1967 - அறிஞர் அண்ணா சிறப்புச் சொற்பொழிவு
(1957 இல் அண்ணா, தி.மு.க. 1967ல் ஆட்சியைக் கைப்பற்றும்என்று தெரிவித்துள்ளார். பத்தாண்டுகள் திட்டமிட்டுப்பணியாற்றியே ஆட்சிக்கு வந்தது தி.மு.க.)
11-08-1957-ம் தேதி ஞாயிறு காலை 10 மணிக்கு அறிஞர்அண்ணா அவர்கள் மதுரையில் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு: -
நான் இங்கே பேசவேண்டும் என்று நம்முடைய நண்பர்களாகக்கொடுத்திருக்கிற தலைப்பு 1967' என்பது. நானாகத்தேர்ந்தெடுத்துக் கொண்ட தலைப்பு அல்ல; நம்முடையநண்பர்களாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டது. அவர்களாகத்தேர்ந்தெடுத்தது என்றுகூட நான் கருதவில்லை, நம்முடையமாநில நிதியமைச்சர் அவர்கள் ஒரு பத்து ஆண்டுக்கு நீங்கள்எல்லாம் 'சும்மா' இருங்கள் என்று சட்டசபையிலே சொன்னதைமனதிலே வைத்துக்கொண்டு தேர்ந்தெடுத்தார்கள் என்றுகருதுகின்றேன்.
நாட்டுப் பிரிவினையில் இந்தப் பத்து ஆண்டு 1957-லிருந்து கூட்டினால் 1967 ஆகின்றது. இந்தப் பத்தாண்டில் என்னநடைபெறக்கூடும் என்பதைக் கேட்கத்தான் இந்தத்தலைப்பைக் கொடுத்திருக்கக்கூடும் என்று கருதுகின்றேன்.
நம்முடைய தலைவர் அவர்கள் செவியில் 1957 – 1967 என்றசொற்கள் விழுந்தவுடன் 1917-க்கு அவருடைய சிந்தனைசிறகடித்துப் பறந்ததை இங்கே எடுத்துச் சொன்னார்கள்.
உண்மையிலேயே தமிழகத்தில் 1917-ல் ஒரு பெரிய புரட்சிக்குமுதல் கட்டம் நடத்தப்பட்டது. அது ஒரு பெரிய புரட்சி என்பதுநமக்கெல்லாம் தெரியாமல் போனதற்குக் காரணம் நம்மிலேபலபேர் 1917-ல் அரசியல் அலுவல்களைக் கவனிக்கக்கூடியபருவத்திலே இருந்தவர்கள் அல்ல. அதிலும் குறிப்பாகத் தி. மு. கழகத்திலே இன்றைய தினம் ஈடுபாடு கொண்டவர்களிலே பலபேர் அந்த நாட்களிலே தொட்டிலிலே படுத்துத்தூங்கிக்கொண்டிருந்த குழந்தைகளாக இருந்திருப்பார்கள்.
ஆனால் இன்றையதினம் நம்மிடையே என்னென்ன மாதிரியானஎழுச்சிகள் காணப்படுகின்றனவோ, இன்றைய தினம் எங்கெங்குவாலிபத் தோழர்கள் உற்சாகமாக ஒரு கொள்கைக்காகத்தங்களைத் தாங்களே ஒப்படைத்திருக்கிறார்களோஅதைப்போல் அப்பொழுது 1917-ல் ஒரு மாபெரிய மன எழுச்சிநம்முடைய தமிழகத்திலே ஏற்பட்டது.
அது தொடர்ந்து நடைபெறாமல் போனதற்குக் காரணங்கள் பலஇருக்கின்றன. அந்தப் புரட்சி பிற்காலத்திலேஒடுக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் நம்மாலே சரியானமுறையிலே இன்னும்
கணிக்கப்படவில்லை.
1917-ல் தான் நம்முடைய தலைவர் அவர்கள் எடுத்துச்சொன்னபடி தமிழ் நாடு உண்மையிலேயே தன்னை உணரத்தலைப்பட்டது. தான் ஒரு தனி இனம் என்பதையும் தன்னுடையஇனம் தாழ்த்தப்பட்டிருக்கிறது என்பதனையும், அந்த இனம்தாழ்த்தப்பட்டிருந்தாலும், அது மறுபடியும் தளைகளைஉடைத்துக்கொண்டு முன்னேற முடியும் என்றதன்னம்பிக்கையையும்
1917-லே பெற்றது. நாம் எல்லாம் எப்படி திராவிட இயக்கத்திலேஈடுபாடு கொண்டிருக்கிற நேரத்தில் கல்லூரிகளிலே படிக்கிறமாணவர் களாகவும், உயர்நிலைப்பள்ளிகளிலேபடிக்கிறவர்களாகவும் இருந்து இதிலே ஈடுபாடு கொண்டோமோ, அதைப்போல இந்த 1917-லே இன்றையதினம் தலைமைவகித்திருக்கின்ற நம்முடைய நண்பர் சென்னையிலே சட்டக்கல்லூரியிலே படித்துக் கொண்டிருக்கிற மாணவராக இருந்துஅதிலே ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.
இதைப்போல எண்ணற்றவர்கள் தமிழ்நாட்டிலேபார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு உறுதுணையாகஇருந்தார்கள். அப்படித் தோற்றுவிக்கப்பட்ட அந்த இயக்கம்பார்ப்பனரல்லாதார் இயக்கம்' என்று பொதுப்படையாகஆரம்பிக்கப்பட்டாலும் அதனுடைய அடிப்படையிலே மூன்றுகருத்துக்கள் அப்பொழுதே கருவுருவில் இருந்தன. பார்ப்பனரல்லாதார் முன்னேறவேண்டும் என்பதை அவர்கள்வெளிப்படையாகவும் மிகைப்படுத்தியும்பேசிக்கொண்டிருந்தார்கள் என்று கூறப்பட்டாலும்பார்ப்பனரல்லாதார் எந்தெந்தத் துறையிலே முன்னேறவேண்டும்என்பதையும், அவர்கள் அந்தந்தத் துறைகளிலே முன்னேறாமல்போனதற்குக் காரணங்கள் என்ன என்பதனையும், அந்தக்காரணங்களைக் கண்டுபிடித்தான பிறகு அந்தக் குறைபாடுகளையெல்லாம் நீக்கி நிறைப்படுத்தி, மறுபடியும் பார்ப்பனரல்லாதார்சமுதாயம் எப்படி முன்னேற முடியும் என்பதற்கானவழிவகைகளையும் அன்றையத்தினமேஆய்ந்தறிந்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் அரசியல்துறையை மறந்துவிடவில்லை - பொருளாதாரத்துறையையும்இழந்துவிடவில்லை சமுதாயத் துறையைப்பற்றியும் அக்கறைகாட்டாமலில்லை. டாக்டர் நாயர் ' அவர்கள் இத்தனைகருத்துக்களையும் ஒருருவாகத் திரட்டி எடுத்த ஒரு மாபெரும்புரட்சித் தந்தையாக அன்றையதினம் விளங்கினார்கள். ஆனால்தமிழ் நாட்டில் எப்படி நாம் நம்முடைய மன்னர்களைமறந்துவிட்டிருக்கின்றோமோ, எப்படி ஒரு மன்னனுடைய மகன்யாரென்று சரித்திர புத்தகங்களைப் புரட்டினால் வரகுணபாண்டியன் மகன் இரண்டாவது வரகுண பாண்டியன் என்றுபோட்டு, இது இல்லையென்பாரும் உண்டு என்று அடியிலேகுறிப்புத் தரும்வகையில் குழப்பமான வரலாற்றைவைத்திருக்கிறோமோ, அதே முறையிலேதான் டாக்டர்நாயரைக்கூட இன்றையதினம் நாம் சரியாக உணர்ந்துகொள்ளவில்லை.
அதற்குக் காரணங்கள் இரண்டு, என நான் நினைக்கின்றேன். 1917-ல் ஏற்பட்ட பரபரப்பான அரசியல் நிகழ்ச்சிகளைவிட, மிகப்பரபரப்பான அரசியல் நிகழ்ச்சிகள் இடைக்காலத்தில் ஏற்பட்டன. மற்றும் ஒன்று நம்முடைய தமிழ்ப்பண்புக்கு ஏற்றபடி நம்முடையஅருமை பெருமைகளை நாம் குறித்து வைத்திருக்கின்றபழக்கத்தை நெடுங்காலமாக இழந்துவிட்டோம். இன்றைய தினம்ரோம் நாட்டு வரலாற்றை நீங்கள் துருவிப் பார்க்கவேண்டுமென்றால் ஜூலியஸ் சீசர் அணிந்து கொண்டிருந்த கால்செருப்பின் அளவிலேயிருந்து,
கிளியோபாட்ரா அணிந்திருந்த காதணி வரை வரலாற்றுக் குறிப்புஉண்டு. ஆனால் தமிழகத்தின் வரலாற்றை நீங்கள் பார்க்கவேண்டுமென்றால், இந்த மண்டலத்திலே ஆண்டுகொண்டிருந்தமன்னன் இன்னாருடைய மகன் என்று கூறுவதற்கு, இரண்டுமூன்று வரலாற்று ஆசிரியர்களும், நான்கைந்து தமிழ்ப்புலவர்களும், பத்துப் பதினைந்து திங்கள் சேர்ந்துஉட்கார்ந்தாலும், ஆளுக்கொரு செய்தியைத்தான் தரமுடியுமேதவிர, அத்தனைபேரும் ஒத்த கருத்தைத் தரமுடியாத ஒரு நிலைஇருக்கிறது, அதற்குக் காரணம் புலவர்களிடையே புலமைக்குறைவு என்று அர்த்தமல்ல! நம்முடைய முன்னோர்கள்,மனிதர்களுடைய செயல்களைக் குறித்துவைப்பது இழுக்கு என்றஒரு தவறான கருத்திலே குறித்து வைக்காமல் போய்விட்டார்கள்.
1917-லே துவக்கப்பட்டுத் தென்னகம் முழுவதிலும் பெரும்காட்டுத்தீ என்று எதிரிகள் சொன்னதைப் போலப் பரவி’, இங்கிலாந்திலே சாய்வு நாற்காலியிலே சாய்ந்து கொண்டிருந்தஅரசியல் தத்துவ ஆசிரியர்களைக்கூட, கண்களை அகலத்திறக்கச் செய்த டாக்டர் நாயருடைய வரலாறு நமக்குக்கிடைக்காமலிருப்பதிலே ஆச்சரியமில்லை.
டாக்டர் நாயர் குறித்து இன்றைய தினம், புதிதாகத் திராவிடஇயக்கத்திலே ஈடுபாடு கொண்டிருப்பவர்களுக்கு, ஏதோ நான்சொல்லுகிறேன் என்பதற்காக உபசாரத்திற்குக்கேட்டுக்கொண்டிருக்கிறார்களே தவிர, டாக்டர் நாயரைப் பற்றிஎண்ணுகின்ற நேரத்தில் என்னுடைய மனதிலே ஏற்படுகின்ற மனஎழுச்சி, என்னுடைய மனதிலே ஏற்படுவதைவிட நம்முடையதலைவர் மனதிலே ஏற்படுகின்ற மன எழுச்சி, உங்களில்பலருக்கு ஏற்படாது. ஏற்படாதது உங்களுடைய குறையல்ல நாம்நம்முடைய வரலாற்றைத் தொகுத்து வைக்காததால் ஏற்பட்டகுறைதான்! டாக்டர் நாயர் அவர்கள் அரசியல் துறையிலேயும்பொருளாதாரத் துறையிலேயும், சமுதாயத் துறையிலேயும்சேர்ந்து பணியாற்றிய ஒரு பெரும் தலைவர் ஆவார்கள்.
பிற்காலத்திலே வந்த ஜஸ்டிஸ் இயக்கம் இந்த மூன்றையும்ஒன்றாக அழைத்துச் செல்லத் தவறியதனால்தான் நாட்டுமக்களாலே ஓரளவுக்குப் புறக்கணிக்கப்பட்டது. டாக்டர் நாயர்இந்த மூன்றையும் சம எடையில், ஒருசேர இழுத்துச் சென்றும்மூன்று துறைகளிலேயும் புரட்சி மனப்பான்மை ஊட்டியகாரணத்தாலேதான், அந்த நாட்களிலே கல்லூரிகளிலேபடித்துக்கொண்டிருந்த மாணவர்கள் டாக்டர் நாயர் பேசுகிறார்என்றால், திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் திராவிடர்இயக்கக் கூட்டங்கள் நடைபெற்றால் எவ்வளவு ஆர்வத்தோடுவருகிறார்களோ அத்தனை ஆர்வத்தோடு வந்தார்கள்.
இன்றைய தினம் திராவிடர் இயக்கத்தை எப்படி காங்கிரஸ்தலைவர்கள் கருவறுத்துவிட வேண்டும் என்று கூசாது, அஞ்சாதுபல பழிகளைச் சுமத்துகிறார்களோ, அப்படிப்பட்ட பலபழிச்சொற்களை யெல்லாம் டாக்டர் நாயர் பேரிலும் சுமத்திஇருக்கின்றார்கள். எப்படி இத்தனை பழிச் சொற்களைத் தாண்டிதிராவிடர் இயக்கம் இன்றைய தினம் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறதோ, உயிர் வாழ்வது மட்டுமல்ல, புதுவலிவினைப்பெற்றுக்கொண்டு வளர்ந்து வருகின்றதோஅதைப்போலவே டாக்டர் நாயர் அவர்களும் அந்தப் பழிச்சொற்களை யெல்லாம்தாண்டி, அவர் வாழ்ந்திருந்த காலம்வரையில் - அவர் தமிழ் நாட்டினுடைய துர்ப்பாக்கிய வசத்தால்அதிக காலம் வாழ்ந்திருக்கவில்லை வாழ்ந்திருந்த காலம்வரையிலே மாற்றார்கள் வீசியெறிந்த கணைகளைத்தாங்கக்கூடிய நெஞ்சுரத்தைப் பெற்றிருந்தார் ஒரு தடவைடாக்டர் நாயர் அவர்களைக் காங்கிரஸ் இயக்கத்தைச் சார்ந்தபெரும் தலைவர்கள் - மைலாப்பூரையும், திருவல்லிக்கேணியையும் சேர்ந்தவர்கள் கேலியாகச்சொன்னார்கள் - டாக்டர் நாயரைப் போன்றவர் களெல்லாம்வெள்ளைக்காரனுக்குத் துதி பாடிக் கொண்டிருக் கிறார்கள்; வெள்ளைக்காரனுக்குத் தாசனாக இருக்கின்றார்கள்; வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தைத் தாங்குகின்றார்கள் என்றுடாக்டர் நாயர் சொன்ன வாசகத்தை நான் அவர்களுடையவரலாற்றுக் குறிப்புகளிலேயிருந்து படித்துப் பார்த்திருக்கிறேன். அவர் சொல்லியிருக்கின்றார் “தேசியம் பேசுகின்ற என்னுடையகாங்கிரஸ் நண்பர்கள் இந்தியாவிலே சம்பாதிக்கின்ற பணத்தை, இங்கிலாந்திலே கொண்டுபோய்ச் செலவழிக்கிறார்கள்” - நான்இங்கிலாந்திலே வைத்தியசாலை நடத்தி, இங்கிலீஷ்காரன்பணத்தைச் சம்பாதித்துக்கொண்டுவந்து இந்தியாவிலேசெலவழிக்கிறேன். நான் உண்மை தேசீயவாதியா, இவர்கள்உண்மையான தேசீய வாதிகளா” என்று கேட்டார். ஏனென்றால்டாக்டர் நாயர் அவர்களுக்கு இங்கிலாந்து நாட்டில் பிரபலமானமருத்துவர்கள் குடியிருக்கின்ற வீதியில் ஒரு மருத்துவமனைஇருந்தது. அவர் அறுவை மருத்துவத்திலே சிறந்த நிபுணர்ஆகையினாலே அவருடைய வருகைக்காக ஆங்கிலேயர்கள் கூடஅங்கே காத்துக்கொண்டிருப்பார்கள் - ஆண்டிலே மூன்று நான்குதிங்கள் அவர் இங்கிலாந்திற்குச் சென்று நோயாளிகளைக் கண்டுமருத்துவம் செய்து அரசியல் நிலைமைகளையும்அறிந்துகொண்டு பணத்தைச் சம்பாதித்துக் கொண்டுவந்துஇங்கே செலவழித்தார்கள்.
இதனை அவர் எடுத்துச் சொன்னார் என்று நான்படித்துப்பார்க்கின்ற நேரத்தில், எவ்வளவு பெரிய நெஞ்சுரம்படைத்தவர் 1917-ல் தமிழர்களுக்குக் கிடைத்திருந்தார்கள்என்பதை எண்ணி எண்ணி மனம் பூரிப்பாலே மகிழ்ந்தேன், மகிழவேண்டியிருக்கிறது.
மற்றொரு தடவை - டாக்டர் நாயர் அவர்கள் இந்தநாட்டுத்தேசியவாதிகளாலே கண்டிக்கப்பட்ட நேரத்தில், அவர்வெளிப்படையாகச் சொன்னது அந்தக் காலத்து ஆங்கிலப்பத்திரிகையிலே வெளிவந்தது. திராவிட நாட்டினுடையகருத்துக் கருவூலம் அதிலே இருப்பதை நான் கண்டிருக்கிறேன்.
அவர் எழுதியிருக்கிறார், “எந்த நேரத்திலானாலும் சரி, At any time Tamilians will prefer London to Delhi, என்று தெளிவாகஎழுதியிருக்கின்றார். நீ லண்டனிலே அடிமைப்பட்டிருக்கிறாயா? டெல்லிக்கு அடிமைப்பட்டிருக்கிறாயா? என்று கேட்டால்தென்னிந்தியர்களாகிய நாங்கள் வேண்டுமானால் லண்டனுக்குஅடிமைப்பட்டிருந்து விடுதலை பெறுவோமே தவிர, டெல்லிக்குஅடிமைப்பட்டிருக்க மாட்டோம் என்று டாக்டர் நாயர் அவர்கள்அன்றைய தினமே எழுதி வைத்திருக்கிறார்கள்.
டாக்டர் நாயர் அவர்கள்தான் திராவிட இன உணர்ச்சிதமிழகத்திலே பரவுவதற்கு வித்தூன்றினார். அவர் பிறந்ததுகேரளம், அவர் வாழ்ந்தது தமிழகம், அவர் உழைத்தது தமிழருக்கு- டாக்டர் நாயரைத் தமிழகத்திலே அறிந்திருப்பதைப்போல், கேரள நாட்டிலேகூட அதிகம் அறிந்திருக்கமாட்டார்கள்.
ஏனென்றால், அவர் வாலிபப் பருவம் அடைந்ததும் கேரளநாட்டை விட்டுத் தமிழகத்திலேயே குடியேறினவர். அந்தநாட்களிலே நம்முடைய நீதிக் கட்சித் தலைவர்கள் மலையாளநாட்டைச் சேர்ந்த டாக்டர் நாயரும், ஆந்திர நாட்டைச் சேர்ந்தபெருந் தலைவர்களும், தமிழ் நாட்டைச் சேர்ந்த தலைவர்களும்கன்னட நாட்டைச் சேர்ந்தவர்களும் அப்போது ஒரிசாவும்நம்மோடு ஒன்றாக இணைந்திருந்த காரணத்தால் - ஒரிய நாட்டுத்தலைவர்களும் இத்தனை பேரும் ஒன்றாகச் சேர்ந்துபணியாற்றினர். அவர்கள் இயக்கத்துக்கு இட்ட பெயரே South Indian Liberal Fedaration தென்னிந்திய விடுதலைச் சங்கம் (நலஉரிமைச் சங்கம்) என்பதுதான். தென்னிந்தியா என்பதைத்தான்வலியுறுத்தினார்கள். ஆனால் பிற்காலத்தில் நீதிக்கட்சிவிரிவடைவதாகக் கருதிக்கொண்டு தென்னிந்தியா என்பதைஅவர்கள் இன்னமும் விரிவுபடுத்திப் பம்பாய்க்குச் சென்று ஒருமாநாட்டையும், கோலாப்பூருக்குச் சென்று ஒரு கிளையையும், கல்கத்தாவில் ஒரு கிளையையும் வைத்துத் தென்னிந்திய என்கிறசிறப்பைத் தாங்களாகவே இழந்தார்கள். அதனாலேதான்நீதிக்கட்சி பிற்காலத்திலே கெட்ட நிலைமை அடைய நேரிட்டதேதவிர அதற்கு வித்து ஊன்றியவர் நல்ல வித்து தான்ஊன்றியிருக்கிறார். நல்ல கருத்துக்களைத்தான் தந்திருக்கிறார்என்பதை இன்றைய தினம் நம்முடைய தலைவர் அவர்கள்எடுத்துச் சொல்லிக் கொண்டு வந்த நேரத்தில் நான்எண்ணிப்பார்த்தேன்.
நீங்கள் எல்லாம் மிக நன்றாக அறிவீர்கள் காங்கிரஸ் தலைவர்கள்திராவிட இயக்கத்தவரையும் அதிலும் குறிப்பாக என்னையும்தூற்றுவதற்காகக் கிளம்புகின்ற நேரத்தில், அவர்கள்சொல்லுகின்ற ஒரே ஒரு குற்றச்சாட்டு, அந்த அண்ணாத்துரையைநாங்கள் அறியமாட்டோமா - இவன் நீதிக்கட்சிக்காரன் – என்றுசொல்லியிருப்பதை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்.
அவர்கள் சொன்ன அத்தனை நேரத்திலேயும், தெளிவாக, திட்டமாகச் சொல்லியிருக்கின்றேன். நான் நீதிக் கட்சியிலேஈடுபாடு கொண்டிருந்தவன் என்று எடுத்துச்சொல்லிக்கொள்வதிலே வெட்கப்படவுமில்லை, வேதனையடையவுமில்லை என்று.
நான் தமிழகத்து மேடைகளிலே பலதடவைசொல்லியிருக்கிறேன். அதுமட்டுமல்ல நீதிக்கட்சி இயக்கம்எந்தக் கட்டத்தை அடைய வேண்டுமோ அந்தக் கட்டத்தைஅடைவதற்கு என்னாலான பணியை நான் செய்திருக்கின்றேன்என்பது என்னுடைய உள்ளத்திற்கும் தெரியும். தமிழ் நாட்டுஅரசியல் நிலைமைகளை ஆராய்ந்தவர்களுக்கும் தெரியும்.
ஆகையினாலே தி. மு. கழகம் நீதிக் கட்சியினுடைய வழிவழிவந்தது என்று காங்கிரஸ்காரர்கள் சொன்னால் அதைக் குறித்துநான் வருத்தப்படுவதுமில்லை - வெட்கமடைவதுமில்லை.
ஏனென்றால் நீதிக்கட்சி இயக்கம் என்பது பிற்காலத்தில் அதுபட்டம் பதவிகளைத் தேடுகின்றவர்களும் சட்டத்தினுடையதுணையைத் தேடுகின்றவர்களும் சட்டசபையிலே இடம்பெற்றால்மட்டும் போதுமென்ற எண்ணம் கொண்டவர்களும்மட்டும் கொண்டதாகிவிட்டது. ஒரு காலத்தில் - துவக்கப்பட்டகாலத்திலே - பாமர மக்களை ஈடேற்றுவதற்காகவும், பார்ப்பனர்அல்லாத சமுதாயத்தைக் கடைத்தேற்றுவதற்காகவும் பார்ப்பனர்அல்லாத சமுதாயம் பொருளாதாரத் துறையிலேயும் அரசியல்துறையிலேயும் விடுதலை யடைந்து முன்னேற்றம் அடையவேண்டும் என்பதற்காகவும் துவக்கப்பட்ட ஒரு இயக்கமே தவிரவெறும் பட்டத்திற்காக மட்டும் துவக்கப்பட்ட இயக்கமல்ல.
ஆகையினாலே அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களென்று ஒத்துக்கொள்வதிலே எந்தவகையிலும், யாருக்கும் இழுக்கு இல்லைஅந்த இயக்கம் பிற்காலத்தில், யானைகூட சேற்றிலேஅழுந்திவிட்டால் ஒரு கால் சேற்றில் இறங்கிவிட்டால், அதைமூன்று காலாலே தூக்க ஆரம்பித்தால், அந்த மூன்று கால்களும்சேற்றிலே அழுந்தி யானை வெளியிலே வராமல் இருப்பதைப்போல் - ஜஸ்டிஸ் கட்சி பிற்காலத்தில் மக்கள் இயக்கத்திலேஇருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட வேண்டியிருந்தது. அதற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சி எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்த தத்துவங்களை, கருத்துக்களைப் புரிந்துகொள்ளுமளவுக்கு நாட்டிலே அந்த நாட்களில் கல்வியறிவுபரவவில்லை.
எனக்கே நன்றாக நினைவிலே இருக்கின்றது. கடப்பையில்நடைபெற்ற ஒரு மாநாட்டில் - நான் அப்போது தமிழ் நாட்டில் மிகஅதிகமாகப்பேசப்பட்டு வந்த திலகர் சுயராஜ்ய நிதி மோசடிவழக்கைப்பற்றி ஒருமணிநேரம் பேசினேன் - ஆங்கிலத்தில்;அப்போது எனக்குப் பக்கத்திலே, ஜஸ்டிஸ் கட்சியிலே அப்போதுதலைவராக இருந்த பொப்பிலி அரசரும் வேறு பல ஜஸ்டிஸ்கட்சித் தலைவர்களும் வீற்றுக் கொண்டிருந்தார்கள். ஜஸ்டிஸ்கட்சியினுடைய பிரமுகர் ஒருவர் பக்கத்திலே அமர்ந்திருந்தார்.
ஒருமணி நேரம் நான் - திலகர் சுயராஜ்ய நிதி என்ற பெயராலேஒரு கோடி ரூபாயை வசூலித்து அந்த ரூபாயிலே பெருத்தமோசடிகள் ஏற்பட்டதையும், அந்த மோசடிகளை விளக்கிமராட்டிய நாட்டிலே இருந்து வெளியிடப்பட்ட “மராட்டா” என்றபத்திரிகையில் தொடர்ச்சியாகத் தலையங்கம்எழுதப்பட்டதையும், எடுத்துச் சொன்னேன். சொல்லிவிட்டுமாநாடு பிற்பகலுக்குக் கலைந்து சாப்பாட்டுக்குப் போகிறநேரத்தில், ஜஸ்டிஸ் கட்சியினுடைய பிரமுகர் என்னுடையதோளிலே கைபோட்டுக்கொண்டு சொன்னார்
“அண்ணாதுரை! நீ நன்றாகத்தான் பேசுகிறாய்! ஆனால் எதற்காகஇவ்வளவு பெரிய அண்டப் புளுகு சொன்னாய்?” என்று என்னைக்கேட்டார். நான் அப்படியே அதிர்ச்சி அடைந்துபோய் “ஐயா நான்என்ன பேசினேன் - நீங்கள் எதைக் கூறுகிறீர்கள்” என்றேன். “என்ன ஒரு கோடி ரூபாயை காங்கிரஸ்காரர்கள் வசூலித்தார்கள். அதை ஏப்பம் விட்டுவிட்டார்கள் என்று சொன்னாயே! இப்படிச்சொல்லலாமா? எப்பொழுது அவர்கள் வசூலித்தார்கள்? எங்கேஏப்பம் விட்டார்கள்?” என்று கேட்டார். நான் சொன்னேன் “ஐயா, நம்முடைய ஜஸ்டிஸ் பத்திரிகையிலே T. A. V. நாதன் அவர்கள்அருமையாக ஒரு ஆறு தலையங்கம் எழுதியிருக்கிறாரே, படிக்கவில்லையா?” என்றேன். “நான் ஜஸ்டிஸ் பத்திரிகைபடிக்கிற வழக்கமில்லை” என்றார். அப்படிப்பட்ட தலைவர்கள்வந்த பிறகுதான் ஜஸ்டிஸ் கட்சி கீழே விழுந்ததே தவிரவேறில்லை.
ஜஸ்டிஸ் கட்சியை அப்படிப்பட்ட தலைவர்கள்கரத்திலேயிருந்துவிடுவிக்க வேண்டுமென்றுதான் சேலத்திலேநான் முயற்சி செய்தேன் - ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கையைஅழிக்க வேண்டுமென்றல்ல.
பார்ப்பனரல்லாதார் இயக்கம் சமநீதி காணும் நோக்குடன்துவக்கப்பட்டதே தவிர அது பார்ப்பனர்களை தனிப்பட்டமுறையிலே வெறுத்ததில்லை. என்பேரிலும் இப்போது பழிசொல்லுகிறார்களல்லவா அண்ணாதுரை இப்போது ஆறுமாதகாலமாக திடீரென்று பார்ப்பனர்களுக்கு வேண்டியவனாகிவிட்டான் என்று. நான் வேண்டியவனாக இருக்கிறேனோஇல்லையோ அது வேறு விவகாரம். ஆனால் உண்மையிலேயேபார்ப்பனர்களைத் தனிப்பட்ட முறையிலே வெறுக்கவேண்டியஅவசியமில்லை என்றும் பார்ப்பனர்களுக்கு என்று இருக்கின்றஉரிய பங்கைத் தந்து, பார்ப்பனரல்லாதாருக்கு என்றுஇருக்கின்ற உரிய பங்கு பார்ப்பனரல்லாதாருக்குக்கிடைக்கவேண்டும் என்ற நீதியைஅடிப்படையாகக்கொண்டதால்தான் ஜஸ்டிஸ் கட்சிக்குநீதிக்கட்சி என்றே தமிழிலே பெயரிடப்பட்டது.
ஜஸ்டிஸ் கட்சியினுடைய அமைச்சரவை அமைக்கப்பட்டநேரத்தில் சேதுரத்தினம் ஐயரென்ற ஒரு பார்ப்பனரும் மந்திரியாகஇருந்தார். அதை உங்களுக்கு நான் கவனப்படுத்துகிறேன். இப்படித் துவக்கப்பட்ட ஜஸ்டிஸ் கட்சி எதைச் செய்யத்தவறிவிட்டது என்றால் பார்ப்பனரல்லாதாரை, படித்து, பட்டம்பெற்று உத்தியோகத்துக்குப் போகின்ற பார்ப்பனரல்லாதார்மட்டும்தான் இருக்கிறார்கள் என்று தப்பாகக் கணக்கிட்டது. பார்ப்பனரல்லாத சமுதாயத்தில் B. A. படித்துவிட்டு வேலைகிடைக்காமல் - M. A. படித்துவிட்டு மேல் உத்தியோகத்துக்குப்போகவேண்டியவன், தாசில்தாராக இருந்து கலெக்டர்உத்தியோகத்துக்கு “புரமோஷன்” கிடைக்க வேண்டியவன்இப்படிப்பட்ட சிலர்தான் பார்ப்பனரல்லாத சமுதாயத்திலேஇருக்கிறார்கள் என்று கணக்குப் போட்டார்களே தவிர, கைவண்டி இழுக்கின்ற கந்தன், கடைவைத்துப் பிழைக்கின்றவரதன், வயலிலே வேலை செய்கின்றவன், ஒரு வேலையும்கிடைக்காதவன், உச்சிப் பொழுதுவரையிலும் பாடுபட்டாலும் ஒருகவளம் சோற்றுக்கு வழியில்லாமல் மிராசுதாரரிடத்திலேஅடிபடுபவன், கங்காணியினுடைய சவுக்கடியைத் தாங்குபவன், இங்கே பிழைப்பதற்கு வழியில்லாமல் சிலோனுக்குக் கூலியாகஓடுபவன், இப்படிப்பட்ட பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்கள், ஏழைகள் இருப்பதை அவர்கள் காண மறுத்தார்கள்.
காண மறுத்ததற்குக் காரணம் இரண்டு இருக்கலாமென்றுநானாக நினைக்கிறேன். ஒன்று, நம்முடைய ஆட்சி ஏற்பட்டால், அவர்களை ஈடேற்றிவிடலாம் என்று கருதியிருக்கக்கூடும்.
மற்றொன்று, அவர்களைப் பற்றிய பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டால் இந்தப் பிரச்சினை கெட்டுவிடும் என்று அவர்கள்எண்ணியிருக்கலாம். ஆனால் நான் காஞ்சீபுரத்திலே கருடசேர்வை விழா நடக்கிறபோது பார்த்திருக்கிறேன். பார்ப்பனர்கள்அங்கே தாங்கமுடியாத ஒரு பெரிய குடையை அந்த வாகனத்தின்பக்கத்திலே வைத்துக்கொண்டு பிடித்துக்கொண்டிருப்பார்கள். வாகனமோ பளுவானது. அதைத் தூக்குகின்றவர்களோ, ஆடியசைந்து தூக்கிக்கொண்டு போவார்கள்இலட்சக்கணக்கான மக்கள் எதிரிலே நின்றுகொண்டிருப்பார்கள். எள் விழ இடமில்லை என்பார்களேபழமொழி, அதைப்போலிருக்கும்.
அந்தக் குடை கொஞ்சம் காற்றிலே ஆடினால் கீழேகவிழவேண்டும். அந்த நேரத்தில் பார்ப்பனர்களை நான்உற்றுப்பார்த்திருக்கிறேன். அதிலும் வெற்றிலைப் பாக்குபோடுகின்ற பழக்கமுள்ள பார்ப்பனர், குடையே விழாமல்வெற்றிலை பாக்குப் போட்டதை நான் பார்த்திருக்கிறேன். ரொம்ப லாவகமாகப் போடுவார். இரண்டு விரலாலே மட்டும்வெற்றிலையை எடுப்பார் மற்றொரு விரலாலே சுண்ணாம்பைத்தடவுவார் - இப்படியே தடவிக்கொண்டிருப்பார். அதே நேரத்திலேவழியிலே தெரிந்த பக்தர்கள் - கொஞ்சம் பசையுள்ள பக்தர்கள்பார்த்தால் அவர்களுக்கும் புன்னகையை பரிசாக அளிப்பார், வரதராஜப்
பெருமாளுடைய மகரக் கண்டிகையையும் பார்த்துக்கொள்வார்.
அதே நேரத்திலே புகையிலைக் காம்பு எங்கே இருக்கிறதுஎன்பதையும் தேடிக்கொள்வார்.
ஜஸ்டிஸ் கட்சி அந்த வித்தையைச் செய்யத் தவறிவிட்டது. அந்தக் கட்சி, படித்த பார்ப்பனரல்லாதாரை மட்டும் பார்த்தது.
நான் சொன்ன உதாரணத்தின்படி, அதே நேரத்தில் ஏழைபார்ப்பனரல்லாதாரையும், இல்லாத கொடுமையினாலேவாட்டப்படுகின்ற பார்ப்பனரல்லாதாரையும் பார்ப்பதற்குத்
தவறிவிட்டது.
அதனாலேதான், இனி அவர்களிடத்திலே அது இருந்தால், ஜஸ்டிஸ் இயக்கம் பாமர மக்கள் இயக்கம் ஆகாது என்று சொல்லி- அரண்மனையிலே பிறந்த குழந்தையானாலும் எப்படிசித்தார்த்தர் அரண்மனையிலே பிறந்தாலும் அவர் புத்தமார்க்கத்தை ஏற்படுத்துவதற்கு முன்னால் அரசமரத்தடிக்குவந்தாரோ அதைப்போல அரண்மனையிலே இருந்த ஜஸ்டிஸ்கட்சி, வெட்ட வெளிக்கு ஆலமரத்தடிக்கு, வந்தால்தான் அதுமக்களுக்குப் பயன்படும் என்று கருதி சேலத்திலே நடைபெற்றமாநாட்டில், அரண்மனையிலே இருந்த ஜஸ்டிஸ் கட்சியைபெரியார் ராமசாமி மிகப்பாடுபட்டு எங்களையெல்லாம்துணைக்கு வைத்துக்கொண்டு, ஆலமரத்தடிக்குக் கொண்டுவந்தார்.
ஆலமரத்தடிக்குக் கொண்டுவந்த பிறகு ஜஸ்டிஸ் இயக்கம்இன்றைய தினம் நீண்ட நாளைக்கு ஆலமரத்தடியிலேஇருந்துவிடக்கூடாதென்று நான் மேலும் கொஞ்சம் விரிவானதிடலுக்கு அழைத்து வந்திருக்கிறேன். பெரியார் ராமசாமிஆலமரத்தடியிலே இருந்து கொண்டால் போதுமென்றுஎண்ணிவிட்டார்.
இவ்விதமான அரசியல் நிலைமை இன்று 1967-ல் என்ன ஆகும், எப்படி இருக்கும் என்று அறிய நமது நண்பர்களுக்குக் கொஞ்சம்எண்ணம் பிறந்தது.
நான் 1917-லிருந்து 57 வரை நடைபெற்றதைச் சொன்னதற்குக்காரணம் எப்படி நம்முடைய தலைவர்கள் போட்ட வித்துஇடையிலே நன்றாக முளைவிட்டுச் செழுமையானசெடியானாலும் இடைக்காலத்திலே அதை அழிப்பதற்குஎத்தனையோ பேர் முயற்சி செய்தாலும், எப்படி அது நல்லமுறையிலே வளர்ந்திருக்கிறதோ அதைப்போலத்தான் 57-லே நமக்கிருக்கின்ற இந்த வளர்ச்சி 67-ல் நாமே கண்டுஆச்சரியப்படத்தக்க அளவுக்கு மிக அதிகமானவளர்ச்சியாகப்போகின்றது. இதிலே யாருக்கும் ஐயம்தேவையில்லை.
1957-ல் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் திராவிடமுன்னேற்றக் கழகத்தினுடைய கருத்துக்களைக் கேட்டுவாழுகின்ற தமிழகத்திற்கும் கிடைத்திருக்கின்ற நிலைமைகள்காரணமாக இன்னும் ஒரு பத்தாண்டு காலத்தில் இந்தப்பத்தாண்டு காலத்திலேதான் - மிக அதிகமான அளவுக்கு நல்லபலன் - உருவாகக்கூடிய பலன் நம்முடைய சமுதாயத்திலே ஏற்படஇருக்கிறது.
இதை யூகித்துத்தானோ என்னமோ நிதியமைச்சர் சுப்பிரமணியம்அவர்கள்கூட அண்ணாத்துரையை - திராவிட முன்னேற்றக்கழகத்துக்காரரை நான் கேட்டுக்கொள்ளுகின்றேன், நாட்டுப்பிரிவினையை விட்டுவிடுங்கள் விட்டுவிட முடியாவிட்டால் ஒருபத்தாண்டு காலத்திற்காவது அதை வலியுறுத்தாமல் இருங்கள்என்று சொன்னார்கள்.
நான் அதைச் சொல்லுகின்ற நேரத்திலே காங்கிரஸ்காரர்கள்சொல்லக்கூடும்; அதைத்தான் சுப்பிரமணியம் அவர்கள்மறுத்துவிட்டாரே, பத்திரிகையிலே வந்ததே என்று. எப்பொழுதுமறுத்தார் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும், ஏன் மறுத்தார்என்பதையும் கவனிக்கவேண்டும்.
தான் சொன்னதைத்தானே மறுக்கவேண்டிய அவசரத்திலே அவர்ஏன் பேசினார் என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். நாங்கள் அவசரப்பட்டுப் பேசுகிறோம் என்றால் அதிலே அர்த்தம்இருக்கிறது. நாங்கள் அநுபவம் இல்லாதவர்கள். நிதியமைச்சர்சுப்பிரமணியத்திற்கு அநுபவம் இல்லை என்று சொல்ல முடியாது. அரசியல் நிர்ணய சபையிலும், முன்னாலே இருந்தஅமைச்சரவையிலும் இருந்திருக்கின்றார்.
ஆகவே நிரம்ப அநுபவம் பெற்றவர்தான் இவ்வளவு அநுபவம்இருக்கின்ற அவர் அவசரப்பட்டு அன்றைய தினம்பேசியிருக்கக்கூடாது என்பதை பின்னாலே உணர்ந்தார்.
அவர் சொன்னதும், கல்கத்தாவிலே இருக்கிற பத்திரிகைகளும், பம்பாய், டெல்லிபோன்ற வட நாட்டுப் பத்திரிகைகளும்தலையங்கம் எழுதி அவரைக் கண்டித்தன. எப்படி நீ பத்தாண்டுஒப்பந்தம் கேட்கலாம்?
அவர்களோ நாட்டைப் பிரிப்பவர்கள்; அவர்களோபதினைந்துபேர், நீங்களோ 150-பேர் இருக்கிறீர்கள் - என்னஅவர்களுடைய ஒத்துழைப்புக்காக இந்தியாவின் ஆத்மாவைப்பறி கொடுக்கலாமா - இதற்கா நீ மந்திரியாக இருக்கிறாய் - என்றெல்லாம் கண்டபடி எழுதிவிட்டன.
நானும் மெத்த வருத்தப்பட்டேன். ஐய்யோ பாவம் இப்போதுதான்கொஞ்சம் உண்மை பேச ஆரம்பிக்கின்றார் - இன்னும் ஒருஐந்தாறுதடவையாவது பேசி அதற்குப் பிறகு இந்தப் பாவிகள்ஏதாவது சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. முதல் தடவையிலேசொல்லிவிட்டார்களே. இனி கொஞ்சம் விழிப்போடு இருப்பாரேஎன்று நான் கொஞ்சம் வருத்தப்பட்டேன்.
அதற்குப் பிறகு நிதியமைச்சர் சுப்பிரமணியம் தன்னுடையநிலைமையைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. ஒருஉறுப்பினர் எழுந்து கேட்டார், அதென்ன நாட்டுப் பிரிவினையைப்பத்தாண்டுக்குத் தள்ளிப்போடச் சொல்லுகின்றீர்களே - நாட்டுப்பிரிவினையை நீங்கள் ஒப்புக்கொள்ளுகின்றீர்களா? என்று.
பொருளாதார முன்னேற்றத்தையும், சமுதாய முன்னேற்றத்தையும்மிக நல்ல முறையில் எய்தலாம். டில்லிக்கு நான் வந்து 10 நாட்களாகிறது, எல்லா இடங்களிலும் நான் சுற்றித் திரியவில்லை- என்றாலும் நான் மரமடர்ந்த சாலைகளுக்கு, புது தெருக்களுக்குசோலைகளுக்குச் சென்றேன்.
ஒரு சாலைக்காவது தென்னாட்டார் பெயர் வைக்கவேண்டுமென்ற எண்ணம் இந்திய அரசுக்கு தோன்றாதது ஏன்?
இது தென்னாட்டு மக்கள் இரண்டாந்தர மக்கள் என்பதை காட்டவில்லையா?
திருமதி. லட்சுமி மேனன்: (வெளிநாட்டு அமைச்சர்)
தியாகராஜரோடு என்ற ஒருரோடு இருக்கிறது.
ராம்ரெட்டி: சங்கீத வித்வான் தியாகராஜாவின் பெயரில் ஒரு ரோடுஇருக்கிறதே?
ஒரு உறுப்பினர்: இதைவிட உங்களுக்கு இன்னும் என்னவேண்டும்?
(மேலும் பல குறுக்கீடுகள்)
அண்ணா: கனம் லிங்கம் அவர்களின் வாதம்பற்றி வியக்கிறேன், ஒரு தியாகராய ரோடினால் - அது சர் தியாகராயர் பெயரில்அமைந்ததோ; அல்லது கீர்த்தனை புகழ் தியாகராயர் பெயரால்அமைந்ததோ தெரியவில்லை அவர் திருப்தி அடைவாரேயானால்நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், அதுமட்டும்தெற்கிற்குப் போதாது.
தெற்கே வாருங்கள், மோதிலால் நேரு சோலையில் உலவலாம்; நேரு வாசக சாலையில் நுழையலாம்; கமலாநேரு மருத்துவமனைக்குட் போகலாம்.
திரு. ராமா ரெட்டி: இது ஒருமைப் பாட்டைக் காட்டுகிறது.
மன்றத் தலைவர்: ஆர்டர்; ஆர்டர்; அவர் தொடர்ந்து பேசட்டும்.
அண்ணா: அபுல்கலாம் ஆசாத் ரோட்டில் போகலாம், அத்தகையவிஷயம் இங்கேன் இல்லை? தெற்கே உள்ளவர்களின்எண்ணத்தைப் பாருங்கள்.
தெற்கைப் பற்றி பேசும்போது தெற்கத்திய நண்பர்களே எழுந்து, "அப்படிப் பேசாதே! எல்லாம் சரியாக இருக்கிறது” -என்கிறார்கள்.
இது பய உணர்ச்சியால் வருவது. தென்னகப் பிரதிநிதிகளாகஇருப்பதால் ஏதாவது கேட்டால் பிரிவினை வாதிகளான தி. மு. கழகத்தில் சேர்ந்து விட்டனரோ, என்று பிறர் அஞ்சுவார்களோ, அதனால் நமது அரசியல் எதிர்காலம் பாழ்பட்டு விடுமோ எனஅஞ்சுகிறார்கள். எனவேதான் எழுந்து, 'அந்த ரோடு இருக்கிறது; இந்த ரோடு இருக்கிறது' என்கிறார்கள்.
இது எனக்குத் தெரியாதா? தென்னகத்திலிருந்து வந்திருக்கிறபிற அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் அறிந்திருப்பதுபோலவே நானும் அறிந்திருக்கிறேன்.
நான் ஒரு தேசியக் கொள்கைக்காக வாதாடுகிறேன். குறுகியமனப்பான்மைக்காக அல்ல, கட்சிக்கொள்கைக்காக அல்ல.
என்னுடைய பெருமைக்குரிய நாட்டிற்கு சுயநிர்ணய உரிமைகேட்கிறேன். அதன் மூலம், அந்நாடு உலகிற்கு தன் பங்கைச்செலுத்தவிருக்கிறது.
அய்யா; எங்களுக்கென்று ஒரு தனிக் கலாச்சாரம் உண்டு.
திராவிட நாட்டிலிருக்கும் கலாச்சாரத்துக்கும் பிறபகுதிகளிலுள்ள கலாச்சாரத்திற்கும் மேலெழுந்தவாரியாகஒற்றுமை நிலவலாம்!
மன்றத் தலைவர் அவர்களே! கன்யாகுமரியிலிருந்து இமாலயம்வரை ராமனும் கிருஷ்ணனும் தொழப்படுவதால் இந்தியாஒற்றுமைப்பட்டுள்ளது என்று தாங்கள் முன்பொரு தடவை கூறியபாண்டித்ய மிக்க வாசகங்கள் என் நினைவுக்கு வருகிறது.
அதேபோல உலகமுழுதும் மரியாதையுடன் பயத்துடனும்ஏசுநாதர் தொழப்படுகிறார். இருந்தாலும் ஐரோப்பாவில் பலபலதேசீய நாடுகள் இருக்கின்றன. புதிய புதிய தேசிய நாடுகள்உலகில் வந்து கொண்டே இருக்கின்றன.
ஆகையால் தென்னகத்தில் கொதித்தெழும் புதிய தேசிய இனம்பற்றி குடியரசுத் தலைவர் எதுவும் குறிப்பிடாதது பற்றி நான்மெத்த வருந்துகிறேன்.
உடனே நிதியமைச்சர் பதில் உரைப்பதற்கு முன்னால்சட்டமன்றத் தலைவர் இது அப்பொழுது நடைபெற்ற விஷயம் - இப்போது அதைப்பற்றி கேள்வி கேட்பானேன் இப்போதுவேண்டாம் என்றார்.
உடனே நிதியமைச்சர் தானே எழுந்து “இல்லை இல்லைதலைவரவர்கள் அனுமதித்தால் நானே ஒரு விஷயத்தைச்சொல்லலாம் என்று இருக்கிறேன். நான் நாட்டுப் பிரிவினையைஏற்றுக் கொண்டவனல்ல -
நேற்றும் ஏற்றுக் கொள்ளவில்லை, இன்றும் ஏற்றுக் கொள்ளவில்லை, என்றைக்கும் ஏற்றுக் கொள்ளமாட்டேன் - இந்தியாஒன்று, அது பிரிக்க முடியாதது - நான் நாட்டுப் பிரிவினையைப்பத்தாண்டுக்கு ஒத்திவைக்கச் சொல்லி கேட்கவே இல்லை - நான்பத்தாண்டு ஒத்திவைக்கச் சொன்னது எதனையென்றால் நாசவேலையை - என்று அவர் சொல்லியிருக்கிறார்.
இது நியாயமா? நாச வேலையைச் செய்யாதீர்கள் என்றுசொன்னால் அர்த்தம் இருக்கிறது - நாச வேலையைப் பத்தாண்டுசெய்யாதீர்கள் என்றால் பதினோராவது ஆண்டில் அதற்கு உரிமைகொடுக்கின்றார் என்று பொருளா? நான் சாப்பிட்டுவிட்டுவருகின்றேன் அதற்குப் பிறகு கொட்டு என்றா தேளுக்குச்சொல்லுவார்கள்.
தேள் கொட்டும் என்று தெரிந்தால் அது எப்போது கொட்டாமல்பாதுகாப்பு தேடவேண்டும் நாசவேலை நாட்டிலே நடக்கும் என்றுதெரிந்தால் நாசவேலை அடியோடு கூடாது என்று சொல்லவேண்டுமே தவிர பத்தாண்டுகளுக்கு நாசவேலை வேண்டாம்என்றால் என்ன பொருள்?
ஏன் அவர் அந்த அளவுக்கு பொருளற்ற முறையில்சொல்லவேண்டி நேரிட்டதென்றால், ஏதாவது கூறிவிட்டால்வடக்கே இருக்கிறவர்கள் அவரைச் சந்தேகிக்கின்றார்கள்என்பதை முதல் தடவை நான் பேசுகின்ற கூட்டத்திலேயேநம்முடைய அமைச்சர் அவர்களிடத்திலே சொன்னேன். “ஐயாநீங்கள் ஆயிரம் தடவை தூற்றுங்கள். ஆனால், எங்களைக்காட்டியாவது வட நாட்டிலிருந்து நீங்கள் அதிகாரத்தைப் பெறஅதைப் பயன்படுத்துங்கள்” என்று சொல்லி நான் அதற்கு Sappers and Miners உதாரணத்தைச் சொன்னேன். பட்டாளத்திலிருக்கின்ற பல பிரிவுகளில் அதுவும் ஒன்று - பின்னாலே பீரங்கிப் பட்டாளம் வருகின்ற நேரத்திலே பாதையைச்சரிப்படுத்துவது அவர்களது வேலை.
"எங்களை அந்தப் பட்டாளத்தைப்போலப் பயன்படுத்துங்கள்என்று கூறினேன். அதற்கு நிதி மந்திரி சுப்ரமணியம் சொன்னார்“அண்ணாதுரை சொன்னார், உண்மைதான். அப்படிச்செய்யலாமா என்று கூடத்தான் ஆசை இருக்கிறது. ஆனால்இவரை எப்படி நம்புவது? எதிரியினுடைய பாதையைச்சரிப்படுத்திவிட்டுப் போய் இவர் ஏதாவது புதிதாகச் சுரங்கவெடிவைத்துவிட்டால் நான் என்ன செய்யமுடியும்? ஆகையினால்ஜாக்கிரதையாகத்தான் வருவேன்” என்று பாதுகாப்போடுசொல்லிவிட்டு இன்னொன்று சொன்னார். “இதை இவர்இப்போது வெளிப்படையாகச் சொல்லிவிட்டாரே. இதைவடநாட்டான் கேட்டுக்கொண்டு தானே இருப்பான். கேட்டுக்கொண்டிருந்தால் நானும் அண்ணாதுரையும் ஒன்று என்று அவன்சந்தேகப்படுவானே.
இதற்கு நான் என்ன செய்வேன்?” என்ற கருத்துப்படப் பேசிசட்டசபையிலே அவர் பரிதாபப்பட்டார். அப்படிப்பட்ட சந்தேகம்அவர் பேரிலே ஏற்படக்கூடாதென்பதற்குத்தான் பத்துஆண்டுகளுக்கு நான் ஒப்பந்தம் கேட்கவில்லை என்று அவர்சட்டசபையிலே பிறகு மறுத்துப் பேசினார்.
இந்தப் பத்து ஆண்டுகளில் என்ன நடக்கும் என்று நீங்கள்கேட்கிறீர்கள். தொடர்ந்து வரும். யாரார் பேரிலோ சந்தேகப்படுவார்கள். அவர்கள் யார் பேரிலே சந்தேகப்படுகிறார்கள் என்றுஇப்பொழுது சொல்ல முடியாது. திடீரென்று ஒருநாளைக்குக்காமராசர் பேரிலேகூட அவர்களுக்குச் சந்தேகம் வரலாம்.
அது நாங்கள் கையாளுகின்ற முறையினாலே என்று நீங்கள்கருதவேண்டாம். காலம் காட்டுகின்ற குறி அப்படிச்செல்லுகின்றது. ஏனென்றால் எதை ஒத்துக்கொண்டாலும்ஒத்துக்கொள்ளா விட்டாலும் இன்றையதினம் காங்கிரசிலேஇருக்கிற பெருந்தலைவர்களேகூட உள்ளூர உணருகின்றார்கள்.
தென்னாட்டுக்குத் தேவையான அளவுக்கு முன்னேற்றம் இனிகிடைக்க வேண்டும் என்றால் மக்களை ஈடேற்ற வேண்டும்என்றால், இப்பொழுது இருப்பதைவிட அதிகமான அதிகாரம்கிடைத்தால் ஒழிய அந்தக் காரியத்திலே வெற்றிபெற முடியாதுஎன்பதைக் காங்கிரசிலே இருக்கிறவர்களே உணருகின்றார்கள்.
அவர்கள் நம்மைத் தூற்றுகின்றார்கள், நாம்உணர்ந்திருக்கின்றோம். நாம் நாட்டைப் பிரிக்கச்சொல்லுகின்றோம், நாச காலர்கள் என்றெல்லாம்ஏசுகின்றார்கள் - ஏசி முடிந்தபிறகு அவர்கள் தனியாகஇருக்கின்ற நேரத்தில் அவர்களுக்கே மனதில் தோன்றுகின்றஎண்ணம், உண்மைதானே இவர்கள் சொல்வது - எதற்கெடுத்தாலும் வடநாட்டிற்குத்தானேபோகவேண்டியிருக்கிறது. எல்லா அதிகாரமும் அங்கேதானேகுவிக்கப்பட்டிருக்கிறது. நம்மிடத்திலே என்ன இருக்கிறதுஎன்ற அந்தக் கழிவிரக்கம் அவர்கள் உள்ளத்திலே இருக்கிறது.
நாலு நாளைக்கு முன் எங்கள் தொகுதிக்கு வந்த முதலமைச்சர்காமராசரை அங்கே உள்ளவர்கள் காஞ்சிபுரத்திற்கு ஒரு நூல்ஆலை தேவை என்று கேட்டார்கள் - அதற்கென்ன வைக்கலாம்என்றார் சொல்லிவிட்டு உடனே, வைக்கலாம் ஆனால் 'கதிர்' கிடைக்காது. அது கொடுப்பதெல்லாம் டெல்லியிலே இருந்துஉத்தரவுவர வேண்டும் என்று சொன்னார்.
இதெல்லாம் முடிந்ததும் நான் அந்தக் காஞ்சிபுரம் நண்பரைப்பார்த்துக் காமராசர் என்ன சொன்னார் கேட்டீர்களா?
அவர் நல்லவர் அவர் செய்யவேண்டும் என்றுதான்ஆசைப்படுகின்றார். ஆனால் அதிகாரம் அவரிடத்திலே இல்லை, எல்லாம் டெல்லியிலே இருக்கிறது என்ற உடனே அவர் திராவிடமுன்னேற்றக் கழகத்தவரானார். இந்த கருத்து யாருக்குப்புரிகின்றதோ அவர்கள் எல்லாம் திராவிட முன்னேற்றக்கழகம்.
இது நாளாக நாளாக வளருமே தவிர குறையாது. ஏனென்றால்வடநாடு வளர்ந்திருப்பது – நன்றாகத் தெரிகிறது. தேய்ந்திருக்கிறதென்னாடு மறுபடியும் முன்னேற வேண்டும் என்றால் முன்னாலேவளர்ந்திருக்கிற வடநாடு அதற்கு ஏற்றபடி இடமளிக்காதுஎன்பதும் இப்பொழுது ஓரளவுக்கு நன்றாகத் தெரிந்துகொண்டுவருகின்றது.
எப்பொழுதுமே உங்களுக்கு ஒன்று நான் சொல்லுவேன், காளியாயி வரங் கொடுக்காது என்பது பக்தனைவிடப்பூசாரிக்குத்தான் நன்றாகத் தெரியும். பூசாரி ஏதோ உடுக்கைஅடிக்கிறானே என்று நீங்கள் எண்ணுகிறீர்கள். அவன் வயிற்றுப்பிழைப்புக் கொடுமையாலே உடுக்கை அடிக்கிறானே தவிரஅவனையே நீங்கள் தனியாகக் கேளுங்கள். காளியாயி வரப்பிரசாதமா என்று - உங்களுடைய மடியை முதலிலே பார்ப்பான்.
பார்த்த உடனே நீங்கள் தேங்காய் கற்பூரம்வைத்துக்கொண்டிருந்தால் ஆகா இது கண்கண்டதெய்வமாயிற்றே கந்தசாமிக்குக் காளியாயிதான் கைகொடுத்தாள் - சாமிக்கண்ணுக்கும் காளிதான் கண் கொடுத்தாள்- என்று சொல்லுவான்.
மடியிலே ஒன்றுமில்லாமல் விசாரிக்க மட்டும் கேட்டால் உடனேதிருப்பி அவனே கேட்பான் என்னடா பைத்தியக்காரனாகஇருக்கிறாய் காளி சக்தி வாய்ந்தவளானால் என்னை ஏன் இந்தநிலையிலே வைத்திருக்கிறது? எங்கள் தகப்பன் பூசாரி, நானும்பூசாரி, என் மகனும் பூசாரி - இதுதான் இந்தக் காளியினுடையசக்தி. என்னையே கைதூக்கிவிடாத இந்தக் காளி உன்னைஎங்கே கை தூக்கிவிடப்போகிறது என்று பூசாரி சொல்வான்.
அதைப்போல டெல்லியிலே இருக்கிறது தேவதை. அது வரங்கொடுக்குமா கொடுக்காதா என்பது நம்மைப்போன்றவர்களுக்குக் கூட தெரியாது. உடுக்கை அடிக்கிறார்கள்அல்லவா காங்கிரஸ் பூசாரிகள் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
மூன்றுதடவை அடித்துப் பார்த்தார்கள். தேவிகுளம் பீர்மேடுபிரச்சினை இருக்கிறதே அதைப்போல் தமிழர்களுக்குநியாயமான அப்பழுக்கற்ற பிரச்சினை வேறு ஒன்றுமேகிடையாது. தமிழர்கள்தான் அங்கே வாழுகின்றார்கள் என்றுநம்முடைய சென்னை சர்க்காரும், புள்ளிவிவரங்களைக்காட்டியிருக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேவிகுளம் பீர்மேடுதமிழர்களுக்குத்தான் சொந்தம் என்று தீர்மானம்போட்டிருக்கிறார்கள்; நாங்களே வாங்கிக்கொடுப்போம் என்றுஇதே மதுரையில் கூட காமராசர் பேசியிருக்கிறார். டெல்லிஎன்ன செய்தது?
கேரளத்தார் கேட்கிறார்கள். ஆகையினால் அங்குதான் இருக்கவேண்டும் என்றார்கள். என்ன செய்தார்கள் காமராஜர்கள்? இவர்கள் ஒன்றும் வடநாடு தென்னாடு என்று பேசவேண்டாம்; நாங்கள் ஒன்றும் வடநாட்டுக்கு அடிமையல்ல எங்களாலேநிமிர்ந்து நிற்கமுடியும்; நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம்குற்றமே என்று சொன்ன நக்கீரன் பரம்பரை என்றெல்லாம் மாலைநேரத்திலே பேசுகின்றார்கள் - மதிப்புக்குரிய காங்கிரஸ்தோழர்கள்; இவர்கள் தேவிகுளம் பீர்மேடு பிரச்சினையிலேநம்முடைய அப்பழுக்கற்ற நியாயத்தை டெல்லி ஒத்துக்கொள்ளாத நேரத்தில் என்ன செய்தார்கள்? ஒரு கணம்புருவத்தை நெறித்துப் பார்த்தார்களா? தேவிகுளத்தைப்பெறாமல் திரும்பமாட்டேன் என்று சொன்ன அமைச்சர் யார்? தேவிகுளம் கிடைக்காவிட்டால் அமைச்சராக இருக்கமாட்டேன்என்று சொன்னவர் யார்?
நீதிக் கட்சியாரைப் பார்த்து அப்போது ஆயிரம் மேடையிலேகேட்டிருக்கின்றார்கள். பிசின் போட்டா ஒட்டியிருக்கிறது? என்று. இன்றையதினம் இவர்கள் பிசின் போடாமலே அல்லவாஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்! நீதிக் கட்சிக்குப் பிசின்போட்டார்கள்; வெள்ளைக்காரன் போட்ட பிசினில் ஒட்டிக்கொண்டார்கள் - இப்போது பிசின் போடுவதற்கு ஆளேகிடையாது. பிசின் போடுவதற்கு ஆளே இல்லாத நேரத்தில்இவர்கள் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்குஏதாவது நான் உதாரணம் சொல்ல வேண்டும் என்றால்அட்டையைப் போல் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள்என்றுதானே சொல்லுவேன்.
அதைத் தள்ளிவிடுங்கள். அது நாட்டுப் பிரச்சினை. இவர்களுடைய ஏட்டிலேயே கணக்கெழுதினார்கள் இரண்டாவதுதிட்டத்தில் 400 கோடி தேவை என்று. என்ன கொடுத்தார்கள் - கிடைத்தது என்ன? இவர்கள் எங்கே வடநாட்டு ஆதிக்கத்திலேஇருந்து விடுபட்டார்கள்?
கைத்தறிக்கு கரை போட்ட வேட்டியும் சேலையும் ஒதுக்குங்கள்என்று சாதாரணப் பேச்சல்ல -சட்டசபைத் தீர்மானம் நிறைவேற்றிஅனுப்பினார்களே, என்ன ஆயிற்று?
டெல்லி என்ன மதிப்பளித்தது?
ஆகையினாலேதான் வடநாடு தென்னாட்டிலே உள்ளவர்களைஎப்படியெப்படி மட்டந்தட்டுகின்றது என்பதை அவர்கள் நன்றாகத்தெரிந்துகொண்டிருக்கிறார்கள் நம்மைவிட. அதை இன்றையதினம் வெளியே சொல்லாமல் இருப்பதற்குக் காரணம் நான்உங்களுக்குச் சொன்ன கதையை நினைவுபடுத்திக் கொண்டால்தெரியும். காளி வரம் அளிப்பவள் அல்ல என்று பூசாரிசொல்லிவிட்டால் பிறகு உடுக்கை அடித்துப் பிழைக்கின்றபிழைப்பு என்ன ஆகும்?
அதைப்போல காங்கிரஸ் அமைச்சரே பார்த்து எங்களுக்கு ஒருஅதிகாரமுமில்லை, எல்லாம் வடக்கேதான் இருக்கிறது என்றுசொன்னால் பிறகு இவர்களை யார் மதிப்பார்கள்?
ஆகையினால்தான் பூசாரிக்கு வேலை கிடைக்க வேண்டும்\ என்பதற்காக உடுக்கை ஒலி கேட்கிறதே தவிர காளியினுடையவரம் ஒன்றும் கிடைக்கவில்லை.
அது கிடைக்க வேண்டும் என்றால் இந்தப் பத்தாண்டிலேகிடைத்தால்தான் உண்டு. இந்தப் பத்தாண்டுகளிலே நாம்செய்கின்ற செயல் எந்த அளவுக்குப் பலிக்கின்றதோ அதைப்பொறுத்துத்தான் அடுத்த தலைமுறைக்குத் தன்மானமுள்ளவாழ்வு.
இந்தப் பத்தாண்டிலே நாம் செய்கின்ற முயற்சி. தோற்று விட்டால்பிறகு நீங்கள் கல்லின் பேரிலே பொறித்து வைத்துக்கொள்வதைப்போல் தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளலாம்.
ஆப்பிரிக்கா நாட்டிலே இருக்கிற நீக்ரோக்களும் அமெரிக்கநாட்டிலே இருக்கிற சிகப்பிந்தியர்களும் எந்தக் கதியைஅடைந்தார்களோ, அதே கதிதான் இங்கே பிறந்து வாழ்ந்துவருகின்ற பழந்தமிழ் மகனுக்குக் கிடைக்குமே தவிர வேறுஎந்தமாதிரியான முற்போக்கும் கிடைக்காது.
பால் பொங்கி வருகின்ற அந்தப் பக்குவமான நேரத்தில்தாய்மார்கள் குழந்தை அழுதாலும் எழுந்து போகமாட்டார்கள்.
பால் பொங்குவது தெரிந்தால் கருத்துள்ள தாய் அழுகின்றகுழந்தையைக்கூட பின்னாலே பார்த்துக் கொள்ளலாம் என்றுபொங்குகின்ற பாலில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து பால்பானையைக் கீழே இறக்கி வைத்துவிட்டுத்தான் தொட்டிலிலேஅழுது கொண்டிருக்கிற குழந்தைக்குத் தன்னுடைய பாலைத்தருவதற்குச் செல்லுவார்கள்.
இந்தப் பத்தாண்டு பால் பொங்குகின்ற காலம் இந்தப்பத்தாண்டிலேதான் யார் யார் நம்முடைய கருத்துக்களைக் கேட்கமறுக்கின்றார்களோ அவர்களுடைய செவி வழி நமதுகருத்துக்கள் நுழைந்து உள்ளத்திலே தங்கி அவர்களை எல்லாம்நம் பக்கத்திலே ஈர்த்துக்கொண்டு வருகின்ற பக்குவமான காலம்.
பதினைந்து பேர் தி. மு. கழகத்தைச் சேர்ந்தவர்கள்சட்டசபைக்குப் போனோம். போனவுடனே திராவிட நாடுபிரிவினை விஷயம் இதற்கு முன்னாலே பத்து வருஷத்திலேஎவ்வளவு வளர்ந்ததோ அந்தப் பத்தாண்டு வளர்ச்சியை இந்தமூன்று திங்கள் நமக்குத் தந்திருக்கின்றது என்று நான்சொன்னால் நீங்கள் வியப்படைவீர்கள். ஆனால் அதுமிகைப்படுத்திச் சொல்வதல்ல.
வெளி நாட்டுப் பத்திரிகை இப்பொழுதுதான் எழுதுகிறது. திராவிட நாட்டுப் பிரிவினை என்று கேட்டுக்கொண்டு திராவிடமுன்னேற்றக் கழகம் என்று ஒரு கட்சி பத்துப் பதினைந்து பேர்சட்டமன்றத்திலே இருக்கிறார்களாம் - என்று எழுதுகிறது.
பருவம் அடைதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, கட்சிகளுக்கும் உண்டு. அந்தப் பருவம் அடைகின்ற பக்குவம்இருக்கிறதே ஒரு கட்சி அரசியல் நடவடிக்கைகளுக்கு உள்ளேநுழைகின்றபோதுதான் அந்தப் பருவம் அடைகின்றது என்றுபொருள்.
அதே நேரத்தில் பருவம் அடைகின்ற நேரத்தில்தான் ஆபத்தும்வருகின்றது என்பதை நான் உணராமல் இல்லை. அதுஉடலுக்கும் சரி, அரசியலுக்கும் சரி அதுதான் ஆபத்துஅளிக்கக்கூடியது.
ஆனால் ஒன்றை நீங்கள் தெளிவாக நம்பலாம். ஆபத்துக்கள்வராமல் பாதுகாப்பதற்கும், வரக்கூடிய ஆபத்துக்களைதவிர்ப்பதற்கும் ஆபத்தை மூட்டலாம் என்று எண்ணிக்கொண்டுவருகின்றவர்கள் ஆபத்திலே சிக்கிக்கொண்டோமே என்றுபின்னாலே அல்லற்படுகின்ற அளவுக்கும் எனக்கு இயற்கையாகஇருக்கிற அறிவோடுகூட பெரியார் இராமசாமி நல்ல பயிற்சிஅளித்திருக்கின்றாரே, அதுவும் சேர்ந்து தக்கபடி பயன்படும்.
சுலபத்திலே நான் ஏமாறமாட்டேன். அவராலேயே என்னைசபலமடையச் செய்ய முடியவில்லை என்றால், தமிழ் நாட்டிலேவேறு யாரிடத்திலே நான் ஏமாறுவேன். ஆகையினாலே நல்லபக்குவப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில் தி. மு. கழகம், பிறர்வசப்படும்படியோ பிறருக்கு அஞ்சும்படியோ நாங்கள் எந்தக்காலத்திலும் நடந்துகொள்ள மாட்டோம். அதேபோலவேசட்டசபையிலும், நாங்கள் சென்றிருப்பது காங்கிரஸ்அமைச்சர்களை ஏசுவதற்கு அல்ல என்பதை நான்சட்டசபையிலும் சொன்னேன்; இங்கேயும்
சொல்லுகின்றேன்.
அதைப்பற்றி இரண்டு மூன்று திராவிட முன்னேற்றக் கழகத்தோழர்கள் சட்டசபைக்குப் போனால் அவர்களுக்கு மூன்றுகடமைகள் இருக்கின்றன. ஒன்று, அவர்கள் எந்தத் தொகுதியிலேதேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அந்தத் தொகுதி மக்களுக்குச்செய்யவேண்டிய நன்மையைச் சாதிக்க வேண்டிய கடமைஇருக்கிறது.
மற்றொன்று, அந்தச் சட்டசபையிலே விவாதத்துக்கு வருகின்றஎல்லாப் பிரச்சினைகளின் பேரிலும் இயக்கத்துக்குமாறுபாடில்லாத கருத்துக்களை தந்து தீரவேண்டும் - மூன்றாவதுகடமை, அவர்கள் எந்த இயக்கத்தின் தூதுவர்களாக அங்கேசென்றிருக்கிறார்களோ, அந்த இயக்கத்தினுடைய அடிப்படைக்கொள்கை - மூலாதாரமான கோட்பாடு - சிறிதும் கெடாதவகையிலே பணியாற்ற வேண்டும்.
சட்டசபைக்குப் போகின்றவர்கள் யாராக இருந்தாலும் சரி, எந்தக்கட்சியாக இருந்தாலும் மூன்று காரியங்கள் அவர்களுக்குஇருக்கின்றன. தொகுதியினுடைய முன்னேற்றத்தைக் கருதிக்கொள்கையையும் விட்டுவிடக்கூடாது. கொள்கையை மட்டும்மனதிலே வைத்துக்கொண்டு தொகுதி எக்கேடு கெட்டாலும்எனக்குக் கவலையில்லை என்றும் இருக்கக்கூடாது. தொகுதியையும் பார்த்து சட்டத்தைப்பற்றிய விவாதத்திலேயும்கலந்துகொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடையஅடிப்படைக் கருத்துக்களை இழந்துவிடக்கூடாது. இந்தமூன்றையும் ஒருசேர நடத்திக்கொண்டு செல்வதுதான்பக்குவமான பாராளுமன்றப் பண்பு. அதைத் திராவிடமுன்னேற்றக் கழகம், இதுநாள் வரையில் சரியான முறையில்நடத்திக்கொண்டு வருகிறது என்பதுதான், அரசியல்வட்டாரத்திலே அனுபவப்பட்டவர்கள் எங்களிடம் எடுத்துச்சொல்லியிருப்பது - நாங்களும் மனதார நம்பி இருப்பது.
அங்குக் கொண்டுவரப்படுகின்ற எந்த விவகாரமானாலும், எந்தச்சட்டங்களானாலும், <