். தெற்கு பக்கம் தஞ்சாவூர் என்றேன். எனக்கு தஞ்சாவூர் தெரியும். தஞ்சாவூரில் எங்கே என்றார். நான் தஞ்சாவூரே தான் என்றேன். அவர் தனது மாமியாரின் ஊர் தஞ்சை பக்கத்தில் மெலட்டூர் என்றார். ஆகா, தெரியுமே என்றேன். எனக்கு எதோ ஒரு நெருக்கம் உண்டானது போல இருந்தது. அவர் தொடர்ந்தார்... இப்போது தான் நாம் வேறு வேறு ஊராக பிரிந்து இருக்கிறோம். முன்னர் எல்லாம் ஒன்று தானே என்றார். நான், ஆகா, என் திராவிட சொந்தமே என நினைத்தேன். அதன் பின்னர், ஆமாம் சார், நாம எல்லாம் ஒண்ணா தானே இருந்தோம். இப்போ தான் மொழி வாரியா பிரிஞ்சிட்டோம் என்றேன். என்ன பிரிஞ்சாலும் நாம எல்லாம் அடிப்படையில் ஒன்று தான் என்று பேசிக்கொண்டு இருந்தேன்.


அவர் தொடர்ந்தார்... இப்போது தான் நாம தமிழ், தெலுங்கு என பேசுகிறோம். அப்போ எல்லாம் இது எங்க இருந்துச்சு என்றார். நான் என்ன சொல்ல வருகிறார் என ஆர்வமாக கேட்டு கொண்டு இருந்தேன். அந்த காலத்துல எல்லாம் எப்படி இருக்கும்... தமிழ் நாட்டில் இருந்து ஒருத்தர், ஆந்திராவில் இருந்து ஒருத்தர்... ரெண்டு பேரும் காசியில் சந்திச்சிப்பாங்க... ரெண்டு பேருக்கும் பொது மொழி சமஸ்கிருதமா இருக்கும். ரெண்டு பேரும் சம்பந்தம் வெச்சிப்பாங்க. அப்படி தான் என் மாமியார் குடும்பம் மெலட்டூர் போனதாக இருக்கும் என்றார். நான் வாயை பிளந்துகேட்டுட்டு இருந்தேன். அவரே தொடர்ந்தார், தமிழ்நாட்டில் தெலுங்கர் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று அடுக்கினார். எனக்கு தெரிந்த விஷயமாக இருந்தாலும், அவருக்கு இதெல்லாம் தெரிந்து இருக்கிறதே என வியப்புடன் கேட்டுக்கொண்டு இருந்தேன். என்ன தான் எனக்கு சமஸ்கிருதம் தெரியாவிட்டாலும், ஆங்கிலத்தில் அவருடன் பேசி இந்த ஞானத்தை எல்லாம் பெற்றுக்கொண்டு இருந்தேன். 


இதையெல்லாம் அவர் சொல்லியும், எனக்கு தெரிந்த சில விஷயங்களை நான் அவருடன் சொல்லிக்கொண்டு தான் வந்தேன். உலகம் முழுக்க வேற்று இன காழ்ப்புணர்ச்சி பரவி வருகிறது. தமிழில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என சொல்லி கொடுத்து வளர்த்து இருக்கிறார்கள் என்றெல்லாம் நான் மானுடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் ஒரே போடாக போட்டார். இந்த பிரச்சனைக்கெல்லாம் என்ன காரணம் தெரியுமா? நம்ம ஊருக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. அதில் இருந்து நாம் வழுவி இருப்பதால் தான் இவ்வளவு பிரச்சனையும் என்றார். நான், என்ன அந்த தனித்துவம் என மீண்டும் காதை தீட்டி கேட்டுக்கொண்டு இருந்தேன். நம்முடைய கலாச்சாரம் "சனாதன தர்மம்" என்றார். சனாதன தர்மம் தான் இந்திய கலாச்சாரம், அதை கடைபிடித்து தான் நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்றார். நான் என் முப்பாட்டன்களை ஒரு நிமிடம் நினைத்துப்பார்த்துக்கொண்டு அமைதியாக (உள்ளுக்குள் புன்னகையுடன்) கேட்டுக்கொண்டு இருந்தேன். 


அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் இந்த இருவரின் அறிமுகம் எனக்கு கிடைக்காமல் இருந்து இருந்தால், எனக்கு "இந்து சனாதன தர்மம்" என்றால் என்னவென்று தெரிந்து இருக்காது. ஒருவேளை, என் கஸ்டமர் பேசி முடித்ததும் நான் அவரை ஒரு பெரிய ஞானியாக பார்த்து இருப்பேன். அண்ணலையும், பெரியாரையும் படித்ததால் தான் எனக்கு சனாதன தர்மம் என்பது வர்ணாஸ்ரம தர்மம் என்று தெரியும்.  வர்ணாஷ்ர தர்மம் என்பது நால்வர்ண முறையை பாதுகாப்பது. நால் வர்ணம் என்பது பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என பிறப்பால் ஒருவரை பிரிப்பது. பிராமணருக்கு கல்வியும், சத்ரியருக்கு அரசியலும், வைசியரும் வாணிபமும், சூத்திரனுக்கு கீழான வேலைகளையும் செய்வதற்கு கடவுளே உத்திரவு போட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.  இந்த நால் வர்ணத்தில் வராதவர்கள் பஞ்சமர்கள் என தீண்ட தகாதவர்களாக ஆக்கப்படுகிறார்கள். வர்ணம் என்பது சாதியாக பிரிந்து கலந்து பல்வேறு குட்டிகளை போட்டுவிடுகிறது. இந்த சாதியை, நால்வர்ணத்தை காப்பது தான் சனாதன தர்மம். இந்த புரிதல் எனக்கில்லை என்றால், நான் அவரை பெரிய ஞானியாக பார்த்து இருப்பேன். ஈஷாவிலும், பதஞ்சலியிலும், நித்யானந்தா பீடத்திலும் காசுகொடுத்து கிடைக்காத உபதேசத்தை ஓசியில் கிடைத்ததாக நினைத்து இருப்பேன். 


இந்தியாவில் பலருக்கு இந்த அடிப்படை புரிதல் இருக்காது. இந்த புரிதல் வந்துவிட்டால் அப்புறம் எப்படி "சனாதன தர்மத்தை" காக்க முடியும். எப்படி சாதியை காக்க முடியும். ஆகவே, நான் சூத்திரனாக, பஞ்சமனாக இருப்பதே கடவுளின் கட்டளை என சொல்லி... சாதி தான் நம் அடையாளம் என்று சொல்லி "இந்து பார்பனிய சனாதன தர்மத்தை" காப்பதற்கே நம்மை வளர்த்து இருக்கிறார்கள். ஒரு சராசரி இந்துவுக்கு இதெல்லாம் தெரியவேண்டும் என்ற அவசியமில்லை. இஸ்லாமில் குரானை தினமும் படிப்பது போல, கிருத்துவத்தில் பைபிளை ஞாயித்து கிழமை படிக்க சொல்வது போல, இந்து மதத்தில் ஒவ்வொரு புராணத்தையும், வேத புத்தகங்களையும் ஒவ்வொரு ஹிந்துவும் படிக்க வேண்டும் என்று சொன்னால் போதும். ஆனால், சொல்ல மாட்டார்கள். சூத்திரன் படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று எழுதி வைத்தவர்கள் மதம் தானே இது! 


இது தான் என் அனுபவம். 


சில ஆண்டுகளுக்கு முன்னர் என் கஸ்டமர் ஒருவரை பார்க்க நேர்ந்தது. அவர் இந்தியர். தெலுங்குக்காரர். அவரை அப்போது தான் முதன்முதலில் பார்க்கிறேன். என்னை பார்த்ததும் எந்த ஊர் என்றார். நான் தமிழ் நாடு என்றேன். தமிழ்நாட்டில் எங்கே என்று கேட்டார். இப்போது சென்னை என்றேன். சொந்த ஊர் எது என்று கேட்டார். தெற்கு பக்கம் தஞ்சாவூர் என்றேன். எனக்கு தஞ்சாவூர் தெரியும். தஞ்சாவூரில் எங்கே என்றார். நான் தஞ்சாவூரே தான் என்றேன். அவர் தனது மாமியாரின் ஊர் தஞ்சை பக்கத்தில் மெலட்டூர் என்றார். ஆகா, தெரியுமே என்றேன். எனக்கு எதோ ஒரு நெருக்கம் உண்டானது போல இருந்தது. அவர் தொடர்ந்தார்... இப்போது தான் நாம் வேறு வேறு ஊராக பிரிந்து இருக்கிறோம். முன்னர் எல்லாம் ஒன்று தானே என்றார். நான், ஆகா, என் திராவிட சொந்தமே என நினைத்தேன். அதன் பின்னர், ஆமாம் சார், நாம எல்லாம் ஒண்ணா தானே இருந்தோம். இப்போ தான் மொழி வாரியா பிரிஞ்சிட்டோம் என்றேன். என்ன பிரிஞ்சாலும் நாம எல்லாம் அடிப்படையில் ஒன்று தான் என்று பேசிக்கொண்டு இருந்தேன்.


அவர் தொடர்ந்தார்... இப்போது தான் நாம தமிழ், தெலுங்கு என பேசுகிறோம். அப்போ எல்லாம் இது எங்க இருந்துச்சு என்றார். நான் என்ன சொல்ல வருகிறார் என ஆர்வமாக கேட்டு கொண்டு இருந்தேன். அந்த காலத்துல எல்லாம் எப்படி இருக்கும்... தமிழ் நாட்டில் இருந்து ஒருத்தர், ஆந்திராவில் இருந்து ஒருத்தர்... ரெண்டு பேரும் காசியில் சந்திச்சிப்பாங்க... ரெண்டு பேருக்கும் பொது மொழி சமஸ்கிருதமா இருக்கும். ரெண்டு பேரும் சம்பந்தம் வெச்சிப்பாங்க. அப்படி தான் என் மாமியார் குடும்பம் மெலட்டூர் போனதாக இருக்கும் என்றார். நான் வாயை பிளந்துகேட்டுட்டு இருந்தேன். அவரே தொடர்ந்தார், தமிழ்நாட்டில் தெலுங்கர் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று அடுக்கினார். எனக்கு தெரிந்த விஷயமாக இருந்தாலும், அவருக்கு இதெல்லாம் தெரிந்து இருக்கிறதே என வியப்புடன் கேட்டுக்கொண்டு இருந்தேன். என்ன தான் எனக்கு சமஸ்கிருதம் தெரியாவிட்டாலும், ஆங்கிலத்தில் அவருடன் பேசி இந்த ஞானத்தை எல்லாம் பெற்றுக்கொண்டு இருந்தேன். 


இதையெல்லாம் அவர் சொல்லியும், எனக்கு தெரிந்த சில விஷயங்களை நான் அவருடன் சொல்லிக்கொண்டு தான் வந்தேன். உலகம் முழுக்க வேற்று இன காழ்ப்புணர்ச்சி பரவி வருகிறது. தமிழில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என சொல்லி கொடுத்து வளர்த்து இருக்கிறார்கள் என்றெல்லாம் நான் மானுடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் ஒரே போடாக போட்டார். இந்த பிரச்சனைக்கெல்லாம் என்ன காரணம் தெரியுமா? நம்ம ஊருக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. அதில் இருந்து நாம் வழுவி இருப்பதால் தான் இவ்வளவு பிரச்சனையும் என்றார். நான், என்ன அந்த தனித்துவம் என மீண்டும் காதை தீட்டி கேட்டுக்கொண்டு இருந்தேன். நம்முடைய கலாச்சாரம் "சனாதன தர்மம்" என்றார். சனாதன தர்மம் தான் இந்திய கலாச்சாரம், அதை கடைபிடித்து தான் நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்றார். நான் என் முப்பாட்டன்களை ஒரு நிமிடம் நினைத்துப்பார்த்துக்கொண்டு அமைதியாக (உள்ளுக்குள் புன்னகையுடன்) கேட்டுக்கொண்டு இருந்தேன். 


அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் இந்த இருவரின் அறிமுகம் எனக்கு கிடைக்காமல் இருந்து இருந்தால், எனக்கு "இந்து சனாதன தர்மம்" என்றால் என்னவென்று தெரிந்து இருக்காது. ஒருவேளை, என் கஸ்டமர் பேசி முடித்ததும் நான் அவரை ஒரு பெரிய ஞானியாக பார்த்து இருப்பேன். அண்ணலையும், பெரியாரையும் படித்ததால் தான் எனக்கு சனாதன தர்மம் என்பது வர்ணாஸ்ரம தர்மம் என்று தெரியும்.  வர்ணாஷ்ர தர்மம் என்பது நால்வர்ண முறையை பாதுகாப்பது. நால் வர்ணம் என்பது பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என பிறப்பால் ஒருவரை பிரிப்பது. பிராமணருக்கு கல்வியும், சத்ரியருக்கு அரசியலும், வைசியரும் வாணிபமும், சூத்திரனுக்கு கீழான வேலைகளையும் செய்வதற்கு கடவுளே உத்திரவு போட்டு இருப்பதாக சொல்கிறார்கள்.  இந்த நால் வர்ணத்தில் வராதவர்கள் பஞ்சமர்கள் என தீண்ட தகாதவர்களாக ஆக்கப்படுகிறார்கள். வர்ணம் என்பது சாதியாக பிரிந்து கலந்து பல்வேறு குட்டிகளை போட்டுவிடுகிறது. இந்த சாதியை, நால்வர்ணத்தை காப்பது தான் சனாதன தர்மம். இந்த புரிதல் எனக்கில்லை என்றால், நான் அவரை பெரிய ஞானியாக பார்த்து இருப்பேன். ஈஷாவிலும், பதஞ்சலியிலும், நித்யானந்தா பீடத்திலும் காசுகொடுத்து கிடைக்காத உபதேசத்தை ஓசியில் கிடைத்ததாக நினைத்து இருப்பேன். 


இந்தியாவில் பலருக்கு இந்த அடிப்படை புரிதல் இருக்காது. இந்த புரிதல் வந்துவிட்டால் அப்புறம் எப்படி "சனாதன தர்மத்தை" காக்க முடியும். எப்படி சாதியை காக்க முடியும். ஆகவே, நான் சூத்திரனாக, பஞ்சமனாக இருப்பதே கடவுளின் கட்டளை என சொல்லி... சாதி தான் நம் அடையாளம் என்று சொல்லி "இந்து பார்பனிய சனாதன தர்மத்தை" காப்பதற்கே நம்மை வளர்த்து இருக்கிறார்கள். ஒரு சராசரி இந்துவுக்கு இதெல்லாம் தெரியவேண்டும் என்ற அவசியமில்லை. இஸ்லாமில் குரானை தினமும் படிப்பது போல, கிருத்துவத்தில் பைபிளை ஞாயித்து கிழமை படிக்க சொல்வது போல, இந்து மதத்தில் ஒவ்வொரு புராணத்தையும், வேத புத்தகங்களையும் ஒவ்வொரு ஹிந்துவும் படிக்க வேண்டும் என்று சொன்னால் போதும். ஆனால், சொல்ல மாட்டார்கள். சூத்திரன் படித்தால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று எழுதி வைத்தவர்கள் மதம் தானே இது! 


இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், இந்த சனாதனம் என்ற சொல், இந்துமதத்தின் புதிர்ச்சொல்களில் ஒன்று. சாதி என்று சொன்னால் வாய் புளிக்கும். அதுவே சனாதன தர்மம் என்று சொல்லிப்பாருங்கள்... என்னவோ பெரிய விசயத்தை சொன்னதை போல நம் மக்கள் நினைப்பார்கள். இப்படி இந்து மதத்தில் பல வார்த்தை ஜாலங்கள் உண்டு... சனாதனம், வர்ணாஸ்ரமம்... இப்போது தமிழ் தேசியம் பேசுவோம் சொல்கிற... குலங்கள், குடிகள்... இவை அனைத்துக்கும் ஒரே பொருள் தான். அது சாதிய கட்டமைப்பு.


இப்படியான, குழப்ப வாதிகள் நிறைந்த ஒரு நாட்டில்... மிகத்தெளிவாக... சனாதன எதிர்ப்பே ஜனநாயகம் என்று முழங்கி ஒரு மாபெரும் மாநாட்டை நடத்தியவர் அருமை தலைவர், எழுச்சி தமிழர் அண்ணன் திருமாவளவன் அவர்கள். அவர் முன்னிலையில் பேச எனக்கு வாய்ப்பு அளித்த விடுதலை கலை இலக்கிய மன்றத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை மீண்டும் சொல்லிக்கொள்கிறேன்.    


கட்டுரைக்குள் செல்லலாம்...


ஒருமைத்துவமும் பன்மைத்துவமும்...


உலகில் எதுவும் ஒருமைத்துவம் கொண்டதில்லை. படைப்புகள் யாவுமே பன்மைத்துவம் கொண்டவை தான். 


குறைந்த அளவிலோ, கூடுதல் அளவிலோ ஒற்றுமை கூறுகள் இருக்கலாம். ஆனால், அவை ஒன்று அல்ல. வெவ்வேறானவை. தனித்த எந்த ஒன்றும் ஒருமைத்துவம் கொண்டிருப்பதில்லை, ஒவ்வொன்றும் தனக்குள்ளே பன்மைத்துவம் கொண்டிருக்கிறது. 


மாற்றம் ஒன்றே மாறாதது என்ற புத்தரின் கொள்கை எனக்கு மிகவும் பிடித்தது. இங்கே எதுவுமே நிலையானது. நிரந்தரமானது என்பதில்லை. எல்லாமே மாறக்கூடியவை. மாறுதல் தான் இயல்பு. இயங்குதல் என்பது அதன் பொருள். அதே வகையில், இங்கே ஒற்றுமை கூறுகள் உண்டு. ஆனால், அதுவே ஒருமைத்துவம் கிடையாது.


ஒரு திரைப்பட நகைச்சுவை காட்சி நினைவுக்கு வருகிறது. கமலஹாசன் கசாப்பு கடைக்காரராக இருப்பார். அவரிடம் கோழிக்கறி வாங்க செந்தில் வருவார். வந்தவர், ரெண்டு கிலோ ஒரே கோழி என்பார். கமல் இடையை நிறுத்துவார். 1.5 கிலோவுக்கு ஒரு கோழி வரும். மீதி அரை கிலோவை இன்னொரு கோழியில் இருந்து எடுத்துப்போடுவார். செந்தில், உடனே...ஆஹான்... அதெல்லாம் முடியாது. ஒரே கோழி ரெண்டு கிலோ என்பார். கமல், யோசித்துவிட்டு சொல்லுவார். ரெண்டும் ஒரே கோழி தான்யா... ஒன்று பெரிதான போது உரித்தது. இன்னொன்று சின்ன வயசுலயே உரிச்சது என்பார்.  


இது நகைச்சுவையாக இருந்தாலும்... இயற்கையின் படைப்பான ஒரு மனிதன் கூட ஒரே போன்று இருப்பதில்லை. அது உருவமாக இருந்தாலும் சரி, குணநலன்கள் சார்ந்து இருந்தாலும் சரி, அறிவு சார்ந்த தாலும் சரி, வளர்ந்துக்கொண்டே இருக்கிறான். மாறிக்கொண்டே இருப்பது தான் இயற்கை. ஒரே போல் இருப்பது இயற்கை இல்லை.  


ஒருமைத்துவம் அல்லது பன்மைத்துவம் இரண்டும் பண்புகளை அல்லது பண்பாடுகளை அடிப்படையாக கொண்டிருக்கும். 


பண்புகள் என்பது உயிருள்ளவை, உயிரற்றவை என அனைத்திற்கும் பொருத்தமானது. 

பண்பாடு என்பது மானுடத்திற்கு மட்டுமே பொருந்துவது.


பன்மைத்துவம் என்பது படைப்புகளின் பொதுப்பண்பு ஆகும். அது நிலையானது! என்கிறார் முனைவர் திருமாவளவன். 


பன்மைத்துவத்தில் ஒருமைத்துவத்தை காணலாம். ஒற்றுமை கூறுகளின் அடிப்படையில் ஒருமைத்துவம் அமையும். 


நாமெல்லாம் இந்தியர்கள் என்று சொல்லும் போது... இங்கே பல இனங்கள், பல மொழிகள் கொண்ட பன்மைத்துவ கலாச்சாரம் தான் இருக்கிறது. ஆனால், ஒருசில ஒற்றுமைகளால் இந்தியர்கள் ஆகிறோம்.


நாமெல்லாம் தமிழர்கள் என்று சொல்லும் போது... இங்கே பல சாதிகள், பல பழக்கவழக்கங்கள் கொண்ட பன்மைத்துவ கலாச்சாரம் தான் இருக்கிறது. ஆனால், ஒரு சில ஒற்றுமைகூறுகளால் தமிழர்கள ஆகிறோம்.


இதைத்தான் பன்மைத்துவத்தில் ஒருமைத்துவத்தை காணலாம் என்று சொல்கிறார் முனைவர் திருமா அவர்கள்.   


ஒருமைத்துவம் என்றால் என்ன? 


இங்கே தனித்தனியாகவோ, கூட்டாகவோ ஒரே வகையான பண்புகள் அல்லது பண்பாடுகள் ஒருமைத்துவதை அடையாளப்படுத்துகின்றன. 


அதற்குரிய அமைப்புகளாக அல்லது நிறுவனங்களாகவே மானுடத்தில் சாதி, மதம், மொழி, இனம் போன்றவை இயங்குகின்றன. இத்தகைய நிறுவனங்களால் அல்லது அமைப்புகளால் நெறிப்படுத்தப்படும் வாழ்க்கைமுறைகளே பண்பாடுகளாக பரிணாமம் பெறுகின்றன. 


தலைமுறை தலைமுறையாக இத்தகைய பண்பாடுகளை பாதுக்காக்க, ஒருமைத்துவதை பாதுக்காக்க அத்தகைய அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் போராடிக்கொண்டே இருக்கின்றன. உலகப்போராகவும் அவை வெடித்திருக்கின்றன.  உலகம் முழுவதும் அப்படியான ஒருமைத்துவத்திற்கான போராட்டங்கள் நடந்துக்கொண்டே இருக்கின்றன. 


நாம் உடனே இங்கே "பண்பாட்டை பாதுகாக்கும்" நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் என்று சொன்னவுடன் மதங்களையும், சாதிகளையும் உணர்ந்துக்கொள்வோம். இந்து மத பண்பாட்டை காப்போம், சாதியின் புதினத்தை காப்போம் என்கிற குரல்கள் எல்லாம் நாம் கேட்ட வண்ணமே இருப்போம். அதுவும் தமிழ்நாட்டில் இந்த மரபு, பண்பாடு, பாரம்பரியம் என்ற சொல் படும் நாம் அனைவரும் அறிவது. ஆனால், மெதுவாக அதில் சாதியை காக்கும் வேலைகளையும் உள்ளே நுழைப்பார்கள். 


பெரும்பான்மையாக இருக்கும் மதம், சிறுபான்மையினரை ஒடுக்கும். அகண்ட பாரதம் என்று சொல்லும், தாய் மதம் திரும்புங்கள் என்று சொல்லும்... இதெல்லாம் தலைவர் சொல்லும் அந்த "ஒருமைத்துவ" வேலைகள் தான். 


இந்த பெரும்பான்மை ஆதிக்கத்தை எதிர்க்கும் சிறும்பான்மையினர் செய்வது "தற்காப்பு" நடவடிக்கையாகும் என்கிறார் தலைவர். அதாவது சிறுபான்மை மதங்கள், சிறுபான்மை சாதிகள் பெரும்பான்மை மதத்தின் சாதியின் ஆதிக்கத்தை எதிர்ப்பது தற்காப்பு என்கிறார். 


பண்பாடை அழித்தல், பண்பாடை சிதைத்தல் அடையாளத்தை அழிப்பதாகவும். ஒருமைத்துவதை சிதைப்பதாகும்.  அத்தகைய அழித்தொழிப்பு வேலையில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள சிறுபான்மை சாதியினர் அல்லது மதத்தினர் அல்லது இனத்தினர் போராடுவது தவிர்க்க இயலாத தேவையாகும். இத்தகைய போரானது, அடிப்படையில் ஜனநாயகத்தை காக்கும் போர் என்கிறார் தலைவர். 


திருவள்ளுவர் சிலைக்கு காவி பெயிண்ட் அடிப்பது, திருக்குறளை ஆரிய புத்தகமாக காட்டுவது என வேலைகளை செய்வார்கள். யாரொருவர் அறிவாளியாக இருந்தாலும், அவர்களை தங்களவர் என உட்செரிக்கும் வேலைகளை செய்வது... புத்தரில் ஆரம்பித்து இன்னும் அவர்கள் இதை செய்வதை நிறுத்தவில்லை.   


ஒரு முக்கிய வேறுபாடை உணர்ந்துக்கொள்ளவேண்டும்...


தலைவர், ஒருமைத்துவதையும், பன்மைத்துவதையும் நேரெதிராக நிறுத்தவில்லை. ஒருமைத்துவம் இருக்கும் எல்லா இடங்களையும் அவர் எதிர்க்க சொல்லவும் இல்லை. ஒருமைத்துவம் என்பது ஆதிக்கமாக மாறும் போது தான் அதை எதிர்க்க வேண்டி இருக்கிறது என்பதை தெளிவாக விளக்கி இருக்கிறார். 


எதை எதிர்க்கிறார்?


பெரும்பான்மையாக உள்ளவர்கள், வலிமையாக உள்ளவர்கள், பண்பாட்டை திணிக்க முயல்வது, அடையாளங்களை திணிக்க முயல்வது ஒருமைத்துவதை நிலைநாட்ட முயல்வது பன்முகத்தன்மையை மறுதலிப்பதாகும். 


நாங்கள் இந்துக்கள் அல்ல; நாங்கள் தமிழர்கள் என்று சொல்லும் ஒருமைத்துவம் சரியானது. நாங்கள் இந்துக்கள் அல்ல; பூர்வகுடி பௌத்தர்கள் என்று சொல்லும் ஒருமைத்துவம் சரியானது. நாங்கள் ஆரியர்கள் அல்ல; திராவிடர் என்று சொல்லும் ஒருமைத்துவம் சரியானது.


முத்தாய்ப்பாக அவரே ஒரு வரியை சொல்கிறார்:


தற்காப்புக்கான ஒருமைத்துவதை அனுமதிப்பதும் ஆதிக்கத்திற்க்கான ஒருமைத்துவதை எதிர்ப்பதும் தான் சனநாயக நடைமுறையாக அமையும்.


பன்மைத்துவதை குறித்து பேசும் போது சில அனுபவங்களை பகிர தோன்றுகிறது...


நான் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவன். எங்கள் பகுதியில் வேளாங்கண்ணி கோயிலும், நாகூர் தர்காவும் அனைத்து மதத்தினரும் செல்லக்கூடிய கோவிலாக தான் இருக்கும். பெரும்பான்மையான கடைகளில் இந்து - முஸ்லீம் - கிருஸ்து படங்கள் இருக்கும். 


இதேபோலவே இந்து கோவில்கள் என்று சொல்லப்படுகிறவற்றிற்கும் மற்ற மதத்தினர் செல்கின்றனர் என்பதும் உண்மை. 


இது மக்களின் நம்பிக்கை சார்ந்தது. இது தான் பன்மைத்துவம். இதில் ஓர் ஒருமைத்துவமும் இருக்கிறது. இது தான் ஜனநாயகமாக இருக்கிறது. இதை குழைப்பதே மதவாதிகளின் நோக்கமாக இருக்கிறது. 


இந்த ஜனநாயக பண்பை, பன்மைத்துவத்தை வசதியாக பெரும்பான்பை மதமான இந்து மதத்தின் மேல் எழுதுவார்கள். பார்த்தீர்களா, இந்துமதம் சகிப்பு தன்மை உடைய மதம். நாங்கள் திருநீர் தந்தால் ஒரு இஸ்லாமியர் பூசிகொள்வதில்லை. ஆனால், இந்துக்கள் பிற கோவில்களுக்கு செல்வார்கள். கொடுப்பதை வாங்கிக்கொள்வார்கள் என்பார்கள். ஆனால், உண்மையில் இது இந்துக்களின் குணங்கள் இல்லை. ஏனென்றால் தமிழர்கள் இந்துக்களே கிடையாது! தமிழர்களுக்கென்று ஒரு மரபு உண்டு. அது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மரபில் வந்தது. இங்கே பல மதங்கள் வந்தது. பௌத்தம், சமணம், கிறிஸ்தவம், இஸ்லாம், சைவம், வைணவம் என பல இங்கே இருந்த மதங்கள்.  இத்தனை மதங்களை உள்வாங்கிய பண்பாடே நமக்குள் இருப்பது. இந்த பன்மைத்துவதை இந்து மதம் உரிமை கொண்டாட முடியாது. அது தமிழர்களின் பண்பாடு சார்ந்தது. 


இன்னொன்று, இஸ்லாமும், கிறிஸ்தவமும் ஓர் இறை கொள்கை சார்ந்தது. இந்து மதம் எல்லாவற்றையும் கடவுள் ஆக்கிவிடும். இந்த வேறுபாட்டையும் நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். 


இலங்கையில் இருக்கும் கண்டி கதிர்காமர் கோவிலுக்கு சென்றபோது, அங்கே இருக்கும் தெய்வத்தை மூன்று இனங்கள் வணங்குவதைப் பார்த்தேன். வேடர்களுக்கு முருகன், ஹிந்துக்களுக்கு ஸ்கந்தன், பௌத்தர்களுக்கு கதரகாமா எனும் காவல் தெய்வம். 


நான் ஒரு பௌத்த பெண்ணிடம் கேட்டேன். பௌத்த மதத்தில் நீங்கள் ஏன் இந்து மத கடவுள்களை ஏற்றுக்கொண்டீர்கள் என்று? அவர் சொன்னது, அவை ஏற்கனவே இங்கிருந்த மக்களின் தெய்வங்கள். அதை உள்வாங்கிக்கொண்டோம் என்றார். இப்படி தான் முருகன் தமிழர்களுக்கும், வேடர்களுக்கும், சிங்களர்களுக்கும் கடவுள் ஆனார். 


சரஸ்வதி, விநாயகர் இருக்கும் பவுத்த கோவில்களும் உண்டு. 



மானுடத்தின் அனைத்து தளங்களிலும் இவ்வகை ஒருமைத்துவம் மற்றும் பன்மைத்துவம் இயங்கிக்கொண்டே இருக்கும். குறிப்பாக பண்பாட்டு தளத்தில் மிகவும் கூர்மையாகவும், அழுத்தமாகவும் இவை இயங்கும். மேலும், மிகுந்த உணர்வுபூர்வமயமானவையாகவும் இருக்கும். எனவே, பண்பாட்டு தளத்தில் ஒருமைத்துவதை திணித்தாலோ அல்லது மறுத்தாலோ, அது மோதலாக அல்லது போராக வெடிக்கும். அத்தகைய உணர்ச்சிகள் மிகுந்த பண்பாட்டு தலத்தில் மக்களோடு இணைந்து, பிணைந்து களமாடுவதால் மட்டுமே போதிய புரிதலைப் பெற முடியும்! 


இந்த பண்பாட்டு தளம் என்ற சொல்லை நாம் தொடர்ச்சியாக கேட்டிருப்போம். ஆனால், இத்தனை தெளிவான விளக்கத்தை நான் இதற்கு முன் படித்ததில்லை. பண்பாட்டு மாற்றம் வராமல் அரசியல் மாற்றம் வராது என்றெல்லாம் நாம் பேசுகிறோம். ஆனால், அந்த பண்பாட்டு மாற்றம் எப்படி நிகழும்? இந்த கேள்விக்கு தெளிவான பதில்கள் இங்கே இல்லை. முனைவர் திருமா அவர்கள் தான் தெளிவாக பதிலை தருகிறார். அது, வேறொன்றுமில்லை, மக்களுடன் இணைந்து, பிணைந்து களமாடுவதால் வரும் மாற்றமே...


சில நாட்களுக்கு முன்னர் அவர் இதே அமைப்பாய் திரள்வோம் கலந்தாய்வில் பேசிய காணொலி ஒன்றை கேட்டேன். அதில் மக்களிடம் உன்னை ஒப்படை என்றார். மக்களிடம் செல் என்பதை பல புரட்சியாளர்கள் சொல்லி இருக்கிறார்கள். சீனத்து அறிஞர் லாவோசு சொல்லி இருக்கிறார். நமது பேரறிஞர் அண்ணா ககூறி இருக்கிறார். தலைவர் திருமாவளவன் அவர்கள், "மக்களிடம் உன்னை ஒப்படி, அர்ப்பணி, சரணடைய செய் (Surrender yourself to the people) என்கிறார்". புத்தரின் மூன்று சரணங்களை அவரும் எடுத்துக்காட்டாய் சொன்னார். 


புத்தம் சரணம் கச்சாமி, 

தம்மம் சரணம் கச்சாமி 

சங்கம் சரணம் கச்சாமி 


என்ற இந்த சொற்றொடரின் ஆழம் அறிந்தவர் தலைவர் அண்ணன் திருமா அவர்கள்.  


1957 ஆம் ஆண்டு மகாபோதி சங்கத்தில் தந்தை பெரியார் பேசுகிறார்:


பவுத்தர்கள் தங்கள் வணக்கத்தில் கூறுகிற, கூறி வணங்குகிற விஷயங்கள் மூன்று. அவை

1. புத்தம் சரணம் கச்சாமி

2. தர்மம் சரணம் கச்சாமி

3. சங்கம் சரணம் கச்சாமி


என்பனவாகும். இவற்றை முதலிலும், கடைசியிலும் சொல்லித்தான் அவர்களது சமய காரியங்களைத் துவக்கவும் முடிக்கவும் செய்வார்கள்.


இவ்வாக்கியங்களின் தத்துவம் என்னவென்றால் புத்தம் (தலைவன்), தர்மம் (கொள்கை), சங்கம் (ஸ்தாபனம்) ஆகிய மூன்றுக்கும் வணக்கம் செலுத்துகிறேன் என்பதாகும். இது பவுத்தர்களுக்கு மாத்திரமல்லாமல் மற்றும் உலகிலுள்ள யோக்கியமான எந்த ஸ்தாபனத்திலுமிருக்கும் யாருக்குமே உண்மையான இன்றியமையாத கடமையாகும். எந்த ஒரு ஸ்தாபனத்திலும் ஈடுபட்டிருக்கிற ஒருவன் அதன் தலைவரைப் பின்பற்றி நல்லவண்ணம் சிந்தித்துத் தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு அந்தத் தலைவனை, அந்த ஸ்தாபனத்திலிருந்து விலகுகிறவரை தனக்குக் குருவாக, ஆசானாகக் கருதவேண்டும்.


தலைவனைப் பெருமைப்படுத்துவதன் மூலம் ஸ்தாபன இலட்சியத்திற்கும், ஸ்தாபனத்திற்கும் தான் உண்மையான தொண்டு செய்தவனாகிறான்.

தலைவனிடம் மரியாதை, அன்பு, கீழ்ப்படியும் தன்மை இல்லாமல் ஒரு ஸ்தாபனத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறுவது ஈடுபட்டவனின் வயிற்றுப் பிழைப்பிற்கும், வாழ்விற்கும், சுயநலத்திற்கும் தெரிந்தெடுக்கப்பட்ட வியாபார, தொழில்முறை என்பதாகத்தான் பொருள்படும், அதனால்தான், புத்த சரணம் என்று சொல்லிக் காரியம் துவக்குவதாகும்.


அதுபோன்றே அடுத்த வணக்கமாகிய தர்மம் (புத்த தர்மம்) சரணம் கச்சாமி என்பதுமாகும். அதாவது ஒருவன் தான் ஈடுபட்டுள்ள ஸ்தாபனத்தில் இலட்சியங்களுக்கு நிபந்தனையற்ற அடிமையாகப் பின்பற்றுபவனாக இருக்க வேண்டும். கொள்கைகளில் ஒரு சிறிது தனக்கு ஒத்துவரவில்லையானாலும், அவன் யோக்கியனாக இருந்தால் உடனே ஸ்தாபனத்தை விட்டு விலகிவிட வேண்டும். விலகிவிடச் சம்மதிக்கிறேன் என்று சொல்வது போன்ற பிராண மொழியேயாகும், இது.


மூன்றாவதான சங்கம் சரணம் கச்சாமி என்பது ஒரு ஸ்தாபனத்தின் தலைவருக்கும், இலட்சியங்களுக்கும் எவ்வளவு ஆட்படத்தக்கதோ அதேபோன்று சங்கத்திற்கும் (ஸ்தாபனத்திற்கும்) அடிமையாய் இருந்து, சங்கத்தைப் பாதுகாக்க வேண்டியதென்பதாகும். ஸ்தாபனத்திற்கு அடிமையாய் இல்லாமலும் பக்தி விஸ்வாசம் இல்லாமலும் ஸ்தாபனத்திற்கு அங்கத்தினனாக இருப்பது என்பது அந்த ஸ்தாபனத்திற்குச் செய்யும் மாபெரும் துரோகமேயாகும். இம்மூன்று தத்துவங்களையும் முக்கியமானவையாகக் காட்டுவதற்காகவே பவுத்தக் கொள்கைகளை முதன்மையானவையாகவும், முக்கியமானவையாகவும் ஆக்கி, பக்தி விஸ்வாச வணக்கத்தோடு ஏற்பாடு செய்து வந்த எல்லாப் பவுத்தர்களாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே,

புத்தம் சரணம் கச்சாமி,

தர்மம் சரணம் கச்சாமி,

சங்கம் சரணம் கச்சாமி,

என்ற வணக்கங்களின் தத்துவம் இதுதான் என்பது எனது கருத்தாகும்.


“அமைப்பாய் திரள்வோம்” என்பதை அன்று புத்தர் சொல்லி இருக்கிறார். இன்று அண்ணன் திருமா அவர்கள் சொல்லி இருக்கிறார். 


ஒரே சாதி, ஒரே இனம், ஒரே மதம், ஒரே வர்க்கம் என மக்களை அணிதிரட்டும் போது பன்மைத்துவதை பின்னுக்கு தள்ளுவதும் அல்லது முற்றிலும் இழப்பதற்கும் நேரிடும். 


ஒரே சாதியில், பல்வேறு உணவுப்பழக்கம், உடைபழக்கம், பிறப்பு, இறப்பு சடங்குகள் வழிப்பாட்டு முறைகள் இருக்கலாம். இவை ஒரு சாதியிலுள்ள பண்பாட்டு தளத்தின் பன்மைத்துவம். இந்த பன்மைத்துவம் என்பது பண்பாடு தளம் மட்டும் இல்லாமல் அரசியல், பொருளாதாரம், சமூகம் போன்ற எல்லாவற்றிலும் இயங்கிக்கொண்டே இருக்கும். 


இவற்றில் எத்தகைய ஒருமைத்துவதை ஏற்பது அல்லது எதிர்ப்பது என்கிற புரிதல் அமைப்பதால் நடவடிக்கையில் இன்றியமையாததாகும். பண்பாட்டு புரிதல்களிலிருந்தே பண்பாடு தளத்தில் வெற்றிகரமாக செயலாற்ற முடியும்! 


மக்களுக்காக போராடுதல், மக்களுக்காக வாதாடுதல், மக்களுக்காக வாழ்தல் என மக்களோடு பணியாற்றுவதன் மூலமே அத்தகைய புரிதல்களை பெற முடியும் என மிகத்தெளிவாக தலைவர் விளக்குகிறார். 


வெவ்வேறு பண்புகளை கொண்ட தனிமனிதர்கள் வெவ்வேறு பண்பாடுகளை கொண்ட உட்சாதிகள் தம்மிடையே உள்ள குறைந்த அளவிலான ஒருமித்த பண்பு கூறுகளை கொண்டு ஒரே சாதியாகவோ அல்லது ஒரே சாத்திய அமைப்பாகவோ ஒருங்கிணைவதும் அத்தகைய ஒருமைத்துவத்தின் புலப்பாடே ஆகும். பல்வேறு தனித்துவங்களின் ஒருங்கிணைப்பே ஒருமைத்துவமாகும். 


உதாரணம்: தலித்துகளை ஒருங்கிணைத்தல் 


தனித்துவம் என்பது வேறு; ஒருமைத்துவம் என்பது வேறு.


தனித்துவம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டை சொல்லலாம். பூணூல் அணிவது. அது எங்களுக்கு மட்டுமே உரியது என்று சொல்லுபவர்கள். ஏதேனும் பிரச்சனை வந்தால் மட்டும் நாமெல்லாம் இந்துக்கள் என்று வந்துவிடுவார்கள். 


தனித்துவத்தை பாதுகாக்குகிறோம் என்ற பெயறில் தனித்தனிக்குழுக்களாக சிதறி, தனிமைப்பட்டு போய்விடாமல் இருப்பதற்கு வலிமையிழந்து போய்விடாமல் இருப்பதற்கு ஒருங்கிணைவது, ஒருமைப்படுவது இன்றியமையாதாகும்.


உட்சாதிகள் சில தனித்துவத்தை இழந்து ஓர் சாதியாக ஒன்றிணையும் ஒருமைத்துவம், ஒரு மதத்தை விட்டு இன்னொரு மதம் மாறும் போது, இருப்பதை முழுவதுமாக இழந்து ஏற்படும் ஒருமைத்துவம் என பெரும்பான்மையானவை தம்மை தற்காத்துக்கொள்ளவும், வலிமைப்படுத்திக்கொள்ளவும் நிகழ்வனவாகும். 


அரசியல் - சமூக தளத்தில்...


பல்வேறு அமைப்புகள், பல்வேறு இயக்கங்கள் அரசியல் காட்சிகள், தொழில் மற்றும் வணிக அமைப்புகள், உழைப்பாளர் இயக்கங்கள் போன்ற பல்வேறு பன்மைத்துவங்களை அவற்றின் கொள்கைகளை ஏற்க இயலுகிறது, இயலவில்லையா என்பதை தாண்டி... அவற்றின் இருப்புகளை ஒப்புவது பன்மைத்துவ ஏற்பாகும். 


உதாரணம்: கறுப்பர் கூட்டம் வலைத்தளத்தை முடக்கிய காவிக்கூட்டம் 


அரசியல் தளத்தில் இயங்கும் சிறு கட்சிகளை, அமைப்புகளை, குழுக்களை ஏற்க இயலாமல் நசுக்கி அழித்தொழிக்கும் முயற்சியை செய்தால் அது பன்மைத்துவ மறுதலிப்பே ஆகும்.


உதாரணம்: திராவிடர் கழகத்தை முடக்கவேண்டும்.  


அதே போல மாற்று பண்பாடு, மாற்று மதம், மாற்று வாழ்க்கை முறை, மாற்று மொழி அல்லது இனம் போன்றவற்றை ஏற்க இயலாமல், இணங்க விரும்பாமல், இணைய மதிக்க விரும்பாமல் அவற்றை சின்னாபின்னமாக சிதைய வைப்பது பணிய வைப்பது தனித்துவதை இழக்க வைப்பதும் பன்மைத்துவதை ஏற்க மறுப்பதாகும். 


உதாரணம்: பௌத்தம், நாட்டார் வழிபாடு, முருகன் 


ஏகாதிபத்தியம் 


தமது கருத்தை, தமது மொழியை, தமது மதத்தை, தமது பண்பாட்டை அல்லது வாழ்க்கை முறையை பிறர் மீது திணிப்பது. தம் மதத்தவராக மாற்றி விட வேண்டும் என்று. எண்ணுவது ஒருமைத்துவ ஆதிக்கமாகும். அது ஏகாதிபத்தியமாகும்.


இன்னொரு புறம், எத்தகைய வலிமையுமில்லாமல் சிதறிக்கிடப்போர், தங்களுள் ஒருங்கிணைந்து தற்காத்துக்கொள்ளுதல், தங்களிடையே இருக்கும் தனித்துவங்களை இழந்தும் இழக்கமாலும் ஒன்றாதல் "சனநாயக ஒருமைத்துவமாகும்"


சனநாயக ஒருமைத்துவதை வென்றெடுக்க வேண்டியது அமைப்பாக்க நடவடிக்கையில் தவிர்க்க இயலாத கடமையாகும். 


உலகெங்கும் பன்மைத்துவதை ஒப்புவதே சனநாயகம்! 

ஆதிக்கம் உருவாக்கும் ஒருமைத்துவம் ஊறுசெய்யும் வினையாகும்!   



- ராஜராஜன் ஆர்.ஜெ

  

(அமைப்பாய் திரள்வோம் புத்தகத்தில் இருந்து ஒருமைத்துவமும் பன்மைத்துவமும் என்ற கட்டுரையை முன்வைத்து பேசிய உரையின் எழுத்துவடிவம்)

No comments:

Post a Comment