Sunday 28 February 2021

ஸ்டாலின்தான் வராரு விடியல் தர போறாரு - ஜாக்கி சேகர்

ஸ்டாலின்தான் வராரு விடியல் தர போறாரு - ஜாக்கி சேகர்


ரு  தலைவன் எப்படி இருக்க வேண்டும்..

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம்.


-காட்சிக்கு எளியவனாகவும் யாரிடத்தும் இனிமையாகப் 

பேசுபவனாகவும் ஆட்சியாளன் அமைந்தால், அவன் நாடு 

பெருமை பெறும்.


கலைஞர்   ஆட்சிகாலம் வரை தமிழகத்தில்  ஒரு தலைவன்  என்பவன்  எப்படி இருக்க  வேண்டும் என்று  உதாரணமாய் வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம். முக்கியமாக காட்சிக்கு எளியவனாக இருந்தார்கள்.


ராஜிவ் படுகொலையின்  அனுதாப  அலையில் ஆட்சி பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா  அதுவரை தமிழகம் பார்த்திராத முதல்வராக  வலம் வர ஆரம்பித்தார். மக்களால்  தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக நாட்டின்  ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதை தன்னை  தேவ தூதனாக  உருவகப்படுத்திக்கொண்டார். உதாரணத்துக்கு  வளர்ப்பு மகன் திருமணம்   ஒன்று போதும். தமிழகம் இதுவரை அப்படி ஒரு திருமணத்தை  பார்த்தது இல்லை. இனி பார்க்கப்போவதுமில்லை.


 ஆட்சி அதிகாரத்தை எவ்வளவுக்கு எவ்வளவு  துஷ்பிரயோகம் செய்ய முடியுமோ அவ்வளவு துஷ்பிரயோகம் செய்ய ஆரம்பித்தார். கட்சி அலுவலகத்துக்குச்  சென்றாலும் தலைமைச் செயலகம் சென்றாலும்  திருமண விழாக்களுக்கு  சென்றாலும்  முதல்வர் வருகின்றார் என்று சுட்டெரிக்கும் வெயிலில்  பொது மக்களை பல மணி நேரம் சாலைகளில் காக்க வைத்து வறுத்து எடுத்தார். எல்லாவற்றையும் விட பெருங்கொடுமை 1992 பிப்ரவரி 18 ஆம் நாள், கும்பகோணம் மகாமகக் குளத்தில், பரிகாரத்துக்காக ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவுக்கும் குளிக்க சென்றனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 50 பேர் இறந்தனர், 75க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். ஆனாலும் தமிழக மீடியாக்கள் அவற்றை வாய் பொத்தி வேடிக்கை பார்த்தன. 2015 ஆம் ஆண்டு பெரும் வெள்ளம்   சென்னையை சின்னாபின்னமாக்கியது என்று மீடியாக்கள் கூவினாலும்  உண்மை நிலவரம் என்பது செம்பரம்பாக்கம் ஏரியை நள்ளிரவில் திறந்து விட்டதுதான். 100க்கணக்கான  உயிர்களும் பெரும் சொத்துக்களும் சேதம் ஆக காரணம் என்பதை மறக்க முடியாது. தமிழக மீடியாக்கள் மூடி  மறைத்தாலும்  நேஷனல் ஜியாகரபி  சேனலில் வரலாற்று  ஆவணமாக இன்னும் இருக்கின்றது. தகவல் தொழில் நுட்பம் வளராத காலத்தில் நள்ளிரவில் அணை உடையாமல்  இருக்க செம்பரம்பாக்கம் அணையை திறந்து விட்டால் கூட ஒரு நியாயம் இருக்கின்றது. ஆனால் வாட்சப்பும், 40க்கு மேற்ப்பட்ட தமிழ் சேனல்களும் இருக்கும் போது கூட எந்த அறிவிப்பும் கொடுக்காமல் திறந்து விட கல் நெஞ்ச மனது வேண்டும். அவர்கள் எப்போதும்  மக்கள்  உயிர்களை துச்சமாக மதிப்பார்கள். கடைசியாக ஜெயலலிதா சந்தித்த தேர்தலில் கூட்டம்  கடல் அலை போல இருக்க வேண்டும் என்று  காரணத்தால் கூட்டத்துக்கு  காசுக்காக அழைந்து வந்த அப்பாவி மக்களில்  கடும் வெயிலில் சுருண்டு விழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கையை வெளியே வராமல் பார்த்துக்கொண்டார்கள் அந்தளவுக்கு மனசாட்சி கொண்டவர்கள் அவர்கள்.


ஜெயலலிதா மரணத்துக்கு பின்  முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அம்மா வழியில்   கொரனா பெரும் தொற்றில் கூட  ஊழலில் திளைத்தார். முன் களப் பணியாளர்களுக்கு எந்த வித உபகரணத்தையும் வழங்காமல்  அவர்களை வாட்டி வதைத்ததோடு மட்டுமில்லாமல்  கொரானாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைந்து  காட்ட எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் கண்டிக்க அதன் பின்  கொராணா பெரும் தொற்றால் இறந்தவர்களின்  எண்ணிக்கை  கூடுதலனாது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.


திமுக  மட்டும் 20 வருடங்கள் சொத்துக்குவிப்பு வழக்கை நடத்தியதோடு மட்டுமில்லாமல்   தகுந்த ஆதாரங்களை சமர்பித்து ஜெ சசிக்கலாவுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்காமல் போய் இருந்தால் வரலாற்றில் இரும்பு மனிஷியாக ஜெயலலிதாவை பார்ப்பன ஊடகங்கள் பறை சாற்றி இருக்கும். 


திமுக  எப்போதுமே  எளியவர்களின் கட்சி  என்பதற்கு  உதாரணம், சமீபத்தில் திமுக தலைவர்  ஸ்டாலின் அவர்களை  ரொம்பவே உரிமையோடு  வாஞ்சையோடு  பத்தமடை பரமசிவம் ஐயா அவர்கள்  தன் வீட்டினுள் அழைத்து  சென்ற புகைப்படமும் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு மாணவி  திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் தோளில் கை போட்டுக்கொண்டு செல்பி எடுத்த புகைப்படங்கள் திமுக  தலைவர்களால் மட்டுமே சாத்தியம்.

 

தேர்தல் பிரசார பொது கூட்டமேடையில்  கூட ஜெயலிதா மகாராணியாக சிம்மாசனத்தில் தனியாக  அமர்ந்து இருக்க, அமைச்சர்கள் எல்லாம் சரிக்கு சரியாக அமர வைக்காமல்  அவருக்கு கீழே உட்கார வைத்து  அடிமைகள் போல  நடத்தியவர்  ஜெயலலிதா. டயர் தொட்டு கும்பிட்ட அடிமை கும்பலுக்கு திமுகவில் இருக்கும்  தலைவனுக்கும்  தொண்டனுக்கு இருக்கும்  உறவும் அன்னியோன்யமும்   எளிமையும்  புரிய வாய்ப்பில்லை.


எல்லாவற்றையும் விட்டு தள்ளுங்கள் சென்னையில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள்  தவிர்த்து  போயஸ் தோட்டத்தில் இருக்கும் ஜெயலலிதாவின்  வீட்டை யாராவது பார்த்து இருக்க வாய்ப்பு இருந்து இருக்கின்றதா…?


எந்த கெடுபிடியும் இல்லாமல் ஒரு சென்னைவாசி…. கோபலபுரத்தில்  நான்காவது தெருவில் இருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் வீட்டை பார்த்த படி நடந்து செல்ல முடியும்.. தலைவர் கலைஞர் அவர்களின் வீட்டு எண்… 15/8… அது மட்டுமல்ல… சென்னை அழ்வார் பேட்டையில்  சிந்தரஞ்சன் சாலையில் இருக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் வீட்டு தெருவிலும் நீங்கள் எந்த கெடுபிடியும் இன்றி நடந்து செல்லலாம்… அவரின் வீட்டு எண் 25/9  சென்னைவாசிகள் மட்டுமல்ல யாராக இருந்தாலும் அந்த சாலைகளில் நடந்து செல்லலாம். திமுகவும் அதிமுகவுன் ஒன்று என வாய் கூசாமல் பேசுபவர்களிடம் கேட்கக் கூடிய ஒரே கேள்வி வீட்டின் கூடம் வரை அனைவரையையும் அனுமதித்து மக்களோடு மக்களாக எளிமையாக இருக்கும் திமுக தலைவர்களை, எந்த அடிப்படையில் டயருக்கு கீழ் குனிய வைக்கும் அதிமுகவுடன் ஒப்பிடுகிறீர்கள்? வள்ளுவரின் இலக்கணப்படி எந்த வித பந்தாவும் இல்லாமல்,  காட்சிக்கு எளியவர்களாக  இருக்கும் தலைமை கொண்ட  திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். அதுதான் மக்களுக்கான ஆட்சி. மக்கள் ஆட்சி.


- ஜாக்கி சேகர்


இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் இளைஞரணித் தோழர்களையெல்லாம் ஊக்கப்படுத்தி செயல்படுத்தி ஒரு ஆறுமாத காலத்திலே பத்து இலட்சம் ரூபாய் நிதி திரட்டுகின்ற அளவுக்கு செயலாற்றல் மிக்கவராக, இளைஞர் ஸ்டாலின் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமை கொள்கிறேன். கலைஞருடைய அந்த ஆற்றல் ஸ்டாலினுடைய செயலிலே இன்றைய தினம் அரும்பி நிற்பதைப் பார்க்கிறேன். மணம் வீசி இருப்பதைப் பார்க்கிறேன். நான் மகிழ்ச்சி அடைகிறேன்!


(அன்பகம் இளைஞர் அணியிடம் தரப்படும் போது தளபதி ஸ்டாலின் அவர்களைப் பாராட்டிப் பேராசிரியர் க. அன்பழகனார் பேசியது)

No comments:

Post a Comment