Tuesday 29 December 2020

பெரியாரின் தளபதி - நந்தினி ஸ்ரீ

 பெரியாரின் தளபதி - நந்தினி ஸ்ரீ 

ரலாற்றில் எப்போதெல்லாம்  ஜனநாயகத்திற்கான குரல் வெகுமக்களினிடையே ஓங்குகிறதோஅப்போதெல்லாம் பாசிசஅதிகார மையத்திற்கு வியர்த்துவிடும். தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் வாயிலாக சாமானியரிடையே எழுந்த மாநில சுயாட்சிக்கான குரலானதுஇந்திய அரசியல் வரலாற்றிலேமுதன்முறையாக டெல்லி ஏகாதிபத்தியத்தை ஆட்டம் காணவைத்தது. கடந்த ஐம்பது வருடங்களாக தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டு அரசியல் அதிகாரத்தில் தடயமற்றுப் போனதற்கும்இன்று வரை மீண்டும் தடம்பதிக்க இயலாமலிருப்பதற்கும்அண்ணா அமைத்துச் சென்ற அடித்தளம் தான் பிரதானம்.

 

அண்ணாவின் அரசியல் வெகுமக்களின் தேவைகளிலிருந்துஉருத்திரண்டு வந்தது. அது சாமானியனின் சுயமரியாதையைமாநிலத்தின் சுயமரியாதையைடெல்லியின் அதீதஅதிகாரத்திலிருந்து மீட்பதாய் இருந்தது. மற்ற இந்திய மாநிலங்களை விஞ்சும் தமிழ்நாட்டின் பிரம்மாண்டவளர்ச்சிகளுக்கு அடித்தளம் அமைத்தகடந்த ஐம்பதுஆண்டுகளில் நிகழ்ந்த பெரும் சமூகப் புரட்சிக்கு வித்திட்டஇந்திய அரசியல் வரலாற்றையே புரட்டிப்போட்ட தமிழகத்தின்அரசியல் எழுச்சியானதுஇரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே ஆட்சி செய்த, "சூழ்நிலைக் கைதிக்கு தான் இங்கு முதலமைச்சர் என்று பெயர்!" என்று இந்திய அரசியலமைப்பில்மாநிலங்களின் அதிகாரமற்ற தன்மையை விவரித்தஅண்ணா என்னும் சாமானியரால் நிகழ்ந்தது.

 

 எப்போதெல்லாம் வளர்ச்சி சாமானியனைச் சென்று அடைகிறதோஅப்போதெல்லாம் அது மலிவடைந்துவிட்டதுஎன்று பிரச்சாரம் செய்வது பார்ப்பனிய அரசியல் தந்திரம்.அதிகாரம் சாமானியனை அடைந்ததால் திமுகவின் மீது காழ்ப்பு கொண்ட பார்ப்பனியம், 'அரசியல் சாக்கடைஎன்று பொதுப்புத்தியில் விதைக்கத் தொடங்கியது. தனக்குப் பின் வந்த திராவிடத் தலைவர்களுக்கும் அசைக்க முடியாத அடித்தளம் அமைத்துச் சென்ற அண்ணாவின் புகழை மறைக்கும்பொருட்டுஅவதூறுகள் பரப்பத் தொடங்கியது. அதற்கு,  அண்ணாவுக்கும்அவரது தத்துவார்த்தத் தலைவரான பெரியாருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளைச் சாதகமாக்கிக் கொண்டுகாலம்தொட்டு விஷமப் பிரச்சாரம் செய்து வருகிறது.

 

இந்திய சுதந்திரத்தைப் பற்றி பெரியாருக்கும் அண்ணாவுக்கும்இருந்த கருத்துவேறுபாட்டினால் ஏற்பட்ட இடைவெளி,  அண்ணா தேர்தல் அரசியலில் ஈடுபடும் எண்ணம் கொண்டதைத்தொடர்ந்து திராவிடர் இயக்கத்திலிருந்து வெளியேறும்எண்ணத்தை உறுதிப்படுத்தியதுவெளியேறுவதற்கானசூழலுக்காகக் காத்திருந்த அண்ணாபெரியார்-மணியம்மையார்திருமண முடிவைச் சாதகமாக்கிக் கொண்டார்.கருத்துமுரண்பாடே பிரதானம். அன்றி மணியம்மையாரின் மீது எத்தகைய காழ்ப்பும் அண்ணாவுக்கு இருந்ததில்லை என்பதைபெரியாரை மணியம்மையார் மிகவும் அனுசரணையாகப்  பேணி வருவதாக அண்ணாவே பலமுறை அங்கீகரித்துப்பேசியதிலிருந்தே விளங்கிக்கொள்ள முடியும்.

 

பிரிவைத் தொடர்ந்து தொடக்க காலங்களில் பெரியார் திமுகவைகடுமையாக விமர்சித்தே வந்திருந்தார்திமுகவைக்'கண்ணீர்த்துளிகள்என்றே குறிப்பிட்டு எழுதியும் பேசியும்வந்தார். 1967 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்காமராசருக்குஆதரவாக,  திமுகவை எதிர்த்து தன் 88வது வயதில் வீதி வீதியாகப்பிரச்சாரம் செய்தார். 

 

தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் பிரம்மாண்டமாக வெற்றி பெற்றது. காமராசர் தோற்றுவிட்டதை அறிந்த பெரியார்"இந்த மக்களுக்கு ஜனநாயகம் என்பதே பிரயோஜனப் படாது" என்று சாடினார்ராஜாஜியுடன் தேர்தல் கூட்டணி வைத்திருந்ததனால்  திமுகவின் வெற்றியைப் "பார்ப்பனியத்தின்வெற்றி" என்று கடுமையாக விமர்சித்தார். 

 

 ஆனால் ஒருநாளும் திமுகவினர் பெரியாரைப் பதில் விமர்சனம் செய்தார்களில்லை. " 'பயல்கள் பரவாயில்லையேஎன்று பெரியாரே சொல்லும் நிலை ஒருநாள் வரத்தான் போகிறது" என்றே அண்ணா கூறிவந்தார். 

 

தேர்தலில் வென்றதும் தன் தம்பிமார்களை அழைத்துக்கொண்டு முதலில் பெரியாரைச் சந்திக்கச் சென்றார் அண்ணா. அந்தச்சந்திப்பு ராஜாஜி உட்பட பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏறத்தாழ 18 வருடங்கள் கழித்து தன்னைச் சந்திக்க வந்த அண்ணாவைக் கண்டு கண்களில் கண்ணீர் ததும்பி நின்றார்பெரியார். 

 

இவ்வளவு காலமும் இவ்வளவு கடுமையாகத் தங்களைத் தாக்கி வந்தாலும்பெரியாரின் மீது பேரன்பும் மரியாதையும் கொண்டிருந்த அண்ணா "இந்த ஆட்சியை உங்களுக்குகாணிக்கையாக்குகிறோம் " என்றார். நெகிழ்ந்து போன பெரியார்"என்னை இப்படி சங்கடத்துக்கு உள்ளாக்கிட்டீங்களே!" என்றார். போலவே தலைவர் பதவியை பெரியாருக்காககாலியாகவே வைத்திருந்தார் அண்ணா.

 

 இவ்வளவு காலம் திமுகவை 'கண்ணீர்த்துளிகள்என்றே குறிப்பிட்டு வந்த பெரியார்அண்ணாவின் சந்திப்பு முதல் 'திமுகஎன்றே பத்திரிக்கையில் எழுதத் தொடங்கினார்.

 

"அண்ணா பார்த்துச் சென்றதும் திடீரென்று  திமுகவுக்கு ஆதரவு தருகிறீர்களே" என்று கேட்டு பெரியாருக்குக் கடிதங்கள் குவியத்தொடங்கின. ஆனால் பெரியார் 01.01.1962 விடுதலையில் "இனி திமுக பார்ப்பனிய எதிர்ப்பைக் கையில் எடுக்க வேண்டும்அப்படி ஒரு நிலை வந்தால் அவர்கள் என்னிடம் தான் வரவேண்டும்அப்போது அவர்களை ஆதரிப்பேன்" என்று எழுதியிருந்தார். அதை மேற்கோள் காட்டி, "இன விடுதலைக்காக நான் எந்த சமரசத்தையும் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறேன். இன்று திமுகவை ஆதரிக்கிறேன். நாளையே அண்ணா ஏதேனும் தவறுசெய்தால் உடனடியாக விமர்சிப்பேன்ஆதலின் யாரும் கலக்கமடையத் தேவை இல்லை" என்று பதில் எழுதினார். 

 

மேலும் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுகவுக்கு வாக்களிக்கச்சொன்ன ராஜாஜி, "ராமன் அணிலின் துணை கொண்டு காரியங்கள் நிறைவேற்றிக் கொண்டது போலநாம் திமுகவைபயன்படுத்தி நம் கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ளவேண்டும்" என்று பலமுறை கூறியிருந்தார்பெரியார்அதனைக் குறிப்பிட்டு, "ராஜாஜி கூறியதுபோல் நிகழ விடாமல்திமுக ராஜாஜியைப் பயன்படுத்தி நமது  கொள்கைகளைநிறைவேற்றிக் கொள்ள வேண்டும்" என்று கூறி ஆதரவளித்தார்.

 

ஒன்பது அமைச்சர்கள் பதவி ஏற்றனர். ஒருவர் கூட பார்ப்பனர் இல்லை. அத்தனைப் பேரும் "கடவுளறிய" என்ற சொல்லாடலைமாற்றி "உளமார" பதவி ஏற்றனர். "சாதி ஒழிப்புபகுத்தறிவுவகுப்புவாரி உரிமை ஆகிய எனது கொள்கைகளுக்கு ஆதரவாகப்பகுத்தறிவுவாதிகளே (தி.மு.க) ஆட்சிக்கு வந்துபதவிப்பிரமாணம் கூட இவர்கள் கடவுள் பேரால் செய்யாதது திருப்தி அளிக்கிறது!" ( விடுதலை 15.09.1967) என்று அகமகிழ்ந்தார்பெரியார். 

 

தொடர்ந்துஅரசு ஏடுகளில் 'ஸ்ரீ - ஸ்ரீமதி - குமாரிபோன்ற வடமொழிச் சொற்களை நீக்கி 'திரு - திருமதி - செல்விஎன்று மாற்றினார் அண்ணா. செக்ரட்டரியேட் 'தலைமைச் செயலகம்ஆனது. சட்டசபை 'சட்டமன்றம்ஆனது. பார்லிமென்ட்'நாடாளுமன்றம்ஆனது. கோர்ட் 'நீதிமன்றம்ஆனது. 'மன்றம்என்ற சொல்லையே மீட்டெடுத்தார் அண்ணா.

மெட்ராஸ் மாகாணம் 'தமிழ்நாடுஆனது. தமிழை அரியணை ஏற்றினார் அண்ணா. பொதுப் பணியிடங்களில் இருந்து கடவுள்படங்களை அப்புறப் படுத்தவேண்டி ஆணை பிறப்பித்தார். 

 

இப்படி எண்ணற்ற சீர்திருத்தங்களை மேற்கொண்ட அண்ணாவை "இந்தியாவைப் பொறுத்தமட்டில் முதன்முதலில்ஒரு பகுத்தறிவாளரின் ஆட்சி நடைபெறுகிறதுவரலாற்றில்இப்படி ஒரு பகுத்தறிவாளர் ஆட்சிக்கு வரவேண்டுமானால்பலரைக் கொன்றழிக்க வேண்டி இருக்கும். உதாரணத்துக்குலெனின் அவர்களும் பல மதவாதிகளையும் பணக்காரர்களையும்கொன்றழித்து தான் ஆட்சிக்கு வந்தார். ஆனால் அண்ணாவோயாரையுமே கொன்றழிக்காமல் மக்களின் ஆதரவை மட்டுமே பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்" (விடுதலை 23.12.1969) என்று புகழ்ந்தார் பெரியார். 

 

பெரம்பலூரில் ஒரு பள்ளி நிகழ்ச்சியில் அண்ணாவின் படத்தைத்திறந்து வைத்து பேசியிருக்கிறார்  பெரியார். 

 

பெரியாரின் கொள்கைகளை அடியொற்றிசுயமரியாதைத்திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கொண்டு வந்தார் அண்ணா. அதன் வரைவையும் பெரியாரின் பார்வைக்கே அனுப்பிவைத்திருந்தார். 

 "அண்ணாவின் படத்தை எல்லா மன்றங்களிலும் எல்லோர்வீடுகளிலும் வைத்து மக்கள் போற்ற வேண்டும்!"(விடுதலை10.09.1968) என்று எழுதினார் பெரியார். 

 

பெரியாரும் அண்ணாவும் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர். "பிரிந்தவர்கள் இணைந்திருக்கிறார்கள்" என்று அங்கு சொன்னதை,  "நாங்கள் பிரிந்தால் தானேஇணைவதற்கு" என்று அண்ணா மறுத்துப் பேசினார். 

"அதிகாரமற்ற இந்த ஆட்சியில் இருப்பதைக் காட்டிலும்நீங்கள் கட்டளையிட்டால் முன்புபோல் உங்களுடனே மீண்டும் வந்து பணி செய்கிறேன்" என்றார் அண்ணா. பெரியாரோ அவர்கூறியதை மறுத்து, "மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். நீங்கள் உங்களால் முடிந்த வேலையை அங்கிருந்து செய்யுங்கள். என் வேலையை நான் இங்கிருந்து செய்கிறேன். நீங்கள் இதிலிருந்து விலகக் கூடாது" என்று சொல்லிஅண்ணாவின் கூற்றுப்படி திராவிடர் கழகமும்திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கியின் இரு குழல்கள் போன்றவையே என்பதை உறுதிப்படுத்தினார். 

 

அண்ணாவின் உடல்நலம் குன்றத் தொடங்கியது.  அண்ணா அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்லும் முன்பே பலமுறை அவரைப் பார்த்து விட்டு வந்தாலும்,  அவரை வழியனுப்பச் செல்ல வேண்டும் என்று உடனிருந்த ஆசிரியர் வீரமணியிடம் கேட்டார்.  ஆனால் ஏற்கனவே தாமதமாகி விட்டிருந்தது. தவிர மவுண்ட்ரோடு முழுவதும் மக்கள் கூடியிருந்திருப்பார்கள். அதனால் கிளம்பிச் சென்றாலும் அண்ணாவைக் காணும் வாய்ப்பு குறைவு என்று கணித்திருந்தார் ஆசிரியர். பெரியாரோ, "பரவாயில்லை அண்ணா செல்லும் விமானத்தை மட்டுமாவது பார்த்து விட்டு வருகிறேன்அழைத்துச் செல்லுங்கள்!" என்று இறைஞ்சினார்.வெகுவிரைவாகக் கிளம்பிஅண்ணா விமானம் ஏறுவதற்கு முன்புசந்தித்துவிடுகிறார்கள்பெரியார் கண்ணீர் மல்க அண்ணாவைவழியனுப்பினார். 

 

அண்ணா மறைந்த போது அந்தச் செய்தியைக் கேட்டு உருக்குலைந்து போனார் பெரியார். ".... யானறிந்த வரையில்சரித்திரம் கண்டவரை அண்ணா முடிவுக்குப் பொதுமக்கள்காட்டிய துக்கத்தில் நான்கில்எட்டில் ஒருபங்கு கூட வேறு எவருக்கும் காட்டியதாக நிகழ்ச்சி கிடையாது. அந்த அளவு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம்பெற்றுவிட்டார்அண்ணாவின் மறைவு தமிழ்நாடு கண்ட பேரிழப்பு! ....."(விடுதலை 03.02.1969) என்று இரங்கல் கட்டுரை எழுதினார்.

 

இரங்கல் கட்டுரைக்கு அவர் வைத்த தலைப்பு

 "அண்ணா மறைந்தார்அண்ணா வாழ்க!" 

 

வரலாற்றிலேதன் தத்துவார்த்தத் தலைவரிடம் கருத்து முரண்பட்டு பிரிந்து சென்றுலட்சியத் தீபமொன்றை நெஞ்சில் ஏந்தி அதிகாரத்தை அடைந்துமீண்டும் தன் தலைவரின்கொள்கைகளையே அதிகாரத்தில் அமரச் செய்து காட்டிய அண்ணா ஒரு அசாதாரணர்வாழ்க பெரியாரின் தளபதி. வாழ்கஅண்ணாவின் தலைவர். ஓங்குக  திராவிடம்.

 

No comments:

Post a Comment