Friday 2 April 2021

ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி – நா. பொன் கார்த்தி

 ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி – நா. பொன் கார்த்தி


றனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா

மானம் உடைய தரசு “


தனக்குச் சொல்லப்பட்ட அறத்திலிருந்து விலகாமல், அறமற்ற கொடுமைகள் தன் நாட்டில் நடைபெறாமல் விலக்கி, வீரத்தில் தவறாமல் நின்று மானத்தைப் பெரிதாக மதிப்பதே அரசு என்று வள்ளுவன் சொல்கிறார் . இது போல இன்றைய ஆட்சி உள்ளதா ? 

மக்கள் விரும்பாத மக்கள் விரோத ஆட்சியாக தான் இவர்கள் செயல்பாடு உள்ளது.  

இதை வீசி எரிய வேண்டாமா ?

விரோதங்களை செய்யும் இந்த விஷ செடிகளை அப்புறப்படுத்த வேண்டாமா?

கொல்லைப்புறமாக நம் மண்ணையும் மக்களையும் அழிக்கத் துடிக்கும் கயவர் கூட்டத்தை காயடிக்க வேண்டாமா?

தமிழகம் சுயமரியாதை சூரியன் தந்தை பெரியார் பண்படுத்திய மண் .

"மானமும் அறிவும் மனிதருக்கு அழகு" என்பார்.

மானத்தை தொலைத்த மானகெட்ட,மதியற்ற கூட்டத்தை கூண்டோடு ஒழிக்க வேண்டாமா?

இது அறிவாசான் அண்ணா சீர்திருத்திய மண் .

கட்சியின் பெயரில் அண்ணாவை வைத்து கொண்டு அவருடைய கொள்கைக்கு விரோதமாக செயல்படும் இவ்வரசு தேவைதானா ?

டெல்லிக்கு அடிபணியாத தமிழக வேங்கை அண்ணா அவருடைய தம்பிகளையும் அவ்வாறே வளர்த்தார் . ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் டெல்லியின்  ஏவல் நாய்களாக ஆக்கப்பட்டு தமிழகத்தை பாழ்படுத்தி விட்டனர்.

சமூகநீதியை உருவாக்கிய திராவிட மண்ணின் அழியா சூரியன் கருணாநிதி , 

தாழ்ந்தாலும் தமிழன் தன்மானம் இழந்து தன் தலையை மட்டும் தாழ்த்தமாட்டான் என்று சொல்வார்.

தன்மானம் இழந்தது மட்டும் அல்லாமல் தலை ஆட்டும் பொம்மையாக இருந்து தமிழக உரிமைகளை விட்டு கொடுத்து அடிமை ஆட்சி நடத்தும் இத்தகைய அடிமை கூட்டம் நமக்கு தேவைதானா?

நமக்கு தேவை சுயமரியாதை 

நமக்கு தேவை தன்மானம் 

நமக்கு தேவை நம் உரிமை 

நமக்கு தேவை நம்மில் ஒருவர் 

நமக்கு தேவை சமத்துவம் 

நமக்கு தேவை வெளிச்சம் 

நமக்கு தேவை விடியல் 


அடிமை ஆட்சியாக இல்லாமல் சுயமரியாதையோடு இம்மண்ணை காக்க இம்மக்களை காக்க ஆதிக்க வாதிகளின் சூழ்ச்சி வலையில் சிக்காமல் சிதைந்து போன தமிழகத்தை மீட்போம்.

பகைவனுக்கு அருளிடலாம் ஆனால் துரோகிகளுக்கு அருள்வது ஆபத்தானது உலகில் துரோகிகள் அதிகம் என்று கலைஞர் சொல்வார். அதுபோல இன்றைய துரோகிகளை துடைத்து எரிய வேண்டும்.  அதற்கு மக்கள் அரசு வர வேண்டும். அம்மக்கள் அரசு திராவிட முன்னேற்ற கழக அரசே...!


வீரன் சாவதே இல்லை…

கோழை வாழ்வதே இல்லை…

நாம் வீரர்கள்!

வெல்வோம் உறுதியாய்!



– நா. பொன் கார்த்தி
















No comments:

Post a Comment