Tuesday 29 December 2020

மேட்டிமைத்தனமும், ஜனநாயக மறுப்பும் - ச.கணபதி சங்கர்

 மேட்டிமைத்தனமும்ஜனநாயக மறுப்பும் - ச.கணபதி சங்கர்

 

லாலுபிரசாத் - இந்தப்பெயரைக் கேட்டவுடனே இயல்பாகமாட்டுத்தீவன ஊழல் என்பது நினைவுக்கு வந்துவிடும்இதேபோல தமிழ்நாடு தவிர்த்த பிற மாநிலங்களில் திமுகவும்அதிமுகவும் ஊழல்குடும்ப அரசியல் என்ற அடையாளங்களைக்கொண்டே அறியப்படும்.

 

இங்கே இந்தக்கட்சிகள் ஊழலை மேற்கொண்டனவா,  குடும்பஅரசியலுக்கு வழிவகுத்ததா என்று பேசப்போவதில்லைஅதுசட்டத்தின் பார்வையும்மக்களின் / தொண்டர்களின்அங்கீகாரமும் தீர்மானிக்க வேண்டியவை.

 

இங்கே கவனிக்க வேண்டியது ஏன் / எப்படி தொடர்ச்சியாகமாநிலக்கட்சிகள் மீது மட்டும் இந்த ஊழல்வன்முறை பிம்பங்கள்தொடர்ந்து நிலைபெற்று நிற்கின்றன என்பதேஇது ஒருமேட்டிமை மனநிலையிலிருந்து அமையப்பெறுவது

 

"Single Government, Single Party இருக்கணும்ங்க"; "மத்தியசர்க்கார் கைல இவங்க குடுமி இருக்கணும்அப்போதான் ஆட்டம்போடாம கம்முன்னு இருப்பாங்கஎன்று அறச்சீற்றம்கொள்பவர்களும், 'சிஸ்டம் சரியில்லஎன்று மத்திய சிஸ்டத்தைக்கண்டு கொள்ளாமல்  மாநிலத்தின் சிஸ்டத்தை மட்டும் கவனமாகஅட்டாக் செய்பவர்களும், 'இந்தியன் தாத்தாஎன்று பெயர்வைத்துக்கொண்டு இந்தியாவின் நிலைமையைக் கவனமாகப்புறந்தள்ளி,  மாநிலத்தின் நிலை கண்டு மட்டும்பொங்குபவர்களும் இந்த மனநிலையில் இருப்பதைக் காணலாம்

 

ஒரு பக்கம் மத்தியில் அதிகாரக்குவிப்பு நடந்து கொண்டேஇருக்கிறதுமாநில அரசுகள் வெறும் உதிரி அமைப்புகளாகமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனஅமலாக்கத்துறைதேர்தல் ஆணையம்ஊடகங்கள்,  நீதி பரிபாலன அமைப்புகள்யாவும் மத்திய ஆட்சியாளர்களின் கைப்பாவையாக மாறஆரம்பித்து விட்டன

 

வெளிப்படைத்தன்மை என்பது இல்லாமலே போய்விட்டதுதகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கூட நீர்த்துப் போகவைத்து விட்டார்கள்தங்களைக் கேள்வி கேட்கும் அதிகாரமோகட்டுப்படுத்தும் அமைப்புகளோ இருக்கக் கூடாது என்பதுபாசிசத்தின் வெளிப்பாடுதான்

 

தங்களை எரிச்சலூட்டும் ஒரு வசனத்திற்காக ஒருதிரைநட்சத்திரத்தின் மேல் ரெய்டு ஏவி விட முடிகிறது.  தாங்கள்எதிர்பார்க்கும் அரசியல் நிலைப்பாடு / வாய்ஸ் கொடுக்காதநடிகரை அச்சுறுத்த முடிகிறதுமாநில அரசுகளின் அத்தனைஅத்துமீறல்களும் ஆதாரத்துடன் மத்திய அரசின் கையில்இருக்கிறதுநினைத்தால் நடவடிக்கை எடுக்கலாம்அத்தனைஅதிகாரங்களும் அவர்களிடம் இருக்கிறதுஆனால் மத்தியஆட்சியாளர்கள்மாநில அரசின் அத்துமீறல்களைத் தங்களுக்குச்சாதகமாக்கிக் கொள்ளவே நினைக்கிறார்கள்

 

அவர்களின் ஊழல் புகார்களைக் காட்டி தங்களுக்கானகோப்புகளைக் கையெழுத்திடவும்கொள்கை நிலைப்பாட்டைஉறுதி செய்யவும்கொள்ளையடித்த பணத்தில் தங்களுக்கானபங்கை மிரட்டிப்பெறவும் இந்த ஊழல்கள் ஏதுவாகஇருக்கின்றன

 

எனில்இந்த அறச்சீற்றம் கொள்பவர்கள் மத்திய அரசை நோக்கிஅல்லவா அவர்களின் நெற்றிக்கண்ணைத் திறந்திருக்கவேண்டும்திராவிடக் கட்சிகள் ஊழல் பெருச்சாளிகள் என்றுஓயாமல் புலம்பும் பாஜக எத்தனை நடவடிக்கைகளைஇதுகுறித்து எடுத்திருக்கிறதுஎத்தனை ரெய்டுகள்வழக்குகளைப் போட்டிருக்கிறது

 

சொல்லப்போனால் இப்படி வகையாக மாட்டிக்கொள்ளும் மாநிலஅரசுகள் அவர்களுக்குப் பெரிய சவுகரியம்தாங்கள் நேரடிஅதிகாரத்தில்ஆட்சியில் இருக்கும்போது கூட செய்யத்தயங்கும்சில விஷயங்களை இப்படி தங்கள்  கைப்பாவையாக அமையும்மாநில அரசுகளின் மூலம் ஏதுவாகச் செய்து விடலாம்

 

வாதத்திற்கு ஒரு மாநில அரசு தவறுகள்அத்துமீறல்கள்ஊழல்கள் செய்கிறது என்று வைத்துக்கொள்ளலாம்அது குறித்தநடவடிக்கைகள் எடுக்கும் பொறுப்பில் உள்ள அமைப்புகளைக்கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது மத்தியஅரசுஆனால் அந்த  மத்திய அரசுஅந்த ஊழல்களைக் காட்டிஅச்சுறுத்தித் தங்களுக்கான ஆதாயத்தைத் தேடிக்கொள்ளும்என்றால் இங்கே அயோக்கியத்தனம் செய்வது யார்மக்களைமுட்டாளாக்குவது யார்?. 

 

பொதுத்தளத்திலும் மத்திய சர்க்கார் என்றால் நேர்மைகட்டுக்கோப்புஉறுதி என்ற ஒரு பிம்பமே காணப்பெறுகிறதுதிரைப்படங்கள்பத்திரிக்கைகள்ஊடகங்கள்என்றுஅனைத்துத் தரப்பிலும் இது கவனமாகக்கட்டமைக்கப்பெறுகிறது

 

மத்திய அரசுஅதன் அமைப்புகள் குறித்த ஊழல்கள்அத்துமீறல்கள் குறித்து தமிழ்ப்படங்கள் பெரிதாக வாய்திறப்பதேஇல்லைஇதுவே மாநில அரசு என்றால் லட்டு மாதிரி கிழித்துத்தொங்க விட்டு விடுவார்கள்அமைதிப்படைசிவாஜிமுதல்வன்அந்நியன்என்னுயிர்த்தோழன் என்று சொல்லிக்கொண்டேபோகலாம்

 

சமீபத்தில் வெளிவந்த சூரரைப்போற்று படத்தில் கூட மத்தியஅமைப்பில் போனால் போகிறது என்று ஒருவர் மட்டும் போட்டுக்கொடுப்பவராக இருப்பார்முக்கிய வில்லன் கூட அமைப்புக்குவெளியே ஒரு போட்டியாளராகவே காட்டப்படுவார்போதாக்குறைக்கு மத்திய அமைச்சரின் வசனங்கள் எல்லாம்நீதிக்கதை பாணியில் இருக்கும்இதுவே நாயகன் மாநிலத்தில்ஒரு திட்டத்தைத் தொடங்குவது போல கதை இருந்தால்காட்சிகளில் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்தாலே புரியும்

 

இதன் அடிநாதம் எங்கிருக்கிறது?  எப்போது அரசியலும்அதிகாரமும் பார்ப்பனர்களின் பிடியில் இருந்து கொஞ்சம்கொஞ்சமாக நழுவத் தொடங்கியதோ அப்போதே இத்தகையகற்பிதங்கள் கிளம்பிவிட்டன

 

ராஜாஜி ஆட்சிக் காலத்தில் இத்தனை அரசியல் பகடிகளோகேலிகளோ காணப்பெற்றதில்லைஅரசியல் என்னமோஅப்போது புனிதப்பட்ட ஒரு அமைப்பு போலவும்திராவிடக்கட்சிகளின் வருகைக்குப்பின்தான் சீரழிந்தது போலவும் ஒருபிம்பத்தை உருவாக்கி அதில் வெற்றியும் பெற்று விட்டார்கள்காமராஜரும் தேசியப்பார்வையோடு இணைந்து மாநிலசுயாட்சியையும்மாநில உரிமைகளையும் முன்னிறுத்தியிருந்தால் அவரும் இன்னுமேவறுத்தெடுக்கப்பட்டிருப்பார்.  இன்றும் அவர் வலதுசாரிகளால்மதவாதிகளால்  பெரிதாக விமர்சிக்கப்படாமல் இருப்பதற்குகாரணம் திராவிடக் கட்சிகளுக்கான எதிர்பிம்பமாக அவரைநிறுத்தும் வசதி இருப்பதால்தான்

 

இதை இன்னும் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம்ரோஜாபடத்தில் நாயகன் எஞ்சினீரிங் படித்தவர்,  "மாப்பிள்ளைஎன்ஜினீயராம்என்று சிலாகிக்கப்படுவார்அதுவே விக்ரம்வேதாபடத்தில் "எஞ்சினீரிங்காஅதுல என்னடா பெருமைஎன்றுநாயகன் நக்கல் அடிப்பதாக வசனம் அமைந்திருக்கும்இரண்டுபடங்களுமே மேட்டிமைப் பார்வை கொண்ட இயக்குனர்களின்படைப்புகள் என்பது கவனிக்கப்பட வேண்டியது

 

அதாவது ஒரு துறைஅமைப்பு - அதில் "அவாக்கள்மட்டுமேகோலோச்சும் வரை அது சிறப்பாகஉயர்ந்ததாககட்டமைக்கப்பட்டதுஎல்லோருக்குமானதாக அது மாற்றம்கொள்ளும்போதுமறுக்கப்பட்ட வாய்ப்புகள் கிடைத்துமற்றவர்களும் சாதிக்கும்போது இது என்ன  பெரிய விஷயம் என்றஅலட்சியமும்எல்லோரும் வந்துவிட்டதால் "சிஸ்டம்பாதிக்கப்பட்டு விட்டதான பார்வையும் திணிக்கப்படுகிறதுயோசித்தால் இது ஆதிக்கம் என்பதையும் தாண்டிஜனநாயகத்தை முற்றிலும் மறுக்கும் கேடுகெட்ட மனநிலைஎன்பதைப் புரிந்து கொள்ள முடியும்

 

தூய்மைவாதம் பேசும் கூட்டத்தையும்அதிகாரக்குவிப்பைநியாயப்படுத்தும் "ஆன்றோரையும்", மாநிலக்கட்சிகளை மட்டும்வசைபாடும் விமர்சகர்களையும் கவனியுங்கள்என்றாவதுஇவர்கள் நம் மொழியின் மீதான ஆதிக்கத்திற்கோமாநிலத்திற்குநியாயமாகக் கிடைக்க வேண்டிய வரிப்பங்கீட்டின்தாமதத்திற்கோமாநிலப்பட்டியலில் இருக்கும் விஷயங்களில்/உரிமைகளில் நடக்கும் மத்திய அரசின் அத்துமீறலுக்கோகுரல்கொடுக்கிறார்களா என்று கவனியுங்கள்

 

குரல் கொடுக்கவே மாட்டார்கள்கண்டும் காணாமல் கடந்தேபோவார்கள்இவர்களை அம்பலப்படுத்துவதும் தொடர்உரையாடல்களின் மூலம் நெருக்கடிக்குள்ளாக்குவதும் அவசியம்இல்லையென்றால் இவர்களின் கருத்தியல் சூழ்ச்சிக்குபொதுச்சமூகம் இரையாகிக்கொண்டேதான் இருக்கும்.

 

 

மாநிலங்கள் மீதான ஒவ்வாமை என்பது ஆர்எஸ்எஸ் பார்வைபிராந்திய அரசுகள்மாநில சுயாட்சிமொழி வழித் தேசியஇனங்கள் என்பதெல்லாம் அவர்களுக்குஅவர்களின் அகண்டபாரதக் கனவுக்கு முற்றிலும் ஆகாதவை.  நமக்கோஇந்தஉரிமைகள்அடையாளங்கள் மிக முக்கியம்இல்லையென்றால்கிஞ்சிற்றும் ஜனநாயக மாண்பில்லாத அரசாதிக்கத்தின் கீழ்நசுக்கப்பட்டு விடுவோம்அடிமைப்படுதலின் முதல் படிஅடையாளங்களை இழப்பதில்தான் தொடங்குகிறதுஇந்தப்புரிதல் வந்துவிட்டால் நாம் எதனை எதிர்க்க வேண்டும்எது பகைநட்புமுரண் என்ற தெளிவு கிடைத்துவிடும்

 

நாமர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்!

 

No comments:

Post a Comment