Sunday 28 February 2021

இனி தான் ஆரம்பம் - மு.க.ஸ்டாலின் சிறப்பிதழ்

 ணக்கம்.



2021 தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி, திராவிட வாசிப்பு மின்னிதழை, சிறப்பிதழ்களாக கொண்டுவருகிறோம். கடந்த டிசம்பர் 2020 மாத இதழ், பேரறிஞர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தை முன்வைத்து "சி.என்.அண்ணாதுரை எனும் நான்" என்கிற தலைப்பில் வெளியானது. ஜனவரி 2021 இதழ், கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தை முன்வைத்து "மு. கருணாநிதி எனும் நான்" என்கிற தலைப்பில், பல்வேறு கட்டுரைகளை கொண்டு வெளியானது. 


இந்த இதழ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பிதழாக வெளியாவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். மு.க. ஸ்டாலின் அவர்களின் அரசியல் வாழ்க்கை நெடியது. 14 வயதில் கோபாலபுரம் இளைஞர் தி.மு.கவில் தொடங்கி, மிசாவில் கைதாகி சிறையில் சித்ரவதைக்கு உள்ளாகி அரசியல் வாழ்வை தொடங்கியவர். தியாகத்தால் புடம் போட்ட தங்கமாய் ஜொலிப்பவர். அண்ணாவின் கொள்கை தீபத்தை ஏந்தி சென்னையில் இருந்து காஞ்சிவரை ஓடிச்சென்று கலைஞர், எம்ஜிஆர் அவர்களின் முன்னிலையில் ஒப்படைத்தவர். தி.மு.கவில் இளைஞர் அணி எனும் பேரணியை தொடங்கிவைத்து இயக்கத்துக்கு இளைஞர் பால் கொண்ட நாட்டத்தை வெளிக்காட்டியவர். 1984 ல் இருந்து சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடுபவர். 1996 ல் சென்னை மேயராக மக்களால் மிகப்பெரிய வெற்றியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை மாநகரை சிங்கார சென்னையாக மாற்றிக்காட்டியவர். சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ வாக, உள்ளாட்சி துறை, ஊராகவளர்ச்சி துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக சிறப்பாக பணியாற்றியவர். கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தின் கீழான நிலைக்கு காரணமான ஆளும் கட்சியை ஆளும் எதிர்க்கட்சி தலைவராக வலம் வருபவர். 2016 ல் நூலளவில் ஆட்சியை இழந்த தளபதி மு.க.ஸ்டாலின் 2019 ல் பாசிசத்திற்கு எதிரான யுத்தத்தில் மதவாதத்தை அண்ட விடாமல் ஓட ஓட விரட்டி தமிழ்நாட்டில் மாபெரும் வெற்றியை பெற்றவர். 


இதோ 2021 தேர்தல் வந்துவிட்டது. தமிழ்நாட்டு இருளை அகற்ற வரும் உதயசூரியனாய் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வருகிறார், ஓய்வறியா சூரியன் கலைஞரே "உழைப்பு உழைப்பு உழைப்பு" என்று பாராட்டிய மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டிற்கான விடிவு பிறக்கட்டும். இனி தான் ஆரம்பம்!     


இதழை வாசிக்க: இனி தான் ஆரம்பம் - மு.க.ஸ்டாலின் சிறப்பிதழ் 


இந்த இதழுக்காக பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதித்தந்த உடன்பிறப்புகளுக்கு எங்களது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். 


இந்த சிறப்பிதழ் உங்களுக்கு பல்வேறு வரலாற்று தகவல்களையும், வரலாற்று அறிவையும் தரும் என்று நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.  

திராவிட வாசிப்பு குறித்த உங்களது மேலான கருத்துகளை, விமர்சனங்களை எதிர்பார்க்கிறோம். கீழ்காணும் மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்துகளை சொல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!  


உங்கள் படைப்புகளையும், கருத்துகளையும் இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்: dravidavaasippu@gmail.com


கட்டுரைகளை திராவிட வாசிப்பு ஆன்லைன் பக்கத்திலும் வாசிக்கலாம்: https://blog.dravidiansearch.com/

 


இப்படிக்கு,

திராவிட வாசிப்பு Editorial Team:

(அருண் ஆஷ்லி, அசோக் குமார் ஜெ, அஷ்வினி செல்வராஜ், தினேஷ் குமார், ஜெகன் தங்கதுரை, கதிர் ஆர்.எஸ்., மதுமலர்,மனிதி தெரசா, இராஜராஜன் ஆர். ஜெ, டிமோத்தி, யூசுப் பாசித், விக்னேஷ் ஆனந்த், விஜய் கோபால்சாமி)

திராவிட காணொளிகள் - FEB 2021

 திராவிட காணொளிகள் 


DMK4TN 


https://www.youtube.com/channel/UCWMQWKXGDlbwkgQ2-1Ue7Xg


மு..ஸ்டாலின் பக்கம்


https://www.youtube.com/user/mkstalinspeech


தி.மு.க. இளைஞரணி


https://youtube.com/c/DMKYouthWing


அரக்கர் தொலைக்காட்சி 

https://youtube.com/channel/UClx12NC7kfjmuomVWZiQDuQ


திராவிட நாட்காட்டி - பிப்ரவரி

 திராவிட நாட்காட்டி

திராவிட நாட்காட்டி - பிப்ரவரி


பிப்ரவரி 1 

1895 - ஓமந்தூரார் ராமசாமி பிறந்தநாள் 

2006 - தனியார் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு சட்டம் - குடியரசுத்தலைவர் ஒப்பம்


பிப்ரவரி 3 

1969 - அறிஞர் அண்ணா மறைவு 

1970 - பெர்ட்ரண்ட் ரசல் மறைவு 


பிப்ரவரி 4 

1747 - வீரமாமுனிவர் மறைவு


பிப்ரவரி 7 

1812 - புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ் பிறந்தநாள் 

1902 - ‘திராவிட மொழிஞாயிறு’ ஞா. தேவநேயப்பாவாணர் பிறப்பு


பிப்ரவரி 11 

1908 - ஜி.யூ. போப் மறைவு 

1946 - சிங்காரவேலர் மறைவு


பிப்ரவரி 12 

1809 - ஆபிரகாம் லிங்கன் பிறப்பு 

1809 - டார்வின் பிறப்பு


பிப்ரவரி 17 

1929 - செங்கல்பட்டு முதல் மாகாண சுயமரியாதை மாநாடு (முதல் நாள்) 

2001 - சென்னையில் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது 


பிப்ரவரி 18 

1860 - சிங்காரவேலர் மறைவு 

1937 - டாக்டர் சி. நடேசனார் மறைவு 


பிப்ரவரி 20 - உலக சமூகநீதி நாள் 

1950 - பெரியாரின் ‘பொன்மொழிகள்” நூலுக்குத் தடை


பிப்ரவரி 21 - உலகத் தாய்மொழி நாள் 


பிப்ரவரி 21 

1907 - எம். ஆர். ராதா பிறப்பு 

1940 - கட்டாய இந்தி ஒழிந்த நாள் 

1994 - மண்டல் குழுப் பரிந்துரை அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு முதல் 

வேலை வாய்ப்பு 


பிப்ரவரி 22 

1864 - ரெட்கிராஸ் சொசைட்டி தோற்றம் 

1953 - ஊ.பு.அ. சவுந்தபாண்டியன் மறைவு 


பிப்ரவரி 24 

1980 - காஞ்சிபுரத்தில் சங்கராச்சாரி மடம் எதிரில் தந்தை பெரியார் சிலை திறப்பு


பிப்ரவரி 26 

1917 - ‘Justice’ என்ற ஆங்கில நாளிதழை நீதிக்கட்சி வெளியிட்டது 

1933 - சிவகங்கை எஸ். இராமச்சந்திரனார் மறைவு


பிப்ரவரி 27 

1928 - சுக்கிலநத்தம் (அருப்புக்கோட்டை) - தந்தை பெரியார் நடத்திய 

         முதல் சுயமரியாதைத் திருமணம் 

பிப்ரவரி 27 

1938 - காஞ்சியில் இந்தி எதிர்ப்பு மாநாடு


தொகுப்பு: இராஜராஜன் ஆர்.ஜெ

மு.க ஸ்டாலின் வாழ்க்கை குறிப்புகள்

 மு.க ஸ்டாலின் வாழ்க்கை குறிப்புகள்


01.03.1953  

கலைஞர் மு.கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதியருக்கு மகனாக மு.க.ஸ்டாலின் பிறந்தார்.

1967   

கோபாலபுரம் “இளைஞர் திமுக” 14 வயதில் மு.க. ஸ்டாலின் அவர்களால் துவங்கப்பட்டது.

30.09.1968 

கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பாக அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்.

08.04.1972 

காஞ்சி மாநாட்டில், அண்ணா நினைவு இலட்சிய தீபத்தை ஏந்தி  சென்னையில் இருந்து காஞ்சிக்கு ஓட்டமாக மு.க. ஸ்டாலின் வந்து நாவலர்,எம்ஜிஆர், கலைஞர் கையில் ஒப்படைப்பு. 

1972       

கோவை மாணவர் அணி, மொழி காக்கும் மாநாட்டில், மொழிக்காக உயிரை விடவும் தயார் என மு.க. ஸ்டாலின் சூழுரை நிகழ்த்தினார். 

25.06.1975 

இந்தியாவில் எமர்ஜென்சி என்கிற நெருக்கடி நிலை (Misa/ Maintainence 

Internal Security Act)  அமல் படுத்தப்படுகிறது. 

27.06.1975  - நெருக்கடி நிலையை எதிர்த்து திமுக தீர்மானம்

04.07.1975 - முதல்வர் கலைஞர், நாவலர் காமராசரை நெருக்கடி நிலை தொடர்பாக 

               சந்தித்தல். 

31.01.1976 - திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்டது. மு.க. ஸ்டாலினை 

               கைது செய்ய போலீஸ் கோபாலபுரம் வருகை. அவர் வீட்டில் இல்லை.     

               நாளை தான் வருவார். வந்தவுடன் தகவல் அனுப்புகிறேன் என கலைஞர் 

               சொல்கிறார். வீட்டை சோதனையிட்டு விட்டு போலீஸ் செல்கின்றனர். 

01.01.1976 - மு.க. ஸ்டாலின் கைது. எண்ணெற்ற கழகத்தினர் தமிழகம் முழுவதும் கைது    

               செய்யப்பட்டனர்.

03.02.1976 - அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல்     

                 என மிசாவில்  கைதானவர்கள் பெயர்கள் மாவட்ட வாரியாக 

                 முரசொலியில் வெளியீடு.

02.06.1976 - எழுத்துரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து கலைஞர் அண்ணா சாலையில் 

                துண்டுப் பிரசுரங்களுடன் அறப்போர்.

05.01.1977   - மிசா கொடுமையில், சிறையில் தாக்கப்பட்ட கழகத்தின் கொள்கை பரப்பு 

                  செயலாளர் தளபதி ஸ்டாலின் உயிர்காத்த சிட்டிபாபு மரணம்.

20.07.1980   - திமுக இளைஞரணி மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தொடங்கப்பட்டது.                     

01.08.1982 -  மு.க.ஸ்டாலினை இளைஞரணி செயலாளர் பொறுப்புக்கு நியமிக்க 

                 அனைத்து மாவட்ட முன்னோடிகள் பரிந்துரை செய்தனர்.

1983 -    இளைஞரணி செயலாளர் ஆனார் ஸ்டாலின். கட்சிக்காக 10 லட்ச ரூபாய் 

               நிதி திரட்டி எந்த அணி தருகிறதோ, அந்த அணிக்கு அன்பகம் கட்டடத்தைத் 

               தருவதாக கலைஞர் தெரிவித்தார். இதற்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் 

               சென்று நிதி வசூலித்த மு.க. 

               ஸ்டாலின், ஒட்டுமொத்தமாக 11 லட்ச ரூபாய் திரட்டி கட்சிக்கு அளித்தார். 

               இதையடுத்து அன்பகம் தி.மு.க. இளைஞரணிக்கு வழங்கப்பட்டது. 

1984 -   முதல் சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டி

1989 -   சட்டமன்ற உறுப்பினராக முதன் முதலாக ஆயிரம் விளக்கு 

              தொகுதியிலிருந்து தேர்வு

12.10.1996 -8 லட்சம் வாக்குகள் பெற்று சென்னை மாநாகர மேயராக மு.க. ஸ்டாலின் 

              வெற்றி பெற்றார். 

28.07.1997- 

30.07.1997 - ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையகமான நியூயார்க் நகரில், உலக 

                ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட மேயர்கள் மாநாட்டில் சென்னை 

                மேயரான மு.க.ஸ்டாலின் பங்கேற்பு 

04.08.1997 

09.08.1997 - ஜப்பானில் உறிரோஷிமா, நாகசாகி நகரங்களில் நடைபெற்ற       

                "ஒற்றுமையின் மூலம் அமைதிக்கான உலக அளவிலான மேயர்கள் 

                மாநாட்டில், சென்னை மேயர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு

06.05.2002 - பிரேசில் ரியோடி ஜெனீரோவில் உள்ளாட்சி மன்ற அதிகாரங்கள் குறித்த 

                 கருத்தரங்கில் சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பு 

12.01.2003 - ஜெயலலிதாவால் அகற்றப்பட்ட கண்ணகி சிலைக்கு மாற்றாக 

                அன்பகத்தில் கண்ணகி சிலை நிறுவப்பட்டது. 

11.04.2003 - ராணி மேரி கல்லூரியை புதிய சட்டசபைக்காக இடிக்கக்கூடாது என்று 

                அறப்போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை சந்தித்து தனது ஆதரவை 

              தெரிவித்த மு.க.ஸ்டாலின் அவர்களை நள்ளிரவில் ஜெயலலிதா அரசு கைது 

               செய்தது. 

02.06.2003 - திராவிட முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் ஆனார் 

                 மு.க.ஸ்டாலின்

30.09.2003 - திராவிட இயக்க வரலாற்று நிரந்தர கண்காட்சி கலைஞர் கருவூலத்தில் 

                 தளபதி ஸ்டாலினின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. 

2003     - "ஐரிஷ்" பன்னாட்டுப் பல்கலைக்கழகம் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் 

                 கொடுத்தது. 

13.05.2006 - உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் 

                 பொறுப்பேற்றார். 

2008  - திமுகவின் பொருளாளர் பதவிக்கு மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

06.02.2008 - ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் பயணம். 

29.05.2009 - தமிழகத்தின் முதல் துணை முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் 

                 பதவியேற்றார்.

01.08.2009 - சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தளபதி ஸ்டாலினுக்கு டாக்டர் 

                 பட்டம் வழங்கியது

25.11.2009 - துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் பயணம்.

25.02.2012 - கென்டக்கி மாகாண “கென்டகி கலோனல்” விருது மு.க.ஸ்டாலினுக்கு 

                வழங்கப்பட்டது 

25.05.2016 - சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக பொறுப்பேற்பு 

01.04.2017 - திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுகவின் செயல் 

                 தலைவராக ஆக்கப்பட்டார்.

07.08.2018 - கலைஞர் கருணாநிதி மறைவு

28.08.2018 - திமுகவின் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு

23.05.2019 - நாடாளுமன்றத்தேர்தலில் 40 இடங்களில் 39 இடங்களை பெற்று திராவிட 

                முன்னேற்றக் கழக கூட்டணி மிகப்பெரிய வெற்றி.


தொகுப்பு: இராஜராஜன் ஆர்.ஜெ




The easily predictable sweep of DMK+ in 2021 assembly - Kumar Ankush (Patna)

 The easily predictable sweep of DMK+ in 2021 assembly - Kumar Ankush (Patna)

Located at the tip of Indian subcontinent, Tamil nadu has been the bad boy or a backbencher in New Delhi's class.

Mostly away from central media lime light, Tamils are always been stereotyped as cinema fanatics. However the elite class outside the dravidian land are fully aware of the socio- politico upheaval the tamil land has gone through, during dravidian reform, yet they prefer to maintain unusual silence and preferably maintain distance, all to prevent any influx of dravidam here so to upheld and enjoy the unjust privileges they've been enjoying since their invasion here.

The 1967 sweep victory of DMK in Tamilnadu, sealed any prospects of growth of brahminical tumour by implementing mass social justice ideology, programmes and strategies at all levels. After realising that tamil land can't be further used to practice and spread thier tentacles down there, they preferred to operate from New Delhi whose hierarchical discriminatory and over centralizing tendencies compliments and are sub product on aryan sanskritic ideology.

Take the case of so called anti corruption movement in 2013 -14 that led to downfall of the most progressive and secular government ( UPA - 2), Indians ever had. It was all centered around 2G case which was nothing but smoulder created arduously by nazi descents, all to malgin a dalit ( A. Raja) who had gruelling dented thier ego by occupying such an powerful chair in the center, which was unbearable for them.

Post 2014, when Mandal Politics took back seat and there's return of casteist power into play, which even led to silencing of North regional social justice parties, it was from South, especially from Tamil nadu DMK under the leadership of MK Stalin who consistently battled against each attempt of BJP led central govt to establish hindutava rule by suppressing and taking away the constitutional right of Shudras. It was during thier vehement opposition to 10% fraudie reservation bill that led them to rose to golden position in Bahujan struggle history in Modi India.

MK stalin on various occasion has raised and pointed out the vengeful attitude of the BJP + to assault on reservation policy and cautioned societies across India to get aware and gang up against surging hindi - hindutava fascism. Stalin from the beginning of Modi India has been very careful about the hindi hindoo superiority - saviour complex these khaki chaddis have, his minute observation ability and sense of political vision successfully led South to get cautioned against ill tendencies of Delhi, he woved excellent relationships with progressive south leaders across political spectrum like pinari, kumaraswamy, YS Jagan, Chandra shekhar and Chandra babu, and vocally lead the imperial tendencies reflected in 15th Finance comission report meant to limit franchise of south. Stalin's leadership also gained praise and has got solidarity in far states like West Bengal in thier struggle against unilateral aggressive hindi invasion. Even Hindi regional parties, impressed by Dravidian reform are keen to incorporate dravidian ideology and elements in order to rejuvenate their strategy and give new edge to thier ideology in thier struggle against current destructive central sultanate. Bihar principal opposition Tejashwi Yadav of RJD has even pitched for 69% reservation policy on the lines of Tamil nadu. DMK under MK Stalin has been emerged as much wanted and an important partner in united opposition umbrella.

Post 1990s it's rights of Avarnas, thier grewing consciousness and assertion for the struggle of power has been the fundamental in the Indian polity. Every decision made or policy made or a step taken are connected with this, and not to mention, in Modi India once again our hard earned rights and liberty are being undone very rapidly. 

After the 2019 Lok Sabha results, while the whole India falls for Modi, it was MK Stalin who shown his exceptional brilliant leadership and crisis handling strategy and not only let the principal opposition party, Congress to earn a respectful mark but also once again " Stalin saved Communism ".

The current economic crisis looming due to irresponsible selling of national assets and privatisation are only being done to not let the non brahminical class to get control over the resources of this country, so that thier hard earned political position become redundant in absence of thier any control or material or resources of the country and will mere reduce them to dummy as per prescribed in Manusmriti. Visionaries knew the ills that irresponsible tyrannical privatisation will bring and importance of social justice to be implemented in private sector, the next struggle will be for that.

Dravidians stalwarts be it Anna or kalaignar didn't entered into National Politics, because contemporary Tamil nadu needed 100% of them, but in current scenario the battle is for soul of India, it surely demand greater participation of Dravidam to get itself inculcate pan India to help in construction of an concrete alternate to counter hindutava successfully, with ADMK totally got dissolved and surrendered itself in front of BJP, only DMK seems to be hope, here role of MK Stalin becomes crucial and turning moment in Indian politics. Recent set up of student wing of DMK in national university like JNU and growing curiosity in intellectual Bahujan circles of North regarding dravidam, all point toward positive development of this. The easily predictable sweep of DMK+ in 2021 assembly and uprooting of ADMK-BJP sinalliance will further concrete this and expect Stalin to put steps further.

- Kumar Ankush (Patna)


"ஏதோ தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திராவிட இயக்கத்தையே அழித்து விடலாம் என்று ஒரு சிலர் திட்டமிட்டு, திராவிட இயக்கத்திற்கு மாற்று இருப்பது போல ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகமண் திராவிட இயக்கத்தின் மண். பெரியார், அண்ணா, கலைஞரால் பண்பட்டது தமிழகமண். யாராலும் திராவிடத்தை அழிக்க முடியாது. திராவிட இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் தோற்றதுதான் வரலாறு. திராவிட இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது."


- மு.க. ஸ்டாலின்

53 ஆண்டுகள் ஒரு தலைவரின் பயணம் !! - கனிமொழி ம.வீ

 53 ஆண்டுகள் ஒரு தலைவரின் பயணம் !! - கனிமொழி ம.வீ


புரட்சியாளர் ஜோசப் ஸ்டாலின் மரணத்தை ஒட்டி அந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலைஞர் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது பிறந்த மகன்தான் ,இன்று திமுகவின் தலைவராக இருக்கக் கூடிய மு க ஸ்டாலின். ஒரு மாபெரும் புரட்சியாளர் பெயரைத் தாங்கி பிறந்து வளர்ந்ததாலே இயல்பிலேயே அவருடைய குணமும் போராட்ட களங்களை விரும்பியது. பதின்ம வயதில்  தன் வயதொத்த பிள்ளைகளோடு விளையாடப் போகவில்லை, தன் வயதொத்த பிள்ளைகளை இணைத்து இளைஞர் திமுக என்ற அமைப்பை கோபாலபுரத்தில் தொடங்கி தன் பொது வாழ்விற்கு 1968 ஆம் ஆண்டே வித்திட்டவர். இந்தியாவில் தமிழ்நாட்டில்  இன்றைக்கு 53 ஆண்டுகள் அரசியல் அனுபவமிக்க தலைவர்களை நாம் காண்பது அரிதாகிவிட்ட நேரத்தில்,  ஒரே கழகம் ஒரே கொள்கை, ஒரே தலைவர் என்று 53 ஆண்டுகள் பயணிக்கின்றவர் தளபதி ஸ்டாலின் அவர்கள்.

கலைஞர் அவர்கள் தேர்தல் நிதிக்காகப் பேரறிஞர் அண்ணாவிடம் 11 லட்சம் திரட்டிக்கொடுத்து "மிஸ்டர் கருணாநிதி 11 இலட்சம்", என்று பேரறிஞர் அண்ணா அவர்களே பாராட்டக்கூடிய அந்த நிலையைப் பெற்றவர் என்பதை நாம் படித்திருக்கிறோம், அதேபோல திருச்சியில் திமுகவின் 10வது மாநில மாநாட்டில் அன்றைக்கு திமுகவின் பொருளாளராக இருந்த ஸ்டாலின் அவர்கள் திரட்டிய நிதி 101 இலட்சம் ; அதற்காகக் கலைஞரிடம் பாராட்டு பெற்றவர் ஸ்டாலின் , கழகத்திற்கு உழைப்பதில் பம்பரமாய் சுழன்ற வரலாறு இன்றைய திமுக தலைவருக்கு உண்டு.

அதேபோல இன்றைக்கு அறிவகம் இருக்கக்கூடிய இடத்தை திமுக இளைஞரணி தனக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தது திமுகவின் தொழிலாளர் அணியும் கோரிக்கை வைத்தது, எனவே இரண்டு அணிகளுக்கும் இடையே ஒரு போட்டி வைத்தார் பேராசிரியர் அன்பழகன் அவர்கள். அதன்படி இரு அணிகளில் யார் கட்சிக்கு 10 லட்சம் ரூபாய் நிதி தருகின்றனரோ  அவர்களுக்குத் தான் அறிவகம் என்று அறிவித்தார். இந்த சவாலை ஏற்று ஸ்டாலின் அவர்கள் இரவு பகல் பாராது பல நிகழ்ச்சிகளில் கட்சி சார்பாகக் கலந்து கொண்டு பதினோரு லட்சம் ரூபாய் நிதி திரட்டி கொடுத்து, திமுக இளைஞரணிக்கு அறிவகத்தை  பெற்றிருக்கின்றார், பேராசிரியர் அவர்களும் மகிழ்ச்சியோடு அந்த இடத்தை திமுக இளைஞரணிக்கே  கொடுத்திருக்கிறார்  என்பதே வரலாறு.

1990 இல் கலைஞர் ஒருங்கிணைத்து நடத்திய ஐம்பெரும் விழாவில் திமுக இளைஞரணியை இராணுவம் போலச் சீராக நடை போட்டு வரும் படி ஒருங்கிணைத்து அந்த இளைஞர் அணி படையைத் தலைமை தாங்கி கம்பீரமாக நடத்திக் காட்டியவர் ஸ்டாலின். இதை அன்றைய பிரதமர் விபி சிங் அவர்கள் வியந்து  பாராட்டினார். இந்த வரலாறெல்லாம் தளபதி மு க ஸ்டாலின் அவர்கள் கழகத்திற்காக எவ்வாறு திறம்படச் செயலாற்றினார் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

1975 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அவசர நிலையின் போது மிசாவில் கைதாகி ஓராண்டுக் காலம் திமுகழகத்தின் மற்ற தொண்டர்களோடு சிறைத்தண்டனை பெற்று தன் பொதுவாழ்வில் மேலும் உரம் ஏற்றிக்கொண்டவர் தளபதி முக ஸ்டாலின்.

அந்த உரம் தான் , கலைஞருக்கு ஓய்விடத்தை ஒதுக்குவதில் ஆரியம் தன் பன்னெடுங்கால பகையைத் தீர்த்துக் கொள்ள முயன்றபோது, அதற்கு அசராமல் கலவரத்தில் தன் தொண்டர்களை ஈடுபடாமல் கட்டிக்காத்து, நீதிமன்ற உத்தரவோடு வென்று காட்டியது.

1996 ஆம் ஆண்டு சென்னையின் மாநகரத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைக் கொணர்ந்தவர் ஸ்டாலின் என்பதை நாம் நன்கு அறிவோம். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் கழகத்தில்,  அரசியலில்  தன்னுடைய தனி முத்திரையைப் பதித்து வரக்கூடியவர், இன்றைக்கு ஒரு முக்கியமான இக்கட்டான தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் தமிழ் நாட்டையே வழிநடத்தக் கூடிய ஒரு நிலையில் இருக்கின்றார் என்பதே தமிழ் நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.

53 ஆண்டுகள் அரசியல் அனுபவம் இருந்தபோதும், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்காது தேர்தல் மூலமே ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்பதற்காக  மக்களைச் சந்தித்து பெரும் களப்பணி ஆற்றிக்கொண்டிருக்கின்றார் திமுக தலைவர்.

அண்மையில் அவர் அறிவித்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் முன்னெடுப்பில் ,  ஒரு நாளைக்கு 8 தொகுதிகள் ஒரு தொகுதியில் 2 இடங்கள் 234 தொகுதிகளில் 468 இடங்கள்! என்ற இலக்கை நோக்கி வேகமாகத் தமிழ்நாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றார்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை நடுவண் அரசிடம் அடகுவைத்துவிட்ட இன்றைய எடப்பாடி அரசின் அட்டூழியங்களை மக்களிடம் எடுத்துக்கூறி மக்களை அரசியல்படுத்துவது ஒரு தேர்ந்த தலைமைப் பண்பு.

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அடிப்படை பிரச்சனைகளை , தீர்க்க திமுக உழைக்கும் என்று மக்களிடம் உறுதி கூறி மனு வாங்கி , மக்களின் உள்ளத்தில் நேர்மறை எண்ணங்களை , திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தும் முயற்சிகள் என்பதெல்லாம் சிறந்த நிர்வாகத் திறனும் அவரிடம் மிளிர்கின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு. இந்த திட்டத்தினை முன்னாள் ஐஏஎஸ் கிறிஸ்துதாஸ் காந்தி மிகவும் பாராட்டியதோடு அவைகளை 30 நாட்களில் கூட தீர்த்துவிடலாம் என தனது அனுபவத்தினால் சொல்கிறார், அத்தோடு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின்  இம்முயற்சியால் தமிழ்நாடெங்கும் அதிகார பரவல் ஏற்படும். சிறு சிக்கல்களுக்கு எல்லாம் பெரிய அதிகாரிகளை மக்கள் எதிர்பார்க்கவேண்டாம் என்பதே இதில் சிறப்பான செய்தி என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அனைத்து வகையிலும் ஒரு மிகச் சிறந்த தலைவரைத் தமிழ்நாடு 2021 தேர்தலில் முதலமைச்சராகப் பெறப் போகிறது என்றால் மிகையல்ல.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குறிப்பிட்டது போல,

கோட்டை நாற்காலி இன்றுண்டு - நாளை
கொண்டுபோய் விடுவான் திராவிடக்காளை.

கேட்டை விளைத்துத் திராவிடர் கொள்கையைக்
கிள்ள நினைப்பது மடமையாம் செய்கை

காட்டை அழிப்பது கூடும் - அலை
கடலையும் தூர்ப்பது கூடும்
மேட்டை அகழ்வதும் கூடும் - விரி
விண்ணை அளப்பதும் கூடும்
ஏட்டையும் நூலையும் தடுப்பது கூடும் - உரிமை
எண்ணத்தை மாற்றுதல் எப்படிக் கூடும்?

அடக்குமுறை செய்திடல் முடியும் - கொள்கை
அழிக்குமுறை எவ்வாறு முடியும்?
ஒடுக்குசிறை காட்டுதல் முடியும் - உணர்
வொடுக்குதல் எவ்வாறு முடியும்?
திடுக்கிடச் செய்திடும் உன்னை - இத்
திராவிடர் எழுச்சியை மாற்றவா முடியும்?

திராவிடர் எழுச்சி திமுகவை மீண்டும் அரியணை ஏற்றி நம் உரிமைகளை வென்றெடுக்கும் தளபதி மு க ஸ்டாலின் தலைமையில் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. வெற்றிடம் உருவாகி விட்டது என்று ஓயாமல் மென்று கொண்டிருக்கும் வாய்கள் விரைவில் ஓய்வு பெரும். 


- கனிமொழி ம.வீ

 

எங்களுக்கெல்லாம்

தாயாய் தமிழ் இருக்கிறது - உனக்கோ

தமிழே தந்தையாய் இருக்கிறது!


நீ ஆலமரத்துக்குக்

கீழ்முளைத்த அரசமரம்

சுருள்முடிக்குள்

சூரியனைக் காண்பவன்


விசா வாங்காமல்

'மிசா'வைச் சந்தித்த

தசாவதாரம்!


- கவிஞர் யுகபாரதி