Thursday 26 November 2020

திராவிட வாசிப்பு - நவம்பர் 2020 மின்னிதழ்

திராவிட வாசிப்பு - நவம்பர் 2020 மின்னிதழ் 

இதழை வாசிக்க 



வணக்கம்.

திராவிட வாசிப்பு மின்னிதழின் 16வது இதழ் இது. இந்த இதழில் "அன்றாடம் வாழ்வில் பெரியாரியம்" தொடரை கனிமொழி அவர்கள் மதம் தேவையா என்னும் தலைப்பில் எழுதி இருக்கிறார். ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் எழுதிய " JOURNEY of A CIVILIZATION Indus to Vaigai" என்னும் ஆய்வு புத்தகத்தின் அறிமுகத்தை விரிவாக புஷ்பலதா பூங்கொடி எழுதி இருக்கிறார். கலைஞர் சிறுகதைகள் குறித்த ஒரு திறனாய்வு தொடரை ராஜராஜன் ஆர்.ஜெ இந்த இதழில் தொடங்கி இருக்கிறார். குன்றக்குடி அடிகளார் - முத்துக்கள் 15 என்ற தொகுப்பு இதில் இடம்பெற்று இருக்கிறது. நவம்பர் 26 ஆம் தேதி ஜாதி ஒழிப்பு மாவீரர்கள் நாளை குறிக்கும் விதமாக ஜாதி ஒழிப்பு போராளிகளின் விவரங்கள், தகவல்கள் இந்த இதழில் இடம்பெற்று இருக்கிறது. நவம்பர் 2019 ல் இருந்து சில கட்டுரைகளை மீள் வாசிப்பாக கொடுத்து இருக்கிறோம். கவிஞர் முடியரசன் எழுதிய "துறைதோறும் தமிழே காண்பீர்" என்னும் கவிதையும் இந்த இதழில் வெளியாகி இருக்கிறது.

திராவிட வாசிப்பு குறித்த உங்களது மேலான கருத்துகளை, விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம். கீழ்காணும் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை சொல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!