Tuesday 29 December 2020

அறிஞர் அண்ணாவும் உலகப் பார்வையும்! - முனைவர் விஜய்அசோகன்

 அறிஞர் அண்ணாவும் உலகப் பார்வையும்! - முனைவர் விஜய்அசோகன்

 

ண்ணாவின் கட்டுரைகளைநாடாளுமன்ற உரைகளையும் வெவ்வேறு தருணங்களில்வெவ்வேறு செய்திகளுக்காகப் படிக்கும்பொழுதும் கூடபுதுப்புதுப் பார்வைகள் கிடைப்பதை உணர முடிகிறது.... எல்லாவற்றையும தொகுத்து அண்ணாவின் சிந்தனைகளை வரிசைப்படுத்தினால்அடிப்படை மனித நேயம்தமிழ்த்தேசியம்தமிழ்நாட்டின் கனவுஇந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டின் தனித்தன்மைதமிழரின் வரலாறுதமிழரின் எதிர்காலம் எனப் பொருந்திவரும்....எல்லாவற்றிலும் உலக உதாரணம்உலக நடப்புகள்உலக வரலாற்றுத் தகவல்கள் கிடைக்கும்.

 

மிக முக்கியமாக இரண்டு உரைகளை மட்டும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

 

இரண்டும் நாடாளுமன்ற உரைகள்.

 

ஒன்றுஇந்தியாவிற்கான அயலகக் கொள்கை வடிவமைப்பில் ஆலோசனை.

 

ஆச்சரியம் என்னவென்றால்அமெரிக்காவின் இந்திய/ஆசிய வலைப்பின்னல்அவர்களது கைகளுக்குள் சென்ற நாடுகளின் அரசின் நிலைஅவர்களின் ஆக்கிரமிப்பு எண்ணம் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார். அதுவும் எப்பொழுது, 1965இல்.

 

குறிப்பாக அவர் சொல்லியதில் நான் சுட்டிக்காட்ட வேண்டும் என்றால், "a country with begging bowl in its hand cannot have their independent foreign policy"..."When we want peace, we are equally determined not to enter into military alliances, or pacts"....." the formation of SEATO, NATO, CENTO having formed circles within a circle, almost stab the United Nations Organizations in the back"...."American diplomacy and American leadership have a peculiar knack of choosing wrong people, creates a puppet government in East Asian countries"....."American money seems to be tainted, the less of it, more we gain, more of it the more we lose"......

 

இன்னொன்றுஇலங்கையில் மலையகத் தமிழர்களுக்கான பிரச்சனைகளுக்கான தீர்வில் தமிழ்நாட்டு அரசியல் அமைப்புகளைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற நிபந்தனை! இது 1964இல் பேசியது....

 

அதில், "The only part we could have played, the legitimate part that we could have played, is by stressing the problem of human interest"................" even sovereignty can come under eternal justice and fair play"....." the very fact that the successive prime ministers of Ceylon come to this country for consultations, that this is not purely a problem wherein the sovereignty of that country at an issue. This is a problem wherein the whole world has an interest"..........

 

இரண்டு உரைகளோடுதேசம்தேசியம்தமிழர் இறையாண்மை குறித்தெல்லாம் அவர் பேசியதைப் படிக்கும்பொழுதுஅன்று அவர் இந்தியாவிற்கே தமிழரின் அறத்தில் நின்று வழிகாட்ட முயன்றிருக்கிறார் என்பது தெரிகிறது.

 

இன்னும் பல 'அண்ணா'க்கள் உருவாக வேண்டும்...ஒருமித்த பல 'அண்ணா'க்கள் வழியே தான் தமிழர் தேசத்திற்கான தீர்வினை இந்திய அரங்கிற்குள் நம்மால் எட்ட முடியும் என நினைக்கிறேன்...

 

முனைவர் விஜய் அசோகன்

 

 

 

அண்ணா ஒருவர் தான் எந்தப் புரட்சியும்கொலையும் இல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை நிறுவியவராவார். லெனின் பகுத்தறிவு ஆட்சியை உண்டாக்கினார் என்றால் பாதிரிகள்பணக்காரர்கள்மதவாதிகளைக் கொன்று உண்டாக்கினார். ஆனால்அண்ணா ஒருவர்தான் ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல் பார்ப்பனரைப் பணக்காரனைக் கொல்லாமல் பகுத்தறிவு ஆட்சியை அதுவும் மக்களின் ஆதரவைப் பெற்று நிறுவியவராவார்கள்.

பெரியார் (விடுதலை, 23.12.1969)

No comments:

Post a Comment