Tuesday 29 December 2020

அண்ணா - நூற்றாண்டின் அடித்தளம் - அப்பாஸ்

 அண்ணா - நூற்றாண்டின் அடித்தளம் அப்பாஸ்

ண்ணா ஒற்றை தலைப்புக்குள்ளோ அல்லது ஒற்றைபரிமாணத்துக்குள்ளோ அடக்கி விட முடியாதுபடிக்கறகாலங்களில் மேலோட்டமாக அவரைப் பற்றி படிச்சிருந்தாலும்அண்ணா அப்படிங்கறது எப்போதும் ஒரு உயர்ந்த பிம்பவாகவேஎனக்கு இருந்திருக்கிறதுஅவரைப் பற்றி ஆழமாக அறிந்தப்பின்னால் , அவருடைய தாக்கம் இன்றைய அரசியலில்அரசுகளின் செயல்பாடுகளில்கொள்கை வழிமுறைகளில்அரசியல் நாகரிக தளத்தில்ஜனநாயகத் தன்மையில் - இப்படிஎல்லா நிலையிலும் இருந்திருப்பதை உணர முடிகிறதுஒருதத்துவார்த்த நிலையில் தேடும் போது அதற்கான பதில்அண்ணாவிடம் இருக்கிறதுபொருளாதாரத்தில்நிர்வாகசீரமைப்புகளில்மேலாண்மையில் - இப்படி எல்லாக்கேள்விகளுக்கும் அண்ணாவிடம் பதில் இருக்கிறதுசுருங்கசொல்லணும்னா அண்ணா அமைத்துக் கொடுத்த அடித்தளம்தான் இன்றைய தமிழகம் - நாளைய தமிழகமும் அந்தஅடித்தளத்தின் மேலே தான் கட்டப்படணும்.

அறிவுத்தளம்

அண்ணா எதை சொல்லிக் கொடுத்தாரோ இல்லையோதன்னுடைய தோழர்களை நிறைய படிக்க சொன்னார்சுயமரியாதையும்பகுத்தறிவும் கல்வியாலயும்அறிவாலயம் தான்மேம்படும் அப்படின்னு அவர் நம்பினாருதான் சொல்லுறதஎழுதறத மட்டுமல்ல உலக இலக்கியங்களையும்தத்துவங்களையும்அரசியலையும் தன்னுடைய தம்பிகள்தெரிஞ்சிருக்கணும் அவர் விரும்பினாரு.  அவர் விதைச்ச அந்தவிதை நமக்குள்ள ரொம்ப ஆழமா விழுந்திருக்கு அப்படின்னுதான் சொல்லணும்இப்பவும் நீங்க பார்க்கலாம் - ஏதாவதுவிவாதம்-னு வந்தா அறிவுபூர்வமா அணுகறது அண்ணாவின்தம்பிகளா தான் இருக்கும்போற போக்குல ஏதாவது சொல்லிட்டபோற பழக்கம் அண்ணாவின் தம்பிகளிடத்தில் கிடையாது.

நிர்வாகம் மற்றும் மேலாண்மை

அண்ணாவின் மேலாண்மை ரொம்பவும் வியப்புக்குரியதுஅண்ணா பெரியாரை விட்டு விலகிவரும் போதுதிராவிடஇயக்கம் தான் பெரிய இயக்கம்திராவிட முன்னேற்ற இயக்கம்அப்படிங்கறது எண்ணிக்கை அடிப்படையில் திராவிடர்கழகத்தை விட சிறியதுதிராவிட இயக்க தோழர்களுக்குதிமுகவுடன் சிறு உரசல்கள் ஆங்காங்கே இருந்து வந்ததுஇருந்தாலும் அவர்கள் திமுகவை தங்கள் இயக்கமாகவேபார்த்தார்கள்காரணம் பெரியாருக்காக "தலைவர்பதவியைகடைசி வரை காலியாக வைத்திருக்க செய்த அண்ணாவின்முடிவு.  அதுவே நாளடைவில் பெரும்பாலான திராவிட இயக்கதோழர்களை திமுக-வினராக மாற்றியது.

அண்ணா தன்னுடைய தம்பிகளுக்கு எல்லா விதமானசுதந்திரத்தையும் கொடுத்திருந்தார்அண்ணாவின்அணுகுமுறைக்கும் பெரியாரின் அணுகுமுறைக்கும் இது தான்வித்தியாசம்.  பெரியாரின் அணுகுமுறை ஒரு அன்பு கலந்தசர்வாதிகாரம் என்றால் அண்ணா ஒரு முழுமையானஜனநாயகவாதியாக இருந்தார்கட்சியில் எல்லோருக்குமானகருத்துக்களுக்கு இடம் கொடுத்தார்எல்லோரையும்கலந்தாலோசித்தார்எல்லோரையும் நிறைய படிக்க தூண்டினார்அண்ணாவின் தம்பிகளில் பெரும்பாலானோர்பத்திரிக்கையாளர்களாக இருந்தனர்அதோட விளைவு - அண்ணா தனக்கு கீழே பெரும் ஆளுமைகளை உருவாக்கிஇருந்தார்.

அண்ணா உருவாக்கிய அளவிற்கு இரண்டாம் மட்டதலைவர்களை யாரும் உருவாக்கவில்லைஅண்ணாவின்மறைவிற்கு பிறகு கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமையேற்க தகுதிபடைத்த தலைவர்கள் பலர் இருந்ததால் தான் அன்னைக்கு ஒருசிறு குழப்பம் ஏற்பட்டது.  பின்னர் பெரியாரின் தலையீட்டில்கலைஞர் தலைமை பொறுப்பேற்கிறார். Succession Plan என்பதுஇவர் தான் தனது வாரிசு என்று யாரையும் அறிவிக்காவிட்டாலும்அதற்கு தகுதியானவர்களை உருவாக்குவதே ஆகும்எவ்வளவுபெரிய விஷயம் பாருங்க.

அதே மாதிரி தான் - தனது தம்பிகளை தட்டி கொடுத்து வேலைவாங்குவதில் அண்ணாவின் பாணியே தனிநிறையஉதாரணங்கள் சொல்லலாம்சென்னை நகரசபை தேர்தலில்பெற்ற வெற்றிக்காக கலைஞருக்கு கணையாழி வழங்கிஊக்குவித்தது ஆகட்டும்கட்சிக்கு தேர்தல் நிதி திரட்டுவதில் ஒருஆரோக்கியமான போட்டியை உருவாக்கியதில் ஆகட்டும் - (சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் 11 லட்சம்அண்ணாவின்பாணி தனித்திருந்தது.

 சுருங்க சொன்னால் அண்ணா திராவிட இயக்கங்களின் CEO. அவரோட வழிமுறை அணுகுமுறை தான் இன்னைக்கும்எல்லோருக்கும் படம்.

அடுத்து - அவர் ஒரு இலட்சியவாதி - அதே நேரத்துலயதார்த்தவாதியும் கூடவேணும்னா யதார்த்த லட்சியவாதின்னுசொல்லலாம்.

வெறும் தத்துவம் மட்டுமல்லாது - அந்த தத்துவத்தை சார்ந்தநடைமுறை லட்சியங்களையும் கொண்டிருந்தவர் அண்ணாமுதலில் அண்ணா ஒரு பெரும் செயல்வீரர்திட்டங்கள் வகுப்பதுஒரு பண்பு  என்றால்திட்டங்களை நடைமுறை செயலாக்கம்செய்வது தனி பண்புஅந்த வகையில் திராவிட இயக்கத்தின்strategist பெரியார் என்றால்திராவிட இயக்கத்தின்கொள்கைகளின் மாபெரும் Executioner அண்ணாஅவர் வெறும்கனவு காண்பவராக இல்லைஇந்த இனத்தின் விடுதலை மற்றும்சுயமரியாதை பற்றி அவருக்கு ஒரு மாபெரும் லட்சியம் இருந்ததுஅந்த இலட்சியத்தை அடைவதற்கான வழிவகையும்செயல்திட்டமும் இருந்ததுஅந்த செயல்திட்டம் தான்தமிழகத்தை இன்றும் ஏதோ வகையில் இயக்கிக்கொண்டும்இருக்கிறது.

பெரும்பாலான லட்சியவாதிகள் "தூய்மைவாதம்என்றகூட்டுக்குள் சிக்கிக்கொண்டு காலத்தின் ஓட்டத்தில் நீர்த்துப்போனதை பார்த்திருக்கிறோம்ஆனால் அண்ணா இலட்சியவாதிமட்டுமல்லஒரு யதார்த்தவாதியும் கூட. He was a practical man with a vision.

தனது தொடக்கக் காலங்களில் "தேர்தல் பாதை திருடர் பாதைஎன்றே எண்ணியிருந்த அவர் - சமூக விடுதலையே தன்லட்சியமாக கொண்டிருந்தார்ஆனால் அரசியல் அதிகாரம்இல்லாமல் இங்கு எந்த சமூக விடுதலையும் சாத்தியமில்லைஎன்றுணர்ந்த அண்ணா தேர்தல் பாதையை தேர்ந்தெடுக்கிறார்இங்க தான் அவர் பெரியாரோட வேறுபாடுறார்அந்த மாறுபாடுதான் அவரை தனிப் பாதையை தேர்ந்தெடுக்க வைக்குதுஅவர்மட்டும் அன்று அந்த பாதையை தேர்ந்தெடுக்காமல்இருந்திருந்தால் திராவிட இயக்கத்தின் வரலாறு வேறு மாதிரியாகதான் இருந்திருக்கும் அப்டிங்கிறதுல சந்தேகமே இல்லை.

அடைந்தால் திராவிட நாடுஇல்லையேல் சுடுகாடு” என்றமுழக்கத்தை ஓங்கி ஒலித்தவர் தான் அண்ணாதிராவிடநாட்டிற்கான அரசியலமைப்பு மாதிரியையே தயாரித்துவைத்திருந்தார் அண்ணாஆனால் ஒரு கட்டத்தில் சீனபோரினை காரணம் காட்டி  "தேச பாதுகாப்புஎன்றபோர்வையில் கட்சியை தடை செய்ய முயன்ற போதுஅண்ணாதனது நிலையை மாற்றிக்கொள்ள தயங்கவில்லை. “உயிரோடுஇருந்தால் தான் போராடமுடியும்” என்ற யதார்த்தத்தை அவர்உணர்ந்திருந்ததன் விளைவு தான் அதுதன்னுடைய நிலையைமாற்றிக்கொண்டாலும் பாராளுமன்றத்தில் அதற்கானவிளக்கத்தை தெளிவுபட பதிவு செய்தவர் அண்ணா. "திராவிடநாடு கோரிக்கையை கை விடுகிறோம்ஆனால் அந்தகோரிக்கைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றனஎன்றுஓங்கி ஒலித்தார்அவர் அன்னைக்கு சொன்னது இன்னைக்கும்எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பாருங்கள்இன்னைக்கும்உந்தப்பட்ட போலி தேசிய உணர்ச்சிகளில் நாட்டை துண்டாடநினைக்கிறவங்களுக்கு - பதில் சொல்ல எல்லோரும்அண்ணாவை தான் தேடுறாங்கஅவர் பேசிய எழுதிய குறிப்புகள்தான் இன்றும் நாடாளுமன்ற அவைகளில் எதிரொலிக்குது.

1967-ல் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானது - "ரூபாய்க்கு 3 படி அரிசி". ஆனால் ஆட்சிக்கட்டிலில் ஏறியவுடன் தான் நாட்டின்நிதிநிலைமை இந்த திட்டத்தை செயலாக்க துணை புரியாதுஎன்பதை அண்ணா உணர்ந்தார்இருந்தாலும் மனம்தளரவில்லை - "3 படி லட்சியம்; 1 படி நிச்சயம்என்றமுழக்கத்தோடு மக்களுக்கு நிலைமையை புரிய வைத்தார்இலட்சியத்தை நோக்கிய பயணத்தையும் தொடர்ந்தார்அவர்விட்டு சென்ற பணியை அவரது தம்பிகள் நிறைவேற்றினார்கள்என்பது வரலாறுஇன்னைக்கும் தமிழ்நாட்டோட பொதுவிநியோக திட்டத்தை உலகமே வியந்து பார்க்குது அப்படின்னாஅதற்க்கான விதை அண்ணாவிடம் இருந்து வந்தது.

தத்துவம் 

அண்ணாவின் சிந்தனைகள் தான் ஒரு இனத்திற்கானஅடையாளத்தை உறுதி செய்ததுஅவருக்கு தேசத்தைப் பற்றியதெளிவான கண்ணோட்டம் இருந்தது. "மத்தியில் கூட்டாட்சிமாநிலத்தில் சுயாட்சிஎன்பது வெறும் கொள்கை முழக்கமல்லஎந்தெந்த அதிகாரங்கள் மத்திய அரசிடம் இருக்க வேண்டும் - எத்தகைய உரிமைகளை மாநிலங்கள் பெற்று இருக்க வேண்டும்என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருந்தார்தேசம்அப்படிங்கறதே மாநிலங்களின் கூட்டமைப்பு என்பது தான்அண்ணாவின் பார்வைபலமொழிபல கலாச்சாரங்களின்தொகுப்பாய் ஐரோப்பிய ஒன்றியம் இருப்பதை போல் இந்தியஒன்றியம் அமைய வேண்டும் என்பது தான் அவரது கனவு.

அண்ணா அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தபோது பலசெய்தியாளர்கள் அவரை கேள்விகளால் துளைத்தபோதும்அவர்ஒரு இடத்தில்  கூட தேசத்தை விட்டுக்கொடுத்து பேசவில்லைஅவருக்கு எங்கு போராட வேண்டும்எங்கு தோள் கொடுக்கவேண்டும் என்ற திண்மை இருந்ததுஅது இன்னைக்கு நமக்கும்அவசியம் என்றே நான் நினைக்கிறேன்.

அண்ணாவின் பாராளுமன்ற உரைகள் வெறும் உரைகள் அல்ல - அவை அண்ணாவின் தத்துவங்களைஅவர் கொண்ட திராவிடநாடு/மாநில சுயாட்சி பற்றிய தெளிவான இலட்சியங்களின்தொகுப்புஅண்ணா எல்லா விஷயங்களையும் இந்தகண்ணோட்டத்திலிருந்தே அணுகியிருக்கிறார்வேற்றுமையைஅங்கீகரிப்பது தான் ஒற்றுமையின் வழி என்பதை அவர் நன்குஉணர்ந்திருந்தார்."We are talking about unity; what you are talking is uniformity. Unity can only be possible in diversity."  என்பதை ஒரு பாடமாகவே இந்த தேசத்திற்கு எடுத்துரைத்தவர்அண்ணாஎவ்வளவு உண்மையான வார்த்தைகள்இன்றளவும்நமது போராட்டம் இதை நோக்கித்தானே இருக்கிறதுஇந்திபேசாத மாநிலங்கள் எல்லாம் தன்னுடைய சுயத்தைகாப்பாத்திக்க இன்னிக்கு போராடிட்டு இருக்கிறதை நாமகண்கூடா பார்க்கிறோம்அவர்கள் எல்லோருக்காகவும் நாம எந்தவேண்டிய ஆயுதம்னு ஒண்ணு இருந்தா - அது அண்ணா காட்டியவழிமுறை தான்.

பொருளாதாரம்

அண்ணாவிற்கென்று ஒரு பொருளாதாரப் பார்வை இருந்ததுஅவரது "பணத் தோட்டம்படித்தவர்களுக்கு அது புரியும்இடதுவலது என்றில்லாமல் தனக்கென ஒரு பார்வையைவைத்திருந்தார்பொருளாதார படிநிலை மட்டுமே வளர்ச்சியின்அளவுகோல் அல்ல - சமூக படிநிலைகளும் சேர்ந்தே கணக்கில்கொள்ளப்பட வேண்டும் என்பது தான் அவரோட அடிப்படைகொள்கை.  தொழில்துறை வளர்ச்சிக்கு அவர் எதிரானவர்  அல்லஅனால் அந்த வளர்ச்சி சமூக பயன்பாட்டோடு இணைந்ததாகஇருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்வளர்ச்சிக்கும்வீக்கத்திற்குமான வித்தியாசம் அவருக்கு தெரிந்திருந்ததுஅவருக்குப் பின்னர் வந்த திராவிட ஆட்சிகளும் பெரும்பாலும்அவரது பொருளாதார தத்துவங்களை செயலாக்குவதாகவேஇருந்தனஅதன் எதிரொலி தான் மனிதவள குறியீட்டிலும்சமூகபொருளாதார நிலையிலும் தமிழகம் இன்று முன்மாதிரிமாநிலமாக இருப்பது.

முன்மாதிரி - வழிகாட்டி 

கட்சிகொள்கை என்பதை தாண்டி அண்ணா விட்டு சென்றுஇருக்கும் செய்திகள் நிறைய

கட்சி ஆரம்பித்து 18 ஆண்டுகள் கழித்து தான் ஆட்சியைபிடிக்கிறது திமுக. 18 ஆண்டுகள் என்பது ஒரு சின்ன காலகட்டம்கிடையாதுஅவர் கடந்து வந்த சோதனைகள் சொல்லில்அடங்காதுகட்சியை கட்டுக்கோப்பாய் வைத்திருந்ததிலாகட்டும்கட்சியை கடைக்கோடி வரை கொண்டு சேர்க்க அவர் செய்தமுயற்சிகள்இவையெல்லாம் ஒரு பெரிய படிப்பினை.  தான்போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலில் திமுக 5 இடங்களில்வென்றிருந்ததுஆனால் அண்ணா தோற்றிருந்தார்அடுத்து வந்ததேர்தலில் எதிர்க்கட்சி. 1967-ல் ஆட்சிஇப்படி 18 வருட கடினஉழைப்பினால தான் இங்கே அந்த மாறுதலை கொண்டு வரமுடிஞ்சது.  " Sustained Hard work" என்பதற்கு அண்ணாவேவழிகாட்டி எவ்வளவு நாட்கள் ஆள்கிறோம் என்பது பெரிதல்லஆனால் அந்த நேரத்தில் நாம் என்ன செய்தோம் என்பதைவைத்தே வரலாறு நாம் யாரென முடிவு செய்யும்அண்ணாஆண்டது இரண்டு வருடங்கள் தான் - ஆனால் அதன் தாக்கம்இன்னும் ஒரு நூற்றாண்டு கடந்தும் இருக்கும் என்றால் அது தான்அவரது ஆட்சியின் மதிப்பீடுஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டும்என்பதற்கும் அவரே வழிகாட்டி. "தமிழ்நாடுஅப்படின்னுசொல்லும்போது ஏற்படும் ஒவ்வொரு உணர்விலும் அண்ணாவின்தாக்கம் இருக்கிறது.

குள்ளமான உருவம்எளிய உடை - இவரா இந்த காந்தக்குரலுக்கு சொந்தக்காரர் என்று வியக்க வைக்கும் அண்ணாஅவ்வளவு விரைவாக நம்மிடம் இருந்து விடைப்பெற்று இருக்கக்கூடாதுஆனா அவர் விடைபெற்றாலும் அவர் அமைத்துக்கொடுத்திருக்கிற பாதை அது நம்மை வழிநடத்தும்.

No comments:

Post a Comment