Friday 2 April 2021

ஏன் மலர வேண்டும் தி.மு.க. ஆட்சி? - இரவி செல்வராஜ்

 ஏன் மலர வேண்டும் தி.மு.க. ஆட்சி? - இரவி செல்வராஜ்

சமூக நீதி காக்க

ஒரே ஒரு நாளுக்கு முன்னால் நிகழ்ந்த ஒரு நிகழ்வுக்குக் கூட வரலாறு உள்ளது. அதன்படி ஒரு மாநிலத்தின் ஆட்சி மற்றும் கட்சிகளுக்கும் நீண்ட வரலாறு உள்ளது. இதில் தி.மு.க. என்ற ஒரு கட்சி இந்திய ஒன்றியத்திலுள்ள பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டி பெற்றுத் தந்த மாநில உரிமைகளும், நிறைவேற்றிய சட்டங்களும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட சமூக அநீதிகளைத் துரத்தி சமூகநீதிக்கான வரலாற்றையே உருவாக்கியவை. 1967  துவங்கி இந்த 54 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எந்தத் தேசியக் கட்சியும் ஆட்சியமைக்க முடியவில்லை. இனிமேலும் முடியாது. ஒற்றைக் காரணம் தி.மு.க.வின் சமூகநீதி ஆட்சியும், அதனைப் பின்பற்றி உருவான பிற மாநிலக் கட்சிகளும். தி.மு.க. ஆட்சியைப் பிடித்த பிறகே, பிற மாநிலங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த மாநிலக் கட்சிகள் மாநில சுயாட்சி அதிகாரத்தையும், மாநில உரிமைகள் பற்றியும் அறிந்து, தங்கள் கட்சிகளை வளர்க்கத் துவங்கின. அதன்படி, இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளை எடுத்துக்காட்டி பல்வேறு மாநிலக் கட்சிகள் இந்தியா முழுவதும் உருவானதற்கும் காரணம் தி.மு.க.தான். அதனால் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும்.

பாசிசத்தை வேரறுத்து தமிழினத்தைக் காக்க

தி,மு.க. என்ற கட்சி உருவாகியிருக்காவிடில் இன்று இந்தியா முழுவதும் இந்தி ஒற்றை மொழியாக இருந்திருக்கும். ஆர்.எஸ்.எஸ். என்ற பாசிச அமைப்பின் ஒற்றை நோக்கம் இந்தியாவை ஒற்றை மொழி இந்துத்துவ நாடாக்கி, பிற சமூகத்தவர் அனைவரையும் மதமாற்றுவது அல்லது குடியுரிமைச் சட்டங்கள் (CAA) மூலம் ஜெர்மனியில் யூதர்கள் எப்படிக் கோடிக்கணக்கில் முகாம்களில் அடைக்கப்பட்டுக் கூட்டு இனப்படுகொலை செய்யப்பட்டார்களோ அப்படி, (இந்தியாவிலுள்ள உயர்சாதியினர், இராணுவம், காவல்துறை, நீதிபதிகள், மருத்துவர்கள் மற்றும் இந்துத்துவ அரசியல்வாதிகள் தவிர்த்து) இந்துத்துவத்தை ஏற்காத 100 கோடி மக்களை முகாமில் அடைத்து பெண்களை பாலியல் வன்முறை செய்து கொலை செய்வதும், ஆண்களைச் சித்திரவதை செய்து இனப்படுகொலை செய்வதுமே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கம். சாத்தான்குளம் தந்தை-மகனைக் காவல் நிலையத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் அடித்தே கொலை செய்ததும், தூத்துக்குடியில் அமைதியாகப் போராடிய சொந்த தேசத்து மக்கள் 15 பேரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றதும், பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான மைனர் பெண்களும், மேஜர் பெண்களும், குடும்பப் பெண்களும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கி வீடியோ எடுக்கப்பட்டு மிரட்டி பணம் பறித்ததும் அத்தனை ஆதாரங்கள் இருந்தும், அதனைச் செய்தது ஆளுங்கட்சி என்ற காரணத்தினாலும், இதில் நிச்சயம் மத்தியில் ஆளும் பாஜகவின் துணையின்றி இது நடந்திருக்காது என்பதாலும், குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படாமல் உள்ளனர். இச்செயல்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் இனப்படுகொலை செய்வதற்கான முன்னோட்டமே ஆகும்.

பொள்ளாச்சியில் தமிழ்ப்பெண்கள் மீதான பாலியல் வன்முறை 2012லிருந்து அ.தி.மு.க. ஆட்சியில் நிகழ்த்தப்பட்டு வருகின்றது. பொள்ளாச்சி சம்பவம் தெரிந்தது. இந்தியா முழுவதும் தெரியாமல் இலட்சக்கணக்கான பெண்கள் இப்படித் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.  இந்தக் கொடூரமான எண்ணம் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய அமைப்புகளைச் சார்ந்த பாசிச மக்கள் விரோத அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மற்றும் இம்மாதிரி செயல்களில் ஈடுபடும், பணம் படைத்த  தொழிலதிபர்கள் மறைமுக வாரிசுகள் மற்றும் அவ்வமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனை பெற வேண்டுமெனில் அது தி.மு.க. என்ற சமூகநீதிக் கட்சியால் மட்டுமே முடியும். அதனால் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும்.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாவதை தடுக்க

அடித்தட்டு மக்களிலிருந்து சுமார் 90 சதவீதம் வரை உள்ள நடுத்தரப் பொருளாதாரம் கொண்ட மக்கள் அனைவருக்குமான உணவுப் பாதுகாப்பையும், கல்விப் பாதுகாப்பையும், மருத்துவப் பாதுகாப்பையும், பொருளாதாரப் பாதுகாப்பையும், வாழ்க்கைப் பாதுகாப்பையும் உறுதி செய்து அதற்கான திட்டங்களைத் தகுந்த ஆணையங்கள் அமைத்து, ஆய்வு செய்து தீர்மானங்கள் நிறைவேற்றி, சட்டங்கள் அமைத்து, கட்டமைப்புக்களை உருவாக்கிப் பாதுகாப்பான வாழ்வை மக்களுக்கு அமைத்துக் கொடுத்தவர் கலைஞர். மேலும், இந்தியா முழுவதும் முதலாளித்துவத்தின் முதல் கூறான பணம் படைத்த மற்றும் ஊழல் பணத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து மற்றும் உணவுத்துறையில் கோலோச்சி வந்த முதலாளிகளிடமிருந்து அத்துறைகளை மீட்டு பொதுத்துறையாக மாற்றி அனைவரும் பயணம் செய்யவும், அனைவரும் உணவுப் பாதுகாப்புடன் வாழவும் இந்தியாவிலேயே முதன் முறையாகப் போக்குவரத்துத் துறையையும், பொதுவிநியோகத் திட்டத்தையும் துவங்கி சமூகநீதியை நிலைநாட்டியவர் தலைவர் கலைஞர். அந்தத் திட்டங்கள் மீண்டும் தனியாரிடம் சென்று அனைத்து விலைவாசியும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்காமலிருக்க வேண்டும். அதனால் தி.மு.க. ஆட்சி மலர  வேண்டும்.

மக்களின் அடிப்படை உரிமைகளை காக்க

தமிழ்நாடாக இருந்தாலும், பிற இந்திய மாநிலங்களாக இருந்தாலும், சுயமரியாதை, சம உரிமை மற்றும் மாநில சுயாட்சியின் வலிமை ஆகியவற்றை உணர்த்தியவர்கள் பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் ஆகிய திராவிடத்தின் தூண்கள். தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது இந்தியா முழுவதும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டு அது இந்தியா முழுமைக்குமான சட்டமாக மாறும். அதன்படி தி.மு.க, ஆட்சியினால் இந்தியா முழுமைக்கும் கிடைத்த சமூகநீதி சட்டங்கள் ஏராளம். இப்பொழுது ஒன்றிய அரசு வெறும் அறிக்கை மூலம் நிறைவேற்றும் என்று கூறுபவற்றைத் தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றியது தி.மு.க. அவையே இன்றுவரை தொடர்ந்து வருகின்றன. அவை அனைத்தையும் மத்திய பாஜகவுடன் சேர்ந்து கொண்டு குழி தோண்டிப் புதைக்கும் வேலையை மட்டுமே கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிமுக அரசு செய்து வருகின்றது. தமிழ்நாட்டின் அனைத்து அடிப்படை உரிமைகளையும், சட்டங்களையும் நீர்த்துப் போகச் செய்து கொண்டிருக்கும் அதிமுக அரசு நீக்கப்படவேண்டும். அதனால் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும்.

மாநில சுயாட்சி உரிமை மீட்க

மாநில சுயாட்சிக்கான இப்போதைய தேவை என்ன? தலைவர் கலைஞர் அமைத்த ராஜ மன்னார் குழு போல் மீண்டும் ஒரு குழு அமைத்து மாநில சுயாட்சிக்கான வரையறைகளை மீளுருவாக்கம் செய்து இந்தியா முழுதுமுள்ள மாநிலங்களுக்குப் பரிந்துரை செய்து, அவற்றைச் சட்டமாக்க வேண்டிய பெரும் பொறுப்பு தலைவர் கலைஞருக்குப் பிறகு மீண்டும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமே வந்துள்ளது. மேலும் அடுத்த பிரதமர் யார் என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பும் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மட்டுமே உள்ளது. இந்தப் பாசிச பாஜக மற்றும் அதிமுக ஆட்சிகள் நீக்கப்படாவிட்டால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் சுமார் 50 கோடி பேர் இனப்படுகொலை செய்யப்படும் அபாயம் உள்ளது. அடிப்படை அறமோ, அடிப்படை அறிவோ இல்லாத இந்த மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக அரசுகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அதனால் தி.மு.க. ஆட்சி மலர வேண்டும்.

   

- இரவி செல்வராஜ்

No comments:

Post a Comment