Sunday 28 February 2021

ஆளுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் எதிர்க்கட்சி தலைவர் தளபதி! - சா. மெர்லின் ஃபிரிடா

 ஆளுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் எதிர்க்கட்சி தலைவர் தளபதி!  - சா. மெர்லின் ஃபிரிடா


க்களாட்சி என்ற அடிப்படையில் மக்கள் தங்களை ஆளுவதற்கு ஆட்சியாளர்களை தேர்தெடுக்கிறார்கள். அப்படி தேர்தேடுக்கப்பட்டவர்கள் வாக்குறுதியோடு நின்றுவிடும் சூழலே., இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்றுகொண்டிருக்கிறது.  ஆளும் கட்சி மக்களுக்காக களத்தில் பணி செய்வதை பார்த்திருப்போம் ஆனால் ஒரு எதிர்க்கட்சி முதலாவது களத்தில் இறங்கி மக்களின் குறைதீர்க்கும் கட்சியாக செயல்படுவதை தமிழகத்தில் மட்டும்தான் பார்க்க முடியும். என்றும் மக்களின் பக்கம் நின்று சாமானியருக்கு ஏற்படும் அநீதிகளை தடுத்துகொண்டிருபவர் எதிர்க்கட்சி தலைவர் திரு மு.க.ஸ்டாலின். இன்னும் குறிப்பாக சொல்லப்போனால், ஆளும் கட்சியை வழிநடத்தி கொண்டிருக்கிறார். 

இன்றைய மத்திய அரசாங்கம், பாசிச ஊடுருவல் என்ற அடிப்படையில் மக்களை அடக்கி ஆதிக்கத்தை திணிப்பதில் முனைப்பு காட்டிகொண்டிருக்கிறது. அதின் அத்துமிரல்களால் மக்களின் அடிப்படை உரிமை பாதிக்கும் சூழலை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. பிற மாநிலங்கள் வேறு வழியின்றி மத்திய அரசுக்கு உட்பட்டு போகும் சூழல் இருப்பினும் தமிழகம் மற்றும் அரசாங்கத்தை எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கிறோம். ஏனென்றால் இது பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் வாழ்ந்த மண் என்பதால் அணுகமுடியவில்லை. தம் தலைவர்களை போல தளபதியும் பாசிசத்தை தனியாக நின்று எதிர்த்து கொண்டிருக்கிறதால், அடக்குமுறைக்கு அடங்கி போகாமல் நம்மை சுயமரியாதையோடு வாழ வைத்திருக்கிறார். இந்த காலத்தில் ஆதிக்க முறைகளை எதிர்க்க ஒரே தலைவராக தளபதி இருப்பதால், நம் உரிமைகள் காக்கபடுகிறது என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. 


ஆளும் கட்சி செயல்படாமல் இருக்கும் நிலையில் அழுத்தம் குடுத்து பல தருணங்களில் செயல்படாத அரசையும் செயல்பட வைத்து கொண்டிருக்கிறவர் எதிர்க்கட்சி தலைவரே. எதிர்க்கட்சியாக தளபதி செயலாற்றி வரும் காரியங்களால், தமிழக மக்களின் குறைக்களுக்கு தீர்வு கிடைக்கிறது. 


தளபதியின் செயல்பாடுகள் 


தலைவரின் செயல்பாடுகள் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு பழைய வரலாறு எல்லாம் திரும்பி பார்ப்பதை விட., கொடிய நோய் தோற்றான கொரோனா காலத்தில் அவர் களத்தில் இருந்து செயல்பட்டதை உணர்த்தாலே...! அவர் ஆளுமையை தெறித்து கொள்வதற்கு போதுமானதாக இருக்கும். 


ஒன்றிணைவோம் வா:  நோய் தோற்று காரணமாக, எதிர்க்கட்சியின் உயர் அழுத்தத்தின் மூலம் ஒருவழியா ஊரடங்கை நாடு முழுவதும் அமல்படுத்தியாச்சு. ஆனால் அவர்கள் அன்றாட உணவுக்கு வழி ஏதும் வகுக்காமல் அரசாணை வெளியிட்டனர்.  அந்த நேரத்தில் வாழ்வாதாரம் இழந்த எளிய மக்களுக்கு தளபதியின் முன்னெடுப்பில் உருவாக்கிய திட்டமாகிய ஒன்றிணைவோம் வா மூலம் பல எளிய மக்களின் பசியை போக்கியது.   தொண்டு நிறுவனம் கூட இந்த அளவுக்கு எளிய மற்றும் கிராமபுர மக்களை அணுகி உதவி கரம் நீட்டி இருக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.


பள்ளி பொது தேர்வை ரத்து செய்ய அறிவுறுத்தல்: ஊரடங்கு காரணத்தினால் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பொது தேர்வு நடக்காமல் இருந்தது. கொரோனா பரவளின் அதிகரிப்பு காரணங்களால் ரத்து செய்ய எதிர்க்கட்சி தலைவர் அறிவுறுத்தினார். மாணவர்களின் நலனை பொருட்படுத்தாமல் தேர்வை நடத்தியே தீருவோம் என்று தேர்வு அட்டவணை எல்லாம் தயாரித்து மாணர்களையும், பெற்றோர்களையும் இன்னலுக்குள்ளாக்கினர். ஆளும்கட்சியின் அரசாணையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு போட, உடனே ரத்து என்ற அரசாணையை பிறப்பித்தார். 


மருத்துவ மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு: அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு அவர்களுக்கான 7.5 % உள் இடஒதுக்கீடு கொடுக்க மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அதை ஆளுநரிடமும் ஒப்புதல் பெறுவதற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் நாட்கள் கடந்து தான் போனது ஆனால் ஆளுநரிடம் இருந்து எந்த ஒப்புதலும் வரவில்லை. அதற்கான அழுத்தத்தையும் இந்த ஆளும் கட்சியானது ஆளுநருக்கு கொடுக்கவில்லை. தலைவர் தளபதி அவர்கள் முன்னெடுப்பில் நடந்த போராட்டத்தின் பிறகு தான் அதற்கான நகர்வை ஆளுநர் எடுத்தார். மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய முதல்வருக்கு ஆளுநரை அணுகி ஒப்புதல் பெற முடியவில்லை. எதிர்க்கட்சியாக தங்கள் கடமையை செய்து அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு கிடைக்க வழி வகுத்தது தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.  


மின்வாரியத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்த தளபதி: ஆளும் அதிமுக அரசு மின்வாரியத்தை தனியாருக்கு விற்க முடிவு செய்து அரசாணையை பிறப்பித்தது. அப்படி தனியாருக்கு விற்கப்பட்டால் பல தமிழக இளைஞர்களின் வேலைகள் பறிபோகும் சூழல் இருந்தது. அதனை எதிர்த்து தளபதி அறிக்கை மூலம் அழுத்தம் கொடுத்ததினால் ஒரே நாளில் மின்வாரிய துறை அமைச்சரால் அரசாணை வாபஸ் பெறப்பட்டது. 


களப்பணியில் தலைவர்: நிவர் என்ற புயல் டெல்டா பகுதியை பாதித்து சேதம் ஏற்படுத்திய பொது முதலாவது பார்வையிட சென்று பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். ஆளும் கட்சி துரிதமாக பார்க்க வேண்டிய செயலை முன்னுதாரனமாக நின்று களத்தில் செயல்பட்டவர் தளபதியே. 


பாசிசத்தை எதிர்க்கும் ஒரே குரள் 

மாநிலங்களின் உரிமையை பறிக்கும் ஆட்சியாகவும், ஆதிக்கங்களை திணிக்கும் ஆட்சியாகவும் மத்திய அரசாங்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதை எதிர்க்கும் மாநில கட்சி திமுக ஒன்றே! இந்தியாவிலே மத்திய பாசிசத்தை எதிர்த்து குரல் குடுத்து நாடே திரும்பி பார்க்கும் வண்ணம் நிகழ் காலத்தில் இருக்கும் ஒரே தலைவர் தளபதி அவர்கள்.

 

தமிழகத்தில் மத்திய அரசாங்கம் அவர்களுடைய ஆளுகையை திணிக்கும் நோக்கில் பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம் என்ற பெயரில் புதிய கல்வி கொள்கை வழியில் குல கல்வியை திணிக்க முயல்வது, தமிழகத்தில் செயல்படும் பொதுத்துறைகளில் வட மாநிலத்தவருக்கு பணியிடங்கள் கொடுத்து தமிழர்களை புறக்கணிப்பது போன்ற எண்ணற்ற ஆதிக்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நம் மாநிலத்தின் சுயமரியாதையை பறிகொடுக்காமல் வைத்திருக்கிறார். பிற மாநிலங்கள் மத்திய அரசின் சில அடக்குமுறைகளுக்கு வேறு வழியின்றி அடங்கி போனாலும் தமிழகத்தில் மட்டும் ஒரே தலைவர் தனியாக நின்று எதிர்த்து வருகிறார். அதனால் நம்மளுடைய உரிமைகள் பறிபோகாமல் பாதுகாக்க படுகிறது. 


நாட்டு மக்களுக்காக அவர் செய்யும் செயல்பாடு மற்றும் அவரின் கடுமையான உழைப்பு, அவரின் ஆளுமை திறனை சிறப்பாக காட்டுகிறது. பல விமர்சனங்கள் தன் மீது வைக்கப்பட்டாலும் அதை எல்லாம் உடைத்து இன்று களத்தில் நின்று உழைக்கும் தலைவர் தளபதி. அவரின் அரசியல் செயல்பாடு எதோ நேற்று உதித்த காளான் போன்று கிடையாது. பல காலம் அரசியல் வாழ்வில் தன்னை அர்ப்பணித்து, தமிழக அரசியல் வரலாற்றின் அணைத்து பக்கங்களிலும் தன்னை இடுபடுத்தி கொண்டவர். அவரச நிலை காலமான மிசா சட்டத்தில் கைது, திமுக இளைஞர் அணியை அமைத்து அதின் செயலாளராக, சென்னை மாநகர மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, தமிழகத்தின் துணை முதல்வராக, தமிழகத்தின் எதிர்கட்சி தலைவராக எண்ற அரசியல் சூழலில் தன்னை ஈடுபடுத்தி தனக்கென்ற தனி அரசியல் வரலாறை சம காலாதில் வைத்திருக்கும் ஒரே அரசியல் தலைவர். 


மக்களின் குறை நீக்குவதிலும், பாசிசத்தை எதிர்ப்பதிலும், ஆளும்கட்சியை செயல்பட வைப்பதிலும் தனியாக நின்று செய்துகொண்டிருக்கிறார். ஒரு எதிர்க்கட்சி இந்த அளவுக்கு உழைக்கும் என்பது தமிழ்நாட்டில் மட்டும் தான் நடக்கும் அதும் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்களே நிகழ்கால ஆகசிறந்த எதிர்கட்சிக்கு தலைவர் என்பதற்கு   எடுத்துக்காட்டு. ஒரு தலைவருக்கு ஆளுமை திறன் ரொம்ப முக்கியம் அதை எதிர்கட்சியான தளபதிக்கு சிறப்பாக இருக்கிறது என்பதை தினம்தோறும் அவரினின் உழைப்பில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட ஆளுமை திறன் கொண்ட தலைவரையே தமிழகத்தின் வருங்கால முதல்வராக தமிழகம் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. 


 " உழைப்பு! உழைப்பு! உழைப்பு! அதற்கு பெயர் தான் ஸ்டாலின்" என்று என்றுமே தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிடுவார். அந்த வார்த்தையை சற்றும் தவறாமல் என்றும் உழைத்து, தினந்தோறும் நிருபித்து கொண்டிருபவர் தலைவர் தளபதி திரு. மு.க.ஸ்டாலின்.                                                                                                                     


- சா. மெர்லின்  ஃபிரிடா திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மேயராக இருந்த காலங்களில் மாநகராட்சியில் கல்வித் துறையில் பல்வேறு நிலைகளில் எடுக்கப்பட்ட மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம் பள்ளிகளில் கல்வித் தரம் உயர்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்து மேயர் மு.க. ஸ்டாலின் தயாரித்துள்ள சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தைக் கருதி இன்றைய தலைமுறையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கம்ப்யூட்டர் கல்விக்கு வகை செய்யப்பட்டுள்ளது.


அமெரிக்காவில் உள்ளது போல் சமுதாயக் கல்வியைக் கொண்டு வந்துள்ளது பாராட்டத்தக்கது. ஒரு காலத்தில் மாநகராட்சிப் பள்ளிக் கூடம் என்று சொன்னால் மதிக்கப்படாமல் இருந்தது. இன்று இந்த நிலையை மேயர் ஸ்டாலின் மாற்றியுள்ளார். அதற்காக அவரைப் பாராட்டுகிறேன்


- தமிழக முன்னாள் கல்வி அமைச்சர் பாரதரத்னா திரு. சி. சுப்பிரமணியம்


No comments:

Post a Comment