Tuesday 29 December 2020

பதினெட்டு ஆண்டுகள் பிரிவிற்குப் பின்... - கனிமொழி ம. வீ

 பதினெட்டு ஆண்டுகள் பிரிவிற்குப் பின்... - கனிமொழி ம. வீ

தினெட்டு ஆண்டுகள் பிரிவிற்குப் பின் தந்தை பெரியாரைச்சந்தித்தார் பேரறிஞர் அண்ணா. அந்தச் சந்திப்பிற்குப் பின் தந்தை பெரியார் திமுகவை இறுதிவரை ஆதரித்தார் என்பதே வரலாற்றில் கிடைக்கப்பெறும் உண்மை. பேரறிஞர் அண்ணாவின்மேல் அவர் வைத்திருந்த அன்பு அவர்கள் பிரிந்திருந்தபோதும்குறையவில்லைஅண்ணா அவர்களுக்கும் அவ்வாறே. அவர்கள் மீண்டும் இணைந்தபோதும் அந்த அன்பு கூடிற்று.

 

பெரியார் பொன்மொழிகள் என்ற நூலுக்காகத் தந்தை பெரியார் அவர்களும்ஆரிய மாயை நூலுக்காகப் பேரறிஞர்அண்ணா அவர்களும் திருச்சியில் சிறைப்படுத்தப்பட்டபோது,இருவருக்கும் பக்கத்து அறைகள் ஒதுக்கப்பட்டனஅதைப்பேரறிஞர் அண்ணா அவர்களே எழுதியுள்ளார்கள்.

திருச்சியில் எனக்குக் கிடைத்த வாய்ப்பு எப்படிப்பட்டது தெரியுமா தம்பி! பெரியாரும் அதே நாளில் அதே விதமான தண்டனை பெற்று அதே சிறைக்கு வந்தார்.

ஆரிய மாயை’ என்னும் ஏடு தீட்டியதற்காக எனக்குச் சிறை.

பொன்மொழிகள்’ தீட்டியதற்காகப் பெரியாருக்குச் சிறை.

திருச்சி கோர்ட்டாருக்கு இப்படியொரு காட்சியைக் காண வேண்டுமென்று ஆசை போலும்! இரண்டும் தனித் தனி வழக்குகள்தனித் தனியாகத்தான் விசாரணைகள்எனினும் தீர்ப்பு மட்டும் ஒரே நாளில்ஒரே நேரத்தில் அளிக்கப்பட்டது. பிரிந்து நெடுந்தூரம் வந்துவிட்ட என்னைஅன்று அந்தக் கோர்ட்டில் பெரியாருக்குப் பக்கத்திலே நிற்கச் செய்துவேடிக்கை பார்த்தது வழக்கு மன்றம். போலீஸ் அதிகாரிகள் அதைத் தொடர்ந்து ஒரே வேனில் ஏற்றிச் சென்றனர். அதைத் தொடர்ந்து திருச்சி மத்தியச் சிறையிலே இருந்த அதிகாரிபெரியார் கொண்டு வந்திருந்த சாமான்களைக் கணக்குப் பார்த்துச் சரியாக இருக்கிறதா என்று கூறும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். என் வாழ்க்கையில் நான் மறக்க முடியாத சம்பவம். எனக்கு உள்ளூர பயம். கேள்விக் கணையுடன் நிறுத்திக் கொள்ளாமல் அன்புக் கணையையும் ஏவினால் என்னால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும் என்றெல்லாம் அச்சப்பட்டேன்.

பக்கத்துப் பக்கத்து அறைபகலெல்லாம் திறந்துதான் இருக்கும்பலர் வருவார்கள்இங்குச் சிறிது நேரம்அங்குச் சிறிது நேரம்இன்னும் சிலர் கூர்ந்து கவனித்தபடி இருப்பார்கள்நாங்கள் இருவரும் பேசிக் கொள்கிறோமோ என்று. அவர் அறைக்கு உள்ளே இருக்கும்போது நான் வெளியே மரத்தடியில்! அவர் வெளியே வர முயற்சிக்கிறார் என்று தெரிந்ததும் நான் அறைக்கு உள்ளே சென்று விடுவேன்.

இப்படிப் பத்து நாட்கள்.

நாளைய தினம் எங்களை விடுவிக்கிறார்கள் - முன் தினம் நடுப்பகலுக்கு மேல் ஓர் உருசிகரமான சம்பவம் நடைபெற்றது. பெரியாருக்கு வேலைகள் செய்து வந்த ‘கைதி’ என் அறைக்குள் நுழைந்து, ‘அய்யா தரச் சொன்னார்’ என்று சொல்லிஎன்னிடம் ஆறு பிஸ்கட்டுகள் கொடுத்தான். கையில் வாங்கியதும் என் நினைவு பல ஆண்டுகள் அவருடன் இருந்தபோது கண்ட காட்சிகளின் மீது சென்றது.

மறுநாள் திடீரென்று விடுதலை கிடைத்தது. அந்த வேடிக்கையும் கேள்தம்பி! எங்களை விடுதலை செய்யப் போகிறார்கள் என்ற செய்தி உள்ளே எங்களுக்குத் தெரிவதற்கு முன்பே வெளியே தெரிந்து விட்டிருக்கிறது. எனவேஎங்களை அழைத்துச் செல்ல நண்பர்கள் வெளியே ஏற்பாடுகள் செய்யத் தொடங்கிவிட்டிருந்தனர். நமது (தி.மு.) கழகத்தார் ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு நேரத்தை மறந்து விட்டனர்எனவே சிறைக் கதவு திறக்கப்பட்டு எங்களை வெளியே அனுப்பியதும் வாசற்படியருகே பெரியாரை அழைத்துச் செல்ல வந்தவர்கள் கொண்டு வந்த மோட்டார்தான் இருந்தது. அதற்கு என்னையும் அழைத்துச் சென்றனர். இது போதாதென்று போட்டோ எடுப்பவர் ஒருவர் ஓடி வந்தார். ‘இருவரும் அப்படியே நெருக்கமாக நில்லுங்கள்’ என்று போட்டோ எடுத்துவிட்டார். அது வெளியிடப்படவில்லை... வேதாசலம் அவர்கள் வீடு வரையில் சென்று அவர் இறங்கிக் கொண்டார். நான் அதே மோட்டாரில் சாம்பு இல்லம் சென்றேன்” 

என்று நெகிழ்ச்சியுடன் எழுதினார் அண்ணா.

இதைப் படிக்கும் போதே, இருவருக்கும்பிரிந்திருந்தபோதும் ஆழமான பற்றுதல்புரிதல் இருந்ததை நம்மால் விளங்கிக்கொள்ள இயலும்.

அதேபோல, 1957ஆம் ஆண்டு சட்டத்தில் ஜாதியைப்பாதுகாக்கும் பிரிவுகளைக் கொளுத்த வேண்டும் என்று தந்தை பெரியார் அறிவித்தபோதுஅவரை கைது செய்யவேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோதும் அதனை எதிர்த்து பெரியாரைக் கைது செய்தால் அவருக்காகக்கிளர்ச்சியில் ஈடுபடுவோர் தமிழ்நாட்டில் ஏராளமானோர் உண்டு,என்று பேசியவர் அண்ணா அவர்கள்.

அதேபோல, 1967-க்குப் பிறகு திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோதுஅந்த ஆட்சியைத் தொடர்ந்து தான் இறக்கும் வரை ஆதரித்தவர் தந்தை பெரியார். திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றவுடன்மார்ச் மாதம் 2-ஆம் தேதிஅண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களைச்சந்திப்பதற்காகதிருச்சி புத்தூர் பெரியார் மாளிகைக்குச்செல்கிறார். அப்போது அண்ணாவுடன் இரா. நாவலர் நெடுஞ்செழியன்கலைஞர் மு. கருணாநிதின்பில்தர்மலிங்கம் ஆகியோர் தந்தை பெரியாரைச் சந்திக்கின்றனர்.

அப்போதுபெரியார் சென்னை வந்த பிறகு பார்க்கலாமேஏன் திருச்சிக்குச் சென்று பார்க்க வேண்டும் என்று கேட்கப்பட்டபோது, “என்னை இந்த நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவரே அவர்தான். முதலமைச்சரானதும் அவரை நான் பார்க்காவிட்டால்அது மனிதப் பண்பே ஆகாது என்றவர்அண்ணா அவர்கள்.

அந்தச் சந்திப்பு நடைபெற்றபோது, “அண்ணா மாப்பிள்ளைபோல் வந்தார்நான் வெட்கப்பட்ட மணப்பெண் மாதிரி தலையைக் குனிந்து கொண்டிருந்தேன் என்று பெரியார்கூறினார்.

அண்ணா அவர்கள் தந்தை பெரியாரிடம் அய்யா மந்திரிசபையை எங்கள் தலைவரான உங்கள் காலடியில் காணிக்கையாக்குகிறேன். நாங்கள் அவ்வப்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை எங்களுக்குச் சொல்லி வரவேண்டும் என்றதற்குப் பெரியார், “உங்கள் ஆட்சியின்போக்கைப் பொறுத்து என் ஆதரவு இருக்கும் என்று கூறினார்.

இன்றைய திமுக ஆட்சிக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன் என்றால் வம்புச் சண்டைக்குப் போக மாட்டேன் என்று தான் பொருளே தவிரஅவர்கள் செய்யும் எதையுமே எதிர்க்மாட்டேன் என்பது அர்த்தம் அல்ல என்று 6.3.1967 அன்று தந்தை பெரியார் விடுதலையில் அறிக்கை வெளியிட்டார்கள்.

அதே போல எந்த ஆட்சி வந்தாலும் தமிழர் நலன் தான் முக்கியம் என்று விளக்கி எனது நிலை என்னும் தலைப்பில் ஒர்அறிக்கையை 29.3.1967 அன்று பெரியார் வெளியிட்டார். மேலும் திமுக ஆட்சிக்கு அறிவுரைகளையும் தன் தலையங்கங்கள் மூலம் பெரியார் வெளியிட்டார்கள்.

அதேபோல பேரறிஞர் அண்ணா அவர்களும் தான் ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்திய திட்டங்கள் அனைத்துமே சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளாகத் தான் இருந்தன. குறிப்பாக முதன் முதலில் கடவுள் பெயரைச் சொல்லாமல் மனசாட்சியின்படி ஓர் அமைச்சரவை பதவி ஏற்றது, அண்ணா அவர்கள் தலைமையில் தான். அண்ணா அவர்கள் தான் கடவுளர்படங்கள், சிலைகள் அரசு அலுவலகங்களிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை அனைத்து அரசுத் துறைகளுக்கும்அனுப்பினார்.

எனவே தான் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா குறித்துஇவ்வாறு எழுதியுள்ளார்.

அண்ணா அவர்கள் நம் நாட்டுக்கு நிதி என்று தான் சொல்லவேண்டும். ஆட்சிப் பொறுப்பேற்றதும் பகுத்தறிவுக் கொள்கைப்படித் துணிந்து ஆட்சி செய்து வருகிறார். ஒவ்வொரு மன்றங்களிலும், ஒவ்வொரு வீட்டிலும் அண்ணா அவர்கள் படம் இருக்கவேண்டும். ஏனெனில்வரலாறு தோன்றிய காலம் முதல் இம்மாதிரிப் பகுத்தறிவாளர் ஆட்சி ஏற்பட்டதே கிடையாது

- விடுதலை, 10.09.1968

அண்ணாதுரை பின் சரித்திரத்தில் “சமுதாயச் சீர்திருத்த வீரர்” எனப் பொறிக்கப்படுவார் என்பது உறுதி.

- விடுதலை, 20.08.1968

மேலும் மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரைத் தமிழ்நாடு என்று தமிழில் பெயர் மாற்றம் செய்ததுஅன்றைய நடுவண் அரசு கொண்டு வந்த இந்தி மொழி கற்பிக்கும் திட்டத்தினை நீக்கி இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டில் உறுதிப்படுத்தியதுசுயமரியாதை திருமணம் சட்டப்படி செல்லும் என்ற ஆணை என்ற சட்ட அறிவிப்புகளை வரவேற்றும் தந்தை பெரியார் எழுதினார்.

“40 வருடகாலம் இம்முறையில் பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றும் இது (சீர்திருத்தத் திருமணம்) சட்டப்படி செல்லுபடி அற்ற திருமணமாக இருந்தது. அதனை அண்ணா அவர்கள் ஆட்சிசட்டப்படி செல்லக்கூடிய தாக்கிவிட்டது. அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதற்காகவே முதலில் அண்ணாவிற்கு வணக்கம் தெரிவித்து ஆரம்பிக்க வேண்டும்.

- விடுதலை, 06.08.1968"

அதே போலதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் பேரறிஞர்அண்ணா முதலமைச்சர் என்ற முறையில் திராவிடர் கழகம் நடத்திய பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டும் தலைமை ஏற்றும் நடத்தித் தந்திருக்கிறார்கள்.

தந்தை பெரியாரின் 89வது பிறந்த நாள் விழாவைத்தலைமையேற்று நடத்தியவர் பேரறிஞர் அண்ணா. பழைய சேலம் மாவட்டத்தில் பெரியார் ராமசாமி கல்வி நிலையம் எனும்பெயருடன் உருவான கட்டிடத்தை அண்ணா அவர்கள் 19.12.1967அன்று திறந்து வைத்தார்கள். பெரியார் ஈ.வெ.ராமணியம்மையார்குழந்தைகள் விடுதிக்கு அடிக்கல் நாட்டித் திறந்து வைத்தவர்அண்ணா அவர்கள்.

மேலும்,

அண்ணாவை “அறிஞர் அண்ணா” என்று சொல்லக் காரணம் அவருடைய அறிவின் திறம் தான்

விடுதலை, 15.09.1968

இந்த நாட்டில் தமிழர் சமுதாயத்தினருடைய அன்பை இதுவரை வேறு எவரும் பெறாத அளவுக்குப் பெற்றுவிட்டார். எங்குச் சென்றாலும் எப்பக்கம் திரும்பினாலும் அண்ணா வாழ்க! அண்ணா வாழ்க!! அண்ணா வாழ்க!!! என்ற முழக்க ஒலிதான் 

விடுதலை, 15.09.1968

அவருக்கு (அண்ணாவுக்கு) தெரியாதது ஒன்றுமில்லை. எல்லா விசயங்களையும் அறிந்தவர். இராமாயணத்தைக் கொளுத்தி இருக்கிறார். கடவுள் படங்களை எல்லாம் பிய்த்து எடுத்திருக்கிறார். மாபெரும் புலவர்களையெல்லாம் திணற வைத்திருக்கிறார். குடியரசுவிடுதலை பத்திரிக்கையில் பத்திரிக்காதிபராக இருந்து பல பகுத்தறிவு கருத்துகளைப் பரப்பி இருக்கிறார். பல புத்தகங்கள் கடவுள்புராணங்களைப் பற்றி எழுதி இருக்கிறார்

விடுதலை, 20.09.1968

அண்ணா அவர்கள் நமக்குக் கிடைத்தற்கரியது கிடைத்தது போன்றவராவார்கள்அவர் போனால் அடுத்து அந்த இடத்திற்குச் சரியான ஆள் இல்லை என்று சொல்லும்படி அவ்வளவு பெருமை உடையவர்கள். நமது நல்வாய்ப்பாக அவரது தலைமையில் பகுத்தறிவாளர் ஆட்சி அமைந்துள்ளது. இதனைக் காப்பாற்ற வேண்டியது. தமிழர் கடமையாகும் 

விடுதலை, 06.11.1968

என்று, (தொடர்ந்து அண்ணாவையும் அவர் ஆட்சியையும் ஆதரித்து வந்தார் தந்தை பெரியார்

அண்ணா அவர்கள் தந்தை பெரியாரிடமிருந்து பிரிந்தவுடன்கொள்கையில் மாறுபட்டார்சுயமரியாதை இயக்கக் கொள்கை வழியில் திமுகவை வழி நடத்தவில்லை என்போருக்குத் தந்தை பெரியாரின் பதில் அன்றைய விடுதலையிலிருந்து,

அண்ணா அவர்களின் கொள்கை சந்தேகத்திற்கு இடமில்லாதவையேயாகும். அவர் நம்மிடம் இருந்தபோது மட்டுமல்லவெளியே சென்ற பின்னும் ஆரிய மாயைகம்பரசம்கடவுள்பகுத்தறிவுக் கருத்துக்கள் என்பதாகப் பல புத்தகங்கள் எழுதி இருக்கிறார்கள். அண்ணா அவர்களைப் போல அவரது தம்பிகளையும் கொள்கையில் உருவாக்கி இருக்கிறார்கள்.

விடுதலை, 12.02.1969

அந்த வகையில் உருவாக்கியதன் காரணமாகத்தான் இன்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்.எஸ்.எஸ்-ன் அத்துனைஅட்டூழியங்களையும் எதிர்த்து நின்று கேள்வி தொடுத்துக்கொண்டு இந்தியத் துணைக் கண்டத்திற்கேவழிகாட்டியாக விளங்குகின்றது.

அண்ணாவின் புரட்சி சட்டங்களைப் பற்றிக் கூறும்போது,

அரசாங்க அலுவலகங்களில் இருந்த கடவுள் படங்களை அகற்ற அண்ணா உத்தரவு போட்டார். இதன் மூலம் மூடநம்பிக்கை இல்லை என்பதைக் காட்டிக்கொண்டார். சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்கியது முக்கியமல்லஅதிலே கடவுள்மதம் புகக்கூடாது என்பதற்கு வழிசெய்தது தான் முக்கியமாகும். அவர் சிறந்த பகுத்தறிவுவாதி. அவ்வளவு பெரிய மேதைக்கு அவர் மறைந்த அன்று 30 இலட்சம் பேர் பின் தொடர்ந்தார்களென்றால் இந்த நாட்டு மக்களை அவர் அவ்வளவு தூரத்திற்குப் பண்படுத்திவிட்டார் என்று அர்த்தம்

விடுதலை, 13.02.1969

என்று மிகத் தெளிவாக திமுக இந்த வழியில் பயணிக்கின்றது என்பதை எடுத்துக் காட்டினார்.

அதே போலஅண்ணா அவர்கள் நம்மை விட்டு புற்றுநோயின்காரணமாகப் பிரிந்தபோதுதிமுக எவ்வாறு கட்டுப்பாட்டுடன் பயணிக்க வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டத் தந்தை பெரியார் தவறவில்லை.

இன்றைய தினம் நம்முடைய வாழ்வு கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அண்ணா அவர்கள் கடமைகண்ணியம்கட்டுப்பாடு வேண்டுமென்று சொன்னார். நான் சொல்கிறேன் கடமைகண்ணியத்தைப் பற்றி கவலையில்லை. கட்டுப்பாட்டோடு நடந்து கொள்ளுங்கள். அதுதான் அண்ணா இல்லாத நேரத்தில் மிக மிக முக்கிய அவசியமாகும்.

விடுதலை, 20.02.1969

என்று எழுதினார்.

தந்தை பெரியாரின் சமூகப் புரட்சியைப் பற்றிக்கூறும்போது, ஒரு சொட்டு குருதி சிந்தாமல் மிகப்பெரிய மாற்றத்தை சமூகத்தில் மக்கள் மனதில் ஏற்படுத்தியவர்என்பார்கள்அதே போல தன்னிடம் ண்ணாவைப் பற்றியும் அவர் ஆட்சியைப் பற்றியும் கூறும்போதுலெனினுடன் ஒப்பிட்டு தந்தை பெரியார் எழுதினார்.

அண்ணா ஒருவர் தான் எந்தப் புரட்சியும்கொலையும் இல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை நிறுவியவராவார். லெனின் பகுத்தறிவு ஆட்சியை உண்டாக்கினார் என்றால் பாதிரிகள்பணக்காரர்கள்மதவாதிகளைக் கொன்று உண்டாக்கினார். ஆனால்அண்ணா ஒருவர்தான் ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் பார்ப்பனரைப் பணக்காரனைக் கொல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை அதுவும் மக்களின் ஆதரவைப் பெற்று நிறுவியவராவார்கள்.

விடுதலை, 23.12.1969

அண்ணா 1969-இல் நம்மை விட்டு மறைந்தார்ஆனால் பெரியார் தான் இருக்கும் வரை அண்ணாவின் புகழை எழுதாமல் இருந்ததே இல்லை. அவர் மறைந்த ஆண்டான, 1973 இல் கூட

இந்தியாவிலேயே அண்ணா சாதித்ததைப் போல் எவருமே சாதிக்கவில்லை.

விடுதலை, 03.02.1973

என்று எழுதினார்.

அண்ணா அவர்கள் மறைந்தபோதுதந்தை பெரியார் எழுதிய தலையங்கம் ஓர் ஆசிரியர் தன்னிடம் உருவான முதன்மை மாணவரை எந்த அளவிற்கு நேசித்தார் என்பதற்கு எடுத்துக்காட்டு.

இன்று அண்ணா அவர்கள் முடிவு எய்திவிட்டார். இந்த முடிவு தமிழ்நாட்டின் நான்கு கோடி மக்களை மாத்திரமல்லாமல்இந்தியாவிலுள்ள மக்களை மாத்திரமல்லாமல்உலகில் பல பாகத்திலுள்ள மக்களையும் பெரும் துக்கத்தில் மூழ்கடித்திருக்கும் முடிவாகும்.

அண்ணாவுக்குச் செய்த வைத்தியச் சிகிச்சை உலகில் வேறெங்கும் செய்திருக்கமுடியாது. டாக்டர் சதாசிவம் தலைமையில் அமைந்த குழுவினரும் வேலூர் டாக்டர்கள் டாக்டர் ஜான்சனும்டாக்டர் பதம்சிங்கும்டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் அரும்பாடுபட்டிருக்கிறார்கள்.

அண்ணாவின் மறைவு தமிழ்நாட்டிற்கு மாபெரும் நஷ்டம் என்றே சொல்லவேண்டும். தமிழ்நாடும்தமிழர் சமுதாயமும் அண்ணா ஆட்சியில் எவ்வளவோ அதிசயமான முன்னேற்றம் அடையக் காத்திருந்தது. நான் இந்த மந்திரி சபையையே பெரியாருக்குக் காணிக்கையாக வைத்து விட்டேன். என்று அண்ணா சொன்னதைப் பெரியாரின் கொள்கைப்படி நான் நடப்பேன் என்று சொன்னதாக நான் கருதினேன்.

நான்தி.மு.க. தேர்தலில் வெற்றி பெறும்வரைஅக்கழகத்திற்குப் படு எதிரியாக இருந்தவன். தேர்தலுக்குப் பிறகு அண்ணா என் எதிர்ப்பை மறந்துஅடியோடு மறந்துமிக்க பெருந்தன்மையுடன்நட்புக்கொள்ள ஆசைப்பட்டு என்னை அவர் பிரிவதற்கு முன் இருந்த மரியாதையுடன்நண்பராகவே நடத்தினார்.

இப்படிப்பட்ட ஓர் அற்புதக் குணம் படைத்த அண்ணா முடிவானதுதமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் பரிகாரம் செய்ய முடியாத நட்டமேயாகும். மனிதன் தன் வாழ்நாளில் அடைந்த வெற்றிக்குமேன்மைக்கு அறிகுறிமுடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து. அதுபோலவே அண்ணாவின் புகழ் மிகமிகப் பாராட்டுக்குரியதாகும். இப்படி எல்லாரும் துக்கம் கொண்டாடும்படியான அரிய வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காத வாய்ப்பாகும்.

இனியும் அவர் புகழ் ஓங்கவேண்டுமானால்அண்ணாவுக்குப் பிறகும் அண்ணா இருப்பது போலவே காரியங்கள் நடைபெறவேண்டும். தி.மு.க தோழர்களையும் நான் எனது தி.க தோழர்களைப் போலவே கூட்டுப் பணியாளர்களாகவே கருதுகிறேன். பொதுமக்கள் எல்லாருமே ஒத்துழைத்துமக்களுக்கு வேண்டிய நலன்களைப் பெறப் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

- 03.02.1969 விடுதலையில், “அண்ணாவின் முடிவு” 
என்ற பெரியாரின் தலையங்கம் வெளியாயிற்று

இறுதி வரிகள் தான் முக்கியம். இரு கழகத்துத்தோழர்களையும் கூட்டுப் பணியாளர்களாகவே கருதுகிறேன் என்றாரே, அந்த வரிகள் தான் இன்றும் இரு கழகத்தைச்சேர்ந்தோரையும் வழி நடத்துகின்றது. இடையில் சிலர் இருவரையும் பிரிக்கப் பார்க்கலாம்அரசியலுக்கு அப்பாற்பட்டு ஓட்டுப் போடாமல் இருப்பதே நேர்மை என்று அரிதாரம் பூசிக்கொண்டு நடிக்கலாம் ஆனால் நம்மிடம் வரலாறு உள்ளது. வரலாறு இரு பெரும் தலைவர்களின் ஒற்றுமையை - அன்பை - புரிதலை - சமூக மாற்றத்தில் அவர்களுக்கு இருந்த நம்பிக்கையை - பகுத்தறிவை அவர்கள் ஏற்று நடந்த வித்தைப்பற்றி நமக்குப் பாடம் எடுத்துக்கொண்டே இருக்கும்.

ஆதாரம் : திராவிடர் கழக வரலாறு (தொகுதி - 1) ஆசிரியர் கிவீரமணி

கீற்று இணையதளம்

No comments:

Post a Comment