Sunday 28 February 2021

அண்ணா முதல் மு.க. ஸ்டாலின் வரை - விக்னேஷ் ஆனந்த்

 அண்ணா முதல் மு.க. ஸ்டாலின் வரை - விக்னேஷ் ஆனந்த்


திமு கழகம் தொடங்கி ஒரு ஆண்டில் நமது கட்சியை அழித்தால் தான் அட்சி செய்ய முடியும் என்று சர்க்கார் யோசிக்கிறது.


(நாம், பேரறிஞர் அண்ணாவின் பொழிவு 1951)


வீடு பற்றி எரிகிறது. கங்கை ஜலத்திற்காகக் காத்திருக்க முடியாது. சாக்கடை ஜலத்தைக் கூட வாரி வீச வேண்டும் என்று அருண்ஷோரி சொன்னார். அதனால் திமுகவை வீழ்த்த சசிகலாவாக இருந்தாலும் சரி, வேறு யாராக இருந்தாலும் சரி. நாம் அவர்களையும் அணி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு அணி உருவாகும் போது அப்படிப் போயாக வேண்டும்.


(திமுகவை வீழ்த்துவதற்காக குருமூர்த்திச் சொன்னது)


அண்ணா காலம் முதல் தளபதி காலம் வரை இந்த இயக்கத்தை இன எதிரிகள் அதிகார வர்க்கத்தின் துணை கொண்டு வீழ்த்த போராடுகிறார்கள்.


காரணம் என்ன?

நாம் ஆரியர்களுக்கு எதிரானவர்கள் என்பதாலா?

நாம் பார்ப்பனர்களுக்கு எதிரியா?


திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கும் போதே அண்ணா இதற்கான விளக்கத்தைத் தந்துவிட்டார்.


திராவிட நாடு கிடைத்தால் தங்கள் கதி என்ன ஆகுமோ என்று பார்ப்பனத் தோழர்கள் பயப்பட வேண்டாம், திராவிட நாட்டில் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்ற பாகுபாடு இருக்காது. கட்டை வண்டி இழுக்கவும், குப்பைக் கூட்டவும், மலர் எடுக்கவும் பார்ப்பனர்களைப் பயன்படுத்துவோம் என்ற பயம் வேண்டாம், நாகரீகம் வளர வளர அந்த வேலைகளையெல்லாம் இயந்திரமே செய்துவிடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும் என்று 1957 இல் அண்ணா பதிவு செய்துள்ளார்.


அண்ணா - பெரியார் பிறிவுக்குப் பின் அண்ணா தனது கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டார் என்று சில இயக்கவாதிகள் புலம்பலாம். ஆனால். நாம், பார்ப்பனர் என்ற ஆட்களை அவர்களின் வகுப்புக் காரணமாக, விஷமத்துக்காகக் கண்டிக்கிறோம் என்று தயவு செய்து எண்ணிவிட வேண்டாம். நாம் கண்டிப்பது பார்ப்பனியம் எனும் ஒரு முறையையே. அதன் ஆரம்பக் கர்த்தாக்களாகவும், காவலர்களாகவும் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்-பார்ப்பனரல்லாதாரிலே பலர் இதற்கு ஆதரவாளர்களாக உள்ளனர் என்று இலட்சிய முரசு என்று தான் எழுதிய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இந்தப் புத்தகத்திற்கு அறிமுக உரை எழுதியவர் தலைவர் பெரியார்.


பிறகு ஏன் பார்ப்பனர்கள் திமுகவை அழிக்கத் துடிக்கின்றனர் ?


ஜெர்மனியில் ஹிட்லர் நாசி இனம் தாங்கள் மட்டுமே ஆள வேண்டும் என்று நினைத்தார். நாசிகள் அல்லாதவரை அழித்தார்.


பார்ப்பனர்கள் - ஹிட்லருக்கும் ஒரு தொடர்பு உண்டு. அது தான் “ஆரியம்”. இதற்குத் தீர்வு?


வரலாற்றில் ஹிட்லருக்கு இறுதி அத்தியாயத்தை எழுதியது ஸ்டாலின் தான்.

இந்தித் திணிப்பை எதிர்த்தும்..


மனு தர்ம கல்விக் கொள்கையை எதிர்த்தும்..

மாநிலங்களைச் சுரண்டும் மத்திய அரசை எதிர்த்தும்..

பாசிச CAA/CAB/NRC சட்டங்களை எதிர்த்தும்..

மதவாத சாதியவாத பிற்போக்குவாதிகளை எதிர்த்தும்..

நமக்கு இருக்கும் ஒரே ஆயுதம் ஸ்டாலின் தான்..


அண்ணா காலம் முதல் ஸ்டாலின் காலம்வரை இன எதிரிகள் திமுகவை ஒழிக்கச் சாக்கடைகளை ஒருங்கிணைக்கும் போது நாம் என்ன செய்யப் போகிறோம் ?

பெரியார் 1971 இல் சொன்னது போல இந்தத் தேர்தல் தமிழர்களுக்கும் இன எதிரிகளுக்குமான பார்ப்பனர்களுக்குமான தேர்தல். ஆகையால் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரிக்க வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்.


-விக்னேஷ் ஆனந்த்.

No comments:

Post a Comment