Friday 2 April 2021

ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி! - பிரபு கந்தசாமி

 ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி! - பிரபு கந்தசாமி


ப்பொழுதும் போல 5 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் தானே இது, 234 சட்டமன்ற உறுப்பினர்களின் தேர்வு தானே இது, அவ்வப்போது நடைபெறும் ஆட்சிமாற்றம் தானே இது என நாம் நினைத்தால், நம்மையே நாம் ஏமாற்றிக் கொண்டு 

இருக்கிறோம் என்று தான் அர்த்தம்.

 

இந்த தேர்தல் மற்ற தேர்தல்களைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமானது. ஒவ்வொரு தேர்தலின் போதும் ஏதாவதொரு முந்தைய ஆட்சியில் நடந்த பிரச்சினையை கொண்டே வாக்குச் சேகரிக்கப்படும். ராஜீவ் படுகொலை, சொத்துக் குவிப்பு வழக்கு, எஸ்மா மூலம் பல லட்சம் அரசு ஊழியர்களை அனுப்பியது, 


2ஜி (பொய்யான வழக்கே என்றாலும்) இப்படி ஒவ்வொரு தேர்தலின் போதும் ஒரு முக்கியமான பிரச்சனையை எதிர்கட்சிகளோ, இதரக்கட்சிகளோ மக்களிடம் வாக்குச் சேகரிக்க கொண்டு வருவர். ஆனால் இந்த 2021 தேர்தலில் முக்கியமான பிரச்சினைகள் மட்டுமே நூறுக்கும் மேல் உள்ளன. ஒன்றை நினைத்தால் ஒன்று மறந்தவிடும் என்ற அளவிற்கு மக்களை வாட்டி வதைக்கும் விலையேற்றமும் சரி, மாணவர்களின் கல்விக்கனவை சிதைக்கும் நீட்டாகட்டும், விவசாய சட்டங்களாகட்டும், கடைசி பத்து வருடங்களில் சிதைந்த தொழிற்துறை, போக்குவரத்துதுறை பிரச்சனைகளாகட்டும்,கொரோனாவில் மக்கள் சாகட்டும், விலையேற்றத்தால் உண்ணாமல் இருக்கட்டும், எங்களுக்கு எங்கள் லஞ்சப்பணம் முக்கியம் என்ற அமைச்சர்கள் தொடங்கி, ஆளும் அரசின் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் என அனைவரும் அடித்த ஊழல் பணமாகட்டும் என ஆளும் அரசாங்கத்தால் நேரடியாகவும்,மறைமுகமாகவும் ஏற்படுத்தப்பட்ட  பிரச்சனைகள் பலவற்றை எதிர்கொண்டு இந்த தேர்தலை சந்திக்க உள்ளோம்.

 

அதுமட்டுமல்லாமல் பணமும், அதிகாரம் ஒருங்கே விளையாடும் ஒரு தேர்தல் இது. மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை அதிகாரம் கொண்டு, தங்கள் கட்சிக்குள் இணைத்து, இந்து நாடு, இந்துத்துவா நாடு என மாற்ற முற்படும் பாசிச மனப்பான்மை கொண்ட ஒரு கட்சி, பல்வேறு சிறு கட்சிகளாக பிரிந்து ஒரு எதிர்க்கட்சியான தி.மு.க வை எதிர்த்து போட்டியிடுகிறது. அதெப்படி திமுகவிற்கு மட்டும் ஓட்டு போட்டால், அந்த பாசிச வளையத்திற்குள் மாட்டமாட்டார்களா என்ற கேள்வியும் எனக்கு புரிகிறது.

 

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 38 தி.மு.க மற்றும் அதன் தோழமை உறுப்பினர்கள், இன்று பாசிசத்திற்க்கும், மக்களை பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும், கைதுக்கும் அஞ்சாமல் போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சில நச்சு செடிகள் இருக்க தான் செய்யும், அதையும் பிடுங்கி விட்டு பாசிசத்திற்க்கு எதிரான, அடக்குமுறைக்கு எதிரான, மக்களைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிரான வேர்களை வளர்ப்பதில் என்றுமே திமுக சோடை போனதில்லை.

 

இன்னொரு புறம், வெற்றிப்பெற்ற ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரும், தான் சார்ந்த கட்சி எது, கூட்டணி கட்சி எதுவென்று தெரியாமல், பாஜக தொண்டனாகவே மாறி அவர்களுக்கு சேவகம் புரிவதையும் நீங்கள் காணலாம். நீங்கள் அதிமுக கூட்டணிக்கு போடும் ஒவ்வொரு ஓட்டும், ஒரு நேரடியான பாஜக தொண்டரை தேர்ந்தெடுக்க உதவுமே தவிர, உங்கள் உரிமையை,உடமையை, அமைதியான வாழ்வை காப்பாற்ற இயலாது.

 

அதற்கென்ன, அதிமுக கூட்டணியை விட்டு, மய்யத்துக்கு போவோம், குக்கருக்கு போவோம், நாம் தமிழருக்கு போவோம் என்று நீங்கள் நினைத்தால், அதைவிட பெரிய முட்டாள்தனம் ஏதும் இல்லை.

 

சாதி வரிசையை படிவங்களிருந்து நீக்கிட்டால் சாதி அழிந்து விடும், கொள்கை ன்னா என்ன விலை, சமுகநீதி எவ்ளோ கிலோ ன்னு  வாட்சப் செய்திகளை நம்பி மக்களை ஏமாற்ற வந்துள்ள மற்றமோர் பாஜக கட்சி வடிவம் தான் மய்யத்தார். மக்களையாவது விடுங்க, கட்சி தொண்டருக்கு புரியுற மாதிரியாவது கட்சி தலைவர் பேசுவாருன்னு பார்த்தால், அவரிடம் கேட்கும் கேள்விகளுக்கு, நல்ல கேள்வி, அடுத்த கேள்வி ன்னு கேள்விகளை மடைமாற்றி விடுவதும், என்னை விட இவர் அழகா விவரிப்பார் ன்னு அடுத்தவர்களிடம் கேள்விகளை கொடுப்பதுமே சான்று இவருக்கு அரசியல் புரிதல் எவ்வளவு இருக்கிறது என்று. அந்த தேர்தல் வாக்குறுதிகளை மட்டும் படித்து விடாதீர்கள். கொரோனா அதிகரித்து கொண்டு இருக்கும் இந்த வேளையில், உயர் ரத்த அழுத்தம், கோவத்தால் நீங்கள் மருத்துவமனையில் சேர நேரிடும். அந்த வாக்குறுதிகள் அப்படித்தான் உள்ளன.

 

தான் ஆடாவிட்டாலும், தன் தசை ஆடுறமாதிரி, கட்சி தான் அதிமுக, அமமுக ன்னு பேர்ல வச்சி இருக்கோம், மத்தப்படி பாஜக ன்னு வந்தா ஒரே இணக்கம் தான், ஒரே விசுவாசம் தான்னு எதிர்கட்சியை எதிர்த்து இறங்கும் அமமுக.

 

வேட்பாளர் படிவத்தையே தவறுதலாக நிரப்பி மறுமுறை நிரப்பும் ஒருவர்(ஏற்கனவே இவர் தேர்தலில் போட்டி இட்டும் இருக்கிறார்), கொள்கைகள் என்னப்பா ன்னா, அதிமுக வையும், அமமுக இணைப்போம், படிப்பில் உயர்ந்தவர்களை மறுபடியும் மாடு மேய்க்க வைப்போம், அதற்கு ஒரு மென்பொருளை உருவாக்குவோம், ரத்த பரிசோதனை மூலம் தமிழர் அனைவரையும் வந்தேறியாக வகைப்படுத்துவோம் என அவதாரை காட்டிலும் ஆயிரம் மடங்கு பொருட்செலவில் உருவாக்கப்பட்ட உலகத்தில் வாழ்த்து கொண்டு, மறுபடியும் திமுக வை  மட்டும் பிரதான எதிரியாக கொண்டு இறங்கும் தம்பிகளின் கட்சி.

 

இந்த கொக்கோ கோலா, ஸ்பிரைட், பேஃன்டா எல்லாம் பார்க்க வேற வேற மாதிரி  இருந்தாலும், ஒரே தொழிற்சாலையின் பொருள்களே ன்னு சொல்ற மாதிரி, அதிமுக, அமுமுக, மய்யம், நாம் தமிழர் லாம் பாஜக தொழிற்சாலையின் பிற பொருள்களே.

 

இவர்களுக்கு எந்தவித்த்திலும் நீங்கள் போடும் ஓட்டு, ஒரு மசூதியின் அடியிலும், தேவாலயத்தின் அடியிலும் ஒரு ராமனைத் தேடத்தான் உதவுமே தவிர வேற எதையும் செய்யாது. அதோடு மட்டுமல்லாமல் ரோட்டில் நடந்து போகும் உங்களை, ஜெய் ஶ்ரீராம் ன்னு சொல்ல சொல்லுவர். சொல்லாவிட்டால் அவரை உங்களை அடிக்கவும் செய்வர். கோவிலுக்குள் யார் நுழைய வேண்டும் என சட்டம் வரும். 


11 ஆம் வகுப்பிற்கும் நீட் வரும். வறுமையின் பொருட்டு, நீட் தேர்வு பயிற்சி வகுப்புக்கு செல்ல இயலாமல் கனவை தொலைத்திட வேண்டி வரும், நீங்கள் திரும்பும் பகுதியெல்லாம்வட மாநிலத்தவர் கல்லூரிகளிலும், அரசுப்பணியிலும் இருப்பர், புது புது திட்டங்களால் அத்தியாயவசிய பொருட்களின் விலையும் ஏறும், நீங்கள் இந்தியரே இல்லை என்ற சூழ்நிலையும் வரும்.  அப்போதும் இந்த முதுகெலும்புள்ள திமுக தான் உங்களுக்கு போராடி கொண்டு இருக்கும்.

 

திமுக என்ன தவறே செய்யாத கட்சியா என்றால், அப்படி நான் சொல்லவேயில்லை. திமுகவிலும் தவறுகள் நடந்து இருக்கிறது. நடந்து கொண்டும் இருக்கிறது. அவைகளில் பலவும் திருத்தப்பட்டும் இருக்கிறது. தேர்தல் அறிக்கையில் சில வாக்குறுதிகள் விடுபட்டு விட்டன என சமூக வலைதள விவாதங்களுக்கு திமுக உடனே செவி சாய்த்து, அதையும் சேர்த்தது. இதை தான் சொல்கிறேன் மக்களுக்கான கட்சியென்று. ஒரு ஜனநாயக அரசில் 100% அப்பழுக்கற்ற அரசோ/கட்சியோ இந்த உலகத்திலும் இல்லை. திமுகவும் இதில் விதிவிலக்கு இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் இருக்கும் ஏனைய கட்சிகளுக்கு மத்தியில் திமுக சிறப்பானது, மக்களுக்கானது. பாசிசத்திற்க்கு எதிராக நிற்க கூடியது. திராவிடத்தின் துணைக் கொண்டு சமூக நீதியின் பக்கம் நிற்க கூடியது, ஒரு மாநிலத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் போராடக்கூடியது. முக்கியமாக மக்களின் இன்னல்களுக்கு தோல் கொடுத்து உதவிட கூடியது.

 

திமுக வெற்று வாக்குறுதிகள் கொடுத்துள்ளது. அதை நிறைவேற்றிட முடியாது ன்னு பலகூக்குரல்கள் இப்போதே கேக்கிறது. நியாபகம் இருக்கட்டும். இந்தியாவியே 69 விழுக்காடு இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் தான் முதல்முறையாக சாத்தியமாகிற்று. இலவச பொருட்கள் மக்களை சோம்பேறியாகும் என்ற கதறலுக்கு இடையில், இல்லை அது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பயன்படும் என்று நிரூபித்தது,


2 ரூபாய்க்கும் அரிசி கொடுக்க முடியும் என்பதையும் நிரூபித்தது.


திமுக என்றைக்கும் சொன்னதை தான் செய்யும், செய்வதை தான் சொல்லும்.


ஆதலால், திமுகவிற்கும், அதன் தோழமை கட்சிகளுக்கும் ஓட்டு போடுங்கள். பாசிசத்திற்க்கு எதிராக சேர்வோம்.


ஆதரிப்பீர் உதயசூரியன்.


கலைஞரின் உடன்பிறப்பு,

-பிரபு கந்தசாமி

No comments:

Post a Comment