Tuesday 29 December 2020

வாழ்க வசவாளர்கள்! - அறிஞர் அண்ணா

 வாழ்க வசவாளர்கள்! - அறிஞர் அண்ணா  

 

கபடன்

காமுகன்

கலகம் விளைவிப்போன்

கட்டுக்கடங்காதவன்

கள்ளச் சிந்தையன்

காசாசைக்காரன்

காட்டிக் கொடுப்போன்

சதிகாரன்

பதவிப் பித்தன்

சுரண்டிப் பிழைப்போன்

சுயநலக்காரன்

குருத்துரோகி

கூடிக் கொடுப்போன்

பயங்கொள்ளி

எத்தன்

 

இவைகளைவிடக் கடுமையும் கொடுமையும் நெளியும் ‘வசவுகள்இருக்க முடியாது – எவ்வளவு நீண்டகால விரோதியாகஇருந்தாலும் இதைவிட இழிவாகக் கண்டிக்க முடியாது.

 

இவ்வளவும் இதற்கு மேலும்தான் தி.முகழகம் துவக்கப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டவுடன் கழகம் அமைத்தாக வேண்டும்என்ற ஆர்வம் கொழுந்துவிட்டெரியும் உள்ளம் கொண்டஉறுதியாளர்களான இளைஞர்களும்பணிபுரிந்து நரைத்தமுதியவர்களும்இலட்சியத்தைக் காத்திடத் தயங்கோம் என்றுமுழக்கமிட்டவர்கள் அனைவரும் அன்புடன் கரம் பற்றிஇழுத்ததால்சரி எனத் தயக்கத்துடன் முன் வந்த தோழர்அண்ணாதுரைக்குக் கிடைத்த அன்புரைகள்!

 

சொரணை கெட்ட ஜென்மங்கள் கூடத் தாங்கிக் கொள்ளமறுக்கும் கடுமொழிகளே வீசப்பட்டன – எந்த மனிதரையும்வெறியனாக்கி விடக்கூடிய வசவுகள்.

 

தமிழ்நாட்டு அரசியலிலே மட்டுமல்லவேறு எந்த நாட்டுஅரசியலிலேயும் – அரசியல் துறையிலே மட்டுமல்லஎந்தத்துறையிலேயும்கருத்து மாறுபாடு காரணமாகப் பிரிந்தவர்களைஇவ்விதமான இழிமொழி மூலம் தாக்கினவர்கள் கிடையாதுஆனால்இவ்வளவுடன் விடவில்லைஎதிர்ப்பு வீசியோர்!

 

வரலாறு தீட்டினர் – ஆரூடம் கூறினர் எப்படித்தான் இப்படிப்பட்டதுரோகிகளைச் சகித்துக் கொண்டிருக்கிறீர்கள் அன்பர்களேதோழர்களேஎன்று தீட்டி எதிர்ப்பு முனைகள் அமைத்தனர்.

 

அவ்வளவுடன் விடவில்லைகொலை செய்யவும் பின் வாங்காதகொடியவர்கள் இந்தத் துரோகக் கூட்டத்தார் என்று கூறினர்.

 

காட்டு முறையில் கைதேர்ந்த பண்ணை முதலாளியிடம்உழைத்து உருக்குலையும் உழவன் கேட்டிருக்க மாட்டான்இவ்வளவு இழிமொழிகளை – பழிச்சொற்களைவிஷவார்த்தைகளைஇவைகளை வீசினர் – விட்டு விட்டு அல்ல – தொடர்ச்சியாக – இங்கோர் நாள் அங்கோர் நாள் என்றுகூடிஅல்லஎங்கும்ஒவ்வொரு நாளும்தமிழகத்திலேவேஷ எந்தத்தனிமனிதனுக்கும்இவ்வளவு அர்ச்சனை நடந்திராது என்றுகூறலாம்இந்த வசை மொழிகளில் ஏதேனும் ஒன்றிரண்டேபோதும்யாரையும்நமக்கென்ன ஏன் வீணான தொல்லைஎதற்காக ஏசலைக் கேட்கவேண்டும் என்று சலிப்புடன்கூறிவிட்டுப் பொதுவாழ்க்கையில் இருந்து ‘சன்யாசம்‘வாங்கிக்கொண்டிருந்திருப்பர் எண்ணற்ற இளைஞர்களம்இயக்கத்தின்நெருக்கடியான கட்டங்களில் கை கொடுத்துதவியகண்ணியவான்களும்ஏராளமாகத் திரண்டதாலும்வளர்ந்ததாலும்தான்இவ்வளவு ‘இடி‘களையும் தாங்கிக் கொள்ளமுடிந்தது – இவ்வளவு இழி சொல்லும் இதயத்தைத் தகிக்கமுடியாமல் போயிற்றுகடுமொழி கேட்டுக் கண்ணீர் தளும்பிற்றுஎனினும் கலங்காதே நண்பனேஎன்று கூறிஆயிரமாயிரம்இளைஞர்கள் சூழ நின்று ஆர்வம்தந்தால் புன்னகையும் மலர்ந்தது.

 

இழிமொழிஅண்ணாத்துரைக்கு மட்டுமல்ல – உடன் சேர்ந்தவர்அனைவருக்கும்சராசரியாக வேக வேகமாககடுமொழிக்கு மேல்கடுமொழிமனப்புண் ஆறுவதற்குள் மற்றோர் தாக்குதல்இதயத்திலே பாய்ச்சியபடி இருந்தனர்ஏசல் ஈட்டிகளை – கொட்டிய குருதியைத் துடைக்கக்கூட அவகாசம்அளிக்கவில்லைஇதோ வாங்கிக்கொள் – இன்னமும்வாங்கிக்கொள் – மேலும் தருகிறேன் பெற்றுக்கொள் – சுடச்சுடசுரீல் சுரீலென்றுஎன்று சொல்லிச் சொல்லிக் கசையடிதருவதுபோல இருந்தது வசவு வீச்சுஇவ்வளவையும் தாங்கிக்கொண்டனர்தி.முகழகத்தினர்இனி யாரும் எந்தக் காரணம்கொண்டும்இவைகளைவிடக் கடுமையான ‘வசவு ‘வீசமுடியாதுபழிசுமத்த முடியாது – இரண்டாம் பதிப்புமூன்றாம் பதிப்புமலிவுப் பதிப்பு என்ற முறையிலேவசை புராணத்தை மீண்டும்மீண்டும் ஆசை தோன்றும் போதெல்ாம்வெளியிடலாமேயொழியபுதிதாககேட்டவுடன் நெஞ்சம்திடுக்கிடக் கூடியதாகவேறுயாரும்எந்த வசவும்வீசுவதற்கில்லைபழிசுமத்துவதற்குமில்லைஅவ்வளவுசம்பூரணமாக ‘நடந்தேறிவிட்டதுவசவு!! தாங்கிக் கொண்டனர்திராவிட முன்னேற்றக் கழகத்தினர் – தமிழகத்திலே மட்டுமல்லஎங்கும் இதைப்போலக் கண்டிருக்க முடியாது தாங்கிக்கொண்டனர் – காரணம் என்ன – அந்த ‘வசவுகள் ‘அவ்வளவும்சேர்ந்து தி.மு.க.வின் வளர்ச்சியைக் கெடுக்கவோஅதன்அமைப்பாளர்களின்ஆதரவாளர்களின் மன உறுதியைக்குலைக்கவோ முடியவில்லைபழி பலத்தைத் தேடிக் கொடுத்ததுஇழி சொல்நம் இதயங்களிலே புதிய வலிவை ஊட்டிற்றுநாம்தாக்கப்பட்டோம்வளர்ந்தோம்எண்ணற்ற இளைஞர்கள் தந்தகண்ணீர் காணிக்கை வீண் போகவில்லை – வளர்ந்தேம்வளருகிறோம்விரோதத்தை வளர்த்துக் கொள்ளவில்லைசுழலும் சுறாவும் தாக்கிக் கொண்டிருப்பினும் பாதை அறிந்துகலம் விடுவோன் போலபழிஇழிவுவசவு எனும் சூழ்நிலைக்குஇடையிலேயே தி.முகழகத்தைத் துவக்கினோம்இரண்டாண்டுகளுக்குப் பிறகுஎண்ணிப் பார்க்கும் போதுநம்மையுமறியாமல்மனம்துள்ளி விளையாடுகிறது – கழகம்கண்ணியமான முறையிலே தழைத்திருக்கக் காண்கிறோம்.

 

தி.முகழகத் துவக்கத்தின் போதுநமது தோழர்களின் ஒவ்வொருசொல்லும் திரித்துக் கூறப்பட்டதுஒவ்வொரு செயலுக்கம்ஒருஇழிவான நோக்கம் இருப்பதாக எடுத்துக் காட்டப்பட்டதுஒன்றாக இருந்த காலை மலராகக் கருதப்பட்ட சொல்லும்செயலும்பிரிந்தோம் என்ற ஒரே காரணத்துக்காகமலத்தினும்கேவளமானதாகப் பொது மக்களிடம் கூறிவிடப்பட்டனதமிழ்நடையின் மாண்புக்கு ஓர் எடுத்துக்காட்டு – என்றனர் – பிரியாமுன்புபிரிந்தோம்சுவைதெரு மொழியில் பேசியும் எழுதியும்வரும் சூதுக்காரர் என்ற தூற்றப்பட்டோம்.

 

சிறுகதை உலகிலே பெரியதோர் மாறுதல்என்று சிறப்புரைதந்தனர்குடும்பம் ஒன்றாக இருந்தபோது – வெளியேறினோம்கதை எழுதும் கயவன்என்று கண்டிக்கப்பட்டோம்நாடு திருத்தநாடகமாடுகிறார்கள் என் நல்ல பிள்ளைகள் என்று பாராட்டுதல்பிரியா முன்பு – பிரிந்தோம்கூத்தாடும் கூட்டம் சேர்த்து வயிறுகழுவும் வக்கற்றதுகள்என்ற ‘விருது ‘தரப்பட்டதுபுயலெனச்சுற்றித் தென்றலெனப் பேசி வருகிறார்கள் என் ரத்தினங்கள்மாணிக்கங்கள் என்று புகழப்பட்டோம்பொறுக்கித் தின்றதுகள்போக்கிட மத்ததுகள் என்று தாக்குதல் கிளம்பிற்று எல்லாம்தாங்கிக் கொண்டோம்அதன் பயனாக எதையும் தாங்கும் இதயம்பெற்றோம்.

 

நாலு நாள் கூத்து – என்று கூறினர்பெரியதோர் அணி வகுப்பாகிவிடக்கூடாது தி.மு.கஎன்பதற்காகபார்த்துக் கொண்டேஇருங்கள்பயல்கள் ஓடி ஓடி அலுத்துஏதேனும் ஒரு கட்சியிலேதஞ்சம் புகுந்து கட்டியம் கூறிக் காலந்தள்ளப் போகிறார்கள்என்று ‘ஜாதகம் ‘கூறினர் – தோழர்களின் இடைவிடாதமுயற்சியால்தி.மு.கசோரம் போய்விடவில்லைவீரர்கோட்டமாகவே விளங்குகிறது.

 

ஆதரிக்க ஆள் யார்அதுவும் இதுவும் கத்திவிட்டால் இயக்கமாகிவிடுமா – அங்கே இங்கே கூத்தாடினால் காரியம் நடந்துவிடுமா – என்று கூறினர் – தி.முகழகம் தமிழத்தில்எல்லாமாவட்டங்களிலும் சிறப்பான முறையிலேமாநாடுகள் நடத்திதனிப் பிரச்சினைகளுக்கும் மாநாடுகள் நடாத்திஇப்போதுமாநாட்டைச் சென்னையில் நட்துதும் நிலைக்குவளர்ந்திருக்கிறது.

 

ஒரு இயக்கத்தை நடத்திச் செல்லபணம் வேண்டாமா இதுவக்பணக்காரர்களிடம் சென்று பல்லளித்தால் கூடப் பணம் தருபவர்யார்எனவே துவக்கப்பட்ட கழகம் துவண்டு விடும் வெகுவிரைவில் என்று பேசப்பட்டதுகழகம் துவண்டு போகாததுமட்டுமல்லபுயலையும் சமாளிக்கம் நிலையைப் பெற்று வருகிறதுபணம் தேடிச் சென்று பல்லிளிக்கவில்லைபணிபுரிந்து காட்டிபாட்டாளித் தோழர்களிடம் மடிப்பிச்சை எடுத்ததுபகுத்தறிவுததும்பும் நாடகங்களை நடாத்திக் காட்டிசீர்திருத்தவேட்கையினரிடம் செம்பொன் கேட்டது – கிடைத்ததுஇன்றுவயிறு வளர்க்கவே வேறு கட்சி துவக்கியவர்கள் – என்ற வசவுக்குஆளான தோழர்கள்சென்னை நகரில் சுமார் நாலுமனைஅளவுள்ள இடத்தில் அமைந்துள்ளதும்காணாக்காட்சியாகவும்பணிமனையாக அமைந்திட வசதி நிரம்பியதும் முப்பதாயிரம்ரூபாய் விலை யுள்ளதுமானசொந்தப் பணிமனையைப்பெற்றுள்ளனர்தி.முகழகத்துக்கு ‘கண்ணீர்த்துளிகள்‘இதோநமது பாசறைநமது உழைப்பின் உருவமாக விளங்கும்பணிமனைஎன்று பெருமையுடன் உலாவ ஒரு இடம்!! நம்மிலேபெரும் பாலானவர்களுக்கு உள்ள வீடுகள்சாமான்யமானவைகள்ஆனால் நம் அனைவருடைய கூட்டுமுயற்சியால்பொது ஆர்வத்தால்நமது கழகத்துக்கெனஅமைந்துள்ள வீடுமாளிகை போன்றதுபழிபலத்தைத்தந்திருக்கிறது – அதுதான்பொது வாழ்வுத்துறையிலே உள்ளஅதிசயம் ‘தாங்கிக் கொள்ளம் சக்தி வேண்டும்அதே போதுதிருப்பி தாக்கினால்தாம் நமது நெஞ்சிலே உள்ள நமைச்சல்அடங்கும் என்ற சபலம் தலைகாட்டக் கூடாதுஇந்த ‘மனநிலையைப் பெற்றிருக்கிறோம் – பெற்றுள்ள இந்தச் செல்வத்தைமேலும் வளமுள்ளதாக்குவோம்.

 

உண்மையை உரைப்பதால்ஊரும் பழியும் துரத்தி வந்துதாக்குமே என்று அஞ்சுபவர்களால்பொதுவாழ்விலேவெற்றிகாண முடியாது. பொதுநலப் பணியாற்ற முடியாதுஅத்தகைய அச்சம் நம்மைத் தீண்டாதபடிநம்மை நாம்பாதுகாத்துக் கொண்டோம் – இனியும் நமது பாதைஅதுவாகவேஇருக்க வேண்டும்தூற்றுவோர் தூற்றட்டும் – தூபமிடுவோர்தாரளமாகச் செய்யட்டும் – எங்கோ கிடந்ததுகள் இன்றுஎல்லோராலும் கவனிக்கப்பட வேண்டியவர்களாகி விட்டவிந்தைஉருவானதற்குக் காரணம்இழிமொழியும்பழிச்சொல்லும் கேட்டு இதயம் குமுறிவழி தவறிச் செல்லாமல்வசவுகளை ‘வெறும் வாயோசை என்ற அளவிலே கொண்டுநமதுபணிவசவுகளுக்கு மறுப்புகள் கூறுவதல்லதிராவிடச்சமுதாயத்தின் விடுதலைக்கு வழி காண்பதாகும்என்று திடமனதுடன்கண்ணியத்துடன் நமது சக்திகேற்ற வண்ணம்உழைத்துக் கொண்டிருப்பதுதான்தி.முகழகத்தின்துவக்கத்தின் போதே மலைமலையாகப் பழிமொழியும் இழிசொல்லும் துரத்தித் துரத்தித் தாக்கியதுஒரு வகையிலேநன்மைக்கே தான்துவக்கத்தின்போதேஇவ்வளவும் தாங்கிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டு விட்டதால்கழகத்துக்கு எதிர்பார்க்கக் கூடியதைவிட அளவிலும் வகையிலும்அதிக சிறப்பானதான வலிவு கிடைத்துவிட்டதுஇனிபழிபோட்டுத் தலைவாங்காலம் என்று எவர் எண்ணினாலும்இழிமொழி வீசி இடுப்பை ஒடிக்கலாம் என்று எவர் நினைத்தாலும்பலன் காணமுடியாதுயார் எவ்வளவு கேவலமாகப் பேசுவதாகஎண்ணிக் கொண்டு எதைக் கூறினாலும்பதறவேண்டியநிலையில் இல்லைநமது முன்னாள் இருப்பிடத்தின் இன்றையஅலுவலர்கள்நமக்குபழி கேட்டுப் பதறா உள்ளத்தைப் பெறும்பயனுள்ள பாடத்தைப் போதித்து விட்டனர்நாம் அந்தப்பரீட்சையில் தேறிவிட்டோம் – எனவேஇடர்கள் எது வரினும்நமக்குக் கலக்கம் ஏற்படக் காரணம் இல்லைகரிதன் குட்டிக்குவீரமும் திறமும் வருதற்குகாகத் துதிக்கையால் குட்டியைஇழுத்துத் தள்ளியும்தட்டியும் கொட்டியும் பயிற்சி தரும்என்கிறார்கள்தி.முகழகத்துக்குஅத்தகைய பயிற்சியைத்தந்திருக்கிறது திராவிடர் கழகம்பயிற்சி போதவில்லையோஎன்று ஒருவேளை எண்ணிக் கொண்டு மறுபடியும் பயிற்சி தரமுன்வரக்கூடும்அதைத் தவறாகக் கருத வேண்டாம்பன்னெடுங்காலமாகப் பலப்பல பகைவர்களால் பாழாக்கப்பட்டதிராவிடச் சமுதாயத்திலே பணியாற்றக் கிளம்பியிருக்கிறோம்பழிகளைத் தாங்கிக் கொள்ளும் மனப்பண்பு இந்தஅறப்போருக்குத் தேவையான ஆயுத்ம்அந்த மனநிலையை நாம்பெறுகிறோம். ‘வசவுகள் ‘மூலம் வாழ்க வசவாளர்கள்வாழ்கபோதகாசிரியர்கள்!

 

(திராவிட நாடு – 2-11-51)

No comments:

Post a Comment