Tuesday 29 December 2020

 ஆட்சிப்பொறுப்பில் அறிஞர் அண்ணா - பிஇரத்தின சபாபதி

 

மத எதிர்ப்பு

 

அண்ணாவின்‌ மத எதிர்ப்புச்‌ சிந்தனைகள்‌ இந்துமத எதிர்ப்புசிந்தனைகளாகவே வெளிப்படுகின்றனஇந்துமதம்‌, பார்ப்பனசாதியின்‌ உயர்விற்காக அவர்களால்‌. உருவாக்கப்பட்டதென்பதைதந்தை பெரியார் ‌ தெளிவுப்படுத்தியுள்ளார்‌ (96, பக்‌.1347-1420)

 

டாக்டர்‌ அம்பேத்காரும்‌ அக்கருத்தை தமது: ஜாதியை ஒழிக்க வழிஎனும் நூலில் விளக்குகிறார்‌(92,ப.28).

 

அண்ணாவின்‌ பார்ப்பனிய எதிர்ப்பும்‌ இந்துமத எதிர்ப்பாகஅமைகிறதுஅறிவுக்குப்‌ பொருந்தாமல்‌ மத அடிப்படையில்‌ மக்கள்‌ மேற்கொள்ளும்‌ விழாக்கள்‌, சடங்குகள்‌, பழக்கவழக்கங்கள்‌ ஆகியனவற்றை எதிர்ப்பதாக அமைகிறது.

 

இந்துத்‌ திருமண முறைஆரியச்‌ சார்பானதென்றும்‌ அதைநீக்குவதன்வழித்திராவிட இனம்‌ தன்மான உணர்வும்‌ உயர்வும்‌ பெற்று மேன்மையடைய முடியும்‌ என்றும்‌ கருதியே தன்மானத்‌ திருமணமுறை நாடெங்கும்‌ பரவிடப்‌ பணியாற்றியவர்‌ தந்தைப்‌ பெரியார்‌ அவர்‌ வழிநின்று,

 

ஆரியத்திற்கு அடிமைப்பட்டதால்‌ பண்புகெட்டுப்போனதிராவிடசமுதாயத்தில்‌ புத்தறிவு புகட்டும்‌ முறை …..‌ (79,ப.34)

 

எனத் தன்மானத்‌ திருமணமுறைச்‌ சிறப்பினைக்‌ கூறிய அண்ணாதமிழ்நாட்டின் முதலமைச்சராய்ப் பொறுப்பேற்றவுடன்சீர்திருத்தத் திருமணங்களைச் சட்ட ஏற்பு வழங்கி அத்திருமணமுறையினை மக்களிடை ஊக்குவிக்க 'இந்து திருமண (தமிழ்நாடுதிருத்தசட்டம்கொணர்ந்தார். (64,பக்‌.644-649).

 

'இந்து திருமண (தமிழ்நாடு திருத்தசட்டவரைவுபற்றியகருத்தாடல் சட்டமன்றப் பேரவையில் நடைபெற்றபோதுகருத்தாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்ப்பன உறுப்பினர்ஒருவர்அச்சட்டம் இந்துக்களை ஒடுக்கும் வகையில் அமைந்ததுஎன்றும் அதனால் புனிதத் தன்மையுடைய இந்துமதக்கோட்பாடுகள் நசுக்கப்படுகின்றன என்றும் கருத்துரைவழங்கினார் (54,பக்.639-640). 

 

அதற்கு அண்ணா அளித்த மறுப்புரை:

 

நம்முடைய நண்பர்... திரும்பத் திரும்ப உங்களுக்கு இந்துதானாகிடைத்தான்அவன் தலையிலே குட்டுகிறீர்களே என்றார் இந்துசமுதாயத்தை மாத்திரம் பிரித்துக் கொள்ள வேண்டி அவசியம்என்ன வருகிறதென்றல்எல்லா மார்க்கங்களையும் விட இந்துமார்க்கத்தில் தத்துவத்தைப் பொறுத்த வரையில் விடப்பட்டதுஒன்றுமே இல்லை...... உண்மையான இந்த திருத்தத்திற்குப்பயப்படக்கூடாது என்று சுவாமி விவேகானந்தர் சொன்னதாகநினைவு... ஆகையால் தலைப்பைப் பார்த்து இது இந்துவுக்குத்தானா என்று கவலை கொள்ளத் தேவையில்லை... (உறுப்பினர்சிறந்த நண்பர்முதன் முதலில் அவர் பெயரைச் சொன்னதும் இதுஇந்துப் பெயர் என்று கூட என்னுடைய நினைவுக்கு வரவில்லை.

அவர் ஒரு இந்துவாக இருப்பார் என்று நினைக்கவில்லைஅந்தப்பெயர் அப்படி இருந்ததுஆனால் அவர் எனக்குஅறிமுகமான பிறகு தான் அவர் நம்முடைய இனத்தைச் சார்ந்தவர்என்று நினைவே வந்ததுமுதன் முதலில் ஆங்கிலோ இந்தியரின்பெயர் என்று தான் நினைத்தேன் (54, பக்.645). இங்குபார்ப்பனர்களை அணைத்துப் பார்ப்பனிய நடைமுறைகளைக்களைய முனைவதைக் காணலாம்தமது கருத்துக்கு வலுவூட்டபார்ப்பன சாதியினராலும் போற்றப்படுகின்ற சுவாமிவிவேகானந்தரின் மொழிகளை அரணாகக் கொள்வது, 'பார்ப்பனர்களாலேதான் பார்ப்பனியத்தை ஒழிக்க முடியும்’ என்றசிந்தனையைச் செயற்படுத்தும் நெறியாகும்.

 

'தன்மானத் திருமணச் சட்டம்என்ற புதியதோர் சட்டம்கொணராமல் இந்து திருமண (தமிழ்நாடு திருத்தசட்டம்எனக்கொணர்ந்தமையால் இந்து திருமணமுறைக்குப் பதிலாகத்தன்மானத் திருமண முறையை அண்ணா ஊக்குவிக்கிறார்என்பதை அறியலாம்தமதுஇந்துமத எதிர்ப்புணர்வைஎதிர்ப்பாளர்களும் ஏற்றுக் கொள்ளும் வபாதாளப் பிரவேசம்செய்யச் சொன்ன தாகவும் வைக்கப்பட்டார்கள் என்பதாகவும்திரும்பி வந்தப் பிறகு வகையில் பதிலுரை தருகிறார்.

 

என்னைப் பொறுத்த வரையில் என்னுடைய நண்பர்களைப்பொறுத்த வரையில் ..... இதைஇந்து திருமண (தமிழ்நாடுசட்டத்தை நாங்கள் மிகச் சாதாரணமான சீர்த்திருத்தம் என்றுகருதவில்லைஎத்தனையோ ஆண்டுகளாகஎங்கள்உள்ளத்திலே உறங்கிக்கொண்டிருந்தஎத்தனையோ இரவுகள்,எத்தனையோ பகல்கள் இப்படி ஒரு சட்டத்தை உருவாக்கமுடியுமா என்று எண்ணிக்கொண்டிருந்த எண்ணத்திற்கு.... சட்டப்பாதுகாப்புத் தரவேண்டும் என்பதற்காக இந்தத் திருத்தம்கொண்டுவரப்படுகிறது (64, ப.646), எனத் தன்மானத்திருமணமுறை நாட்டில் பரவுவதற்காக நீண்ட காலமாகத் தாம்கொண்ட ஏக்கம் பற்றிக் குறிப்பிடுகிறார்.

 

மேலும் தன்மானத் திருமணமுறை தமிழ்ப் பண்பாட்டிற்குஉகந்தது என்றும்அது பண்டையத் தமிழகத்தில்நிலவியிருந்ததை தமிழறிஞர்கள் இலக்கியச் சான்றுகளுடன்விளக்கியுள்ளனர் என்றும் சட்டமன்றப் பேரவைஉறுப்பினர்களுக்கு எடுத்துரைத்துச் சட்ட ஏற்பின்இன்றியமையாமையை வலிவுறுத்துகிறார்இவ்வாறல்லாமலும்மதஎதிர்ப்புச் சிந்தனைகள் மதப் பற்றாளர் போற்றும்இலக்கியங்களுக்குத் திறனாய்வுக் கருத்துகள் உரைக்கும்நெறியிலும் வெளிப்படுகின்றன.

 

இராமாயணம் அண்ணாவின் வன்மையான எதிர்ப்புக்கு உட்பட்டநூல் அது திராவிடப் பண்பாட்டைக் குலைத்து ஆரியப்பண்பாட்டைப் புகுத்தி தம் இனப் பெருமையை நசுக்கியது எனஉணர்ந்து தம் வன்மைமிகு எதிர்ப்பைத் 'தீ பரவட்டும்', ‘கம்பரசம்ஆகிய நூல்களில் தெரிவித்துள்ளார்அத்தகையவன்மையைச்சட்டமன்ற உரைகளில் காண இயலவில்லைமென்மைப் போக்கில் அவருடைய எதிர்ப்புச் சிந்தனைகளைவெளிப் டுத்தியுள்ளார்.

 

இராமாயணத்தில் சீதையைப் போன்று கஷ்டப்பட்ட பெண்ஜென்மம் வேறு எதுவும் இல்லை என்று தெரிகிறதுஅவர்கள்இன்பமாக வாழ்ந்துகொண்டிருக்க வேண்டிய நேரத்தில்வனவாசத்திற்கு அனுப்பப் பட்டார்கள் என்பதாகவும்வனவாசத்திலே கூட இராவணனால் எடுத்துச் செல்லப்பட்டச்சிறை வாசத்திலே வைக்கப்பட்டார்கள் என்பதாகவும் திரும்பிவந்தபிறகு பாதாளப் பிரவேசம் செய்யச் சொன்ன தாகவும் தாய்க்குலத்தின் பட்டு என்று சொல்வார்களானால் என்றுபெயர்வைத்திருப்பதால் சொல்லப்படுகிறது... (சிரிப்பு). இந்துசமுதாயத்திற்குச் சீதைதான் எடுத்துக் காட்டு என்றுசொல்வார்களானால் தாய்க் குலத்தின் மீது அவர்களுக்குஇருக்கும் அக்கறையற்ற தன்மையைத்தான் அதுஎடுத்துக்காட்டுகிறது (55, ப.389),

 

அண்ணாவின் இத்திறனாய்வுமதஎதிர்ப்புச் சிந்தனையைநெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தும் பாங்காகும்இப்பாங்கிற்கு, 'சமுதாயத்தில் ஊறியிருக்கும் படியான உணர்ச்சி மதஉணர்ச்சி' (7, ப.28) எனவும் 'மக்களின் மனநெகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கவேண்டும்' (17,ப.379), எனவும் அவர் கருதியமை காரணமாகஅமைகிறதுஅவரது மதஎதிர்ப்புச் சிந்தனைகளில் நெகிழ்ச்சிஉண்டுதளர்ச்சி இல்லை.

 

அரசு அலுவலகங்களில் கடவுள் படத்தை அகற்றவேண்டும் எனஅண்ணா ஆட்சிக் காலத்தில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.அண்ணாவின் ஆட்சி மீது நம்பிக்கையின்மைமொழிவுக்கருத்தாடல் கோரியவர்கள்தங்கள் கோரிக்கைக்குஅச்சுற்றறிக்கை விட்டமையையும் ஆட்சியின் மீதுநம்பிக்கையின்மைக்கு ஓர் ஏதுவாகக் காட்டினர்கருத்தாடல்நிகழ்ச்சியின் இறுதியில் அண்ணா மத எதிர்ப்பாளர் அல்லர் என்றுகூறினாரேயன்றி மதநம்பிக்கையுள்ளவர் எனக் கூறவில்லைபதிலுரையின் பிற்பகுதியில் மத ஆதிக்கத்தை ஆட்சிஅதிகாரங்களால் மாற்ற முடியாது என்றும் இடையறாத கருத்துப்பரப்பும் பணியாலேதான் மாற்ற முடியும் என்றும்கருத்தளித்துள்ளார் (64, பக்.423-426).

 

பாலசுப்பிரமணியம் என்று பெயர் வைத்திருப்பதால் அவர் முருகன்கதையை நம்புகிறார் என்றா பொருள்சங்கரைய்யா என்றுபெயர் வைத்திருப்பதால் முக்கண்ணனை நம்புகிறார் என்றாபொருள்அது பாமர மக்களுக்காக இட்டுக் கட்டப்பட்ட கதைஎன்று அவர்களுக்குத் தெரியும்...... அதே முறையில்தான் நாங்கள்இந்தக் காரியத்தைச் செய்கிறோம் (64, ப.426), என்றஉரைப்பகுதியும் அண்ணாவின் மதஎதிர்ப்பைக் குறிப்பாகவெளிப்படுத்துகிறது.

 

'மதத்தின் மீது நம்பிக்கையற்றவர்கள் மதக் கடவுள்கள்பெயர்களைக் கொண்டிருக்கிறார்கள்மதத்தின் மீதுநம்பிக்கையில்லாமல் கடவுள்கள் படங்களை அரசுஅலுவலகங்களில் வைத்திருக்கிறோம்: அது முறையாகாதுஎனக்கருதியே அண்ணா

 

கடவுள் மறுப்பு

 

கடவுளைத் தோற்றுவித்தவர்களின் தன்மையினை என்பதைக்கற்பனையும் நகையும் கலந்துஆதிகாலத்தில் மனிதன் ஓயாதஅலைகளைப் பார்த்தான்அதன் சீற்றத்தால் நாடு அழிவதைக்கண்டான்கடும் புயல் வீசிப் பெரும் மரங்கள் சாய்வதைக்கண்டான்.....

 

ஏன் இவைகள் ஏற்ப்படுகின்றனஎன்று புரியாது அச்சத்தில் நின்றமனிதன் முன்னே ஒரு எத்தன் நின்றான்அவை என்ன தெரியுமாஅதுதான் ஆண்டவன் செயல் என்று அந்த எத்தன் கூறினான்அந்த ஆதி மனிதன் முன்னே நின்ற எத்தன்தான் முதலிலேதோன்றிய பார்ப்பான் (187, ப.6), எனும் மொழிகளில் அண்ணாதெரிவிக்கிறார்இம்மொழிகள்பார்ப்பனிய எதிர்ப்புச்சிந்தனைகள் வழி அண்ணாவின் கடவுள் எதிர்ப்புச் சிந்தனைகள்தோன்றியவை என்பதை விளக்கிநிற்கின்றன.

 

இயற்கையின் பேராற்றல்தான் கடவுள் என அவர் ஏற்கமறுப்பதையும் மேலும் விளக்கி நிற்கின்றன. 'கடவுள்மனிதஆற்றலுக்கு அப்பாற்பட்டதோர் ஆற்றல்என்பது கடவுள்நம்பிக்கை உடையோர் யாவரும் கொள்ளும் ஒருமித்தகருத்தாகும்கடவுள் மனிதனின் இயக்கத்திற்கும் சிந்தனைக்கும்காரணமான ஓர் ஆற்றல் என்பதை, 'ஆட்டுவித்தால் ஆரொருவர்ஆடாதாரே' (111, ப.619), எனும் திருநாவுக்கரசர் மொழிகளும், ‘யான் எனது என்றவரைக் கூத்தாட்டுவனாகி (112, ப.57), எனும்மாணிக்கவாசகர் மொழியும் எடுத்துரைக்கின்றனஇக்கருத்தையும் அண்ணா ஏற்காதவராவார்.

 

எனக்கும் மேலே ஒருவர் சொல்லுகிறார் என்பதைஒப்புக்கொள்கிறேன்அது (தலையைக் காட்டி) இங்கேதான்(56,ப.24), என அவருரைத்த மொழிகள் 'கடவுள் மனிதனைஇயங்க வைக்கிறார் என்னும் கருத்தை மறுப்பதாகிறது.

 

'கடவுள் கொள்கை மனித நல நாட்டத்தோடு உருவாக்கப்பட்டகொள்கை ஆகுமா?' எனும் வினாவினை எழுப்பி அதற்குவிடையாக, கடவுள் கொள்கையும் நம்பிக்கையும் மக்களை நல்லவழியிலே அழைத்துச் செல்வதற்குத்தான் என்று கூறப்படுவதுமுழு உண்மையாக இருக்குமானால் நல்ல நெறிபற்றியும் அதன்படி ஒழுகிவரும் தனிமனிதனும் சமூகமும் அமைந்திருக்கும் ஏற்றம்குறித்தும் வலியுறுத்தும் தீர்மான நடவடிக்கைகள்மேற்கொண்டிருப்பார்கள்ஆனால் நடைபெற்றுக்கொண்டிருப்பது அது அல்லவீண் விரயம்வெற்றொலி நிரப்பியஆரவாரம்விரும்பாத சடங்குகள் (102,ப.9), எனக் கூறுமிடத்துகடவுள் கொள்கை மனித நலநாட்டமில்லாதது என்பதைஅண்ணா வலியுறுத்துகிறார். 'தற்போது நிலவிவரும் கடவுள்கொள்கைகள் மனித நல உயர்விற்கு எவ்வகையிலும் ஆணைநிற்காத கொள்கைகள்என்பதை உரிப்பொருளாகக்தோற்றுவித்த பார்ப்பனியத்திற்கு எதிர்ப்பாகப் பயன்படத்தக்கமொழியாய்த் திருமூலர் மொழிகள் அமைகின்றனஅப்பயன்பாடுவேண்டும்' (17, ப.379), என்ற உள்ளப்பாங்கிலுமே அண்ணாகொண்டு 'கடவுள் தண்டிப்பார்', 'கடவுள் விஷயம்ஆகியபடைப்புகளையும் தந்துள்ளார்.

 

அண்ணாவின் சட்டமன்ற உரைகளில் கடவுள் கொள்கை பற்றியவிரிவான விளக்கங்களைக் காண இயலவில்லையாயினும் அவர்கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை அற்றவர் என்பதைத் தெரிவிக்கும்உரைப்பகுதிகள்,

 

நீங்கள் (சட்டமன்ற உறுப்பினர்கள்வணங்கும் ஆண்டவன்பெயரால் கேட்கிறேன் (5,ப.325),

என்பதுவும்நான் பிரார்த்தனையில் நம்பிக்கை உள்ளவன் என்றுகருதத் தேவையில்லை (59,ப.25), என்பதுவும் குறிக்கத்தக்கனஎனவே பார்ப்பனிய எதிர்ப்புகளாக வெளிப்படும் கடவுள் மறுப்புசிந்தனைகளுக்கு அண்ணாவின் சட்டமன்ற உரைகள்அரணாகின்றனகடவுள் கொள்கையினை ஏற்பவர் என்பதற்குச்சான்றுகள் இல்லை

 

திருமூலரின் 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் (110, ப.338),எனும் மொழிகளை அண்ணா பன்முறை தனதுஎழுத்துக்களிலும் பொது மேடைகளிலும்பயன்படுத்தியமைக்கொண்டு அவர் ஒரு கடவுள் உண்டு எனும்கொள்கையை ஏற்றவர் எனக் கருத இடமளிக்கிறது.

 

சமுதாயத்தில் சாதியமைப்பையும் பல கடவுள்களையும்தோற்றுவித்த பார்ப்பனியத்திற்கு எதிர்ப்பாகப் பயன்படுத்தக்கமொழியாய்த் திருமூலர் மொழிகள் அமைகின்றனஅப்பயன்பாடுகருதியும் 'மக்களின் மன நெகிழ்ச்சிக்கு இடந்தரல் வேண்டும்' (17, ப. 379), என்ற உள்ளப்பாங்கிலுமே அண்ணா அம்மொழிகளைஎடுத்தாள்கிறார் எனக் கொள்ளலாம்.   

 

கடவுள் படங்களை அகற்றும் சுற்றறிக்கையைஅலுவலகங்களுக்கு அனுப்ப வழிசெய்தார் என்பதுதெளிவாகிறது.

 

ஆதிக்க எதிர்ப்பு

 

ஒரு கொள்கையின் நிலைபேறுஅக்கொள்கையாளர்கள்சமுதாயத்தில் செல்வாக்குப் பெற்றிருப்பதைப் பொறுத்தும்அமையும்பார்ப்பனர்கள் சமுதாயத்தில் உள்ள சாதி அமைப்பால்உயர்படியில் இருப்பவர்களாதலால் சாதி முறையை ஒழிப்பதுபார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதாகிறது.

 

சாதியமைப்பு நீக்கப்படுதல் வேண்டும் என்பது இந்நாட்டில்இனஉயர்வுப் பணியில் ஈடுபட்டோர் அனைவரும் கருதும்ஒருமித்த கருத்தாகும்சாதியமைப்பு நீக்கப்பட்டால்பார்ப்பனர்களின் உயர்வுத் தன்மை நீங்கிச் சமுதாயத்தில் உயர்வுதாழ்வு என்ற வேற்றுமை நிலை அகலும் எனக் கூறிப்பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே பார்ப்பனிய எதிர்ப்புக் குரல்எழுந்துள்ளது.

 

சாதியை ஒழிப்தைவிட தீண்டாமையை ஒழிப்பதற்கு வேறு

மார்க்கமில்லை (11,ப.336),

 

எனச் சாதியொழிப்பில் வன்மை காட்டிய அண்ணா, ‘சாதியைஏற்படுத்தியவர்கள் திருந்திவிட்டார்கள்மற்றவர்கள் சாதியைவைத்துக் கொண்டிருக்கிறார்கள் (4,ப.72) எனச் சட்டமன்றப்பேரவையில் உரைத்துள்ளார்இங்கேயும் ‘பார்ப்பனர்களால்தான்பார்ப்பனியத்தை ஒழிக்கமுடியும்' (7,ப.68) எனும் கருத்தைமனங்கொண்டே பார்ப்பனர்களைத் தம் கொள்கைவழி ஈர்த்துச்சாதியை ஒழிக்க எண்ணுகிறார்.

 

உடலில் இருக்கிற சிரங்கு கொஞ்சம் ஆறிவருகிற நேரத்தில் அதுமூடுவதற்குத்தான் மருந்து கொடுக்கவேண்டும்அல்லாமல் மேலும்கிளறினால் அது பெரிய புண்ணாகும் (52,ப.301),

 

எனும் உவமைத் தொடரும் நோக்கத் தக்கதுதந்தை பெரியாரின்அதிர்ச்சி வைத்தியம்' (7,ப.30) பார்ப்பனீய எதிர்ப்புணர்ச்சியைமக்களிடைப் பரப்பியதன் பயனாகப் பார்ப்பனியக் கொள்கைகள்வலுவிழந்து வருகின்றனசாதி வேற்றுமைகள் குறைந்துவருகின்றனஇந்நிலையில் புண்ணைக் கிளறிவிடாமல்அரிப்பைத் தாங்கிக் கொண்டு மருந்து தடவுவது போன்ற செயல்பார்ப்பனர்களை அணைத்துச் செல்வதாகும் என்றும் அண்ணாகருதுவதை மேற்காட்டிய மொழிகள் உணர்த்துகின்றன.

 

மது விலக்குச் சிந்தனை

 

பொருளாதார நிலையில் பின்தங்கிய குடும்பங்களில்காணப்படுவதாகும்தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில்குடிப்பழக்கத்திற்கு அடிமையானோர் பெரும்பாலும் குறைந்தவருவாயினர் என்பதும் அவர்கள் தங்கள் வருவாயில்இருபத்திரண்டு விழுக்காட்டினை மது குடிப்பதற்கேசெலவிடுகின்றனர் என்பதும் அரசுக் குழு ஒன்று தந்த புள்ளி விவரஅறிக்கையாகும் (221, ப.226).

 

அக்கணக்கெடுப்பினையும் ஒப்பு நோக்கிஅண்ணாவின்மதுவிலக்குச் சிந்தனைகள் சமுதாயத்தின் பொருளாதார உயர்வுகருதியனவாகின்றன என்பதை அறியமுடிகிறதுமேனாடுகளில்குடிப்பது என்பதற்கும் குடிகாரன் என்பதற்கும் பெருத்த வேறுபாடுகாணப்படுகிறது. drinking என்பதற்கும் drinkardness என்பதற்கும்எழுத்திலே மட்டுமல்ல பொருளிலேயும் வித்தியாசம் இருக்கிறதுஅந்த அளவு வித்தியாசம் நம் நாட்டில் இல்லைஆகையால்மதுவிலக்குச் சட்டம் இந்நாட்டில் மிகவும் தேவை (10, ப.325),

 

என மக்களின் மனநிலைப்பற்றிய சிந்தனையின் அடிப்படையிலும்மதுவிலக்கின் இன்றியமையாமையை அண்ணா உணர்த்துகிறார்.

 

மதுப்பழக்கம் ஒரு வெறியாக அமைந்துவிட்டது. ‘வெறிகளைத்தடுக்கச் சட்டம் தேவை' (40,ப.475), எனக் கூறும் அண்ணாவின்மொழிகள் மது விலக்குச் சிந்தனையோடு இணைந்தனவாகும்அறிவுத் தெளிவு பெறாத மக்கள் மனக்கட்டுப்பாடின்றிருக்கும்நிலையை அண்ணா அறிகிறார்அளவின்றிக் குடித்துவிட்டுக்குடிப்பழக்கத்தால் தவறிழைக்கும் மக்களை நெறிப்படுத்தமதுவிலக்குச் சட்டம் மிகவும் தேவை என்பது அண்ணாவின்உறுதியான எண்ணமாகும்.

 

சாதி ஒழிப்பு

 

நம்நாட்டில் தலைவிரித்தாடி மனித வர்க்கத்திற்கு தலையிறக்கஅவமானம் விளைவித்துவரும் சாதியமைப்பு உயர்வுதாழ்வுகளையும் சமூக அநீதிக் கட்டுப்பாடுகளையும்ஒழிக்கவேண்டுவது மனித வர்க்கத்திற்கு முதற் கடமையாகிறதுமுதலில் 'அண்டாமை', ‘தீண்டாமை', 'நுழையாமை', 'உண்ணாமைவித்தியாசத்தை ஒழித்தே தீருவோம். (11,ப. 335)

 

எனக் கூறியுள்ளார்தாழ்த்தப்பட்டோருக்கு இழிநிலைஎவ்வாறெல்லாம் ஏற்படுகிறது என்பதை மிகச் செறிவாக நான்குமைஈற்றுச் சொற்களால் அண்ணா தெரிவிக்கிறார்.

 

சாதியமைப்புத்தான் தாழ்த்தப்பட்டோரின் துயர நிலைக்குப்பெரிதும் காரணமாகிறது என்பதாக அண்ணா உணர்ந்து அதனைஒழிப்பதால்தான் அவர்களுடைய இழிநிலையைப் போக்க முடியும்எனக் கூறுகிறார்ஆகவே சாதிபொழிப்புப் பணியும்தாழ்த்தப்பட்டோர் உயர்வுப் பணியும் ஒன்றோடொன்றுபிணந்துள்ளன என்பது அண்ணாவின் எண்ணமாகும்இதனை

 

சாதியை ஒழித்தாலொழிய தீண்டாமையை ஒழிப்பதற்கு நல்லமார்க்கம் இல்லை (11,ப.336),

 

எனும் அவரது சட்டமன்றப் பேரவை உரை மொழிகளும்வலியுறுத்துகின்றனதாழ்த்தப்பட்டோர் உயர்வு எண்ணிஇருவகைப் பணிகளை ஆற்ற வேண்டுவதன தேவையினைஅண்ணா சிந்திக்கிறார்ஒன்று உயர்வுநோக்கிய பணிமற்றொன்று ஒழிப்பு கருதிய பணிதன்மையால் வேறுபட்டும்நோக்கால் ஒன்றுபட்டும் அமைகின்ற இரண்டனுள்முதற்பணியாற்ற தாழ்த்தப்பட்டோருக்குச் சமுதாயத்தில் பலதுறைகளிலும் முன்னேறும் வாய்ப்புகள் நல்கவேண்டும் என்கிறார்(11,ப.334). 'சமப்படுத்துகின்ற பணிக்கே சலுகைகள்' (40, ப.475) என்ற அறிவுரையும் தருகிறார்இவ்வறிவுரைசாதியின் பெயரால்சலுகைகள் வழங்குவது சாதிவேற்றுமையை ஊக்குவிக்குமேஅன்றி நீக்காது எனக் கருதுவோருக்குத் தரும் மறுப்பினைக்கொண்டதாகும்.

 

தாழ்த்தப்பட்டோரின் இழிநிலைக்குப் பிற சாதியினரும்பொறுப்பாவார்கள் என அண்ணா கருதியதை

 

அவர்களைத் (தாழ்த்தப்பட்டோர்களைதாழ்த்தி ஒடுக்கியவர்கள்யார் என்று அலசிப் பார்க்கிற சமயத்தில் ஒவ்வொரு காலத்திலும்நாம் எல்லோருமே அந்தப் பெருங்குற்றத்தைப் புரிந்தவர்களாகஇருக்கிறோம் (4,ப.66), எனும் மொழிகள் தெரிவிக்கின்றன

 

குறிப்பிட்ட ஒரு சாதி மக்களுக்கு இழிநிலை வந்துற மற்றஅனைத்துச் சாதியினரும் காரணமாக இருந்தமை கொண்டே, 'தாழ்த்தப்பட்டோர்என்ற அமைப்பு மனித வர்க்கத்திற்கு'தலையிரககம்விளைவிப்பதாக அவர் கருதுகிறார்

 

தாழ்த்தப்பட்டோர்களுக்கு வைணவ மதத்தவரால்திருக்குலத்தவர்’ என்று பெயர் சூட்டப்பட்டது (157,ப.12): திராவிட இயக்கத்தவரால் ஆதிதிராவிடர்என்ற பெயர்அளிக்கப்பட்டது (101,ப.68): காந்திய நெறியாளர்களால்அரிசனங்கள்என்ற புனையப்பட்டதுஒவ்வொரு சூழலில்தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி இப்பெயரளிப்புகள்ஏற்பட்டதெனினும் அவற்றால் மட்டுமே அவர்களின் நிலைஉயரவில்லை என அண்ணா கருதியை, 25 ஆண்டுகளுக்கு ஒருதடவை அவர்களுடைய பெயரில் மாத்திரம் ஒரு மாற்றத்தைப்பார்க்கிறோமே தவிர அவர்களுடைய நிலையில் குறிப்பிடத்தக்கமாறுதல் எதுவும் ஏற்படவில்லை (11,ப.334),

 

எனும் அவரது சட்டமன்றப் பேரவை மொழிகள் தெரிவிக்கின்றனபெயர் மாற்றங்களால் மட்டுமே வாழ்க்கை நிலை உயர்வு பெறாதுஎனக் கருதிய அண்ணாஅவர்களின் உயர்விற்காக அவர்களோடுபிற சாதியின் கலந்து உறவாடிக் களிக்கத்தக்க அளவில்அவ்வப்போது பொது விழக்கள் கொண்டாடுதல் வேண்டும் என்றகருத்தினைச் சட்டமன்றப் பேரவையில் தெரிவித்துள்ளார்(41,ப.415). அவ்விழா அமைய வேண்டிய பான்மை பற்றி, சேரியில்உள்ளவர்கள் ஊருக்குள் (பிற சாதியினர் வாழும் இடத்திற்குவருவதற்கும் ஊரில் இருக்கிறவர்கள் சேரியில் (தாழ்த்தப்பட்டோர்வாழும் உடங்களில் ) உள்ள வீடுகளுக்குப் போவதற்கும் சேரியில்நடமாடும் குழந்தைகள் ஊரில் குழந்தைகளோடு கைகோர்த்துவிளையாடுவதற்கும்முடிந்தால் அன்றைய தினம் ஊரில்உள்ளவர்களும் சேரியில் உள்ளவர்களும் ஒன்றாக போஜனம்நடத்துவதற்கும் வகை செய்தால் நிச்சயமாக அவர்களுடையமதிப்பு உயரும்அதன்மூலம் நாம் நல்ல பலனை எதிர்பார்க்கமுடியும். (41,ப.415),

 

எனத் தெரிவிக்கிறார்அண்ணா கூறும் விழாக்கள் முறையாகநடைபெறின் 'அண்டாமை', 'தீண்டாமை', உண்ணாமை’, 'நுழையாமைஎனும் கொடுமைகள் நீங்க வாய்ப்புண்டுவிழாபற்றிய அவரது கருத்துரையில் 'வகைசெய்தால் என்பதுநடைமுறைச் சிக்கலை எடுத்துரைப்பதாகிறதுஅதைத்தவிர்க்கும் முறையில் 'சாதிப்பிணி அகல கலப்பு மணமேசிறந்தது' (22,ப.377),

 

எனும் பிறிதொரு சிந்தனையைத் தருகிறார்அவர் வலியுறுத்தும்கலப்புமணம்வெவ்வேறு சாதியைச் சார்ந்தமணமக்களுக்கிடையே நடைபெறும் திருமணமன்று:மணமக்களில் யாரேனும் ஒருவர் தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்தவராக இருக்க நடைபெறும் திருமணமாகும் (205, ப.102). 

 

இத்தகைய கலப்புத் திருமணம் புரிந்தோர்க்குபரிசு வழங்கும்திட்டத்தைத் தம் ஆட்சிக்காலத்தில் கொணர்ந்தது (51, ப.484) தாழ்த்தப்பட்டோர் உயர்வு கருதியேயாகும்.

 

மொழிவளர்ச்சி சிந்தனைகள்

 

மொழி எண்ணுவதை எடுத்துரைக்கும் கருவியாக மட்டுமல்லாதுஎண்ணத்தை உருவாக்கும் கருவியாகவும் அமைந்துவாழ்க்கையினை உயர்த்திடவும் உணர்ந்திடவும் உதவுவதாகக்(80,ப.129-130)

 

கருதியவராகையால் பண்டைச் சான்றோர்களின் எண்ணக்குவியலாய்த் திகழும் இலக்கியங்களை மக்கள் அனைவரும்அறிதல் வேண்டும் என விழைந்தவர் அண்ணாதமிழகத்தின்பெருமைதமிழ்மொழியில் தோன்றிய இலக்கியங்களின்வாயிலாக வெளிப்படுவதைத் தமது இதழ்களில் வாயிலாகவிளக்கியுள்ளார்.

 

தமிழ்நாடு என்று சொன்னவுடன் சிலப்பதிகாரம்சீவகசிந்தாமணிதிருக்குறள் பற்றியும் அகநானூறு பற்றியும் இரண்டாயிரம்ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடம் (தமிழ்நாடுஎப்படி எழிலோடுவிளங்கிற்று என்பது பற்றியும் ...... நினைப்பு எழவேண்டும்(66,ப.858), எனச் சட்டமன்ற மேலவையில்உரைத்துள்ளார்.நாட்டுணர்வும் இலக்கியப்பெருமிதமும்இணைந்து மக்களிடையே தோன்ற வேண்டும் என்றுவிரும்புகிறார்இலக்கியப் பெருமையினையும்தொன்மையினையையும் புலவர்கள் மட்டும் உணர்ந்திருந்தால்போதாதுமக்களும் உணரவேண்டும் என்று கருதுகிறார்அதன்செயல்வடிவமே அவர்தம்மாட்சிக் காலத்தில் இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு நடக்கும் முறைமிகு திட்டமும் ஊக்கமும்தந்தமையாகும்.

 

முதல் உலகத் தமிழ் மாநாடு மலேசிய நாட்டில் நடைபெற்றதுஅதற்கும் 1968ஆம் ஆண்டு சனவரித் திங்கள் சென்னையில்நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டிற்கும் பெருத்தவேறுபாடு உண்டுமுதல் மாநாடு புலவர்களுக்கும்ஆராய்ச்சியாளர்களுகும் மட்டுமே இடமளித்ததுஇரண்டாம்மாநாட்டில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ளத்தக்கநிகழ்ச்சிகள் இடம்பெற்றனஅம்மாநாடு நடைபெற்ற நாட்களில்சென்னை மாநகர் திருவிழாக் கோலம் கொண்டது. 'விழாமலிமூதூர் என்ற சங்க இலக்கியத் தொடரை நினைவுபடுத்தினஅம்மாநாட்டு நிகழ்ச்சிகள்.

 

 

நாடு நமக்கென இருப்பது போலவே மொழி நமக்கென உள்ளதுஎன்னும் பெருமித உணர்வை மக்கள் உள்ளத்தில் ஊட்டியதுஅம்மாநாடுமொழி உணர்வை தமிழ்ப் பொதுமக்களும்கொண்டிருந்தனர் என்னும் எண்ணத்தை அம்மாநாடுஉலகோர்க்குத் தெளிவுபடுத்தியதை, மாநாடு பற்றிய படம்தமிழகத்தில் மட்டும் அல்லாமல் உலகத்தின் எல்லாத்தலைநகரங்களிலும் காட்டப்பட்டதுநியூயார்க்கிலேவாஷிங்டனிலேலண்டனிலேபாரிசிலேரோம் நகரிலேகாட்டப்பட்டுவெளி நாட்டுக்காரர்கள் எல்லாம் இவ்வளவுமொழிப்பற்று உங்களுக்கு இருக்கிறதா என்று வியந்துபாராட்டினார்கள் (64, ப.408),

 

எனும் உரைப்பகுதி காட்டுகிறதுமக்கள் மொழிக்கெனவிழாக்காண்பதுஅதனினும் எல்லா நிலை மக்களும்அவ்விழாவில் பங்கு கொண்டு பெருமையுணர்வு பெறுவது மொழிவளர்ச்சிக்குச் சிறந்ததொரு வழியாகும் என்பது அண்ணாவின்மொழிவளர்ச்சிச் சிந்தனைகளில் தலையாயதாகிறது.

 

கலைவளர்ச்சிச் சிந்தனைகள்

 

அண்ணா கலையார்வம் மிக்கவர்பொதுவாழ்வின் தொடக்ககாலத்திலிருந்தே அவருடைய கலையார்வம் அவரதுஎழுத்துகளில் ஒளிர்வதாயிற்றுவரலாற்றுப் பழமையும்பெருமையும் கலைகள் பலவற்றுள்நாடகம்ஓவியம்சிற்பம்ஆகியன தலைமை சான்றவை எனக் கருதும் அண்ணா (198,ப.8) அக்கலைகளின் நிலைப்பற்றி, கலை விஷயமாகக் கொண்டுள்ளகருத்து இதுதான்கலைகள் மக்கள் உள்ளத்திற்கு களிப்பூட்டும்கருவியாக இருப்பின் ஆட்சேபணை கிடையாதுஆனால் ஓர்இனம் மற்றோர் இனத்தை அடக்கியாள உபயோகமாகும்வலையாக இருக்கிறது (78, ப.36), எனக் கலங்கி கூறுகிறார்கலையுலகிலும் அடக்கியாளும் இனமாக ஆரியரையும்அடக்கப்படும் இனமாகத் திராவிடரையும் குறிக்கிறார் (78,ப.36).

 

ஆரியப் பண்பாடுபழக்கவழக்கங்கள்மொழி ஆகியனவற்றின்ஆக்கங்கள் நாடகக் கலையிலும் பதிந்து விட்டமையால்அக்கலையில் ஒரு மாற்றாத்தையும் வளர்ச்சியையும் அவர்விரும்பியதை அவரது பொதுவாழ்வுப் பணியும் சிந்தனைகளும்தெரிவிக்கின்றனநாடகக்கலை வழி அவர் ஆற்றிய பணி பற்றித்தந்தை பெரியார்,

 

நான் பத்துப் பன்னிரண்டு ஆண்டு காலமாகவே சிந்தித்துச்சிந்தித்து ஒன்றும் கைகூடாமல் இப்போது தோழர் அண்ணாதுரைஅவர்கள் துணிவோடு கிளம்பிச் சாயம் பூசிக்கொண்டுமேடையேறிப் பாவலாப் போடவும் அதை ஒரே சமயத்தில் 5000 மக்கள் பார்த்துக் களிக்கும் படியான நிலைஏற்பட்டிருக்கிறதையும் பார்த்து நான் பெருமை அடையாமல்இருக்க முடியாது (118,ப.6),

 

எனக் கருத்தளித்துள்ளார்அண்ணாவின் நாடகக்கலைப்பணிஅவர் குறிப்பிட்ட அடக்கியாளப்படும் இனத்தை விழிப்படையச்செய்ததாக அறியப்படுகிறது.

 

அறிவியல் வளர்ச்சியால் நாடகத்துறை திரைப்படத்துறைவடிவேற்றதுதிரைப்படத்தை திரைநாடகம் எனக் கூறுதல்பொருந்தும்திரைநாடகத் துறையில் தமது கட்சியின் ஈடுபாடுகுறித்து அண்ணாசினிமாத்துறையில் நாங்கள் ஈடுபாடுகொண்டிருப்பது எங்கள் கட்சி நடத்தும் விடுதலைக் கிளர்ச்சிக்குஅது பெரிதும் உதவும் என்ற காரணத்தினால் தான் (58, ப.489),

 

எனச் சட்டமன்றப் பேரவையில் உரைத்துள்ளார்நாடகத்துறையினை விடுதலை உணர்வைப் பரப்பும் சாதனமாகப்பயன்படுத்த அவர் கருதினார்மக்கள் எண்ணங்களைஇணைத்துப் புதிய கருத்துக்களைத் தோற்றுவிக்கும் ஆற்றல்நாடகங்களுக்கு உண்டு என்பர் இங்கர்சால் (23, ப.159). தணிக்கையில்லாமல் தமது பத்துத் திரைப்படங்கள்வெளிவருமாயின் தனித் திராவிடநாடு பெறுவது உறுதியெனஅறை கூவல் விடுத்தார் அண்ணாநாடகம் கருத்துக்களைப்பரப்பும் வலிமை கொண்டது என்பதை இவர்தம் அறைகூவல்விளக்கி நிற்கிறது;

 

ஓவியக் கலையில் அண்ணா மிகுந்த ஈடுபாடு கொண்டவர்அவர்கற்பனை ஆற்றல் மிகுந்த ஓவியங்களைத் தீட்டியவர் (103, ப.22).

 

நாட்டுப்பற்றுஇனப்பற்றுமொழிப்பற்றுபண்பாட்டு மறுமலர்ச்சிஆகியனவற்றின் வெளிப்பாட்டுக்கு ஓவியக்கலைஉறுதுணையாதல் வேண்டும் என்று வலியுறுத்தியவர் அவர் (160, ப.26). அதனால் மாநாடுகள்விழாக்கள் ஆகியபொதுநிகழ்ச்சிகளில் தமிழ்ப்பண்பாடுவீரம்புகழ்இலக்கியப்பெருமை ஆகியனவற்றை உணர்த்தும் ஓவியங்களைத் திறன்வாய்ந்த ஓவியர்களைக் கொண்டு தீட்டி மக்கள் பார்வைக்குவைத்து மனமருள் போக்க எண்ணினார் (163,ப.12),

 

இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஓவியக்கண்காட்சியும் இடம் பெற்றமை 'ஓவியக்கலை உள்ளத்தில்ஊடுருவிச் சென்று உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பும்' (169,ப.25)

 

எனும் அவர்தம் சிந்தனையின் வெளிப்பாடாயிற்று.

 

அரசியல் விழிப்புச் சிந்தனைகள்

 

இனஉணர்வு கருதியஅண்ணாவின் அரசியல்விழிப்புச்சிந்தனைகளை', அரசியல் மறுமலர்ச்சி', 'இன அரசுஅமைப்பு', எனும் இருகளங்களில் காணலாம்.

 

அரசியல் மறுமலர்ச்சி

 

'மறுமலர்ச்சி என்னும் சொல்லுக்கு 'மறுபிறப்புஎனும் பொருள்கொள்வர் (109,ப.6). உலக வரலாற்றில், கி.பி.14ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பண்டைய கிரேக்கஉரோமானியஇலக்கியம்கலை ஆகியனவற்றின் மீது ஏற்பட்டபுத்துணர்ச்சியை இச்சொல் குறிக்கிறது (109,ப.6). அத்தன்மையாகவரலாற்றுப் பெருமையுள்ள முற்கால அரசியல்கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு வளர்க்கப்பட்டசிந்தனைகள் மறுமலர்ச்சி சிந்தனைகளாகக்கொள்ளப்படுகின்றனமறுமலர்ச்சிச் சிந்தனைகள் பழமைநாட்டத்திலிருந்து வேறுபட்டனயாகும். 'பழமை நாட்டம்என்பதுபழமையைஇருந்தவாறே ஏற்றுக் கொள்வதாகும். ‘மறுமலர்ச்சிபழமையின் அடிப்படையில் வளர்வது.

 

முற்காலத்தில் பெருமையுடன் விளங்கிய தமிழகம் இக்காலத்தில்தாழ்வுற்றிருக்கிறது என்பதை,

 

ஒரு காலத்தில் பட்டையும் முத்தையும் உலகிற்கெல்லாம்அனுப்பிவந்த தமிழ்நாடு இன்றையத் தினம் கூலிகளைத்தான்வெளிநாட்டுக்கு அனுப்புகிறது (4,ப.312),

 

என அண்ணா வருந்தியுள்ளார்

 

பெருமையுடன் விளங்கிய தமிழகம் மீண்டும் சிறப்புறல்வேண்டும்என எண்ணுகிறார்எண்ணம் நிறைவேற, அனைவரையும்நாட்டுணர்வு ' மிக்கவராக்க விழைகிறார்.

 

சென்னை மாநிலத்தின் பெயரை இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தில் 'தமிழ்நாடுஎன மாற்றி அமைக்க வேண்டும் என்றதீர்மானம் அரசு சார்பாகத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்கொண்டுவரப்பட்டது (54, ப.650). அத்தீர்மானத்தின் மீதானகருத்தாடலின் முடிவில் அமைந்த மன்ற நிகழ்ச்சியினை சட்டமன்றப் பேரவை நடவடிக்கைக் குறிப்பு கீழ்க்கண்டாவறுதருகிறது (54,ப.661).

 

திரு மாண்புமிகுசிஎன்அண்ணாதுரை:

 

சட்டமன்றத் தலைவர் அவர்களேவரலாற்றுச் சிறப்புமிக்கதீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிற இந்த நன்னாளில்தமிழ்நாடு” என்று நான் சொல்லும்போது “வாழ்க என்று அவைஉறுப்பினர்கள் சொல்வதற்குத் தங்களுடைய அனுமதியைக்கோருகிறேன்.

 

மாண்புமிகு திருசிஎன்அண்ணாதுரைதமிழ்நாடு!

உறுப்பினர்கள்:  வாழ்க!

மாண்புமிகு திருசிஎன்அண்ணாதுரைதமிழ்நாடு!

உறுப்பினர்கள்வாழ்க!

மாண்புமிகு திருசிஎன்அண்ணாதுரைதமிழ்நாடு!

உறுப்பினர்கள்வாழ்க!

 

இத்தகைய 'வாழ்கமுழக்கமிடும் நிகழ்ச்சிசட்டமன்ற வரலாற்றில்முன்னிகழ்வில்லாப் புதிய தாகும்இந்நிகழ்ச்சியை அவர்அமைத்ததன் மூலம் 'தமிழ்நாட்டினர்என்ற பெருமையானஉணர்வை உறுப்பினர்கள் உள்ளங்களில் ஊட்டுகிறார்இழந்தபெருமையினை மீண்டும் பெற்ற உணர்வினை ஏற்படுத்துகிறார்

 

'தமிழ்நாடுஎனும் பெயர் சென்னை மாநிலத்திற்குஇடப்படவேண்டும் என்ற கோரிக்கை சட்டமன்றப் பேரவையில்அண்ணா எதிர்க்கட்சியில் இருந்த காலத்தும்வலியுறுத்தப்பட்டதுஅக்கோரிக்கைக்கு அப்போது சட்டமன்றப்பேரவை உறுப்பினர்கள் 160 பேருள் 127 உறுப்பினர்கள்அப்பெயர் மாற்றத்திற்கு இசைவளிக்காத நிலையிலிருந்தனர் (1, ப.256). ஆனால் அண்ணா முதலைமைச்சர் பொறுப்பிலிருந்தகாலத்தில் எல்லா உறுப்பினர்களும் அப்பெயர் மாற்றத்திற்குஇசைவளிக்கும் மனப் போக்கில் ‘வாழ்கமுழக்கங்கள்எழுப்பியமை அண்ணாவின் மறுமலர்ச்சிச் சிந்தனையின்வெற்றியாகும்

 

இன அரசு அமைப்பு

 

தன்னாட்சி உரிமையுடன் தனிநாடு அமைய அரசியல்இயக்கங்கள் பல இந்தியத் துணைக்கண்டத்தில் விடுதலைக்குமுன்னரும் பின்னரும் தோன்றினஅவ்வியக்கங்கள்மொழிஇனம்மதம் ஆகிய ஏதேனும் ஒன்றின் அடிப்படையில் தன்னாட்சிஉரிமை கொண்ட தனிநாடு பெறச் செயல்பட்டபோதிலும்'முஸ்லீம் லீக்’ என்ற அரசியல் கட்சியே மத அடிப்படையில்பாக்கிஸ்தான்’ அமைப்பதில் வெற்றி கண்டது.

 

நீதிக்கட்சிபிரிட்டன் ஆட்சிக் காலத்திலிருந்தேஇனஅடிப்படையில் 'திராவிடநாடுஎனும் தனிநாடு அமைக்க வேண்டும்என்ற கருத்தை வலியுறுத்திற்றுஅக்கட்சி தனிநாடுகோரிக்கையினைப் போற்றியதன் காரணத்தை ஈ.வெ.கிசம்பத்அம்மாநாடு (நீதிக்கட்சி மாநாடுதமிழ்நாடு தமிழருக்காகவேண்டும் எனத் தீர்மானித்தது... அச்சமயத்தில் நமது இயக்கதில்(நீதிக்கட்சியில்இருந்த சில ஆந்திரமலையாள கன்னடத்தோழர்கள்வடவரை எதிர்த்து தமிழகம் மட்டும் ஏன் பிரியவேண்டும்ஆந்திரம்கேரளம்கர்நாடகம் ஆகிய திராவிடமொழிகள் பேசும் மாகாணங்களும் பிரிந்து தீர வேண்டும்அதற்கும் சேர்ந்து ஒரு திட்டம் தேவை என்றனர்... அந்தஅடிப்படையில் சிந்தித்து விவாதித்துதான் தமிழகம்ஆந்திரம்கர்நாடகம்கேரளம் ஆகிய சுய நிர்ணய நாடுகள் இணைந்து’ அமைக்கும் திராவிடக் கூட்டாட்சி பெற இனி பேராடுவது எனத்தீர்மானிக்கப்பட்டது (91,ப.74),

 

என விளக்கம் தந்துள்ளார்.

 

பிரிட்டன் ஆட்சிக் காலத்தில் கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியப்பெருநாட்டிற்கு வந்தபோது இன அரசு வேண்டும் என்றநீதிக்கட்சிக் கருத்தினை அக்குழுவின் ஆய்வுக்குக்கொணர்ந்தவர் அண்ணா (159,ப.3). 

 

'திராவிட முன்னேற்றக் கழகம்என்ற பெயரில் உள்ள 'திராவிடஎனும் சொல் பண்பாடு அடிப்படையில் திராவிட இன அரசு பெறும்நோக்கில் அமைந்ததாகும் என்ற விளக்கத்தைத் தந்தவர் அவர்(123,ப.186). 'திராவிட நாடு திராவிடருக்காதல்என்பதேதிராவிடர் கழகம்திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இருகட்சிகளின் தலையாய நோக்கம் எனக் கூறிவந்தனர்மத்தியஅரசால் பிரிவினைத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர்தம் கட்சியின் கோரிக்கைகளில் ஒன்றான ‘தனித்திராவிடநாடுபிரிவினையைக் கைவிட்டார்.

 

தனித்திராவிட நாடு வேண்டுமென உருவாகியஅண்ணாவின்சிந்தனைகளில் அப்பிரிவினைத் தடைச்சட்டம் மாற்றத்தையும்ஏற்படுத்தாததையும் முதலமைச்சர் பொறுப்பிலிருந்து அவராற்றியஉரைகள் உணர்த்துகின்றனஅண்ணா 'தனித் திராவிடநாடுகோரிக்கையைத் தம் கட்சியின் முதன்மைக் கொள்கையாகக்கொண்டிருந்தபோதுதாய்த் திருநாட்டினை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் படைத்த ஒரு சிறுபடைநாங்கள் (1,ப.210),

 

எனச் சட்டமன்றப் பேரவையில் மொழிந்தவர்பின்னாளில்நான்திராவிடநாட்டுக் கோரிக்கையை விட்டுவிட்டேன்ஆனால்திராவிடநாடு கேட்பதற்கு என்னென்ன காரணங்கள்இருந்தனவோ அவற்றில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லைஇதில்ஒளிவுமறைவு இல்லை (51, ப.336),

 

என்கிறார். 'ஒன்றைக்கூடஎனும் சொற்றொடர்அவர்திராவிடநாடு அமையவேண்டும் என்ற சிந்தனையில் மாற்றமின்றிஇருந்தமையை உறுதிப்படுத்துகிறது.

 

தனித் திராவிடநாடு கோருவதற்குப் பதினைந்து காரணங்களைஅண்ணா 'இலட்சிய வரலாறுஎனும் தம் நூலில் தருகிறார் (74, பக்.16-19). அவை அனைத்தும் நான்கு அடிப்படைக்கருத்துகளைக் கொண்டனவாகும்.

 

1. இந்தியா என்பது ஒரு நாடன்றுஒரு துணைக்கண்டம் என்றுவரலாறு தெளிவுப்படுத்துகிறது.

2.திராவிட இனம் தனி இயல்பினைக் கொண்டதுஅவ்வியல்பின்வழி அமையும் அரசே மக்களின் உயர்வுக்குவழிவகுக்கும்.

3. இந்தியா ஒரு நாடாக இணைக்கப்பட்டால் ஆரியர் மற்றும்வடவர் ஆதிக்கமே மேலோங்கும்.

4. இனவழி அரசு அமைவது வரலாற்றில் காணலாகும் நிகழ்வே.

 

அண்ணா முதலமைச்சராக இருந்த காலத்திலும்இக்கருத்துகளை மையமாகக் கொண்டே உரையாற்றியுள்ளார்.

 

இந்திய நாட்டினுடைய பிரதமர் என்று நம்முடைய அமைச்சர்காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் சொல்லுவார்கள்நாங்கள் பிரதமர் என்றோ இந்தித் துணைக்கண்டத்தில் பிரமர்என்றோ சொல்லுகிறோம் (9,ப.506),

 

இவ்வுரைப் பகுதியில் காணப்படும் 'இந்தியத் துணைக்கண்டம்’ என்ற சொல்லாட்சி அவருடைய 'தனிநாடு ' சிந்தனைவெளிப்பாடாகும் என்பதை, நான் எப்பொதும்திருவள்ளுவரைப் பார்த்துத்தான் வார்த்தைகளைப்பயன்படுத்துகிறேன்வார்த்தைகளுக்குப் பயன் இருந்தால்தான்பயன்படுத்துவேன்இல்லா விட்டால் பயன்படுத்தமாட்டேன்(56,ப.137)

 

எனும் அவர் உரைப்பகுதி அறியவைக்கிறது. 'தனித் திராவிடநாடு’ கோரிக்கையினைத் தம் கட்சிக் கொள்கையிலிருந்து நீக்கியகாலத்திலும் அவரது சட்டமன்ற உரைகளில் 'இந்தியாஎன்றசொல்லாட்சி இடம்பெறவில்லை. 'இந்தியப் பெருநாடு', ‘இந்தியப் பேரரசு', 'இந்தியத் துணைக்கண்டம்என்பனவேஇடம்பெறுகின்றனஇச்சொல்லாட்சிஅவர் ‘தனித்திராவிடம்என்பதில் மாறாதிருந்தார் என விளக்குகிறது.

 

தனி இயல்பு கொண்ட இனம்தனி அரசு கண்டால்தான் உயர்வுபெறும் என்ற எண்ணத்திற்கு அரணாகப் பல விளக்கங்களைஅண்ணாதம்பிக்கு வரைந்த 'கடிதங்களில்விளக்கியுள்ளார்.

 

அவற்றின் பிழிவாக அமையும் சட்டமன்றப் பேரவை உரைப்பகுதிகளுள் ஒன்று,

 

தேசிய கவி இதற்கு முன் முப்பது போடி முகமுடையாள் என்றும்ஒரு மனமுடையாள் என்றும் சொல்வார். இவைகளெல்லாம்உள்ளத்திற்கு ஊட்டும் உணர்ச்சியே தவிர நடைமுறைக்கு அதுசரியாக இருந்ததா என்றால் இல்லை (57, ப.844), என்பதாகும்பாரதி கூறும் இந்திய இனத்தைஏற்றுக் கொள்ளாதமனநிலையை இவ்வுரைப்பகுதி காட்டுகிறது.

 

மூன்றாவதாகஅண்ணா குறிப்பது 'வடவர் மற்றும் ஆரியம்ஆதிக்கம்பற்றியதாகும்அவர்கள் ஆதிக்கம் வேரூன்றியதன்மைகளையும் அதற்கான எதிர்ப்புகளையும்முதலமைச்சராயிருந்த காலத்திலும் உணர்த்தியுள்ளார்.

 

(தில்லியில்ஒரு சாலைக்காவது தென்னாட்டவர் பெயர்வைக்கப்படவேண்டுமென்ற எண்ணம் இந்திய அரசுக்குத்தோன்றாததேன்அது தென்னாட்டு மக்கள் இரண்டாந்தர மக்கள்என்பதைக்காட்டவில்லையா? (104, ப.42),

 

என்பதுதனித் திராவிடநாடு கோரிக்கையைத் தம் கட்சிக்கொள்கைகளுள் கொண்டிருந்த காலத்து இந்திய நாடாளுமன்றமேலவையில் அண்ணா பேசிய உரைப்பகுதியின் தமிழாக்கம்.

 

இப்போது கூட வடக்கேயுள்ள பெருந்தலைவர்களின் பெயரால்அமைந்த பல இடங்களைத் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னாட்டுமாநிலங்களிலே பார்க்கிறோம்ஆனால் தென்னாட்டுப்பெரியவர்களின் பெயராலே ஒரு சதுக்கமோஒரு அங்காடியோஅல்லது வேறு வகையான சின்னமோ அங்கே (வடநாட்டில்இல்லை என்பதை நாம் பார்க்கிறோம் (56, ப.130),

 

இவை முதலமைச்சர் பொறுப்பிலிருந்து அண்ணா கூறியமொழிகள்இவ்விரு உரைப்பகுதிகளும் வடவர் ஆதிக்கம் நீங்கித்திராவிட இன அரசு அமையவேண்டும் எனும் அவர் சிந்தனையில்மாற்றமில்லை என்பதைத் தெளிவுப்படுத்துகின்றன. 'வடநாடுஎது?’ என்பதற்கு விளக்கம் தரும் வகையில் தோன்றும்அண்ணாவின் மொழிகள்,

 

வடநாடு என்று சொல்லும்போதுஎல்லா மாநிலங்களுக்கும் முழுப்பொறுப்பையும் அதிகாரத்தையும் ஏற்றுக்கொண்டிருக்கிற மத்தியசர்க்காரையும் அந்த மத்திய சர்க்காரோடு நெருங்கிய தொடர்புகொண்டிருக்கிற ராஜ்யங்களையும் மனதிலே வைத்துக்கொண்டுதான்

வடநாடுவடநாடு என்று பேசுகிறோம் (10, ப.128),

 

என்பனவாகும்எனவே மத்திய அரசை எதிர்க்கும் முறையில்அமையும் கருத்துகள் யாவும் வடநாட்டு ஆதிக்கத்தை எதிர்க்கும்மனப்போக்கிலாகும்மத்திய அரசின் ஆதிக்கம் கல்வித்துறையில்இருக்கிறது (50,1.450); கலைத்துறையில் இருக்கிறது (50, ப.277)

என்றெல்லாம் முதலமைச்சர் பொறுப்பிலிருந்த காலத்தும்அண்ணா சட்டமன்றத்தில் விளக்குவது அவர`து வடவர் ஆதிக்கஎதிர்ப்புச் சிந்தனையின் வெளிப்பாடாகும்.

 

வடவர் ஆதிக்கத்தை மட்டுமின்றிஆரிய ஆதிக்கத்தையும் அவர்எதிர்த்திருக்கிறார்அவ்வெதிர்ப்பு 'தன்மான உணர்வுச் சிந்தனைகளின் வெளிப்பாடாக அமைந்த தன்மை முன்னர் கூறப்பட்டதுஅவ்வெதிர்ப்புச் சிந்தனையில் நெகிழ்வு ஏற்பட்டதேயன்றி மாற்றம்இல்லைஎனவே அரசியல் நிலையில் "திராவிடநாடுகோரிக்கையைக் கைவிட்டாலும் இனஅரசு அமையவேண்டுமென்பதில் அண்ணா மாறாத சிந்தனை கொண்டிருந்தார்எனக் கொள்ளலாம்.

 

நான்காவதாகஅவர் குறிப்பது 'தனித் திராவிடம்அமைவதுவரலாற்றுப் பின்னணியில் பொருத்தமுடையது என்பதாகும்அவர்கூறிவந்த வரலாற்று ஏதுக்களைச் சட்டமன்றத்தில் விளக்கும்வாய்ப்பு அவருக்கு எழவில்லைபிரிவினைக் கோரிக்கையைக்கைவிட்ட பின்னரும் தமது 'காஞ்சிஇதழில் தனித் திராவிடநாடுபெறவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தஉலக நாடுகளில்இனவழி அரசுகள் அமைந்து வரும் வரலாறுகளைஎடுத்துரைத்துள்ளார் (175, ப.3-10).

 

இனவழி அமையும் ஆட்சிதான் மக்களின் நலனைக் காக்க முடியும்என்றும் அத்தகைய அரசு தோன்றுவது உலக வரலாற்றில்காணக்கூடியதே என்றும் தனித் திராவிடநாடு கோரிக்கையைத்தம் கட்சிக் கொள்கைகளினின்றும் நீக்கிய பின்னரும் பற்றுஎன்னும் தலைப்புடைய கடிதம் ஒன்றில் எடுத்துரைத்துள்ளார்அக்கடிதத்தில் காணலாகும் (180,ப.5-13),

 

'பற்றுஉள்ளத்தில் எழுந்திடும் உணர்ச்சி மட்டுமல்லஉள்ளத்தில்இடம்பிடித்துக்கொண்டு வெளியேற மறுத்திடும் வல்லமைமிக்கஉணர்ச்சி (180, ப.5),

 

எனும் பகுதியும்திராவிடநாடு பிரிவினைக் கொள்கை பற்றிவினவிய அமெரிக்கச் செய்தியாளர்களுக்கு, 'என் ஆசையைக்கிளப்பாதீர்கள் (205, ப.12), எனச் சொன்ன பதிலுரையும் அவர்இன அரசு அமைக்கும் சிந்தனையில் மாறாதிருந்தார் என்பதைக்காட்டுவனவாகும்.

 

இன அரசு அமைப்பில் நாட்டம் கொண்டிருந்த அண்ணாவிடம், 'திராவிட இன உணர்வைவிட தமிழின உணர்வே மிகுந்திருந்ததுஎன்றும் தனித்தமிழ்நாடு காண்பதே அவர் இலக்கு என்றும்ஆய்வாளர் கூறுவர் (274, ப.30). அவர் கூற்றுக்கு

 

'திராவிடநாடு திராவிடருக்கேஎன்பதுதான் நம் இறுதிஇலட்சியம்ஆனால் அதுவரையில் பொறுத்திராதபடிஅவசரமாகத் தமிழ் நாட்டை டில்லி ஆதிக்கத்திலிருந்துவிடுவிக்கவேண்டும் என்பதுதான் நம் திட்டம் இலட்சியத்திற்கும்திட்டத்திற்கும் வேற்றுமை உண்டுபார்க்கர் பேனா வாங்குவதுஒரு எழுத்தாளனின் இலட்சியமாக இருப்தில் தவறில்லைஅதுவரை மூர் மார்க்கெட்டில் விற்கப்படும் ஒரு ரூபாய் பேனாவைவாங்கி எழுதிக் கொண்டிருப்பதுதானே விவேகம் (91, பக்.13-14),

 

எனும் மொழிகள் மறுப்புரையாகக் கொள்ளத்தக்கன.

 

பொதுநலச் சிந்தனைகள்

 

சிந்தனையாளர் ஒருவரின் சிந்தனைகள் சில ஈடுபாடுகளுக்குஉட்பட்டு அமைதல் உண்டுஈடுபாடுகளுக்கு அப்பாற்பட்டும்பொதுநோக்கில் மனித இனம் முழுமைக்கும் பயன்தரத் தக்கமுறையிலும் அமைதல் உண்டு.

 

பிறந்த நாடுபேசிய மொழிஅமைந்த அரசுவாழ்ந்த சூழல்ஆகியனவற்றிற்கு உட்பட்டு இனஉணர்வுச் சிந்தனைகளைத்தந்தவர் அண்ணாஇச்செயற்கைப் பிடிப்பபுகளைத் தாண்டிஉலகளாவிய நிலையில் காணும் சிந்தனைகள் யாவும் பொதுநலச்சிந்தனைகள் எனக் கொள்ளப்படுகின்றனஅவருடைய சட்டமன்றஉரைகளில் காணலாகும் பொதுநலச் சிந்தனைகள் 'ஒழுக்கம்', 'சட்டம்', ‘மாந்த நேயம்ஆகிய களங்களில் அமைகின்றன.

 

அரசுத் திட்டங்கள்

 

பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பிறகே ‘திட்டமிடுதல்சிறந்தஆட்சிக்கு இலக்கணமாகக் கருதப்பட்டது (48,ப.296). உலகநாடுகள் அனைத்தும் திட்டமிட்டே பொருளாதாரவளர்ச்சியைப் பெற்றுவருகின்றன (121,0.476). திட்டங்களின்தன்மை ஆடசிக் கொள்கைகளைப் பொறுத்தும் நாட்டு மக்களின்வாழ்வு நிலையினைப் பொறுத்தும் அமைகின்றனஇந்நாட்டுமக்களின் வாழ்க்கை நிலையினையொட்டி, 'திட்டங்களின்அடிப்படை’, "திட்டங்களின் நோக்கம்என்பன பற்றியகோட்பாடுகளை அண்ணா சட்டமன்றத்தில்வெளிப்படுத்தியுள்ளார்.

 

திட்டங்களின் அடிப்படை

 

'அரசியல் பொருளாதாரக் கருத்துகள்உடைமையாளர்பக்கத்தில் இருப்பதை மாற்றி உழைப்பாளர்கள் பக்கத்திலேகொண்டு வரவேண்டும்' (50,ப.101) என அண்ணா உரைப்பதுஉழைக்கும் மக்கள் வாழ்க்கை வளர்ச்சி நோக்கில் திட்டமிடல்வேண்டும் என்ற கருத்தினாலாகும். 'நிபுணர்கள்புள்ளிவிவரங்களை நம்புவார்கள்.

 

நிபுணர்கள் அல்லாதவர்கள் நாட்டு மக்களுடைய பசித்தவயிற்றைனையும் காய்ந்த தலைமயிரையும் கவலை படிந்தமுகத்தையும் பார்த்துத்தான் நாட்டின் நிலையைத் தெரிந்துகொள்வார்கள்' (2,ப.459), எனக் கூறிப் புள்ளிவிவரங்களை விடமக்கள் தொடர்பே திட்டமிடுதலுக்கு மிகவும் தேவை என்பதைஅண்ணா உணர்த்துகிறார்.

 

திட்டங்களின் நோக்கங்கள்

 

நாட்டு வருவாயினை உயர்த்துதல்உணவு உற்பத்தி ஊக்கம்தொழில் வளர்ச்சிப்பணிசமுதாய ஏற்றத் தாழ்வு நீக்கல்வேலைவாய்ப்புத் தரல் ஆகியன திட்டமிடுதலில் நோக்கங்களாகவேண்டும் என்பர் பொருளியலாளர்கள் (103,பக்.477-478).

 

திட்டமிடுதல் பற்றிய அண்ணாவின் கருத்தினை, ‘வயிறார உணவுமானத்திற்கு ஆடைஅறிவுக்குக் கல்விநோய் தீர மருந்துசெய்வதற்குத் தொழில்தொழிலால் போதுமான அளவு கூலிகூலியை வைத்து வாழ்க்கை நடத்த ஆரம்பித்தால் விலைவாசிஏறாமல் இருக்கக்கூடிய அளவுக்கு உணவுக் கட்டுப்பாடுஆகியனவற்றைச் செய்துதர வேண்டும்மக்களுடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்த உபயோகப்படுத்தக்கூடிய பணம் போகமிச்சத்தை முதலீட்டுக்குப் பயன்படுத்தவது என்ற அளவுக்குத்திட்டமிடப்பட வேண்டும்' (36,1.456), எனும் மொழிகள் தெரிவித்துநிற்கின்றன.

 

அரசின் முதற்பணி மக்களின் அடிப்படைத் தேவைகளைநிறைவுத செய்தலாகும்அவற்றுள்ளும் எவை எவை முன்னுரிமைவழங்கத்தக்கன என்பதை அண்ணாவின் மொழிகள்தெளிவுப்படுத்துகின்றனமுதலீட்டுத் திட்டங்கள்நாட்டுவருவாயினைப் பெருக்கும் திட்டங்களாகும்நாட்டுவருவாயினைப் பெருக்குவதைவிட மக்களின்அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்யும் திட்டங்களுக்குமுன்னுரிமை வழங்கவேண்டுமென அண்ணா கருதுகிறார்.

 

மத்திய அரசின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திற்குக்கருத்துரை வழங்கிய அண்ணா, 'இரண்டாவது ஐந்தாண்டுத்திட்டத்தை எடுத்துக்கொள்வதற்கு முன்னால் அடிப்படைத்தேவைகளான உணவுஉடைகுடியிருப்பு இந்த மூன்றுஅடிப்படைத் தேவைகளை நாம் பெற்றிருக்கிறோமா?' (36,ப.411) என வினவி அடிப்படைத் தேவைகளின் நிறைவின்இன்றியமையாமையை வலியுறுத்துகிறார்.

 

அடிப்படைத் தேவைகளுள்ளும் உணவுத் தேவையின் நிறைவேமுதலிடம் தரத்தக்கது என்பதைஇந்த நாட்டில் இந்த அரசேநீடித்து இருந்தாலும் வேறு எந்த அரசு ஏற்பட்டாலும் நாட்டில்உள்ள எல்லா மக்களுக்கும் வயிராற உணவு கொடுப்பதுதலையாய கடமையாகக் கொள்ள வேண்டும்' (40,ப.478) எனும்மொழிகளில் உரைக்கிறார்.

 

'பசிப்பிணி தீர்த்தல்தவப்பெரு நல்லறம்' (மணி12:118-119) என'மணிமேகலைதரும் அறிவுரைக் கிணங்க அண்ணாவின் திட்டம்அமைகிறது.

 

உணவு நிறைவே அரசுத் திட்டங்களில் தலையாயது எனக் கருதியஅவர் மக்களுக்கு ரூபாய்க்கு ஒரு படி அரிசி கிடைக்கப்படியரிசித் திட்டத்தைச் செயல்படுத்தினார்நாள் ஒன்றுக்குமூன்று வேளை சோறு மக்கள் எல்லோருக்கும் கிடைக்கும்படிசெய்ய வேண்டும்ரூபாய்க்கு மூன்றுபடி அரிசிவிற்கப்படவேண்டும் (12,ப.552) எனத் தன் விருப்பினைச்சட்டமன்றப் பேரவையில் எதிர்க்கட்சியாளராய் இருந்த காலத்துத்தெரிவித்த அண்ணாமுதலமைச்சர் பொறப்பேற்ற காலத்தும், 'யுத்தத்திற்கு (இரண்டாவது உலகப் போருக்குசிலஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமைப்படி ரூபாய்க்கு மூன்று படிஅரிசி அளவுக்குப் போக முடியும் என்பது தான் எனக்கிருக்கும்நம்பிக்கை' (50,ப.429), என உணவுத் தேவை நிறைவு செய்யும்திட்டத்தில் கொண்டிருந்த ஆர்வத்தினை வெளிப்படுத்துகிறார்.

 

அந்த ஆர்வத்தின் விளைவே அண்ணா செயல்படுத்திய'படியரிசி'த் திட்டமாகும்

 

அண்ணாவின் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் ரூபாய்க்கு ஒரு படிஅரிசிஎன்ற நிலைகூட ஏற்படவில்லைஅவர் ஆட்சிக் காலத்தும்அத்திட்டம் தமிழ்நாடு முழுமையும் செயற்படுத்தப்படவில்லை.

 

அத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் சிறந்ததாக இருப்பினும்அதன் தோல்வியைக் கொண்டு அது செயல்படுத்த முடியாததிட்டம் எனக் கொள்ள இடமளிக்கிறதுவேளாண்மைவளர்ச்சிக்கு ஊக்கமளித்து உணவு உற்பத்தியைப் பெருக்கஉணவுப் பொருள் கொள்முதலை அரசே ஏற்று அவற்றைமக்களுக்கு வழங்கியும் பிற திட்டங்களில் ஏற்படும் பொருள்விரயங்களைத் தடுத்தும் படியரிசித் திட்டத்தினைவெற்றிகரமாகச் செயற்படுத்தவியலும் என அண்ணா நம்பினார்

 

வேளாண்மை வளர்ச்சி மேன்மேலும் பெருகினாலும் நெல்விளைச்சல் மிகும்ஆனால் அண்ணாவின் ஆட்சிக்எதிர்க்கட்சியாளர்கள் நெல் பயிரிடுவதை விடுத்துக் கரும்புபயிரிடுவதனை உக்குவித்தனர் (50,ப.973).பெரும்பண்ணையாளர்கள் எதிர்க்கட்சியாளருடையசொற்கிணங்கியமையால் நெல் விளைச்சல் குறைந்ததுஇப்போக்கு படியரிசிதிட்டம் தளர்ச்சி பெறுவதற்கு ஒருகாரணமாக இருந்ததுநெல் கொள்முதலிலும் தொல்லைகள்ஏற்பட்டனபெரும் நிலவுடைமையாளர்கள்