Friday 2 April 2021

ஏன் வேண்டும் மீண்டும் திமுக ஆட்சி! - ஆர்.இளம்வழுதி

 ஏன் வேண்டும் மீண்டும்  திமுக ஆட்சி! - ஆர்.இளம்வழுதி



நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய திராவிட இயக்கத்தின் முதல் தொடக்கமான நீதிக்கட்சியின் உடைய காலத்தில் பெருவாரியான பார்ப்பனர் அல்லாதவர்கள் படித்து வேலை வாய்ப்பிற்கு வருகிற போது அந்த வேலை வாய்ப்புகளில் பார்ப்பனர் களுக்கு முன்னுரிமை இருப்பதை அறிந்து அதனைக் களைவதற்கு பார்ப்பனர் அல்லாதவருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்கிற அடிப்படையில் நீதி கட்சி தொடர்ந்து களமாடிய அதன் விளைவாக நீதிக்கட்சி ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தியது பார்ப்பனர் அல்லாத அனைத்து சாதியினருக்கும் ஆன அந்த இட ஒதுக்கீட்டின் மூலம் தமிழ்நாட்டில் பெரும் மாற்றங்களும் கல்வி வேலை வாய்ப்பில் பார்ப்பனர் அல்லாத மக்களினுடைய உரிமைகள் நிலைநாட்ட படுவதை உறுதிசெய்தது அதனுடைய தொடர்ச்சியாக திராவிடர் கழகம் அரசியல் கட்சியாக இல்லாமல் இயக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிற போதும் தொடர்ந்து இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டும் அதனை பாதுகாப்பதிலும் பெரும்பங்கை தந்தை பெரியார் அவர்கள் வகித்து வந்தார் இந்திய அரசியலமைப்பு சட்டம் முதல் திருத்தம் ஏ இட ஒதுக்கீட்டிற்கு ஆனது என்பதுதான் தமிழ்நாட்டினுடைய இட ஒதுக்கீட்டு பார்வை என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும் திராவிட இயக்கத்தினுடைய ஜீவாதார கொள்கை என்று சொன்னால் அது இட ஒதுக்கீடு ஆகத்தான் இருக்க முடியும் அப்படிப்பட்ட இட ஒதுக்கீட்டை பிறகு வந்த திமுக அரசு 69 சதவீத இட ஒதுக்கீடு வரை கொண்டு வந்தது ஏன் இந்த வரலாற்றை இப்போது நாம் இங்கு சொல்ல வேண்டியிருக்கிறது என்றால் இன்றைக்கு அந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு அதிமுக அரசால் பாரதிய ஜனதா தான் நினைத்தவாறு இந்த இட ஒதுக்கீடு கிடைப்பதற்கான வேலைகளை செய்கிறது நாடாளுமன்றத்தில் 10 சதவீத உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் வழங்குகிறோம் என்று சொல்லுகிற போது அதனை எதிர்க்காமல் இங்கு இருக்கக்கூடிய அதிமுக அரசு அதற்கு ஆதரவாக நின்றது 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று சொல்லி சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் எந்தவித சத்தமும் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்திலும் காமராஜர் பல்கலைக்கழகத்திலும் 10 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டுவந்து திணிக்கிறார்கள் அதனுடைய தொடர்ச்சியாக எல்லா பல்கலைக்கழகங்களிலும் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முற்படுகிறார்கள் அதிமுக தன்னை திராவிட கட்சி என்று சொல்லிக் கொண்ட போதிலும் அது தொடங்கப்பட்ட காலம் தொட்டு இன்று வரை தன்னை திராவிட இயக்கத்தினுடைய திராவிட சித்தாந்தத்தின் உடைய திராவிடக் கொள்கையின் உடைய பிரதிபலிப்பாக தன்னை முன்னிறுத்திக் கொண்டதே இல்லை திராவிடத்தை தன்னுடைய பிம்பமாக மட்டுமே அது வரித்துக் கொண்டதே ஒழிய அது ஒரு திராவிடர் கட்சி அல்ல என்பதற்கு இது ஒரு அழுத்தமான சாட்சியாக அமையும்.


பிறகு திராவிட இயக்கத்தின் மிக முக்கியமான கொள்கைகள் மொழிக் காப்பு என்பது நம்முடைய தாய்மொழியாம் தமிழ்மொழியை காப்பதன் பொருட்டு இந்தி எதிர்ப்பை நாம் கையில் எடுத்தோம் இந்தியா முழுவதும் இந்தியை கட்டாயமாக்கப்பட வேண்டும் இந்திதான் இனி அரசு அலுவலகங்களிலும் பள்ளிகளில் கற்பிக்கப்படும் இந்தியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று ராஜாஜி கொண்டு வந்த போது அதனை எதிர்த்து போர் முரசு கொட்டி அவர் தந்தை பெரியார் அவர்கள் அதனை தொடர்ந்து வந்த திமுக கழகத்தினுடைய அரசும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களும் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இரண்டாவது தீர்மானம் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் இருக்கும் என்று அண்ணா அவர்கள் கொண்டு வந்தார் அதனையே 50 ஆண்டுகாலம் அரசியல் வரலாற்றில் தமிழ்நாடு பின்பற்றி வருகிறது ஆனால் நாங்கள் தமிழ்மொழியை பாதுகாக்கிறோம் தமிழுக்கு நாங்கள் ஆதரவானவர்கள் என்று சொல்லுகிற இந்த அதிமுக அரசு மத்திய அரசு அலுவலகங்களில் தற்போது பெருகிவரும் இந்தி எழுத்துக்கள் இந்தி பலகைகளின் மூலம் வைக்கப்படும் விளம்பரங்கள் என்று எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் சட்டமன்றத்தில் இருமொழிக் கொள்கையை ஆதரிக்கிறோம் இந்திய எதிர்க்கிறோம் என்று சொல்லிவிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் இந்திய எழுத்துக்களையும் இந்தி பலகைகளையும் அனுமதிக்கிறது தன்னுடைய இரண்டாவது கொள்கையான மொழிக் கொள்கையும் இவர்கள் உண்மையாக இல்லை உறுதியாக இல்லை. 


பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் மூலம் தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்றுவரை அது கொண்டாடப்பட்டு வருகிறது அப்படி தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கிய தமிழகத்தில் இன்றைக்கு வடவர் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது மத்திய அரசு பணியாளர்கள் அதிக அளவில் ஆட்டக்காரர்களாக நிரப்புகிறார்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மற்றும் மத்திய அரசு தேர்வாணையத்தின் அடிப்படையில் நியமிக்க கூடிய உயர் பதவிகளில் ஒரு சதவீத அளவிற்கு கூட தமிழர்கள் இடம் பெறாமல் வடக்கே இருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்கிற சூழல் இங்கு நிலவுகிறது தமிழகத்தினுடைய உயர்கல்வி நிறுவனங்கள் பல்கலைக்கழகங்களில் தமிழகத்தில் இருக்கக்கூடிய பேராசிரியர்களை கொண்டு துணை வேந்தர்கள் நியமிப்பதை தவிர்த்து வட மாநிலங்களில் இருந்தும் பேராசிரியர்களின் நியமிக்கும் போக்கை தமிழக அரசு கையில் எடுக்கிறது தமிழக அரசு தேர்வாணையத்தின் அடிப்படையில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய இந்த அரசு வெளிமாநிலத்தவர்கள் இங்கு வந்து தேர்வு எழுதி வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக தேர்வாணையத்தின் அரசாணை வெளியிடுகிறது மின்வாரிய துறையிலும் பெரும்பகுதியான வடநாட்டிலிருந்து வந்து சேர்ந்த இருக்கிறார்கள் நெய்வேலியில் நாம் பார்ப்போம் ஒரு சதவீதம் கூட தமிழர்கள் இல்லை மத்திய அரசாங்கத்தால் இங்கு இயங்கக்கூடிய நிறுவனங்களையும் தமிழர்கள் இல்லை மாநில அரசாங்கம் நிர்வகிக்க கூடிய இடங்களிலும் தமிழர்களை புறக்கணிக்கிறார்கள் இது எத்தகைய அபத்தமான அநீதியான செயல் என்று உங்களுடைய பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.


கல்வித்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது சிறந்த மாநிலமாக விளங்குகிறது என்கிற பெயரை எல்லாம் இன்றைக்கு இறந்து மத்திய அரசு கொண்டு வரக்கூடிய நுழைவுத் தேர்வுகளை இந்த அடிமை அரசு ஏற்றுக்கொண்டு அதனை இம்மாநிலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு எந்தவித தடையும் இல்லை என்று இவர்கள் அனுமதி அளித்தது பெயரில் மருத்துவ கல்லூரியில் அதிக மதிப்பெண் பெற்று அதன் அடிப்படையில் மருத்துவ கல்லூரியில் சேர வேண்டிய தங்கை அனிதா அதனை தொடர்ந்து தமிழகமெங்கும் பல மாணவர்கள் தங்கள் உயிர்களை இறந்ததற்கு இந்த அதிமுக அரசே பொறுப்பு காரணம் பனகல் அரசர் காலத்தில் சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவராக முடியும் என்று இருந்த நிலையை மாற்றி திராவிடர் ஆட்சி இன்றைக்கு இந்த அடிமைகளிடம் சிக்கி நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் தான் இங்கு மருத்துவராக முடியும் என்று சொல்வது எத்தனை அயோக்கியத்தனமான செயல் மருத்துவ படிப்பிற்கு நுழைவுத்தேர்வு கொண்டுவந்தார்கள் பிறகு பொறியியல் கல்லூரிக்கும் நுழைவுத் தேர்வு என்று சொன்னார்கள் இப்பொழுது படித்து முடித்து வேலைக்கு சென்று தங்களுடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணுகிற நிலையில் இருக்கக்கூடிய பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த நர்சிங் படிப்பு படிக்க வேண்டும் என்று விருப்ப படுகிறாய் மாணவர்களுடைய வாழ்வில் ஏயும் இவர்கள் பெரும் தீயை வைக்கிறார்கள் நர்சிங் படிப்பதற்கும் நுழைவுத்தேர்வு என்று இந்த அரசு கொண்டு வந்திருக்கிறது இது எத்தனை மோசமான செயல் மாணவர்களின் மீது அக்கறையற்ற அரசு இந்த அதிமுக அரசு.


திமு கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது 1967-இல் நம்மை சூழ்ந்திருந்த பெரும் பொருளாதார சிக்கல் என்பது நாடு அழியும் அனைவருக்கும் தெரியும் அப்படியிருந்த தமிழ் நாட்டு பொருளாதாரத்தை பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுடைய வழிகாட்டுதலில் எடுக்கப்பட்ட சீரிய முயற்சிகள் பல நாள் பிறகு வந்த கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் பொருளாதார சீர்திருத்தங்கள் நிதி மேலாண்மை களின் அடிப்படையில் பொருளாதாரம் வளம் பெற்று நாட்டின் உற்பத்தியை பெருக்கி வருவாயை உயர்த்தி பொருளாதாரத்தில் குஜராத்திற்கு பிறகு மரணத்திற்குப் பிறகு தமிழ்நாடு தான் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திய பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்தை சாரும் அப்படியான தமிழ் நாட்டு பொருளாதாரத்தின் ஆதாரமாக இருந்த பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு இன்றைக்கு தனியாருக்கு தாரை வார்த்துக் கொண்டு இருக்கிறது அதனை கண்டித்து ஒரு வரி ஒரு அறிக்கை ஒரு தீர்மானம் கூட இந்த அதிமுக அரசு போட்டதில்லை இந்தப் பத்தாண்டு காலத்தில் அதிமுக அரசு ஒரு தொழில் நிறுவனத்தை கூட தமிழகத்தில் கொண்டு வரவில்லை அரசு சார்பில் வேலை வாய்ப்புக்கான அடிப்படையை கூட இவர்கள் உருவாக்கித் தரவில்லை நம் மாநிலத்திற்கு வரவேண்டிய நிறுவனங்கள் அண்டை மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது வேலைவாய்ப்பு இல்லாத தமிழகத்தினுடைய பட்டதாரி இளைஞர்கள் தலைமைச் செயலகத்தின் உள்ள துப்புரவு பணிகளை செய்வதற்கான வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய அவல நிலை தமிழகத்தில் இருக்கிறது வேலைவாய்ப்பின்மை எவ்வாறு தலைவிரித்தாடுகிறது என்பதற்கு இந்த ஒற்றை செய்தியை போதுமானது.


தமிழகத்தின் முதலமைச்சராய் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் வந்ததற்குப் பிறகு தமிழ்நாடு என்பது முழு மாநில அந்தஸ்து பெற்று மாநில சுயாட்சி முழக்கத்தை முன்வைத்து அகில இந்திய அரசியலையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாடு பெருமைக்குரிய மாநிலம் ஆனால் தற்போது மத்திய அரசாங்கத்தின் உடைய அதிகாரிகள் காவல்துறையினர் தமிழகத்தினுடைய தலைமை செயலகத்தில் வந்து விடக்கூடிய அளவிற்கு தமிழகம் தன்னுடைய மாண்பை இழந்திருக்கிறது ஒரு மாநில முதல்வருக்கு உண்டான அதிகாரங்கள் அவருக்கு உரியதான மதிப்பு டெல்லி தமிழகத்தின் மீதான பார்வை இது மூன்றும் இந்த அடிமை அதிமுக அரசால் தலைகீழாக மாறி இருக்கிறது தமிழக சட்டமன்றத்திற்கு என்று இருந்த பெருமைகளை குழிதோண்டி இந்த அரசாங்கம் வைத்திருக்கிறது அதற்கு சாட்சியாக தமிழக சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்பு தீர்மானத்தை மத்திய அரசு எள்ளளவும் மதிக்கவில்லை அந்த தீர்மானம் என்ன ஆனது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கம்யூனிஸ்ட் கட்சி உடைய தலைவர் டி ராஜா அவர்கள் கேள்வி எழுப்பிய போது அதற்கு மத்திய அரசு தரப்பில் இருந்து தரப்பட்ட பதில் கோப்பு தொலைந்து போய்விட்டது என்று பதிலளித்தார்கள் அத்தனை அலட்சியப் போக்கை தமிழகத்தின் மீது டெல்லி கை கொண்டுள்ளது மாநில அரசாங்கத்தினுடைய எந்தவித ஆலோசனைகளையும் ஏற்காமல் ஜிஎஸ்டி மத்திய அரசாங்கம் கொண்டு வந்தது அதற்கும் இந்த அதிமுக அரசுதான் தோளோடு தோள் நின்று உதவியது அப்படி ஜிஎஸ்டி மூலமாக தமிழகத்தில் இருந்து பெறப்பட்ட நிதியை சரியான முறையில் உகந்த நேரத்தில் மத்திய அரசு திருப்பித் தரவில்லை அப்படி திருப்பித் தராத பட்சத்தில் கஜா புயல் புயல் ஒக்கி புயல் என்று தமிழகம் பேரிடர்களால் தாக்கக் கூடிய சூழலில் இருந்தபோது ஒரு நியாயமான மத்திய அரசாக ஆட்சியாளர்களாக மோடியும் அமித் ஷாவும் மற்ற அமைச்சர்களும் யாரும் தமிழகத்திற்கு வந்து உதவவில்லை பார்வையிடும் கூட அவர்கள் தாமதமாக வந்தால் ஒழிய உரிய நேரத்தில் இல்லை அந்த புயல் களுக்காக வேண்டி மாநில அரசாங்கம் கேட்ட நிதியில் கூட கொடுக்க முடியாது என்று சொல்லி ஏதோ இனம் தருவதைப் போல் தொகையை இந்த மாநில அரசாங்கத்திற்கு அளித்தது மத்திய அரசு அதனையும் வெட்கமின்றி ஏற்றுக்கொண்டு தமிழகத்தில் வந்து நின்றது தான் அதிமுக அரசு நம்முடைய மீனவர்கள் இந்த புயலிலே மாண்டு போனார்கள் சிலருடைய படகுகள் சேதமானது கரையோர மக்கள் வீடுகளும் உடைமைகளும் சேதப்படுத்தப்பட்டது அதற்கெல்லாம் இந்த அதிமுக அரசு நிவாரணம் வழங்கவில்லைவிவசாயிகளின் உடைய பயிர்கள் தண்ணீரிலே மூழ்கியது வீடுகள் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டது அப்படி செய்த மாநிலங்களுக்கும் விளைபொருட்களுக்கு உரிய நிவாரணத்தை இந்த அரசு வழங்கவில்லை தமிழகத்தினுடைய மற்ற மாவட்டங்களில் ஏற்பட்ட சேதத்தையும் பாதிப்புகளையும் இவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை


விவசாயிகளின் உடைய தோழன் என்றும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவானவர்கள் என்றும் இந்த எடப்பாடி அரசு தன்னை மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லுகிறது ஆனால் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் வர வேண்டிய காவிரி நீரை இவர்கள் பெற்றுத் தரவில்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும் ஆணையம் அமைப்பதில் தாமதம் காவிரி நீரை உரிய நேரத்தில் பெற்றுத் தருவதில் தாமதம் என்று டெல்டா பகுதி னுடைய விவசாயத்தை அழிக்கும் நோக்கம் கொண்டு மத்திய அரசாங்கம் செயல்பட்டது என்றால் அதற்கு துணையாக இருந்தது இந்த அதிமுக அரசு விவசாயிகளின் உடைய மின்சாரத்தை வைத்தது அவர்களுடைய மானிய பொருட்களின் மீது கை வைத்து விவசாயிகளின் உடைய உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காமல் அவர்கள் தவித்த போது அதனை காது கொடுத்தும் இந்த மாநில அரசாங்கம் கேட்க மறுத்தது விவசாயிகளின் உடைய போராட்டம் பெரும் ஆக இந்த நாட்டில் மூன்று போதும் இந்த அடிமை அதிமுக அரசு அதனை கண்டுகொள்ளவில்லை விவசாயிகளின் உடைய குறைகளை மத்திய அரசாங்கத்தின் காதுகளுக்குப் கொண்டு செல்ல வேண்டும் என்கிற நோக்கத்தில் விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தியபோது அதற்கு இந்த அதிமுக அரசு ஆதரவு தெரிவிக்கவில்லை விவசாயிகளின் உடைய போராட்டத்தை குறித்து மத்திய அரசாங்கத்திற்கு இவர்கள் எடுத்து செல்லவில்லை டெல்லியிலே நிர்வாண போராட்டம் தொடங்கி எலிக்கறி உண்ணும் போராட்டம் என்று எல்லாவிதமான போராட்டங்களையும் விவசாயிகள் நடத்திய பிறகு நடிகைகளை சந்திக்க முன் வந்த பிரதமர் தமிழகத்தின் விவசாயிகளை சந்திக்க முன்வரவில்லை அதனை குறித்து ஒரு கண்டனமும் இந்த அதிமுக அரசு தெரிவிக்கவில்லை விவசாயிகள் விரோத சட்டமான வேளாண் திருத்த சட்டத்தை மத்தியில் ஆளக்கூடிய பாரதிய ஜனதா அரசு கொண்டு வந்தபோது அதற்கு ஆதரவாக வாக்களித்து இந்தியாவில் இருக்கக்கூடிய அத்தனை விவசாயிகளுடைய வயிற்றிலும் அடித்து இந்த அதிமுக அரசு என்பதை நினைவில் கொள்ளவேண்டும் இவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவானவர்கள் அல்ல இவர்கள் விவசாயிகள் ஆதரவு மனப்பான்மை கொண்டவர்கள் அல்ல இவர்கள் மோடிக்கும் மோடி யுடைய மந்திரி சபைக்கும் அவர்களுடைய நண்பர்களுக்கும் கட்டுப்பட்ட கட்டுண்ட அடிமைகள்


சட்டம் ஒழுங்கில் தலை சிறந்த மாநிலம் தமிழகம் என்கிற பெயரைப் பெற்று இருந்த சூழலில் இன்றைக்கு நாம் தலை குனிந்து நிற்க வேண்டிய சூழலுக்கு இந்த அதிமுக அரசு நம்மை கொண்டு வந்திருக்கிறது இந்தப் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியைச் ஆட்சி 200க்கும் மேற்பட்ட பெண்கள் அண்ணா எங்களை விட்டுவிடுங்கள் என்று அலறுகிறார் அந்த அவ்வளவு சத்தம் தமிழகத்தினுடைய எல்லா திசைகளிலும் எதிரொலித்தது அதற்கு காரணமாக இருந்தவர்கள் அதிமுக அரசாங்கத்திற்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் இந்த அரசு எத்தனை தாமதத்தை மேற்கொண்டது உரிய விசாரணைக்கு உட்படுத்த உரிய நடைமுறைகள் பின்பற்றாமல் எத்தனை காலம் தாழ்த்தி இந்த அரசு அதில் செயல்பட்டது என்பதை நாடே அறியும் தூத்துக்குடியில் தந்தையும் மகனும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திலேயே படுகொலை செய்யப்பட்ட அபாயகரமான ஆபத்தான ஒரு ஆட்சியை தான் இந்த அதிமுக அரசு நடத்திக் கொண்டிருக்கிறது சாதாரண பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் இந்த நிலைமை என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோம் ஆனால் இந்த ஆற்றின் உடைய அவலநிலை எங்கு வரை நின்று இருக்கிறது என்று சொன்னால் ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் தொல்லைக்கு உட்பட்டு இருக்கிறார் என்கிற அளவிற்கு பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை இந்த அதிமுக அரசு இதற்கு தலைகுனிய வேண்டும் பொறுப்பேற்க வேண்டும் இது கையாலாகாத அரசு என்பதற்கு இதுவே சாட்சி


இந்த பத்து ஆண்டுகள் இவர்களுடைய ஆட்சியில் தமிழகத்தினுடைய உட்கட்டமைப்பு என்று இவர்கள் ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை இவர்கள் கட்டிய பாலங்கள் பாதிப்புக்கு உள்ளாகிறது தரமானதாக இல்லை கட்டி முடித்த அடுத்த நாளே விரிசல் விடுகிறது சில பாலங்கள் இடிந்து விழுகிறது சில பாலங்கள் பேருந்து நுழைய முடியாத அளவிற்கு குறுகியதாக இருக்கிறது சில பாலங்களை இவர்கள் இன்னும் கட்டி முடிக்கவே இல்லை இப்படி தமிழ்நாட்டினுடைய உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவக்கூடிய எந்த ஒரு திட்டத்தையும் இந்த அதிமுக அரசு கொண்டு வரவில்லை அதற்கு மாறாக எட்டு வழி சாலை திட்டத்தை மத்திய அரசாங்கம் கொண்டு வந்தால் அதனை ஏகமனதாக இவர்கள் வரவேற்கிறார்கள் விவசாயிகளின் விளை நிலங்களை ஆக்கிரமித்து போடப்படும் எட்டு வழி சாலைக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் காண்ட்ராக்டர்கள் மூலம் காண்ட்ராக்டர்கள் மூலமாக கலெக்ஷன் கரப்ஷன் கமிஷன் என்று கோடி கோடியாக கொள்ளை அடிக்கிறார்கள் இவர்கள் கொள்ளையடிப்பது எங்கிருந்து தமிழகத்தினுடைய கஜானாவில் சுத்தமாக காலி செய்யும் நோக்கத்தோடு கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழகம் கடன் பட்டிருக்கிறது ஒருவர் ஒவ்வொருவருடைய தலையிலும் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் கடன் வரக்கூடிய அளவிற்கு இந்த மாநிலத்தின் உடைய நிதிநிலை வருவாயை சீரழித்து இருக்கிறது இந்த அதிமுக அரசு நமக்கு வேலை வாய்ப்பு இல்லை கல்வி இல்லை இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது விவசாயம் அழிக்கப்படுகிறது பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கிறோம் நம்முடைய வாழ்வில் சூனியமாக பட்டிருக்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் இந்த அடிமை அதிமுக அரசு இதனை கலைவதற்கு இதனை தூக்கி எறிவதற்கு நாம் முன் வரவேண்டும் அதற்காகத்தான் இங்கு மீண்டும் வேண்டும் திராவிடர் ஆட்சி என்ற முழக்கத்தோடு நாம் இந்த சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வருகிறோம்


திமு கழகமும் அதன் கூட்டணி கட்சிகளும் மீண்டும் இந்நாட்டில் ஒரு திராவிட ஆட்சியை கொண்டு வருவார்கள் என்கிற முழு நம்பிக்கையோடு மக்கள் அனைவரையும் ஒன்று திரட்ட வேண்டும் அவர்கள் மூலம் பெறப்படுகிறது உருவாக்கும் இந்த அதிமுக அரசுக்கும் பாசிச பாஜக அரசாங்கத்திற்கும் பேரிடியாக விழவேண்டும் தமிழர்களின் உடைய நலன் காக்கப்பட தமிழர்களுடைய உரிமை மீட்கப்பட மீண்டும் சுயமரியாதை உள்ள மாநில சுயாட்சியும் முழக்கத்தோடு அதை நோக்கிய பயணத்தை ஒரு அரசு இங்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சொன்னால் அது திமு கழகம் ஆகத்தான் இருக்க முடியும் திமு கழகம் தான் என் நாட்டின் திராவிட ஆட்சியை கொண்டுவர முடியும் என்கிற நம்பிக்கையோடு களமாடுவோம் வெற்றி பெறுவோம் வாகை சூடுவோம் தளபதியை முதலமைச்சராகவும்!!!


- ஆர்.இளம்வழுதி

No comments:

Post a Comment