Saturday 30 January 2021

திமுக மீது வைக்கப்படும் அவதூறுகள் - ஆர்.இளம்வழுதி

 திமுக மீது வைக்கப்படும் அவதூறுகள் - ஆர்.இளம்வழுதி


திமுக மீது வைக்கப்படும் அவதூறுகளும், பொய்கதைகளும், புரட்டு செய்திகளும் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கும் ஏனென்றால் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கான உரிமையை பேசும் சமூகநீதி இயக்கம் திமுகழகம்.


இந்தியாவில் வடக்கில் அரியர்களில் நலன் காக்கும் சித்தான்தம் கொண்டு ஒரு இயக்கம் தோன்றியது. தெற்கிலிருந்து பாடுபடும் பாட்டாலிகளின் உரிமைக்குரலாய் சமுகநீதி பேசும் திராவிட இயக்கம் உதித்தது. இந்தியாவின் வரலாறு என்பது ஆரிய−திராவிட போரே அன்றி வேறுஒன்றும் இல்லை.


திமுக வையும் கலைஞரையும் பிரித்து பாரக்க முடியாது இரண்டு ஒன்றானதே இங்கு திமுக மீதும் கலைஞர் மீதும் ஆரிய கூட்டம் தொடர்ந்து பல அவதூறுகளை பரப்பிக்கொண்டே இருக்கும் அது சில நேரங்களில் நம் நண்பர்களுக்கே நம்மை எதிரியாய் சித்தரிக்கவும் செய்யும்.


அதில் ஒன்றுதான் பட்டியல் இனத்தவர்(தாழ்த்தப்பட்டவர்கள்) திராவிட இயக்கம்,திமுக மற்றும் கலைஞர்  எதுவும் செய்யவில்லை அவர்களை திமுக ஏமாற்றுகிறது என்று ஒரு பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது.இதனை சில நடுநிலைவாதிகள் கையில் எடுத்துக்கொண்டு திமுக மீது பழிசுமத்த வாய்ப்பு தேடி காத்திருக்கும் கழுகுகூட்டம் அவற்றின் மூலம் அவதூறு பரப்பி அவபெயர் உண்டாக்கலாம் என்று செயல்படுகிறார்கள்.


திராவிட இயக்கம் அதன் தோற்றம் முதல் இன்று வரை தொடரந்து பட்டியல் இனமக்களின் பக்கமே நின்றிருக்கிறது என்பது தான் வரலாற்று உண்மை.

அந்த வரலாற்று உண்மைகளை ஆதாரத்தோடு தொட்டுகாட்டி செல்கிறேன் வாருங்கள்.


நீதிக்கட்சி


திராவிட இயக்கக்கித்தின் முன்னோடிகளான தியாகராய செட்டியார் மற்றும் டி.எம்.நாயர் தலைமையில் நடைபெற்ற ஒர் கூட்டத்தை பற்றி பார்ப்போம்.நீதிகட்சி உழைப்பால் பஞ்சமர் என்று அந்நாளில் அழைக்கப்பட்ட ஆதிதிராவிடர்கள் பிள்ளைகள் மதராஸ் மாநகராட்சி தன் மாதிரி பள்ளிகளில் சேர்க்க முனைந்தது.இதனை அறிந்த அன்னிபெசன்ட் ஹோம் ரூல் இயக்கத்தவர் காங்கிரஸ் அவையில் உறுப்பினர் இவர் ஆதிதிராவிடர்களை பற்றி குறிப்பிடும் போது முற்பிறவியில் தாம் செய்த தீவினைகளால் இப்படி பிறக்கிறார்கள் இவர்கள் உயர் சாதியினர் தகுதியை அடைவதற்கு பல தலைமுறைகள் ஆகும் என்றும் குறிப்பிட்டிருந்தார் இதனை கண்டித்து ஆதிதிராவிடர்களும்  நீதிக்கட்சியும் போராடினர்.இதனை பார்க்கும் போது ஆதிதிராவிடர் உயர்வுக்காக நீதிக்கட்சி மட்டுமே பார்ப்பனரின் எதிர்ப்புக்கு இடையே போராடிற்று என்பது தெளிவாகிறது. நீதிகட்சி மாத்திரம் அல்ல அதன் ஆட்சியில் ஆதிதிராவிடர் அரசு நியமனம்,வீட்டுமனைகள்,குடியிருப்புகள்,சாலைகள்,பள்ளிகள்,லேபர் கமிஷனர் உருவாக்கம்,ஆதிதிராவிடர் நலனுக்கு உதவும் நிறுவனங்களுக்கு பொருள் உதவி, மாணவர்களுக்கு விடுதி, தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டாம், ஊக்கதொகை வழங்குதல் என்று இப்படி எண்ணற்ற நலத்திட்டங்களை கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிதிராவிடர் நலன் கருதி செயல்பட்டது நீதிக்கட்சி.


பெரியார் காட்டிய பாதை 


நீதிக்கட்சி பார்ப்பனர் அல்லாத அனைத்து மக்களுக்குமான அரசியலை முன்னெடுத்தது அந்த ஆட்சி முடிவுக்கு வரவே அதன் தொடர்ச்சியாக தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் பின் திராவிடர் கழகமாக சமூகபுரட்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டது.அவ்வியக்கமும் தந்தை பெரியாரும் எப்போதும் ஆதிதிராவிடர்கள் நலனிலேயே அக்கறையாக இருந்தனர்.


ஆனால் இந்த அவதூறு பரப்பும் கயவர்கள் என்ன சொல்கிறார்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே பெரியார் பேசினார் எழுதினார்.ஆதிதிராவிடர்களின் மீது அவருக்கு அக்கறை இல்லை என்று வாய்கூசாமல் சொல்வார்கள்.ஆனால் அது உண்மை அல்ல "உங்களை யாராவது கிராமவாசிகள் துன்புறுத்தினால் இழிவாய் நடத்தினால் எதிர்த்து நிக்கவேண்டும் முடியாவிட்டால் வேறு பட்டணங்களுக்குக் குடியேறிவிட வேண்டும்.அங்கும் ஜீவனத்திற்கு மார்க்கமில்லாவிட்டால் இம்மாதிரியான கொடுமையான மதத்தை உதறித் தள்ளிவிட்டு சமத்துவமுள்ள மதத்திற்குப் போய்விட வேண்டும்.அதுவும் முடியாவிட்டால் வெளிநாடுகளுக்காவது கூலிக்களாய் போய் உயிரையாவது விட வேண்டும். இம்மாதிரியான உறுதியான முறைகளைக் கையாளத் துணிவில்லையானால் உங்கள் மீது சுமத்தப்பட்ட இழிவு சுலபத்தில் ஒழியாது என்றே சொல்வேன்".


கஷ்டப்படவும் கட்டுப்பாட்டை உடைத்து எறியவும் உயிரை விடவும் தயாராய் இல்லாமல் எந்த காரியமும் சாதிக்க முடியாது.


உங்களுடைய கிளர்ச்சியானது பொருளாதாரத் துறையில் நீங்கள் மற்றவர்களால் ஏமாற்றப்படுவதும் வஞ்சிக்கப்படுவதும் ஒழிய வேண்டுமென்பதையே அஸ்திவாரமாய் கொண்டிருக்க வேண்டும் அதில்தான் உங்கள் விடுதலை இருக்கிறது.எந்தக் கடவுளும் எந்த மதமும் இதற்கு வகை செய்ய முடியாது".


"தீண்டப்படாத தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் ஏதாவதுவிடுதலை வேண்டுமானால் அரசாங்கத்தைக் கொண்டுதான் செய்துகொள்ள முடியும் மற்ற வகுப்பாருடைய அரசியல் கிளர்ச்சியில் பட்டும் கொள்ளாதீர்.அதெல்லாம் பார்பனர்களும் உயர் சாதிகாரனும் படித்தகூட்டமும் இன்னமும் ஆதிக்கம் செலுத்தவே பாடுபடும் கிளர்ச்சிகளாகும்" .


ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பதை போல் இவ்வரிகளின் வாயிலாக தந்தை பெரியார் தாழ்த்தப்பட்ட மக்களின் பக்கமை நின்று அவர்களின் சமூக விடுதலைக்காகவே போராடினார்.இப்படிப்பட்ட சாதிய இழிவுகளை சமூகத்திலிருந்து போக்க அவர்களுக்கு வழிசெய்ய அரசாங்க துணைவேண்டும் என்று எண்ணிய பேரறிஞர் அண்ணா திராவிடர் கழகம் என்னும் சமுதாய சீர்த்திருத்த இயக்கத்திலிருந்து விலகி திமுக எனும் அரசியல் இயக்கம் கண்டார்.


திமுகவும் அண்ணாவும்


1949 தொடங்கப்பட்ட திமுக 18ஆண்டுகள் பெரியாரின் ஆதரவும் இன்றி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள்,கண்டன கூட்டங்கள், தீர்மானங்கள் என மக்களின் நலன் நோக்கி சமூக சீர்த்திருத்த நடவடிக்கைகளில் தன்னை முனைப்போடு முன்னிறுத்திக்கொண்டது. கொள்கைவழி தவறாது நடைபோட்டு நீதிக்கட்சியின் நீட்சியாக 1967 ல் தமிழகத்தில் ஆட்சியியைஅண்ணா தலைமையில் அமைத்தது.


தந்தை பெரியாருக்கு காணிக்கையாக சுயமரியாதை திருமணச்சட்டம்,இருமொழிகொள்கை,தமிழ்நாடு என்று பெயர்மாற்றம் செய்தார் அண்ணா. சாதிக்கொடுமைகளை கலைந்திட சாதிமறுப்பு திருமணங்களுக்கு தங்க பதக்கம் வழங்கும் திட்டத்தை முன்வைத்தார். ஆதிதிராவிடர்களுக்கு என்று தனி அமைச்சகம் உருவாக்கி அதற்கு ஒரு பெண்ணை அமைச்சராக்கி பெருமைசேர்த்தவர் அண்ணா.


அண்ணாவின் தம்பி கலைஞர் 


"கலைஞர் மு.கருணாநிதி எனும் நான்" 

என்று சொல்லி தலைவர் ஆட்சி்பொருப்பிற்கு வரும்போது எல்லாம் ஆரியத்தின் அடிப்பீடமே கலங்கும் அதற்கு காரணங்களும் உண்டு.


ஏனென்றால் அவர் பெரியாரின் மாணவர் ஆரியத்தின் பரம எதிரி ஆதிதிராவிடர் மீது திராடவிட இயக்கம் நீதிக்கட்சி தொடங்கி திமுக வரையில் மிகுந்த அக்கறைக்கொண்டது அதிலும் கலைஞர் தம் ஆட்சி சூத்திரர்களுக்கானது என்று சட்டமன்றத்திலேயே அறிவித்தவர்.எத்தனை மிக வேண்டுமாணாலும் போட்டுக்கொள்ளவும் நான் அத்தனை மிகவும் பிற்படுத்தப்பட்டவன் என்று வெளிப்படையாக சொல்லி ஆட்சிசெய்பவர்.


திமுக அதன் தலைவர் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு மதராஸ் உயர்நீதிமன்ற நீதிபதியாக ஒரு ஆதிதிராவிடர் வரவேண்டும் என்று பெரியாரின் கோரிக்கையை ஏற்று ஆதீதிராவிடர் ஒருவரை தலைமை நீதிபதி ஆக்கியது முதல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் வரை ஆட்சியில் கலைஞர் ஆதிதிராவிடர் பக்கமே நின்றார்.


திமுக ஆட்சியிலும் கட்சியிலும் சமூக நீதிகாக்கும் இயக்கம் திமுகவின் கிளைகழகம் முதல் தலைமைகழகம் வரை அனைத்து படிநிலைகளிலும் ஆதிதிராவிடர்களுக்கும் பெண்களுக்கும் உரிய பிரதிநிதிதுவம் அளிக்கப்படுகிறது.மக்கள் பிரதிநிதிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புமுதல் நாடாளுமன்றம் வரை அனைத்து அதிகாரம் மிக்க பதவிகளிளும் ஆதிதிராவிடருக்கு பரிபூரணமாக வழங்கும் இயக்கம் திமுக தலைவர் கலைஞரும்.


அதன் தொடர்ச்சியே மு.க.ஸ்டாலின் எனும் நான் இதை நாடு உணரும் காலம் வந்துவிட்டது.அவதூறு பரப்பும் ஆரிய கூட்டமே அடக்கத்தோடு இருங்கள் வரவிருப்பது கலைஞரின் மகன் கலைஞரின் ஆட்சி!!!!


- ஆர்.இளம்வழுதி
No comments:

Post a Comment