Saturday 30 January 2021

கலைஞர் மற்றும் அவர்தம் படைத்தளபதிகள் - மு.ரா.விவேக்

 கலைஞர் மற்றும் அவர்தம் படைத்தளபதிகள் - மு.ரா.விவேக்


ரே காலத்தில் வாழ்ந்த ஒரே காரணத்திற்காகக் கலைஞருக்கு -இணையாக ஜெயாவை ஒப்பிடுவதும், தளபதிக்கு இணையாக எடப்பாடி கமல் சீமான் போன்றோரை ஒப்பிடுவதும் இன்று நேற்றல்ல நம்மைச் சிறுமைப்படுத்த 3% எதிரணியினர் செய்யும் மாயாஜால யுக்தி!

எம்ஜிஆரும் ஜெயாவும் வாழும் காலத்தில் அவர்களுக்கு இருந்த மாயபிம்பம் ஒவ்வொருநாளும் உடைந்து கொண்டு வருவதைக் கண்ணார காண்கிறோம்!


கலைஞரின் ஆளுமை -தொலைநோக்குப் பார்வை-தீர்க்கமான கொள்கை சார்ந்த பார்வை-எல்லாம் பெரியார் அண்ணா வார்ப்பில் வந்தவை-அவர் எடுக்கும் முடிவுகளும்-அவரின் தம்பிகளின் அரசியல் வியூகங்களை இந்தியாவிற்கே வழிகாட்டியது -காட்டுவது தான் வரலாறு-நிகழ்கால வரலாறு!


எம்ஜிஆர் முதல்வராக இருந்த நேரம்,கலைஞர் இந்திராகாந்தி அம்மையாருடன் கூட்டணி அமைத்துத் தமிழகத்தில் 37 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்று டெல்லிக்கு அனுப்பினார்.மத்தியில் குடியரசுத் தலைவரை நியமிக்க இந்திரா ஆலோசித்து வந்தார், தீடீரென்று கலைஞர் சென்னையிலிருந்து ஒரு அறிக்கை திரு.செயில் சிங் என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரைக் குடியரசுத் தலைவராக்க முதன் முதலில் பரிந்துரைத்தார்.டெல்லி பரபரத்தது அவரைப் பற்றி விசாரிக்கச் சொல்கிறார் இந்திரா.பிறகு ஏழாவது குடியரசுத் தலைவராக இந்திய நாட்டிற்குத் தேர்ந்தெடுக்கப் படுகிறார் திரு.செயில் சிங் அவர்கள். பின்னாளில் சென்னையில் நடந்த கூட்டத்தில் கலைஞரின் பெயரைக் குறிப்பிட்டு அதைப் பதிவும் செய்கிறார் திரு. செயில் சிங்!


ஜெயா முதல்வராக இருந்த நேரத்தில் தனக்கும் அறிக்கை கொடுக்கத் தெரியும் என்ற ரீதியில் யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே தன் பத்திரிகையிலும் அறிகைவாயிலாகக் கொடுத்து விட்டார்-விஷயம் மத்திய அமைச்சரவையிலிருந்த திமுக எவ்வளவோ துறைகளைப் பெற்றுக் கொண்டது-ஏன் நீர் மேலாண்மைத் துறையைப் பெற்று இருக்கலாமே அதன் மூலம் காவேரி பிரச்சனையைத் தீர்த்து இருக்கலாமே? எல்லாம் சுயநலம் எல்லாம் சுயநலம் மக்களே சிந்திப்பீர் என்று சொல்லிவிட்டு உறங்கி விட்டார் விடிந்து பார்த்தால் கலைஞர் எளிதாகப் பிரச்சனையை முடித்துப் பதில் அளித்துக் கடந்து சென்று இருந்தார்-"அதாவது சுதந்திர இந்தியாவில் தண்ணீர் பங்கீடு பிரச்சனை உள்ள மாநிலங்களில், அந்த அந்தப் பிரச்சினைக்குரிய மாநிலத்தைச் சேர்ந்தவர் எவரும் அந்தத் துறையின் அமைச்சராக நியமிக்கப் படுவதில்லை-இதற்கு முன்பும் அப்படி இருந்ததில்லை இதுகூடத் தெரியாமல் ஜெயா ஒரு முதல்வர் என்று சொல்லிவிட்டார்"-என்னது? என்று பொங்கி எழுந்த அம்மையார் தன் துதிபாடிகளை-அதிகாரிகளை இன்னும் சில மணிநேரத்தில் எனக்கு முழு அறிக்கை வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறார்-அரசு எந்திரம் சுழல்கிறது அதில் இருக்கும் உயர் அதிகாரிகளே பேசிக்கொள்கிறார்கள் கலைஞரே சொல்லிவிட்டார் இதை எல்லாம் விசாரிக்கணுமா?அவர் சொன்னா இல்லாமலா சொல்வார் என்று பேசிக்கொள்கிறார்கள்-இறுதியில் கலைஞரின் வாக்கே உண்மையாகிறது அதற்குப் பின் அது சம்பந்தமாக ஜெயா பேசியதாக வரலாறு இல்லை அதான் கலைஞரின் அறிவுக் கூர்மை!


தற்பொழுது இந்திய நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத 69% இடஒதுக்கீடு தமிழகத்தில் தான் உள்ளது ,அதிலும் 20% என்னும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) என்னும் அட்டவணை தமிழகத்தில் இருக்கிறது இதர இந்தியா முழுதும் OBC யாக இருக்கிறது! விஷயம் அதுவல்ல அந்த 20% இடஒதுக்கீடு உரிமையால் பல குடும்பம் கடந்த 30 வருடத்தில் முன்னேறி இருக்கிறது-முன்னேறிக் கொண்டும் உள்ளது! இப்பொழுது அதிலும் மொத்தமாக 100 சாதிகளைச் சேர்த்துக் கொடுத்துக் கலைஞர் ஏமாற்றி விட்டார் என்று பிரச்சாரம் ! உறுதியாகச் சொல்லலாம் ஒரு விஷயத்தைக் கலைஞர் கையில் எடுக்கிறார் என்றால் அதை எதிர்காலத்திலும் எவராலும் சட்டப்போராட்டம் நடத்தியும் வென்று அல்லது பறித்து விடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார் அப்படிச் சட்டவல்லுனர்கள் கொள்கைகள் எல்லாவற்றையும் ஆராய்ந்து எடுக்கப்பட்ட மிகமுக்கிய இடஒதுக்கீட்டு சட்டமே 20% MBC அட்டவணையாகும்-இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஒரு சமூகத்துக்குப் பக்கத்து மாநிலம் ஆந்திராவில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு அதை அடுத்த ஆண்டே -ஒரே வருடத்தில் நீதிமன்றத்தால் பறிக்கப்பட்டதும் அவர்களின் ஆளுமை -முதிர்ச்சியின்மையைக் காட்டி நிற்கிறது!


திமுகவில் இருந்து கலைஞரின் பாசறையில் இருந்து வந்த வைரங்கள் ...

அய்யா மாறன் மாநில சுயாட்சியைப் பாராளுமன்றத்தில் அனல் பறக்கப் பேசியவர், உலகத் தாராளமயமாக்கல், இந்தியாவின் இணையத் தொழிற்புரட்சி எல்லாம் இவருக்கு அத்துப்படி!

திமுகவின் ஒரு மாவட்டச் செயலாளர் அய்யா ரத்தினவேல் பாண்டியன் உச்சநீதிமன்ற நீதிபதி ஆக்கப்பட்டார்!

அண்ணன் பாலு பற்றிச் சொல்லவேண்டுமானால் தங்க நாற்கரச் சாலை, ரயில்வே துறையில் தமிழகத்திற்குப் புதிய வழித்தடங்கள், சேதுசமுத்திர திட்ட வரைவு என்ற கோலோச்சி இன்று காஷ்மீர் மக்களுக்காகக் குரல்கொடுத்து மக்கள் மனங்களைக் கவர்ந்தவர்!

உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பாப்பாபட்டி கீரிப்பட்டி தேர்தலை நடத்தி சமூக நீதியை நிலைநாட்டிக் காட்டியவர் தளபதி ஸ்டாலின்!


அண்ணன் திருச்சி சிவா- தனி மனிதனால் கூட வாதத்தால் கருத்தால் கொள்கையால் சாதிக்கமுடியும் என்ற தனிநபர் மசோதாக்கள் மூலம் பெண்களுக்காக- திருநங்கைகளுக்காகப் பல அரசாணைகளைப் பெற்றுக் கொடுத்தவர்!


தயாநிதி மாறன் தொடக்ககாலத்தில் இந்தியாவிற்கே இணைய உலகத்தைக் கொண்டு பரவலாக மக்களுக்குக் கொண்டு சேர்த்தவர்-I. T புரட்சி!

அண்ணன் ராசா இவரைப் போல் முதுகில் குத்தப்பட்டுப் பழிக்கு ஆளானவர் வேறு யாரும் இருக்கமுடியாது, இன்று இந்தியாவில் நம் ஒவ்வொருவர் கைகளுக்கும் கைபேசி தவழ இவர் தன்னைப் பலிகொடுத்து பரவலாகியவர் -பெரியாரின் கலைஞரின் கருத்தை ஒவ்வொருநாளும் போற்றிப் பறைசாற்றி வருபவர்!


கவிஞர் கனிமொழி 10% இடஒதிக்கீடாகட்டும், பெண்ணுரிமை ஆகட்டும், தமிழகத் தமிழர் நலன் சார்ந்தே ஒவ்வொரு நாடாளுமன்ற உரையும் இருக்கும் -இரண்டு முறை சிறந்த நாடாளுமன்றவாதி விருதை வாங்கி உழைத்து வருகிறார்!


இப்படியாக இன்று அண்ணன் செந்தில்குமார் வரை நாடாளுமன்றத்தில் திமுகவின் உறுப்பினர்கள் நாட்டிற்கே பொதுவாகக் களமாடி இருக்கிறார்கள்!


தமிழக அளவில் சொல்லலாம் "திமுகவின் மாவட்ட செயலாளர் ஜில்லா கலெக்டர் "என்ற அளவுக்கு என்று....

அய்யா வீரபாண்டியார் இல்லாமல் சேலத்தின் வரலாறு ஏது ?வெறும் கட்சிப் பணி மட்டும் அல்ல சேலம் steel plant தொடங்கி அரசு மருத்துவமனை உட்கட்டமைப்பு வரை ஒவ்வொன்றிலும் அவர் பெயர் இருக்கும்!


அதே போல் கலைஞரின் படையினர் அன்பிலார் தூத்துக்குடி பெரியசாமி, ஆலடி அருணா,அய்யா தங்கபாண்டியன்,அய்யா கோ.சி. மணி ,அய்யா ஜெயராமன்......போன்றோர் சாதனைகள் ஆளும் கட்சியாக இருக்கும் பொழுது மக்களுக்காக அரசு நிதிபெற்றுத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது கட்சியைப் போராட்டத்தை முன்னெடுப்பதிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே என்று கலைஞரால் பாராட்டப்பட்டவர்கள்!


பொதுப்பணித் துறை சம்பந்தமாக வடிகால், ஆறு தடுப்பணை,ஏரி என்று நீர்நிலைகளின் complete database அய்யா துரைமுருகன், புள்ளிவிவரமாகவும் வரலாற்று ரீதியிலும் இவருக்கு இணை இவரே!


அய்யா நேரு அவர்களைப் பற்றிக் கலைஞர் தளபதி பேசாத பாராட்டாத விஷயங்களே இல்லை கிராமங்களுக்குச் சிறு பேருந்துகள் நவீன மாநகரப் பேருந்துகள் தொலைதூர பேருந்துகள் என்று மக்களுக்காகத் தேடித்தேடிச் செய்தவர்!


அதே வரிசையில் சமச்சீர் நாயகன் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களால் ஒரு அறிக்கையால் சில மாதம் முன்பு 5,8 பொதுத் தேர்வு நிறுத்தப்பட்டு -ஆளும் அமைச்சரே பேட்டி கொடுக்கிறார்!


கலைஞரின் தலைக்கு ஒரு சாமியார் விலைபேசிய பொழுது காவிகளைச் சிதறடித்தவர் ஆற்காட்டார் மற்றும் அன்பழகன் ஆகியோர்!


ஒரு சிறுமி கோரிக்கை வைத்தார் என்று அலட்சியம் காட்டாமல் ஒரு நூலகத்தையே கட்டிக்கொடுத்தவர், நீட்டால் நாம் இழந்த முதல் உயிர் அனிதாவினுடையது ,அந்த அனிதாவை அவர் பெற்ற மதிப்பெண்ணை உலகறிய செய்து போராடினர் அண்ணன் சிவசங்கர் !


மன்னார்குடி ராஜா அவர்கள் கடந்த புயலின் பொழுது மக்களோடு அவர் வாழ்ந்த வாழ்க்கை அவர் வாழ்நாள் முழுதும் மக்களால் நினைக்கப்படும்!


அண்ணன் மா.சு செய்து வரும் மக்கள் நலத் திட்டங்கள், மேயராக அவர் செய்து கொடுத்த பாலங்கள், மோடிக்கு எதிராகக் கருப்பு பலூன் பறக்கவிட்டது!


அண்ணன் சேகர்பாபு மாதம் மாதம் எதோ ஒரு விழா அதில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டம் கழகப் பணி என்று அடுக்கிக்கொண்டே போகலாம்!


கலைஞர்- அவரின் தளபதிகளாகட்டும் ,மாவட்டச் செயலாளர்கள் ஆகட்டும் உடன்பிறப்புக்கள் ஆகட்டும் முதலில் அவர்களுக்கு முழுச் சுதந்திரத்தைக் கொடுப்பார் அவர்களிடம் இருந்து Bestடை வாங்கிவிடுவார்-அவரின் தேர்வுகள் என்றைக்கும் தோற்றதாகச் சரித்திரம் இல்லை!

இதற்கெல்லாம் கலைஞர் மீது அவருக்கு இருந்த நம்பிக்கையா? அல்லது அவரின் தம்பிகள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையா? இதற்கெல்லாம் என்றும் யாரும் விடை சொல்லமுடியாது!


இதில் எவ்வளவோ கழக முன்னணியினர் பேர் விட்டுப் போயிருக்கலாம் அண்ணன்கள் பொன்முடி, பன்னீர்செல்வம்,அன்பரசன்,கோவை செல்வராஜ் போன்ற கள மறவர்கள் கழகம் காக்கும் உடன்பிறப்புகள் பலர் இருக்கிறார்கள்!


இப்படி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் மனங்களின் கலந்தவர்கள் கழகத்தவர்கள்!


நுனிப்புல் மேயும் போராளிகள், நடுநிலை புரட்சியாளர்கள், அதிமுகவுடன் திமுகவை ஒப்பிடும் பொழுது இது போல் மனிதர்களை, மக்கள் பணியாளர்களை அதிமுகவில் விரல்விட்டு காட்ட முடியுமா?


கட்சி நடத்துவது,அரசியல் செய்வது, நாடாளுமன்ற- சட்டமன்ற பணிகள் அவ்வளவு சுலபமல்ல இவை அனைத்தையும் அங்குலம் அங்குலமாகத் திட்டமிட்டு வழி நடத்தியவர் கலைஞர்- அவர் இளைப்பாற இலக்கியம், கலை ,எழுத்து, பேச்சு என்று அவரே தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டார்!


ஆனால் தளபதி 50 ஆண்டுகளின் கட்சி பணி, ஆட்சி பணி என்று படிப்படியாகச் செய்து களமாடியவர், அவர் கால்படாத தமிழகக் கிராமங்களே கிடையாது-நமது சந்ததியை வழி நடத்த தளபதி ஸ்டாலினை நமக்காகத் தமிழக மக்களுக்காகத் தயார்செய்து கொடுத்துவிட்டுத் தான் சென்றிருக்கிறார் கலைஞர் அவர்கள்


கடைசியாக ஒரு மௌன புரட்சி என்றே சொல்லாம்,


கொரோன காலத்தில் ஒரு நிழல் அரசாங்கமே அமைத்து மக்களைத் தன் தொண்டர்களுடன் நின்று அத்தியாவசிய உதவிகளை ஆறு மாத காலம் தொடர்ச்சியாகப் பெரும் பணியைச் செய்து முடித்தார் தளபதி ஸ்டாலின் அவர்கள்-தொடர்ச்சியாக மக்கள் சந்திப்பு-மக்கள் சபை-தேர்தல் பணிக்குழு-அரசின் ஊழல் முறைகேட்டிற்கு ஆளுநரைச் சந்தித்துத் துறைவாரியாக ஊழல் பற்றிய அறிக்கை-என்று மக்களோடு பயணித்துக் கொண்டே இருக்கிறார்!


கலைஞர் சந்தித்த அனைத்து தாக்குதல்களையும், இவர் சிறு வயது முதல் சந்தித்து, போராட்ட கள தழும்புகளோடு மக்கள் மன்றத்தில் உயர்ந்து நிற்கிறார்!


வேஷம் போட்டு நான்.... நான்.... என்று குதிப்போர் மத்தியில் நாம் என்று அரவணைத்து நிற்கும் ராஜாளி அவர்!

100 பேரைச் சட்டமன்றம் அனுப்பியவர்!

39 பேரை நாடாளுமன்றம் அனுப்பியவர்!

65%இடங்களை உள்ளாட்சியில் பெற்றுக் கொடுத்தவர்!

இனி யாரேனும்

திமுகவுடன் -அதிமுகவை,

கலைஞரோடு- ஜெயாவை,

தளபதியோடு- எடப்பாடியை


கலைஞரின் படையினரோடு வேறு யாரையோ விமர்சிக்கும் முன்பு சற்று யோசியுங்கள்!

Compare பண்ணிப் பாருங்கள் தெர்மாகோல்களையும், ரோட்டாண்டையும், சேக்கிழார்களையும், கலைஞர் வார்ப்பிக்கவில்லை-தளபதி தயார் செய்யவும் இல்லை!


4மாதம் 30நொடிகள் போல் ஓடிவிடும் எவ்வளவு மின்மினிப் பூச்சிகள் நாற்காலியில் உட்கார துடிக்கின்றது, ஒரு தகுதி வேண்டாம்!? -கலைஞர் இல்லை தான், ஆனால் கலைஞராக மாறி நிற்கிறார் தளபதி ஸ்டாலின் -முதல்வர் என்ற பதவி, அமைச்சர் என்ற பதவியில் இருக்கும் வரைதான் இந்த அடிமைகளுக்கெல்லாம் வெளிச்சம் -பகுமானம்-எல்லாம் நான்கு மாதத்தில் செல்லாக்காசாய் மாறிப் போவீர் நினைவில் நிறுத்துங்கள்!


நமது தளபதி நின்று நிலைத்து ஆள்வார்-காவிகளும் அடிமைகளும் வியந்து வெட்கி வாழும் நாளில் தமிழகம் பொலிவு பெற தமிழக மக்கள் நிறுத்துவார்கள் மு.க. ஸ்டாலின் அவர்களைத் தமிழகத்தின் முதல்வராக !


கலைஞர் பாசறையில் உருவாக்கப்பட்ட வைரங்கள் காலத்தால் அழிக்க முடியாத தூண்களாய் நிற்பார்கள் என்பதே வரலாறு!


திமுக என்பது ஓர் இயக்கம்-மக்களுக்கான இயக்கம்-பெருமையோடு துணிவோடு உண்மையோடு களத்தில் நிற்போம்!


தி.மு. கழகம் காப்போம்-கழக ஆட்சி அமையச் சூளுரைப்போம் -நம் வரலாறு அத்தகையது!

No comments:

Post a Comment