Saturday 30 January 2021

நான் கண்ட கலைஞர் - சீ. சுந்தரராஜன்

 நான் கண்ட கலைஞர் - சீ. சுந்தரராஜன் 


நான் 1969 ம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றேன்.


1971-72 ஆம் ஆண்டுகளில் கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது, ஒருநாள் காலை வேளை நான் பணியில் இருந்தபோது புது தில்லியிலிருந்து சென்னை வந்த விமானத்தில் கலைஞர் அவர்களும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களும் வந்தடைந்தனர்.


கலைஞர் அவர்களை வரவேற்க திமுக அமைச்சர்களும், கழக தொண்டர்களும் ஏராளமாக கூடி இருந்தனர். மந்திரிகள் கலைஞர் அவர்களுக்கு மாலை அணிவிக்க முயன்றனர். கலைஞர் அவர்கள் அதை தடுத்து நிறுத்தி பெருந்தலைவர் காமராஜர் அவர்களை காண்பித்து அந்த மலர் மாலையை காமராஜருக்கு அணுவிக்குமாறு கூறினார்.


அதன்படியே பெருந்தலைவருக்கு மாலை அணுவிக்கப்பட்டது. பிறகு இருவரும் கைகுலுக்கி பேசிக்கொள்கிறார்கள். 


இதைக்கண்ட போது எனது மனம் நெகிழ்ந்து போனது. இந்த பெருந்தன்மை எந்த தலைவருக்கும் வராது என்பதை உணர்ந்தேன். 


பேச்சாற்றல், பெருந்தன்மை, மனிதநேயம் கொண்ட கலைஞர் அவர்களை என் மனம் இன்றும் நினைத்துக்கொண்டு தான் இருக்கிறது. 


இங்கனம்,

சீ. சுந்தரராஜன் 

9566086556  


No comments:

Post a Comment