Tuesday 29 December 2020

இந்து திருமண (தமிழ்நாடு திருத்த) மசோதா

 இந்து திருமண (தமிழ்நாடு திருத்தமசோதா

 

நாள்: 18.07.1967

 

மாண்புமிகு திரு சிஎன்அண்ணாதுரைசட்டமன்றத் தலைவர்அவர்களேஇந்தத் தீர்மானத்திற்குச் சில திருத்தங்களைக்கொண்டு வரவேண்டுமென்று திருத்தங்கள் கொண்டு

வரப்பட்டிருக்கும் என்று கருதுகிறேன்இந்த மசோதாஇதேமன்றத்தில் இரண்டு துறைகளுக்குமேல் கருத்துச் சொல்லப்பட்டஒரு பிரச்சினையாகும்முன்னாலேஎன்னுடைய நினைவு சரியானநினைவாக இருக்குமேயானால்குட்டி கிருஷ்ணன் நாயர்

சட்ட அமைச்சராக இருந்த காலத்தில் இதற்கெனமுயற்சியெடுக்கப்பட்டதுஅதற்குப் பிறகு 57இல் ஒரு முறைமுயற்சி எடுக்கப்பட்டதுஅதற்குப் பிறகு 65லேயும் முயற்சிஎடுக்கப்பட்டது இப்பொழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்இந்தப் பிரச்சினைகள் மூன்றுநான்கு

முறைகள் வந்த நேரத்தில் இதைப்பற்றிக் கருத்து தெரிந்தவர்கள்படிப்படியாக எப்படி மாறி வந்திருக்கிறார்கள் என்பதை அந்தவிவாதங்களைப் படித்துப் பார்த்தால் தெரியும்முதன் முதலில்இப்படிப்பட்ட திருத்தம் வந்தபோது பதறியவர்கள் பலர்.

 

இப்பொழுது பதறுகின்றவர்கள் ஒருவருமில்லைஇரண்டாவதுமுறை இந்தப் பிரச்சினை வந்த நேரத்தில் பதறுகின்றவர்கள்குறைவாகயிருந்தாலும் சில பேர்களிடம் பயம் இருந்தது.

இப்பொழுது அப்படிப்பட்ட பயம்கூட இல்லைஇப்பொழுதுஇருக்கும் பிரச்சினையெல்லாம்நம்முடைய டாக்டர் ஹாண்டேஅவர்கள்திரும்பத் திரும்ப உங்களுக்கு இந்துதானாகிடைத்தான், தலையிலேயே குட்டுகிறீர்களே என்கிறார்.

 

முஸ்லீம் களைத் திருத்த வேண்டுமென்றால் இஸ்லாமியர்கள்முயற்சி எடுத்துக் கொள்வார்கள்அது வரவேற்கத்தக்கதாகஇருக்கும்இந்து சமுதாயத்தை மாத்திரம் பிரித்துக் கொள்ளவேண்டிய அவசியம் என்ன வருகிறது என்றால்மற்ற எல்லா

 

மார்க்கங்களையும் விட இந்து மார்க்கத்தில் தத்துவத்தைப்பொறுத்தவரையில் இதில் விடப்பட்டது ஒன்றுமில்லை.

 

எல்லாத் தத்துவமும் இதனிடம் உள்ளன என்றும் இதற்கு இந்துமதத்தில் அழிவற்ற தன்மைதான் காரணம் என்று சொல்வோரும்இருக்கிறார்கள் அதன் நிர்ணயமற்ற தன்மைதான் காரணம் என்றுசொல்கிறவர்களும் இருக்கிறார்கள் இதில் எது உண்மையாக

இருந்தாலும்இந்து மதம் என்று சொல்வதாலே டாக்டர்ஹாண்டே அவர்கள் அது இந்துவுக்குத்தானே உள்ளது,மற்றவர்களுக்கு இல்லையா என்றெல்லாம் எண்ணத்

தேவையில்லைஉண்மையான இந்துதிருத்தத்திற்குப் பயப்படக்கூடாதென்று சுவாமி விவேகானந்தர் சொன்னதாக நினைவு.

 

உண்மையான இந்துகாலத்தின் கருத்துகளுடைய பகுதிகளைக்கொள்ள வேண்டுமென்று சுவாமி விவேகானந்தர் சொன்னதாகநினைவுஉண்மையான இந்து சாதியை ஏற்றுக்கொள்ள

மாட்டான் என்று இந்து மதத்தைச் சார்ந்தவர்களே எடுத்துச்சொல்லியிருக்கிறார்கள்ஆகையால் தலைப்பைப் பார்த்து இதுஇந்துவுக்குத்தானா என்று கவலை கொள்ளத் தேவையில்லை.

 

டாக்டர் ஹாண்டே அவர்கள் சிறந்த நண்பர்முதன் முதலில் அவர்பெயரைச் சொன்னதும் அது இந்துப் பெயர் என்றுகூட எனக்குநினைவுக்கு வரவில்லைநண்பர்கள் என்னிடம்டாக்டர்ஹாண்டே என்று இருக்கிறார்நல்ல திறமையாக அரசியல்கருத்துக்களைப் பேசுவார்கள் என்று சொன்னபொழுது அவர் ஒருஇந்துவாக இருப்பார் என்று நாங்கள் நினைக்கவில்லை.

 

அந்தப் பெயர் அப்படி இருந்ததுஆனால் அவர் எனக்குஅறிமுகமான பிறகுதான் அவர்கள் நம்முடைய இனத்தைச்சார்ந்தவர்கள் என்று நினைவே வந்ததுமுதன் முதலில் அது

ஆங்கிலோ-இந்தியரின் பெயர் என்றுதான் நினைத்தேன்கன்னடமொழியிலே என்ன பொருளோ எனக்குத் தெரியாது

 

திரு கேவிநாயகம்வெங்கட்ரமணா ஹாண்டே என்பது

 

பெயர்ஹாண்டே என்பது ஜாதியின் பெயர்.

 

மாண்புமிகு திரு சிஎன்அண்ணாதுரை: வெங்கட்ராமன்ஹாண்டே என்று முதலிலேயே சொல்லியிருந்தால் எனக்குஇந்தச் சந்தேகம் வந்திருக்காதுடாக்டர் ஹாண்டே அவர்கள்

மெடிக்கல் கல்லூரியில் சேர்ந்த பிறகு டாக்டர் ஹாண்டேஎன்றுதெரிவித்து அதன் பிறகு அவ்வாறு ஏற்பட்டிருக்கும் என்றுகருதுகிறேன்அதனால் வந்திருக்கலாம்இப்படித் தனிப்பட்ட

மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வதைவிட நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டியதுகடந்த 30 ஆண்டுக் காலமாக 35 ஆண்டுக்காலமாகத் திருமண முறையிலே ஒரு மாறுதல் ஏற்பட்டுக்கொண்டு வருகிறதுபெருத்த எதிர்ப்புக்கிடையில், பல்வேறுஐயப்பாடுகளுக்கிடையில்மக்கள் அச்சத்திற்கு மத்தியில் இதுதுவக்கப்பட்டதுபல்லாயிரக்கணக்கான

திருமணங்கள் இந்த முறையிலே நடைபெற்றுஅந்தத்திருமணங்களைச் செய்து கொண்டவர்கள் அடுத்ததலைமுறையைப் பெற்றுத் தரத்தக்க அளவிற்கு இந்தத் திருமண

முறையில் வயது ஏறியிருக்கிறது.

 

பொது மக்கள் பல ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பழக்கவழக்கங்களை மேற்கொண்டவர்களானால் அந்தப் பழக்கவழக்கங்களுக்குச் சட்ட வடிவம் கொடுப்பதுதான் சட்டம் என்றுஏற்படுத்தப்படும்.

 

Custom by usage becomes law. Custom by usage gets legalsanction.

 

அந்த மாதிரி 30, 40 வருஷங்களாகத் தமிழ்நாட்டிலேஏற்பட்டிருக்கின்ற ஒரு புதிய முறைக்கு இப்பொழுது நாம் ஒருசட்ட வடிவம் கொடுக்கிறோமே தவிரஇந்தச் சட்டம்நிறைவேற்றப்பட்ட பிறகு அனைவரும் சுயமரியாதைத் திருமணம்தான் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்லும் சட்டம் அல்லஇதுவழக்கறிஞர் மொழியிலே சொன்னால் It is a permissive legislation.

 

இப்படியும் செய்து கொள்ளலாம்இந்தத் திருமணம் சட்டபடிசெல்லத்தக்கதுதமிழகத்திலே திருமணம் நடத்துவது என்றால்இப்படித்தான் செய்யவேண்டுமென்று மற்றவர்களைக்

கட்டுப்படுத்துகின்றமற்ற திருமண முறைகளைத் தடுக்கின்றசட்டம் அல்ல இதுமற்றவர்களைத் தடுக்கிறகட்டுப்படுத்துகின்றசட்டமாக இருந்தால் பொது ஜன அபிப்பிராயத்தைக் கட்டாயம்அறிய வேண்டும்மற்ற முறைகளைக் கட்டுப்படுத்தாதமற்றமுறைகளைத் தடுக்காத இந்த முறையை ஏற்றுக் கொண்டுதிருமணம் செய்து கொண்டவர்கள்இந்த முறையின்படி செய்துகொள்ள வேண்டுமென்று விரும்புகின்றவர்கள் ஆகியஇவர்களுக்கு அனுமதி தருகிற சட்டமாக இருப்பதானாலும்இதற்கு நம்முடைய நண்பர் பொன்னப்ப நாடார் போன்றஅறிவுடையோர்களுக்குச் சொன்னாலும் போதுமென்றுநம்புகிறேன்அவர்களுக்குத் தட்டுப்படாத சில கருத்துக்களைஉலகத்திலே தேடிதேடிப் பார்க்கப் போகிறோம் என்றகாரணத்தினால் சொன்னார் என்று தான் நான் எண்ணிக்கொள்கிறேனே தவிரஅவசியத்தின் காரணமாகச் சொன்னார்என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 

ஏனென்றால் திருமணத்தைப் பற்றியும் அவருக்குத் தெரியும்.அவருடைய பருவத்தில் திருமணச் சுவையின் பகுதியே அதிகம்.இப்பருவத்திலேயே இருக்கிறார்.

 

THIRU R. PONNAPPA NADAR: I am the father of six children.

 

மாண்புமிகு திரு சிஎன்அண்ணாதுரைநம்முடைய பொன்னப்பநாடார் அவர்கள் ஆதரிக்கிறார்கள்அந்தச் சுவையை அவ்வளவுஅனுபவித்திருக்கிறார்கள் சட்ட நுணுக்கமும்தெரிந்திருக்கிறார்கள் ஆகையினால் அவரைப் போன்றவர்கள்இதற்கென உள்ள பொறுக்குக் கமிட்டியிலேயிருந்து நல்ல பலகருத்துக்களைக் கொடுத்துஇந்தச் சட்டம் தேவையுள்ள சட்டம்என்பது மட்டுமல்லாமல்இது நல்ல நிலையிலுள்ள சட்டம் என்றுசமுதாயம் சொல்லுகின்ற அளவுக்கு ஆக்கித் தருவதற்குஅவர்களுக்கு வாய்ப்புகள் இருக்கின்றனஉரிமைகள்இருக்கின்றனதிறமையும் இருக்கின்றன என்னைப்பொறுத்தவரையில்என்னுடைய நண்பர்களைப்பொறுத்தவரையில் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

 

இந்த அவையிலேயுள்ள மற்றவர்கள் எனக்கு அனுமதி தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்இதை நாங்கள் மிகச்சாதாரண சீர்திருத்தம் என்று கருதவில்லைஎத்தனையோஆண்டுகளாக எங்கள் உள்ளத்திலே உறங்கிக் கொண்டிருந்துஎத்தனையோ இரவுகள்எத்தனையோ பகல்கள் இப்படி ஒருசட்டத்தை உருவாக்க முடியுமாமுடியுமா என்று எண்ணிக்கொண்டிருந்த எங்கள் எண்ணத்திற்கு மதிப்புஅளிப்பீர்களானால்இப்படியெல்லாம் நிறைவேற்றப்பட முடியும்என்ற நிலைமை தோன்றாத நாட்களில்இந்தவிதமான திருமணமுறையில் பல்லாயிரக்கணக்காகத் திருமணம் செய்துகொண்டிருப்பவர்களுக்கெல்லாம் இந்தச் செய்தி பாரதியாருடைய கவிதைப்படி கூறினால்அவர்களுடைய காதில்"செந்தேனாக"ப் பாயும்இதில் கஞ்சத்தனம் வேண்டாம்அவர்கள் இன்பத்தில் குறுக்கிடத் தேவையில்லைஇதற்குப்பின்னால் திருத்தங்கள் வரலாம்மாலை மாற்றிக் கொள்வதுமோதிரம் போட்டுக்கொள்வதுஇவை போன்றவைகளைப் பற்றிவரலாம்அவற்றை விட்டுவிடலாம்ஆனால் பழைய திருமணமுறையை மாற்றிஇப்போதுள்ள புதிய முறையிலே திருமணம்செய்து கொள்பவர்கள் சட்டத்திற்கு வெளியே இருக்கிறார்கள்என்ற நிலையை நிச்சயமாகக் கவனித்துஅவர்களுக்கு ஒருசட்டப் பாதுகாப்புத் தரவேண்டும் என்பதற்காக இந்தத் திருத்தம்கொண்டு வரப்படுகிறதுநம்முடைய நண்பர் திரு பொன்னப்ப

நாடார் என்று கருதுகிறேன் - அக்கினி சாட்சியாக இருந்தால்தான் திருமணம் செல்லும் என்று வழக்கு மன்றத்திலேசொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டார்கள்சுயமரியாதைதிருமணங்களிலே பேசிப் பேசிஅந்தக் கருத்துக்களெல்லாம்என்னுடைய நினைவுக்கு வருகின்றனவிரிவாகப் பேச நேரம்இல்லைகடிகாரம் கண்ணுக்குத் தெரிகிறதுஆகையால்அக்னிசாட்சியாகஎன்று சொல்வதில்இந்த நாட்களிலே எவ்வளவுபொருள் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது.

திருமணத்திற்கே சாட்சி தரத்தக்க அக்கினி பகவான் ஏழைகளைஎன்ன பாடு படுத்துகிறான்மயிலைப் பகுதியில் என்பதைஎண்ணுவது உண்டுஇந்த நேரத்தில் அக்கினி பகவானுக்கு

இருக்கிற பெருமையைக்கூடக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்ஆனால்அவைகளிலெல்லாம்நம்பிக்கை வைத்திருந்த காலத்திலே இருந்து வந்தகருத்துக்களுக்கும் இருக்கின்ற கருத்துக்கும் மிகுந்தவித்தியாசம் இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிட முடியாதுஅக்கினி தேவனைப்பற்றிப் பேசிய நம்முடைய நண்பர் திருபொன்னப்ப நாடார் அவர்கள் சொன்ன அந்தக் கருத்தின்அடிப்படையில் சந்திரனும் ஒரு தேவன் என்று இன்றைய தினம்அவர்கள் அதைச் சொல்லுவார்கள் என்று கருதவில்லைஎப்பொழுது சந்திர மண்டலத்திற்குப் போகலாம் என்று சோவியத்நாட்டு விஞ்ஞானிகளும்அமெரிக்க நாட்டு விஞ்ஞானிகளும்போட்டி நடத்திக் கொண்டிருக்கிற இந்த நாட்களில்சந்திரன்ஒரு தேவன் என்றும்அவன் ரிஷியிடத்தில் பாடம் கேட்கப்போனான் என்றும்அவனாக வேறு பாடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொண்டான் என்றும், "நீ தேய்ந்து தேய்ந்து வளரக் கடவாய்"என்று சொன்னவுடன்அதிலிருந்து பௌர்ணமிஅமாவாசை மாறிமாறி வருவதாகவும் சொல்வது ஒரு காலத்திலே எல்லோரும்ஒப்புக் கொண்ட கதைஇன்றைய தினம் எல்லோரும்வேடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கிற கதைஇன்னும்

எதிர்காலத்தில் புத்தகத்திலேகூட இருக்கத் தகாத கதை என்றுதள்ளிவிடப்படக்கூடும்இப்படி வளர்ந்து இருக்கிற இந்தநாட்களில் அக்கினி சாட்சியாக வைத்த திருமணம்தான் செல்லும்என்று சட்டம் இருக்குமானால்எங்களுக்கு அது பிடிக்கவில்லைநாங்கள் இந்த முறையிலே திருமணம் செய்து கொள்ளுகிறோம்என்று சமூகத்திலே ஒரு பகுதியினர் ஒரு விதத்திலே திருமணம்செய்து கொள்வார்களானால்அவர்களுக்கு அனுமதிதருவதற்காக ஒரு சட்டமே தவிர இது வேறு பல சர்வாதிகாரநாடுகளில் வரும் சட்டத்தைப்போல், "6ஆம் தேதியிலிருந்துநீங்கள் இன்ன மாதிரி நடக்க வேண்டும்என்று சமூகத்திற்குக்கட்டளையிடுகிற சட்டம் அல்ல இதுஅல்லது உணவுநெருக்கடியை உத்தேசித்து ஆளுக்கு இவ்வளவுதான்கொடுக்கப்படும் என்று சொல்லுகிற சட்டமும் அல்லயாரும் எந்தவிதத்தில் வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

 

நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் திருகருத்திருமன் அவர்கள்சொன்னார்கள். "மணவறையில் நான் இரண்டே நிமிஷம்தான்இருப்பேன்என்று வாலிபப் பருவத்தினர் பெரும்பாலும்மணவறையில் அதிக நேரம் இருப்பதில்லைசீக்கிரம் முடித்துக்கொண்டு வெளியே போய்நண்பர்களைப் பார்த்து, "எப்படிபார்த்தாயாசரியாக இருக்கிறதாஅதிகம் பார்க்கமுடியவில்லைஎன்றெல்லாம் பேசுவதிலே மணமக்களுக்குஇன்பம் இருக்கிறதுஅந்த மண மேடையிலே ரொம்ப நேரம்உட்கார்ந்த கொண்டிருப்பதெல்லாம் - நம்முடைய நண்பர்திரு.ம.பொ.சிஅவர்களோஅவரையொட்டி நானோ செய்துகொள்ளக்கூடிய அறுபதாம் திருமணத்திலேதான் அதிக நேரம்மணவறையில் உட்கார்ந்திருக்க முடியும் (சிரிப்புஆகையால்,இந்தத் திருமணச் சட்டத்தைத் திருத்தியமைப்பதிலே இந்தப்

பொறுக்குக் கமிட்டியே போதுமானது என்று நான் கருதுகிறேன்.

நம்முடைய நண்பர் திரு பொன்னப்ப நாடார் அவர்களை நான்வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் - இதைப் பொதுஜனஅபிப்பிராயத்திற்கு அனுப்பிஅதற்கும் பிறகுதான் முடிவு

கட்டவேண்டும் என்று கருத வேண்டாம்ஏனென்றால்,இப்படிப்பட்ட திருத்தங்களையெல்லாம் செய்வதற்குத்தான்பொதுமக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார்கள்ஆகையால்பொது மக்களுடைய அபிப்பிராயம் என்று அவர்கள்அளித்திருக்கிற அந்த ஆணையை நாம் மாற்றாமல் மதிக்கத்தவறாமல் நம்முடைய நண்பர் திரு பொன்னப்ப நாடார் அவர்கள்கொடுத்த திருத்தத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, இந்தப்பொறுக்குக் கமிட்டியின் மூலம் நல்ல பல கருத்துக்களைக்கொடுத்துநாங்கள் முப்பது ஆண்டுகள்நாற்பது ஆண்டுகள்எண்ணிக்கொண்டிருந்த ஒரு எண்ணத்திற்கு நீங்கள்உறுதுணையாக இருக்க வேண்டும் என்று உங்களை நான்கேட்டுக்கொள்கிறேன்.

 

இந்தத் திருமண முறைகளைப்பற்றிப் பல பேர்கள் கருத்துக்கள்தெரிவித்தார்கள்நண்பர் திரு அரங்கண்ணல் அவர்கள்இதுகட்சிகளுக்கு அப்பாற்பட்ட திருமண முறை என்று சொன்னார்கள்சென்ற வாரத்தில் அகில இந்தியத்தலைவர் திரு காமராஜர்விருதுநகருக்குச் சென்று அங்கு நடந்த திருமணம்கூடபழையவைதிக முறையையொட்டி நடந்த திருமணமாக இருந்திருக்கமுடியாதுஎனக்குத் தெரிந்த வரையில் விருதுநகர் பக்கத்தில்சாத்தூர் பக்கத்தில்சிவகாசி பக்கத்தில் அந்தக் குலத்தின்பெரியவரை அழைத்துக் கொண்டு வந்துஅந்தத் திருமணத்தைநடத்திக் கொள்ளுவதை முப்பதாண்டுகளாக அவர்கள்பழக்கத்திலே கொண்டு வந்திருக்கிறார்கள்.

 

நம்முடைய திரு பொன்னப்ப நாடார் அவர்கள் குமரிமாவட்டத்தைசேர்ந்தவர் என்றாலும்அந்தக் குமரி மாவட்டம் இருந்த கேரளஇராச்சியத்திலேயே வைதிகத் திருமண முறையிலிருந்து மாறிமுண்டு மாற்றிக் கொள்ளுவது என்று பெரியவர்கள் நடத்திவைக்கின்ற திருமணங்கள் அவருக்குப் பழக்கமானதுவங்காளத்தில் பிரம்மசமாஜக்காரர்கள்.

 

பாஞ்சாலத்திலே அப்படிப்பட்ட மாறுதலை உண்டாக்கினார்கள்தமிழகத்திலே சுயமரியாதை இயக்கக்காரர்களும்தமிழ்ப்பெரும்புலவர்கள் மறைந்த மறைமலையடிகள்திரு. வி.கலியாணசுந்தரனார் போன்றவர்கள்இலக்கியச் சான்றுகள்அளித்துஇது தேவைதீது பயக்காததுகாலத்திற்கு ஒத்தது,தமிழ்ப் பண்பாட்டோடு இணைந்தது என்றெல்லாம் ஒப்பம்அளித்திருக்கிறர்கள்நம்முடைய தமிழரசுக் கழகத் தலைவர்மதிப்பிற்குரிய திரு ம.பொ.சிஅவர்களுடைய இயக்கமும் இதைஆதரிக்கிறதுஇஸ்லாமியரை எடுத்துக் கொண்டாலும்கூடஇஸ்லாமியத் திருமணத்திலேகூடஅவர்கள் அந்தமணப்பெண்ணும்மணப் பிள்ளையும் உட்கார்ந்த பிறகு கூட, "திருமணம் செய்து கொள்ள சம்மதமா?" என்றுமணப்பெண்ணைக் கேட்கும் பழக்கத்தைக்கூட அவர்கள்கையாண்டு வருகிறார்கள்ஆகையால்இந்தத் திருத்தச்சட்டத்தில் எந்தவிதமான அருவருக்கத்தக்க நிலைமையோஅச்சப்படத்தக்கதன்மையோ இல்லைபொது மக்களிடத்தில்மறுபடியும் இதை அபிப்பிராயத்திற்கு அனுப்ப வேண்டும் என்றுஎதிர்க்கட்சியில் சொல்லுகிறார்கள் எந்தச் சட்டம் வந்தாலும்எதிர்க்கட்சியிலே உள்ளவர்கள் அப்படிப்பட்ட திருத்தத்தைக்கொடுக்க வேண்டியதுதான் பாராளுமன்ற முறைஅதேபாராளுமன்றமுறை - நாங்கள் கேட்டுக் கொள்ளுகிற நேரத்தில்தேவையானது என்றால்அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுவதுதான் சிறந்த பாராளுமன்ற முறையும் ஆகும்ஆகவேபாராளுமன்ற முறையை நன்கு அறிந்திருக்கும்நம்முடைய நண்பர் திரு பொன்னப்ப நாடார் அவர்கள்அவர்கள்கொடுத்த திருத்தத்தைத் திரும்பப்பெற்றுக்கொண்டுஇந்தச்சட்டம் நல்ல விதத்தில் அமைவதற்குப் பொறுக்குக் கமிட்டியோடுஒத்துழைத்து உருப்படியான ஒரு சட்டத்தைத் தமிழகத்திற்குத்தந்தோம் என்ற பெருமையில் பங்கு கொள்ள வேண்டும் என்றுகேட்டுக்கொண்டுஎன்னுடைய வார்த்தையை முடிக்கின்றேன்.

 

THIRU R. PONNAPPA NADAR: In view of the assurance given by the Hon. Chief Minister, I am not pressing my amendment.

 

திரு கேவிநாயகம்: கனம் முதல் அமைச்சர் அவர்களிடமிருந்துமேலும் ஒரு விளக்கம் பெற விரும்புகிறேன்.

 

முதலமைச்சர் பேசியதற்குப் பிறகு இதிலே சந்தேகத்திற்குஇடமில்லை என்று எனக்குப் புரிகிறது ஆயினும்இந்தக்கொள்கையைப் பரப்புகிற தலைவர்கள் என்று பலர்இருக்கிறார்கள் எல்லாக் கட்சிகளிலும்அவர்கள்குடும்பங்களிலே திருமணங்கள் வரும்போதுஅவர்கள் இந்தக்கொள்கையை அனுசரிப்பதாக இல்லையேஎனக்குக் கிடைத்ததகவல் அப்படி அதைப்பற்றிக் கனம் முதலமைச்சர் என்னசொல்லப் போகிறார்?

 

மாண்புமிகு திரு சிஎன்அண்ணாதுரை: தொடர்ந்து நம்முடையநண்பர் திருவிநாயகத்திற்குத் தப்புத் தகவலையே கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் (சிரிப்புஅதுமட்டுமல்லஇதுதிருமணத்தைப்பற்றிய விவகாரம்விநாயகத்திற்குத் திருமணம்ஆனதாகக் கதையிலே அப்படி இல்லை.

1 comment:

  1. How do I make money from playing games and earning
    These are the 출장안마 three most popular forms mens titanium wedding bands of 출장마사지 gambling, wooricasinos.info and are งานออนไลน์ explained in a very concise and concise manner. The most common forms of gambling are:

    ReplyDelete