Tuesday 29 December 2020

அறிஞர் அண்ணாவின் தமிழ்த்தேசியம் - முனைவர். விஜய்அசோகன்

 அறிஞர் அண்ணாவின் தமிழ்த்தேசியம் - முனைவர்விஜய்அசோகன்

நீதிக்கட்சிதிராவிடர் கழகம் என வளர்ந்து உயர்ந்துதிராவிடமுன்னேற்றக் கழகத்தினை தோற்றுவித்துதமிழகத்தின்வளர்ச்சிக்கான முன்னோடியாகவும்தமிழர் பண்பாடுதமிழர்களின் சங்க இலக்கியம்தமிழர் வரலாற்றுப் பெருமிதக்கூறுகளை வெகுசன அரசியலில் விதைத்ததோடுஇந்தியஅரங்கில் தமிழ்நாட்டிற்கான தனிப்பெரும் அடையாளத்தைநிலைநாட்டியவருமான எங்கள் அறிஞர் அண்ணாதமிழ்த்தேசியத்தின் தலைமகனாகவே வாழ்ந்ததை பட்டியலிடும்கட்டுரையாகவே இதனை வடிவமைத்திருக்கிறேன்.

சமீபகாலமாகதமிழ்நாட்டு அரசியலில் தமிழ்த்தேசியம் குறித்தானபார்வை அகலப்பட்டு இருக்கின்றது என்றபோதிலும்தமிழ்நாட்டில் காலூன்றிதமிழர்களை வலுவானவர்களாகமாற்றிய திராவிட இயக்கத்தை நேரெதிரே நிறுத்தும்இந்திய’ச்சாயலும் இணைந்தே வருகின்றதையும் நாம்கவனித்தே வருகிறோம்.

இத்தகைச் சூழலில்திராவிட இயக்கத்தின் அரசியல் பாதைஎன்பதேசமூகநீதிசமத்துவம்பார்ப்பனீய எதிர்ப்புபகுத்தறிவுவிதைப்பு உள்ளிட்ட கோட்பாடுகளைத் தாங்கிஅன்றைய ’இந்து’ இந்தியா முதல் இன்றைய ’இந்துத்துவ’ இந்தியா வரை சவால்விட்டுக்கொண்டிருக்கும் அமைப்பு என்பதை ஒருபுறம்தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது.

மறுபுறம்உலகெங்கும் முளைத்த பொதுவுடமைசமதர்மம்தொழிலாளர் புரட்சிவல்லாதிக்க எதிர்ப்புப் புரட்சிகளைதாங்கிய இயக்கங்கள் மற்றும் அதன் கோட்பாடுகள் அந்தந்தநிலத்தின் தேசியச் சிந்தனைக்கும் தேசம் என்னும்கட்டுமானங்களுக்கு ஆணிவேராகவே இருந்து வந்துள்ளதையும்இனநலன்மொழி நலன் உள்ளிட்டவைகளுக்கு எதிரானவையாகஇருந்ததில்லை என்பதையும் வரலாற்றுப் பார்வையில்உணர்ந்துக்கொள்ளலாம்தொடர்ந்து விளக்கப்படுத்துவதும் நம்கடமையே!

இதனை பகுத்துணரச் செய்வதில் நாம் வெற்றியடைவது எவ்வளவுமுக்கியமோஅதனினும் முக்கியம் அறிஞர் அண்ணாவின்தமிழ்த்தேசியக் கோட்ப்பாட்டினை முன்னிறுத்துவது. 

அண்ணாவின் ’தமிழ்நாடு’ பார்வை:

Homeland, Homerule ஆங்கிலப் பதிப்புகளிலும்திராவிட நாடுதமிழ்ப் பதிப்புகளிலும் அவருடைய எழுத்துக்களைவரிசைப்படுத்தினால்இந்தியாவினை குறிக்கும் பொழுது, ’இந்தியத்துணைக்கண்டம்’, ’இந்திய ஒன்றியம்’ என்றும்ஆந்திரகன்னடம்மலையாளம்தமிழ்ப் பேசும் நிலத்தினைகுறிப்பிடும்பொழுதெல்லாம், ’தாய்நாடு’ என்றும்தமிழ்நாட்டினைப் பற்றிக் குறிப்பிடும்பொழுதெல்லாம், ’தமிழர்தேசம்’, ’தேசம்’ என்றே வகைப்படுத்தியிருந்ததைக்காணலாம்.

1957ஆம் ஆண்டு Homelandஇல் திராவிட கூட்டரசுப் பற்றிஎழுதும்பொழுது, ”தாய்மொழியால் தமிழனாகவும்தென்மொழிக்கலாச்சாரத்தால் திராவிடராக அடையாளம் உள்ளபடியால்மொழிவழிப் பிரிந்து இனவழி கூடுதல் அவசியம்” என்பதைஎடுத்துரைத்ததோடுஇந்த கலாச்சாரத் தாய்நிலம் தனித்தன்மைவாய்ந்த சுந்திர நாடாக இருக்க வேண்டும் என்று விரும்பும்திராவிடர்கள்ஆரியப்பண்பாட்டைக் காட்டிலும் திராவிடப்பண்பாடே உயர்வானதும் சிறப்பானதாகும் என்றேகருதுகின்றனர்” என்றே குறிப்பிடுகின்றார்.

 

அதேப்போலடெல்லி ஆதிக்கம் பற்றிக் குறிப்பிடுகையிலும், ”ஒரு தேசம் என்பது மொழியால் பிணைக்கப்பட்டது என்பதற்குவழக்காட வேண்டியதில்லைடெல்லியின் தேர்க்கால்களில்நாங்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தாலும்தனித்தன்மையும்வரலாற்றுத் தொன்மையும் கொண்ட தமிழர்களாகிய நாங்கள் ஒருதேசம் என்ற மாபெரும் உண்மையைப் பண்டித நேரு ஏற்குமாறுசெய்ய உறுதிப் பூண்டுள்ளோம்.

 

அவரது எழுத்துக்களையும் கட்டுரைகளையும் மேலும் தொகுத்துப்பகுப்பாயும்பொழுது, ’தேசம்’ என்றால் அது தமிழ்த்தேசம் தான், ’திராவிடத் தேசம்’ அன்று என்பதும் புலனாகிறதுதேசியம் இனம்என்றால்அது ’தமிழ்த்தேசிய இனம்தான்திராவிடத் தேசியஇனமன்று” என்பதிலும் அண்ணா மிகத் தெளிவாகவேஇருந்துள்ளார்.

 

பண்பாட்டு அடிப்படையிலும்நிலத்தின் தொடர்புகளிலும்வரலாற்றுக் காரணிகளிலும் இருந்து மட்டுமே திராவிடநாட்டிற்கான ’கூட்டரசு’ கனவினை அண்ணாகொண்டிருந்தாலும், ’திராவிட தேசியத்தின்’ அடிப்படையில்கருதவில்லையென்பதாலேயேஅவர் பிரிந்துப்போகும்சுயநிர்ணய உரிமை கொண்ட வெவ்வேறு அரசியல் கூறுகள்(political entity) என்ற அளவுகோளிலேயே வரையறுத்திருக்கிறார்திராவிட தனியரசு என்பதைக் காட்டிலும் அனைவரும் இணைந்தகூட்டரசு என்றும்இணைவதாலேயே என்றென்றும் ஒன்றாகஇருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதிலும் அவர்தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார்.

 

தந்தைப் பெரியாரும் அறிஞர் அண்ணாவும் ஆரியப் பண்பாட்டிற்குஎதிரான திராவிடப் பண்பாட்டை ஒருங்கிணைப்பதிலும்அதற்கான தனியான சுதந்திரத் தாயகம் வேண்டும் என்பதிலும்தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர்அடிப்படையில் அவர்கள்கோரியது அன்றையக் கால சென்னை மாகாணம் என்பதும்குறிப்பிடத்தக்கது.

  

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்:

 

தமிழ்நாடு மாநிலமாக அமைந்த நாளைப் பற்றி அறிஞர் அண்ணா நவம்பர் 4, 1956ல் திராவிட நாடு இதழில் பின்வருமாறுஎழுதுகிறார்.

 

”தமிழருக்குத் தமிழகம் அமைகிறது என்பதனால் ஏற்படும் எழுச்சி, எங்கே, 

ஊட்டிவிடப்பட்டிருக்கும் பாரதம் - இந்தியர் - என்பன போன்ற போலித் தேசியத்தைத் 

தேய்த்து, மாய்த்து விடுமோ, புதிய தமிழகம் என்று பூரிப்புடன் பேசத்தொடங்கி, தாயகம் 

என்று பெருமையுடன் பேசத் தொடங்கி விடுவார்களோ என்ற அச்சம், எல்லாத் தேசிய 

இனங்களையும் ஒரே பட்டியில் அடைத்து, எதேச்சாதிகாரத்தால் ஆட்டிப்படைக்க 

வேண்டும் என்று திட்டமிட்டிருப்போருக்கு இருக்கத்தான் செய்கிறது. எனவேதான் 

அவர்கள், அட்லி போலவும், அபிசீனிய மன்னர் போலவும், இதெல்லாம் நிர்வாக ஏற்பாடு 

என்று கூறுகின்றனர்.

 

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரதமணித் திருநாடு! என்று அவர்கள் கீதம் 

இசைப்பது அனைவரும் வாழவேண்டும் என்ற நல்லறத்தைக் கூறுவதற்காக மட்டுமல்ல – 

தமிழர்காள், தமிழகம் பெறுகிறீர்கள்! புதிய அமைப்பு! விழாக் கொண்டாடுகிறீர்கள்! உற்சாகம் பெறுகிறீர்கள்! அதுவரையில் சரி - ஆனால் இந்த உற்சாகத்தை உறுதுணையாக்கிக்கொண்டு தனி அரசு என்று பேச ஆரம்பித்துவிடாதீர்கள் - பாரதமணித் திருநாட்டை வாழ்த்துங்கள்! - என்று கூறி, கட்டிவிடப்பட்டிருக்கும் அந்தப் போலித் தேசியத்தைக் காப்பாற்றும் 

நோக்கத்துடனும்தான்பாடுகின்றனர்.

 

தம்பி! நாமோ, இருவரும் அஞ்சிடும் திட்டம் கூறுகிறோம் - எதற்காக, மத்திய சர்க்காரின் 

ஆதிக்கத்தில், தமிழ் அரசை உட்படுத்துகிறீர்கள் - பிறகு, அங்கு நீதி கிடைக்குமா 

கிடைக்காதா என்று விவாதம் நடத்திக் கொண்டு அல்லற்படுவானேன் - தனி அரசாக 

இருந்தால் என்னஎன்று கேட்கிறோம்” என்று விரிவாகவேதமிழ்நாடு பிரிவினையை தனிநாடுப் பிரிவினைக்கானமுதல்படியாகவே கருதி எழுதியுள்ளார் என்பதும் புலப்படுகிறது.

 

இந்தி எதிர்ப்பில் ’தமிழ்த்தேசியச் சிந்தனை

திராவிட நாட்டில் 1948இல் எழுதிய ’கட்டாய இந்தி வேண்டாம்’ என்ற கட்டுரையில்,

தமிழ் மக்களுக்கு அவர்களின் பிறப்பு மொழியாகிய தமிழ் மொழிஇருக்கிறதுதமிழ் மொழிதொன்மையும்இனிமை யும் வாய்ந்துஇலக்கிய இலக்கண வளம் நிறைந்ததுகலைச் செல்வமும்நாகரிக மேம்பாடும் பெற்றுள்ளதுதமிழ் மக்கள் தனியரசுகோருகின்றனர்தனியரசு ஏற்பட்டதும்தமிழ் நாட்டில் தமிழ்மொழியே அரசியல் மொழியாகத் திகழும்இந்தி மொழிசமஸ்கிருதத்தின் மறுவடிவம்சமஸ்கிருதம் ஆரிய நாகரிகத்தைமுதன்மையாகக் கொண்டதுஇந்தி மொழி கற்கவேண்டுமென்பதன் நோக்கம்தமிழ் நாட்டில் ஆரியநாகரிகத்தைப் பரப்பவேயாகும்தமிழ் மக்களுடைய நாகரிகம்வேறு மொழியாளரின் நாகரிகங்களைவிடப் பன்மடங்குசிறந்ததெனப் பற்பல பேரறிஞர்களால் பாராட்டப்பட்டதுஎனவேதமிழ் மக்களின் நாகரிகத்தைச் சிதைத்துஆரிய நாகரிகத்தையேதமிழ் நாட்டில் புகுத்தும் இந்தி மொழியைத் தமிழ் மக்களுக்குக்கட்டாயப் பாடமாக்க வேண்டாம்தமிழ் மக்கள் தனியரசுகோருகின்றனர்தனியரசு ஏற்பட்டதும்தமிழ் நாட்டில் தமிழ்மொழியே அரசியல் மொழியாகத் திகழும்எனவேஇந்திமொழியைத் தமிழ் மக்களுக்குக் கட்டாயப் பாடமாக்கவேண்டாம் அண்ணா அவர்கள் இப்படி எழுதியிருக்கிறார்.

தமிழர்களின் கல்வியில் அண்ணாவின் பார்வை:

தமிழினம் செழித்துஉயர்ந்து வர கல்வி மிக அவசியம் என்பதைவலியுறுத்திய அண்ணாதமிழ்நாடெங்கும் கல்விக் கழகங்கள்அமைந்திட வேண்டும்அதுவும் ஊருக்கு ஊர்கிராமத்துக்குக்கிராமம்” என்றுரைத்திருக்கிறார்கல்விக் கழகங்களைஅறிவாலயங்கள்’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகிலேயே நமது இனம் உயர்ந்து விளங்க நாடெங்கும்அறிவாலயங்கள் அமைத்திட வேண்டும்நாட்டு மக்களின் அறிவுநிலை வளர்ந்தாலொழியநாட்டுக்குப் புதிய நிலை கிடைக்காது” என்று கூறும் வரிகளில் அவர் தமிழர் நாட்டையே சுட்டிக்காட்டிஇருக்கின்றார்.

ஏனென்றால்கல்வி வளர்ச்சிகல்விக் கொள்கைமொழிக்கொள்கை என பேசிய, ’கல்விக் கழகங்கள் நாடெங்கும்வேண்டும்’ என்றக் கட்டுரையில், ”அன்றைய சென்னை மாகாணகல்வி அமைச்சர் அவினாசிலிங்கத்தின், ’தேசீயம்காந்தீயம்தமிழ்’ என்னும் மூன்று ஆசைகளை நையாண்டி செய்துவிட்டு, ’கல்விக்கான போதிய நிதியில்லை என முதலமைச்சரும் கல்விஅமைச்சரும் சொல்வானேன்இதனை கோவில் பூசாரியேசொல்வாரேஅதற்கு எதற்கு அமைச்சுஎதற்கு அதிகாரம்உங்களால் முடியவில்லை எனில்கல்வித்துறையை திராவிடர்கழகத்திடம் கொடுங்கள்ஐந்து வருசங்கள் பின்னால் கல்வியின்நிலை எப்படி இருக்கிறது என்பதை காண்பீர்கள்” என்கிறார்.

அதோடு, ”கோயிலும் நம் தமிழ்நாடெங்கும் செலவு செய்வதைக்காட்டிலும் முதன்மையானது நம் ஊரில் கல்வி நிலையங்கள்திறப்பதே!, அதேவேளைநிதி கிடைத்துவிட்டால்எல்லாமும்கிடைத்துவிடும் என்றும் பொருளில்லைகல்வித் திட்டமேபுரட்சிகரமான முறையில் திருத்தி அமைக்கப்பட வேண்டும் – அறிவுத் துறைக்கு நம் மக்களை அழைத்துச் செல்லக்கூடியகல்வித் தேவைநமது மக்களுக்குஉலகின் நிலையைஉணர்த்தக் கூடியவிஞ்ஞானத்தின் மேன்மையைதொழிலின்சிறப்பை விளக்கக்கூடிய கல்வி தேவை – மக்களின் மனதிலேஉள்ல மாசுகளைத் துடைத்துஜாதிமத குலபேதங்களால் சீரழிவுஏற்படுவதைப் போக்கிஎல்லோரும் ஓர் குலம் என்றஇலட்சியத்தை சொல்லால் மட்டுமல்லாமல் செயலில் காட்டும்நெஞ்சு உரமும் நேர்மைத் திறமும் ஏற்படுத்தக் கூடிய கல்விதேவை” என்ற வரிகளில் வழியே தமிழ்நாட்டின் நலனிலும் சமூகமேம்பாடிலும் கல்வி எத்தகைய பங்கு வகிக்க வேண்டும் என்றஅவரது லட்சியக் கனவு வெளிப்படுகிறது.

தமிழரின் மறுமலர்ச்சி:

தமிழரின் மறுமலர்ச்சி என்னும் கட்டுரையில், ’தமிழ் இசை’, ’தமிழரின் ஆட்சி’, ’ தமிழரின் மொழிக் கொள்கை – எல்லாமும்தமிழில்’ உள்ளிட்ட பல செய்திகளை மேற்கோளிட்டுக்காட்டுகிறார்.

குறிப்பாக, “தமிழனுக்குத் தமிழ்ப்பாடல் வேண்டாமா?” தமிழாநீஇங்ஙனம்எதிலும் தமிழ்தமிழ் என்று பேசிக் கொண்டேபோகிறாய்அது எங்குக் கொண்டு போய்விடும் தெரியுமோநீகுறுகிகூனிக் குவலயம் அறியாத் தவளையாகி விடுவாய்.
இல்லையேதமிழில் எழுதும்போதுஇன்பம் காண்கிறேன்தமிழ்க் கவிதை உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறதுதமிழ்இசைநெஞ்சை அள்ளுகிறது” என்றும்,

” தமிழரின் மறுமலர்ச்சியே தமிழில் ஏன் பிறமொழி கலக்கவேண்டும்என்று கேட்கச் சொல்கிறது. தமிழரின் மறுமலர்ச்சியேதமிழகத்திலே இந்தி கட்டாயப் பாடமாஎன்று கிளர்ச்சி நடத்தச்சொல்லிற்றுஅந்த மறுமலர்ச்சியே மார்க்கத் துறையிலேஆரியஆபாசங்கள் கூடாது என்று தைரியமாக எடுத்துக் கூறச்சொல்லிற்றுசமுதாயத் துறையிலே நீ உயர்ந்தவன் நான்தாழ்ந்தவன் என்ற பேதம் கூடாது என்று கூறச் சொல்லிற்று” என்றும்எடுத்துரைத்திருக்கிறார்.

தமிழின் உயர்வே தமிழரின் உயர்வு:

இக்கட்டுரையின் இறுதிப் பகுதியாக, 1968இல் சமநீதி பொங்கல்வாழ்த்தில்அவர் எழுதிய ”தயங்காதே தமிழாதயங்காதே!” என்றபகுதியின் வரிகளோடு நிறைவு செய்ய விரும்புகிறேன்கட்டுரையின் இறுதிப் பகுதியெனினும்வருங்கால அரசியலில், ”அறிஞர் அண்ணாவின் திசைக்காட்டியாக இருக்கும் வரிகள்என்றே கருதலாம்.

தமிழ்ச்சமுதாயம் தமிழ் மொழியின் அடிப்படையில்தான்இயங்குகின்றதுஇதை உணர்ந்திருந்தாலும்எடுத்துச் சொல்லும்வகையறியாது நாம் இருக்கலாம்ஆனால்தமிழ் வாழ்ந்தால் தான்தமிழர் வாழ முடியும்தமிழர் வாழ்ந்தால் தான் தமிழ்ச்சமுதாயம்வாழ முடியும் என்று நாம் உள்ளுர உணர்கிறோம்.

தமிழகம் இன்று தனது இயல்பான மாண்புகளை மறந்துதுயில்கொள்கிறது என்று கூறமாட்டேன்மயங்கிக் கிடக்கிறதுஎன்று கூறமாட்டேன்தயங்கிக் கிடக்கிறது என்றுதான்கூறுவேன்தயக்கத்திலிருந்து நாம் விடுபட்டாக வேண்டும்ஏனெனில்வேலை இருக்கிறதுநிரம்ப வேலை இருக்கிறதுஒவ்வொருவருக்கும் வேலை இருக்கிறதுஒவ்வொரு நாளும்காடு திருத்திட வேண்டும்வளம் பெருக்கிட வேண்டும்வேலையற்றோருக்கு ஒரு வேலை தந்து அவர்கள் செய்தொழில்நேர்த்தியாளர்களாக மாற்றிட வேண்டும்துறைமுகங்களைசீர்திருத்திதமிழ் நாவாய்கள்தமிழ்க் கப்பல்களைதமிழ்மாலுமிகள்தமிழ்க் கவிதைகள் இசைத்துக் கொண்டுச் செல்லவேண்டும்தமிழர் திண்ணியராக வேண்டும்அவ்விதம்திண்ணியரானால் உலகில் நாம் எடுக்கின்ற காரியங்கள்அனைத்தும் முடியும்!

1 comment: