Tuesday 29 December 2020

தி. மு. கழகம் சென்னை மாநகராட்சியைப் பிடித்தது

 தி. மு. கழகம் சென்னை மாநகராட்சியைப் பிடித்தது

 

சென்னை மாநகரம் நூறு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டதுஒவ்வொரு வட்டமும் ஒவ்வொரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்துநகர ஆட்சியை அமைக்க வேண்டும் என்பது சட்டம்

 

தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டாலும் உண்மையில் போட்டிஎன்பது காங்கிரஸ் கட்சிக்கும்தி.முகழகத்திற்கும் தான்!

 

மாநகராட்சித் தேர்தல் பொறுப்பைத் தேர்தல் வித்தகர் கலைஞர்கருணாநிதி ஏற்றார்சொல்ல வேண்டுமோஇரவு பகல் பாராதுசெயலாற்றினார்பேரறிஞர் அண்ணாகலைஞர் கருணாநிதிபேராசிரியர் அன்பழகன்நாவலர் நெடுஞ்செழியன்ஈ.வெ.கிசம்பத்புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., கவிஞர் கண்ணதாசன்ஆகியோர் நாள்தோறும் பல கூட்டங்களில் பேசி ஆதரவுதிரட்டினர்

 

முடிவில் 90 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க 45 இடங்களில்வெற்றி பெற்றதுமொத்தம் 100 இடங்களிலும் வேட்பாளரைநிறுத்திய காங்கிரஸ் 36 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.     

 

சென்னை நகரசபை வரலாற்றில் புதிய திருப்பம்

 

இருபது ஆண்டு காலக் காங்கிரஸ் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. 1959 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி மேயர் தேர்தல்நடைபெற்றது.  அது நடைபெறுவதற்கு முன்வெற்றி பெற்றதி.மு.க உறுப்பினர் அனைவரும் ரிப்பன் கட்டிடத்தின் முன்புகம்பீரமாகக் காட்சியளிக்கும் வெள்ளுடை வேந்தர் தியாகராயர்சிலைக்குஇருபுறமும் அணி வகுத்து நின்று  செலுத்தினர்நாவலர் நெடுஞ்செழியன் அவர்களும் கலைஞர் கருணாநிதிஅவர்களும் சிலைக்கு அருகில் அமைந்த மேடையில் ஏறி ஆளுயரமாலையைச் சிலைக்கு சூட்டி வணங்கினர்கூடியிருந்தஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளுடை வேந்தரை வணங்கினர்.

 

பின்னர் கழகத் தலைவர்களுடன் தி.மு.கழக உறுப்பினர்கள்ரிப்பன் கட்டடத்திற்குச் சென்றனர்அங்கு மேயர் தேர்தல்நடைப்பெற்றதுகழகத்தின் சார்பில் அ.பொ அரசும்காங்கிரஸ்சார்பில் ஜி.ராஜமன்னாரும் போட்டியிட்டனர். 50 வாக்குகள்பெற்று அ.பொ அரசு மேயர் ஆனார். 45 வாக்குகளுடன் ஜிராஜமன்னார் தோல்வியை தழுவினார்

 

துணை மேயர் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட பிசிவசங்கரன் 52 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்சுயேச்சையாகப் போட்டியிட்ட ஜிகண்ணன் 40 வாக்குகளுடன்தோல்வியுற்றார்.   

 

No comments:

Post a Comment