Friday 2 April 2021

ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி! - கௌதம். தர்மா

ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி! - கௌதம். தர்மா

அறம் வெல்லும் அநீதி வீழும் - மு.க

தமிழ் பேராசான் கலைஞர் அவர்களுடைய வரிகளாலே பதில் அளிக்கிறேன் அறம் வெல்வதற்கும் அநீதி வீழ்வதற்கும் தி.மு. க ஆட்சி மலர்ந்தே தீரவேண்டும். இது ஏதோ வெறும் ஆட்சி மாற்றத்திறக்கான தேர்தல் மட்டுமல்ல. இது அடுத்தத் தலைமுறையைக் கட்டமைக்கப் போகும் தேர்தல். சனாதன சக்திகளின் திட்டங்களை வேரறுத்து அவர்களின் ஊடுருவலைத் தமிழகத்தில் தடுக்கப்போகின்ற தேர்தல் ஆகிய காரணத்தினாலே திமுக ஆட்சி அமைய வேண்டும். அதுவும் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமையவேண்டும்.

மொழி, உணவு மற்றும் காதலுக்கான தேர்தல்.

ஆம் இது அடுத்துத் தலைமுறை தமிழ்நாட்டில் எதைச் சிந்திக்க வேண்டும் என்று நிர்ணயிக்கும் தேர்தல். நான் ஏதோ பூதாகரமாக்கிக் கூறவில்லை. காந்தியின் அஹிம்சை இந்தியா!... நேருவின் மதச்சார்பற்ற நாடு! ஆகா கேட்கையிலே காதிலே இன்பத்தேன் வந்து பாய்கிறதல்லவா?

அதனை விஷம் வைத்துக் கொல்வதற்கே உருவாக்கியதுதான் இந்த லவ்ஜிஹாத் சட்டங்களும், பீப்க்கு எதிரான வன்முறையும், பசுவதைத் தடைச்சட்டமும் இந்தியாவின் பல மாநிலங்களில் வெறும் ஓட்டு அரசியலுக்காகவே திட்டமிட்டுப் புகுத்தப்பட்டுள்ளது. லவ் ஜிஹாத் எனும் குழப்பமான சட்டங்கள் திருமணம் எனும் பெயரில் ஏற்படும் கட்டாய மதமாற்றத்தைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதுகிறது. பிறகு பசுவைக் கொன்றாலே கைது.. மாட்டுக்கறி சாப்பிட்டால் அடி உதை மரணம் வரை.. இவர்கள் எப்படி அஹிம்சை முறையில் அடுத்தத் தலைமுறையின் உணவிலும் காதலிலும் தடை போட்டுவிட்டார்கள் பாருங்கள்.

மொழி.. ஆம் அடுத்து இதனை எப்படிப் பாஜக கையாள்வார்கள் என நான் சொல்ல வேண்டுமா என்ன?

புதிய கல்விக் கொள்கையில் மும்மொழித்திட்டம், ரயில்வே ஊழியர்கள் பயன்படுத்த ஹிந்தி எனக் கூறிப் பின்வாங்கியது, தபால் தேர்வு போராடிய பின் தமிழில் நடத்தியது. ஏன் தன் வாக்காளர்ப் பட்டியலை ஹிந்தியில் அறிவிக்கும் இவர்கள் எப்படி வேகமாகத் தமிழுக்கு முழுக்குப் போடுவார்களெனத் தெரியும். இதுவே இவர்கள் முழுமுனைப்போடு செயல்பட்டு நம் மொழி ,உணவு, காதல் என மூன்றையும் கொல்லும் முன் அடிப்படை சுதந்திரம் காக்க தி.மு.க ஆட்சி மலர வேண்டும். 

இதையெல்லாம் ஆளுமை பழனிச்சாமி செய்யமாட்டாரா?

இந்தியா முழுவதும் எதிர்க்கப்பட்ட முத்தலாக் சட்டத்தைத் தமிழகத்தில் எதிர்த்து , ராஜ்யசபா ஓட்டெடுப்பின் போது வெளிநடப்பின் போது கேவலமான எண்கணித அரசியல் செய்தவர் தான் இந்த ஆளுமை பழனிச்சாமி!

இந்தியாவில் மும்மொழிக் கொள்கையில் தென்மாநிலங்களில் இந்தி எனப் படிப்பதைப்போல வடக்கே ஏதோ ஒரு மாநிலத்தில் தமிழ் படிக்கட்டுமே எனப் போட்ட ட்வீட்டை 5 நிமிடத்தில் நீக்கிய பயந்த பழனிச்சாமி.

தமிழகச் சட்டசபையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் இயற்ற மறுத்த துரோகி பழனிச்சாமி

தமிழகச் சட்டசபையில் இயற்றிய நீட் எதிரான தீர்மானத்தின் மீது மத்திய அரசின் பதிலை மூடிமறைத்தவர் பழனிச்சாமி.


உங்கள் ஆட்சியில் கரோனா பற்றிய தகவல் தவறு எனக் கூறிய மூத்த பத்திரிக்கையாளர் மீது வழக்குத் தொடுத்தவர்தானே இந்தப் பழனிச்சாமி போலீஸ் மந்திரியாக ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடும், பொள்ளாச்சி பாலியல் வழக்கும் போதும் கள்ளமவுனம் சாதித்தவரே பழனிச்சாமி..

இத்தனை ஆதாரங்கள் போதுமானவை தானே!...

ஏன் தளபதி ஸ்டாலினே முதல்வராக வேண்டுமெனக் கூறி விடைபெற நினைக்கிறேன் உடன்பிறப்புகளே!...

தன் தந்தை திமுகவின் தலைவர் மறைந்த போதும் , மெரினா மறுக்கப்படு தமிழகத்தின் அடுத்த நிமிடம் என்ன என்ற பதற்றமான சூழலில் தமிழகம் உறைந்த நிலையில்கூட நீதிமன்றத்தை நாடியும், முதல்வரை சந்தித்தும் ஜனநாயகத்திற்கு உயிர் ஊட்டியவர்.

தேர்வு ரத்து முதல் விவசாயக் கடன் வரை ரத்து வரை அரசைச் செய்ய நிரபந்தபடுத்திச் சரியாக எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்புடன் கடமையாற்றியவர். 

இவ்வளவுதானா... 

இவரது எதிரி இந்தப் பழனிச்சாமி மட்டுமல்ல... அந்த அமித்ஷா... ஏதோ தேர்தல் சாணக்கியராம்.. ஆட்சி கவிழ்ப்பு ஸ்பெஷலிஸ்டாம்... 

தலைவர்தானே படைக்குப் பலம் படைகள் தானே , ஆகையால் தான் அவரே தலைவர் அவரே படைத்தளபதி!.. 

கலைஞரின் மகன் மட்டுமாகத் தான் திமுக எனும் போர்ப்படையின் தலைமையில் அமராமல் பல போர்க்களம் கண்டு தளபதியாகவும் இருந்திருக்கிறார்.. 

மே 2ல் பெறப்போகும் பிரமாண்ட வெற்றியின் மூலம் தெரியப்படுத்துவோம் இது பெரியார் மண் என...

ஸ்டாலின் தா வராரு

விடியல் தர போராரு!

Few data on the above cases

Love Jihad

In December Madhya Pradesh approved an anti-conversion bill same as the Uttar Pradesh one. As of 25 November 2020, four BJP-ruled states: Uttar Pradesh, Madhya Pradesh, Haryana, and Karnataka, were mulling laws designed to prevent "forcible conversions" through marriage, commonly referred to as "love jihad" laws.

Cases

Within 30 days, the UP Police has registered 14 cases under this law, which came into force on 28 November. A total of 51 arrests have been made, out of which 49 accused are in jail.

First case

Uttar Pradesh- Police has registered its first case under the newly-implemented anti-conversion law, accusing a Muslim man of trying to forcibly convert a Hindu girl.29 Nov 2020

Madhya Pradesh- a 22-year-old woman from Barwani district accused a 25-year-old man of assaulting her over her refusal to marry him and convert to Islam.- 19 January 2021

Cow slaughter bill

Responding to a question in the Rajya Sabha on 26 July 2019, the government stated that with the exception of 5 States (Kerala, Arunachal Pradesh, Meghalaya, Mizoram & Nagaland) and 1 Union Territory i.e. Lakshadweep, the rest of the States/UTs have legislation on the slaughter of cows

First case

Karnataka's first case under the newly amended anti-Cow slaughter Act has been registered in Kudgi village in Vijayapura district

By

கௌதம். தர்மா
ஊடகவியலாளர்
9688232067


No comments:

Post a Comment