Saturday 30 January 2021

கலைஞர் 1989 - பூவண்ணன் கணபதி

 கலைஞர் 1989 - பூவண்ணன் கணபதி


லைஞர் தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்குப் பின்பு வந்த திமுக அரசு வந்த ஒரு ஆண்டில் செய்த சாதனைகளோடு கூட மற்ற முதல்வர்களின் வேறு எந்த ஐந்து வருட அரசையும் ஒப்பிட முடியாது.


¬ பெண்களுக்குச் சொத்தில் சரிபாதி உரிமைச் சட்டமாக்கப்பட்ட ஆண்டு .


¬ விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்ட ஆண்டு .


¬ பழங்குடியினருக்குத் தனியாக ஒரு சதவீத இட ஒதுக்கீடு, அட்டவணை சாதிகளுக்குத் தனியாக பதினெட்டு சதவீத இட ஒதுக்கீடு என்று தொகுப்பாக இருவருக்கும் சேர்த்து வழங்கப்பட்டு வந்த பதினெட்டு சதவீத இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்ட ஆண்டு.


¬ பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடான ஐம்பது சதவீத இட ஒதுக்கீடு பிரிக்கப்பட்டு ,மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இருவது சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட ஆண்டு.


¬ உலகிலேயே முதல் முறையாக அரசுப் பணிகளில் பெண்களுக்கு முப்பது சதவீத இட ஒதுக்கீடு தமிழ்நாட்டு அரசால் சட்டமாக்கப்பட்ட ஆண்டு.


¬ 1980 தரப்பட்ட மண்டல் கமிஷன் அறிக்கையை மத்திய அரசுகள் கிடப்பில் போட்டிருந்தன.மாநில அரசுகளும் அதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.1989 மே மாதம் சட்டப்பேரவையில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக் கல்வியில்,மத்திய அரசுப்பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத வழங்குமாறு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.


¬ நானூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களோடு வந்த காங்கிரஸ் கட்சி மாநில அரசுகளை நசுக்கி மத்திய அரசின் அதிகாரங்களைப் பேருக்கும் சூழலை எதிர்த்தும், காங்கிரஸ் கட்சி அல்லாத ஆட்சி அமைக்கவும் தேசிய முன்னணி கூட்டணி அரசு உருவான ஆண்டு.அதில் முக்கிய பங்கு வகித்தவர் முதல்வர் கலைஞர். தேசிய முன்னணியின் முதல் மாநாடு தமிழ்நாட்டில் தான் நடந்தது.


¬ மாநிலங்களின் உரிமைகளை மதிக்கும், இந்தியாவின் பன்முகத்தன்மைகளை மதிக்கும், பகுஜன் மக்களுக்குப் பயன் தரும் முதல் அரசாக வி பி சிங் அவர்களின் தலைமையிலான தேசிய முன்னணி அரசைச் சுட்டிக்காட்டலாம்.அதற்குக் கலைஞர் , என் தி ராமராவ் அவர்களோடு சேர்ந்து அச்சாரட்டு உருவாக்கிய ஆண்டு 


¬ அகதிகளாக இலங்கையிலிருந்து துரத்தப்பட்டு தமிழ்நாட்டில் வசித்து வந்த இலங்கைத்தமிழர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில், பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தரப்பட்ட ஆண்டு .


¬ வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களிலிருந்து பள்ளிப்படிப்பை முடிக்கும் பெண்களின் திருமணத்திற்கு 5000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமா மிர்தம் அம்மையார் திட்டம் துவக்கப்பட்ட ஆண்டு.


¬ கர்ப்பிணிப் பெண்களுக்கு எட்டாம் மாதம் முதல் குழந்தை பிறந்து முதல் இரண்டு மாதங்களுக்கு மாதம் ஐம்பது ரூபாய் வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம் துவக்கப்பட்ட ஆண்டு 


¬ வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்களின் கல்லூரிப்படிப்பிற்கான  கட்டணங்களை அரசு ஏற்றுக்கொள்ளும் ஈ வே ரா நாகம்மையார் திட்டம்  துவக்கப்பட்ட ஆண்டுக் 


¬ குத்தகைக்குப் பயிரிடும் தொழிலாளர்களை வெளியேற்றுவதைத் தடுக்கும் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு.


¬ அனைத்து மருத்துவப்படிப்புகளுக்கும் தனியாக மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு எம் ஜி ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் உருவான ஆண்டு 


¬ பரிசுத்தொகை, மேற்படிப்புக்கு ஊக்கத்தொகை கிடைக்க உதவும் மாநில, மாவட்ட ரேங்க் பட்டியலுக்குத் தமிழ் மொழியைப் பள்ளியில் படித்தவர்கள் மட்டுமே தகுதி பெறுவார்கள் எனும் அரசாணை வந்த ஆண்டு 

No comments:

Post a Comment