Tuesday 29 December 2020

சிறகுக்குள் வானம் (புத்தக அறிமுகம்) - ராஜராஜன் ஆர். ஜெ

 சிறகுக்குள் வானம் (புத்தக அறிமுகம்) - ராஜராஜன் ஆர்ஜெ

பாலகிருஷ்ணன் சாரின் பிறந்தநாள்எங்கு தொடங்கி எங்குமுடிப்பது என்றுத் தெரியவில்லைஒரு பிறந்தநாள் வாழ்த்து பதிவுஎன்பதை தாண்டி மனதில் இருக்கும் எண்ணங்களை வடிக்கும்வாய்ப்பாகவும் இதை கருதி எழுதுகிறேன்சிலரது அறிமுகம் நம்வாழ்வை திசைமாற்றக்கூடியதுசிலரது ஆளுமை நம் வாழ்வைமேம்படுத்தக்கூடியதுபாலகிருஷ்ணன் சாரின் வழிகாட்டுதலில்ஊக்கம் பெரும் எண்ணற்றவர்களில் நானும் ஒருவன் என்பதேஎனக்கு பெருமையாய் இருக்கிறதுஇன்று காலை அவரதுபிறந்தநாள் என்று பார்த்த மாத்திரத்தில்சிங்கப்பூர் நூலகத்தில்இருந்து எடுத்துவந்த அவரது "சிறகுக்குள் வானம்புத்தகத்தைவாசித்து முடிக்க நினைத்தேன்அந்த புத்தகத்தின் ஒவ்வொருவரியும்அவரது வாழ்வை பறைசாற்றுவதாக இருப்பதைஉணர்ந்தேன்.

ஒரு மனிதருக்கு எத்தனை பரிணாமங்கள்காமராசரிடன் நேரடிஅறிவுரை பெற்றவர்தமிழ் மாணவர்தமிழில் ஐ.ஏ.எஸ் எழுதிதேர்ச்சிபெற்று இந்திய ஆட்சி பணியை செய்பவர்சிந்துவெளிதிராவிடவியல் ஆய்வாளர்எழுத்தாளர்மேடைப்பேச்சாளர்சங்கத்தமிழ் வித்தகர்திருக்குறள் பேரார்வலர்.. இப்படிசொல்லிக்கொண்டே போகலாம்அவரது மொழியிலேயேபடிக்கலாம்..

*

உலகில் பாதியை

ஊதியமாய் கொடுத்தாலும்

விருப்பமில்லாத வேலையில்

வெறுப்புதான் மிஞ்சும்.

மறந்தும் சுமக்காதீர்கள்

மற்றவர்களின் கனவை.

பிடித்ததை விடாதீர்கள்

பிடிக்காததைத் தொடாதீர்கள்.

*

திரும்பத் திரும்பப்

படியுங்கள்.

'கான முயல் எய்த அம்பினில்

யானை பிழைத்த வேல்

ஏந்தல் இனிது'

என்ற திருக்குறளை.

உங்களின் எதிர்காலத்தை

தீர்மானிக்கப் போவது

நீங்கள்

இப்போது

எங்கே இருக்கிறீர்கள்

என்பதை விடவும்

உங்கள்

இலக்குகள்

எங்கே இருக்கின்றன

என்பது தான்.

*

குத்த வைத்து உட்கார்ந்து

குளிர் காய்ந்தவர்கள்

இன்னும்

குகைகளில் தான்

இருக்கிறார்கள்.

நகர்ந்து வந்தவர்கள்தான்

நாகரீகம் படைத்தார்கள்.

முயற்சியை

வாழும் கலையாய்

வகுத்துக்கொள்ளுங்கள்.

வழி தெரியும்

வலி தெரியாது.

*

தினமும் 35 கிலோமீட்டர் பயணம் செய்து மதுரையில் தினமணிபத்திரிக்கையில் வேலைப்பார்த்துக்கொக்ண்டே ஐஏஎஸ்தேர்வுக்கு படித்ததை நினைவுகூர்ந்து இப்படிச்சொல்கிறார். "வியர்வை உப்புச் சேரும்போதுதான் வெற்றி சுவைக்கிறது"

இப்போது

அறிவே மூலதனம்;

கடின உழைப்பே

கச்சாப்பொருள்.

வரப் போகும்

காலத்திலும்

கடின உழைப்பிற்கு

மரியாதை நீடிக்கும்.

ஆனால்

கவன உழைப்புதான்

காரியம் சாதிக்கும்.

கடின உழைப்பிற்கும்

கவன உழைப்பிற்கும்

வித்தியாசம் உள்ளது.

'கழுதையாய்உழைப்பதற்கும்

கருத்துடன் உழைப்பதற்கும்

உள்ள வித்தியாசம்.

கவன உழைப்பில்

கருத்தைச் செலுத்துங்கள்.

ஏனெனில்,

மணிக்கணக்கைவிட

முக்கியமானது

மனக் கணக்கு.

*

கவன உழைப்பு என்ற சொல்லும் பொருளும் ஆழ்ந்துசிந்திக்கவைக்கிறது.

 

சிலர்

மாபெரும் வெற்றியிலும்

மயங்காதிருக்கிறார்கள்

சிலர் ,

சில்லரை வெற்றிக்கே

சிலிர்த்துப் போகிறார்கள்.

ஒருவகையில்

வெற்றின் அருமையை

விளங்கிக் கொள்வதற்கு

தோல்வியின் துணை

கொஞ்சம்

தேவைப்படுகிறது.

 

வெற்றியோதோல்வியோ

விளையாடிப் பாருங்கள்.

வென்றால் பதக்கம்.

தோற்றால் பட்டறிவு.

**

எந்தப் பல்கலைக்கழகத்தில்

படித்தார் ஏ.ஆர்ரகுமான்?

எந்தப் பல்கலைக்கழகம்

படிக்கவில்லை இவரை?

 

ஏகலைவன்கள்

இருந்தார்கள்...

இருக்கிறார்கள்..

இருப்பார்கள்...

எல்லாக் காலங்களிலும்.

**

2009 ஆம் ஆண்டில் உடல்நலம் குன்றிப் பெரும் அறுவைசிகிச்சைக்கு ஆளாகித் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த போதுகடந்த காலம்நிகழ்காலம்எதிர்காலம் என்ற மூன்றுதளங்களிலும் மனம் சுழன்றதுஒத்திவைத்த செயல்களெல்லாம்உரத்துக்கூவினஎனக்குள் நான் ஓசையின்றி அழுதேன்அதுவரை முன்னுரிமை பெற்ற பல விசயங்கள் முக்கியமானவைஅல்ல என்பது போல் தோன்றியதுஅக்கறை காட்டாமல்இருந்தவற்றின் அவசரத் தேவை அழுத்தியதுகுடும்பம் சார்ந்தசில அவசர முன்னுரிமைகளோடு 25 ஆண்டுகள் இந்தியாவின் பலபகுதிகளிலும் பயணித்து தேடித்தேடி எடுத்த இந்தியவியல்ஆய்வுக்குறிப்புகளெள்லாம் நூல் வடிவம் பெறாமல் எனதுகுறிப்பேடுகளிலும் கணிப்பொறியிலும் குவிந்துக்கிடப்பதைநினைத்துக் குமுறினேன்.

தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் வழங்கும் பல்வேறு ஊர்ப்பெயர்கள்மத்தியப்பிரதேசம் போன்ற பல வடமாநிலங்களில்குறிப்பாகத் திராவிடப்பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில்இன்றும் ஊர்பெயர்களாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டறிந்து1997 இல் ஓர் ஆய்வுக்கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதிவெளியிட்ட போது அதற்கு முறையான நூல் வடிவம் தரவேண்டும்என்று எனது மனைவியும்நெருங்கிய நண்பர்களும்வலியுறுத்தினார்கள்ஆனால்நான் பல்வேறுபல்கலைக்கழகங்களிலும்இந்திய ஊர்ப்பெயர் ஆய்வுச் சங்கமாநாடுகளிலும் அவ்வப்போது ஆய்வுரை நிகழ்த்துவதுஆய்விதழ்களில் கட்டுரைகள் எழுதுவதோடு சரிதனியாக நூல்எதுவும் எழுதவில்லை.

சிந்துவெளி நாகரிகம் நலிந்து வீழ்ச்சியடைந்த பின்னர்அங்கிருந்த மக்கள் புலம்பெயர்ந்து சென்ற தடங்களின்தடயங்களை ஊர்ப்பெயர்கள் உதவியோடு மீட்டெடுக்க முடியும்என்ற நம்பிக்கையோடு எனது கணிப்பொறியில் பதிவுசெய்துவைத்துள்ள இலட்சக்கணக்கான ஊர்ப்பெயர்களை ஆய்வுசெய்துவந்தேன்போது ஆண்டுகளுக்கு முன் ஓர் நள்ளிரவில்மொகஞ்சதாரோஹரப்பா உள்ளிட்ட வடமேற்குநிலப்பகுதிகளில் கொற்கைவஞ்சிதொண்டி போன்ற சங்கஇலக்கிய ஊர்ப்பெயர்கள் இன்றும் பயன்படுத்தப்படுவதைக்கண்டறிந்தும் மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்தேன்என்னசெய்வதென்று தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த எனதுமனைவியைத் தட்டியெழுப்பித் தகவல் சொன்னேன்அவ்வளவுதான்அதற்குப் பின் 2010ல் கோவை செம்மொழிமாநாட்டில் சிந்துவெளி ஆய்வறிஞர்கள் அஸ்கோ பர்போலோஐராவதம் மகாதேவன் முன்னிலையில் இச்செய்தியை நான்வெளியிட்டபோது 'இந்தத் தரவுகளை வைத்துக்கொண்டுஇத்தனை நாள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?" என்றுபர்போலோ கேட்டார். 'எனது நாட்டில் 23 மாநிலங்களில் தேர்தல்நடத்திக்கொண்டிருந்தேன்என்று விளக்கினேன்ஆனாலும்எனக்கே அது சரியான விளக்கம் என்று படவில்லை.

படிக்கத்தவறிய படிப்புபிடிக்கத்தவறிய ரயில்விண்ணப்பிக்கத்தவறிய வேலைசந்தித்திருக்கக்கூடாத மனிதர்கள்பேசியிருக்கக்கூடாத பேச்சு என்று எத்தனை விதமானகழிவிரக்கம்தங்களது நிகழ்காலச் செயல்களுக்கும்செயலின்மைக்கும் பொறுப்பேற்கும் திறனற்றவர்கள் ஒதுங்கிஒடுங்கும் திண்ணைதான் கடந்தகாலம் என்பதுஅதுபோலவேஎதிர்காலம் பற்றிய முன்னெச்சரிக்கை தேவைதான்ஆனால்அதுவே ஒரு வியாதியாகி விடவும் வாய்ப்பிருக்கிறது.

என்ன செய்யவேண்டும் என்பது பொதுவாக எல்லோருக்கும்புரிந்துதான் இருக்கிறதுஆனால்சிலருக்குத்தான் 'செய்யத்தெரிந்திருக்கிறதுஅறிதலுக்கும் செய்தலுக்கும் உள்ளஇடைவெளியின் புரிதல்தான் வெற்றியிலிருந்து வெறும்பேச்சைவேறுபடுத்துகிறது.

உடற்பயிற்சியின் தேவை பற்றி விலாவாரியாகத் தெரிந்துவைத்திருப்பதென்பது வேறுதவறாமல் உடற்பயிற்சிசெய்வதென்பது வேறுசெய்யாத பயிற்சிக்குசிந்தாதவியர்வைக்கு எடை எப்படிக்குறையும்?

ஒத்திப்போடுவதென்பது முன்கூட்டியே ஒப்புக்கொள்ளப்பட்டதோல்விதாமதிக்கப்படுகிற செயல்களின் 'விலைஏறிக்கொண்டே போகிறது.

இன்றே செய்வது என்பது ஓர் இன்றியமையாத் தேவைஇது வேறுயாருக்கும் புரிகிறதோ ,இல்லையோ எனக்குப் புரிகிறது.

இந்த ஒரு அத்தியாயம் சொல்லும் பாலகிருஷ்ணன் சாரின்இலட்சிய வாழ்வை!

*

நேரம் தவறாமை

என்பது

காத்திருப்பவர்களுக்கு

காட்டும்

கரிசனம் அல்ல

சுய ஒழுக்கம்.

தவறிக் கூட யாரும்

தழுவக்கூடாத மதம்

தாமதம்.

*

பெரிய வெற்றிக்கான

தவம்

பேராசை அல்ல.

சில்லரை வெற்றிகளைவிடச்

சிறப்பானது

மகத்தான தோல்வி.

*

வேட்கை இல்லை

என்றால்

வேட்டை இல்லை.

தேவை இல்லை

என்றால்

தேடுதல் இல்லை.

விளைந்து கிடந்தது

காடும் மலைகளும் .

வேண்டி அடைந்தது

நாடும் நகரமும்.

வேட்கை இல்லாத

மனம்

வெறுமையின் களம்.

ஈடுபாடின்மை

இறப்புக்குச் சமம்.

மனக்கோட்டை

கட்டாதவர்கள்

சொந்தமாய்

மண் வீட்டைக் கூடாக

கட்டியதில்லை.

*

செக்குமாடு கூட

செருக்கோடு நடக்கிறது.

வட்டத்திற்குள் நடப்பது

வசதியாக இருக்கிறதாம்.

எதிரில்

வண்டிகள் வாகனம்

வருவதில்லையாம்.

எதிர்பாராத விபத்திற்கு

வாய்ப்பே இல்லையாம்!

வசதி வட்டத்தின்

மையத்தில் சுருங்கவில்லை

வாழ்வின் பொருள்.

அதன்

விளிம்பில் இருக்கிறது

விரிந்தபடி.

*

இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த அத்தியாயமாக இருப்பதுஇந்த "கூடுதல் மைலில் கூட்டமே இல்லைஎன்ற தலைப்பு தான்பன்னாட்டு நிறுவனங்களில் “Going the Extra Mile" என்றுசொல்லுவார்கள்லண்டனில் நான் வேலைபார்த்தபோது எனக்குகிடைத்த ஒரு விருது இந்த பெயரில் இருந்தது எனக்கு இப்போதுநினைவுக்கு வருகிறதுபாலகிருஷ்ணன் சார்மிக அருமையாகஇந்த விஷயத்தை விளக்கி இருக்கிறார்.

'கூடுதல் மைல்'

என்றொரு

கோட்பாடு உண்டு.

அது

வென்றவர்களுக்கெல்லாம்

விளங்கியிருக்கும்

வெற்றி ரகசியம்.

'கூடுதல் மைல்என்பது

கூலிக்கு மாரடித்தல் என்ற

கொள்கைக்கு மாறான கொள்கை.

கொடுத்த காசுக்கு

நடப்பவர்கள் எல்லாம்

உரிய தூரம் நடந்ததும்

ஓய்வெடுக்கப் போய்விடுவதால்

கூடுதல் மைலில்

கூட்டமே இல்லை.

எதிர்பார்ப்பிற்கும் அதிகமாய்

உழைப்பவர்களை

எதிர்கொண்டு வரவேற்கிறது

ஏற்றம்.

நிறுத்துப்பார்த்து

வேலை செய்பவர்களை

நிற்கும் இடத்தில் வைத்தே

நிறுத்துப்பார்க்கிற உலகம்,

கூடுதல் மைல் நடப்பவர்களைத்தான்

கோபுரத்தில் வைத்துக்

கொண்டாடுகிறது.

கூடுதல் மைல்களில்தான்

வீரிய விதைகள்

வெளிச்சத்திற்கு வருகின்றன.

கனவு மெய்ப்படுத்தும்

காரியச் சித்தர்கள்

கண்டெடுக்கப்படுகிறார்கள்.

'காலண்டர் மனிதர்களையும்

'கடிகாரக் கூலிகளையும்

இங்கே காணமுடியாது.

கூடுதல் மைல் என்பது

உண்மையில்

கோடு கிழித்து

அடையாளம் காட்டப்படும்

எல்லைக்கல் அல்ல.

எதிர்பார்ப்புகளைக் கடந்து

செயலாற்றும் மனிதர்கள்

இயல்பாகச் செல்லும்

வெற்றிக் களம்

*

இன்னொரு கவிதை கண்ணதாசனின் 'நிலை உயரும் போதுபணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்என்னும்வரிகளை நினைவுபடுத்துகிறது.

உயரங்கள் பற்றிய

ஓர்

உண்மை இருக்கிறது.

உயரத்தை எட்டுவதை விட

உயரத்தில் இருப்பதே கடினமானது.

ஏறுவதை விட

இறங்குவது எளிது.

சாதனைப் படிகளில்

ஏறுவதற்கு

பொறுமையும் உழைப்பும்

தேவைப்படுகிறது.

சறுக்கி விழுவதற்கு

பொறுப்பின்மை மட்டுமே

போதுமானதாய் இருக்கிறது.

உயரங்களில் இருந்து

உருண்டு விழாதிருக்க

ஓர்

உபாயம் இருக்கிறது.

உங்கள்

கை தொடும் உயரத்தைக்

கணக்கிடும் போது

உங்கள்

காலிருக்கும் இடத்தைக்

கொஞ்சம்

கருத்தில் கொள்ளுங்கள்.

**

 

1984 ஆம் ஆண்டுமசூரியில்ஓர் அக்டோபர் மாதத்து இளங்குளிர்மாலைபசுமைக்காடான மலைச்சாரலில் ஐ.ஏ.எஸ் பயிற்சிஅகாடமியிலிருந்து 'லைப்ரரி பாயிண்ட்எனப்படும் இடத்திற்குநடந்து செல்கிறேன்எனது எண்ணமெல்லாம் அன்று முற்பகல்சிந்துவெளி வரிவடிவம் பற்றி திருஐராவதம் மகாதேவன் ஆற்றியஆய்வுரையைப் பற்றித்தான்அவர் 1954 முதல் 24 ஆண்டுகள்ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிவிருப்ப ஓய்வு பெற்றுஇந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகக் குழுமத்தின் நிர்வாகஇயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்ஓர் ஐ.ஏ.எஸ்அதிகாரி இவ்வளவு ஆழமான உலகத் தரம் வாய்ந்த ஆய்வுமுயற்சியில் ஈடுபட்டிருப்பது எனக்கு வியப்பாக இருந்ததுஅவர்மீது மிகுந்த பிரம்மிப்பை ஏற்படுத்தியதுஅவரது சொற்பொழிவுமுடிந்தவுடன் அவரைச் சந்தித்து உரையாடியதும் மகிழ்ச்சியாகஇருந்தது.

எனக்குள் பேசிக்கொண்டேன். 'நான் ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகத்திறம்படப் பணியாற்றினால் எனது ஆட்சிப்பணி அனுபவங்களைபயிற்சி நிலை அதிகாரிகளுடன் பகிர்ந்துக்கொள்ளஎதிர்காலத்தில் இந்த அகாடமிக்கு அழைக்கப்படலாம்அதுஒன்றும் பெரிய விஷயமில்லைஆனால்ஐராவதம் மகாதேவனைப்போல நானும் ஓர் ஆய்வாளனாய் வளர்வேனாஇதைப் போலவேஎன்னையும் ஒருநாள் இந்த ஐ.ஏ.எஸ் அகாடமி ஆய்வுரையாற்றஅழைக்குமாஅப்படி அழைத்தால் எப்படியிருக்கும்இந்தநினைப்பே எனக்குப் பிடித்திருந்தது.

காலம் என்னைக் கிழக்கிந்திய மாநிலமான ஒடிசாவிற்குக்கொண்டுசென்றதுபழங்குடி மக்கள் நிறைந்த கோராபுட்மாவட்டத்தில் பணியாற்றும்போதுமானிடவியலில் ஆர்வம்பிறந்ததுஅங்குள்ள திராவிட மொழிப் பழங்குடியினரின்வாழ்வியலை உன்னிப்பாகக் கவனித்தேன்சங்க இலக்கியத்தில்குறிஞ்சித் திணைப் பாடல்களில் நான் படித்த காட்சிப் படிமங்கள்என் கண்முன்னே நடைமுறையில் நிகழ்வதாய்எனக்குத்தோன்றியது. 'தமிளிஎன்ற ஊரின் பெயரைமைல்கல்லில் படித்துஜீப்பிலிருந்து இறங்கி அந்த ஊருக்குள்சென்றேன்ஊர்ப்பெயர் ஆய்வு என்ற விரிந்துஆய்வுக்களத்திற்குள் நான் எடுத்து வைத்த முதல் அடி அதுஎன்பது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

2007 இல் நான் தில்லியில் தேர்தல் ஆணையத்தில் பணிபுரியும்போதுமசூரி ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குனரிடமிருந்து ஒருநாள்எனக்குத் தொலைபேசி வந்ததுஊர்பெயர்களைத் தரவாகக்கொண்டு நான் செய்துவரும் இந்தியவியல் ஆராய்ச்சிபற்றிகேள்விப்பட்டதாகவும்அந்த ஆராய்ச்சி பற்றி பயிற்சிநிலையிலுள்ள இளம் அதிகாரிகளுக்கு நான்சொற்பொழிவாற்றவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

அகாடமியின் அழைப்பை ஏற்று 2007, அக்டோபர் மாதம் முதல்வாரத்தில் மசூரி சென்றேன்ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் உள்ளிட்டபல்துறை பணிகளுக்கும் தேர்ச்சி பெற்றிருந்த பயிற்சிநிலைஅதிகாரிகளிடையே “The Journey of Names: The Latitudes and Longitudes of History" (பெயர்களின் பயணம்வரலாற்றின் அட்சரேகைகளும் தீர்க்க ரேகைகளும்என்ற தலைப்பில்சொற்பொழிவாற்றினேன்சிந்துவெளி நாகரீகம் வீழ்ச்சியடைந்தபின்னால் நிகழ்ந்த புலப்பெயர்வுகளை ஊர்பெயர்களின்துணைக்கொண்டு மீட்டுருவாக்கம் செய்யமுடியும் என்ற எனதுகருத்தை வலியுறுத்திச் சான்றுகளை வெளியிட்டேன்பயிற்சிநிலை அதிகாரிகள் பலரும் மிக ஆர்வத்துடன் கெட்டப் பல்வேறுவினாக்களையும் எழுப்பினார்கள்.

அன்று மாலை மசூரியின் பசுமைக்காடான மலைச்சாலையில்லைப்ரரி பாயிண்டை நோக்கி நடந்து சென்றேன்எனதுநினைவுகள் பின்னோக்கிச் சென்றன. 23 ஆண்டுகளுக்குமுன்னால் 1984 இல் அதே போன்ற ஒரு அக்டோபர் மாலையில்ஐராவதம் மகாதேவனின் சொற்பொழிவைக் கேட்டுவிட்டு என்மனதிற்குள் பேசியதை நினைத்துப்பார்த்தேன்நினைத்ததுநடந்தது என்ற நினைப்பே இனித்தது.

'நினைத்தது பலித்ததுஎன்பது

ஆருடம் அல்ல

ஆளுமை.

நினைப்பு என்பது

நிகழ்வின் விதை.

நிகழ்வு என்பது

நினைப்பின் கிளை.

 

நினைத்தது நடந்ததென்பது

ஆசை மனத்தின்

அறுவடை அல்ல.

 

மனம் தொட்ட புள்ளியை

கை தொட்ட கணத்தில் பரவசமூட்டும்

பயணக்கொடை.

 

நினைத்ததை நோக்கி

நினைத்தவன் நடப்பதால்

நினைத்தது நடக்கிறது.

*

நான் மேலே சொன்னது போலஇந்த புத்தகத்தின் ஒவ்வொருவரியிலும் பாலகிருஷ்ணன் சார் தான் தெரிகிறார்படித்த போதுஎன் தந்தையின் நினைவும் வந்து போனதுவாழ்வை சிறப்பாகலட்சியத்துடன் வாழ்பவர்கள் அனைவர்க்கும் பாலகிருஷ்ணன்சாரின் வாழ்க்கையும்இந்த புத்தகமும் பாடமாய் இருக்கும்.

இதே மகிழ்ச்சியும்வாஞ்சையும்சுறுசுறுப்பும்புன்சிரிப்பும்ஆற்றலும் என்றும் தொடரட்டும்உங்கள் வழிகாட்டுதல்எங்களுக்கு என்றும் கிடைக்கட்டும்திராவிடப் பாதையில்என்றும் நடப்போம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் Balakrishnan R சார்!

'சிறகுக்குள் வானம்', 'இரண்டாம் சுற்றுஇங்கு மின்னூலாகhttps://bookday.co.in/writer-r-balakrishnan-book-pdf/


No comments:

Post a Comment