Friday 2 April 2021

திராவிடம் வெல்லும் – கவிதை - கவிஞர்.சொ. கார்த்திக்

 திராவிடம் வெல்லும் – கவிதை - கவிஞர்.சொ. கார்த்திக்


நீதிக்கட்சி எனும் சிறுவடியில் மலர்ந்த சொல்

திராவிடர் கழகமென பெருவடியில் வளர்ந்த சொல்

தி.மு.க  அ.தி.மு.க  என இருவடியில் பிளந்த சொல் 

திராவிடம் என்றாலே ஆரியர்களின் எதிர்ச் சொல்

பார்ப்பனியத்தின் நேர் எதிரி எனப் போய்ச் சொல்

சமூக நீதியை உயர்த்திப் பிடிக்கும் வேர்ச் சொல்

இம்மண்ணில் தமிழரென அகம் உயர்த்தும் மெய்ச் சொல்

மனுதர்மத்தை மறுதலித்துக் கூறும் வாய்ச் சொல்

உயர்சாதி பெருமை பேசுபவரை வையும் சொல்

ஊரும் சேறியும் ஒன்றிணைப்பதைச் செய்யும் சொல்

உலகளாவிய தமிழர்கள் ஒன்றினையும் மொழிச் சொல்

தமிழரின் பண்பாட்டினை மீட்டெடுப்பதற்கான கலைச் சொல்

நமது நாட்டின் விடுதலைக்கான வழிச் சொல்

முதலாளித்துவம் முற்றுப் பெறுவதற்கான விழிச் சொல் 

பெரியார் சித்தாந்தங்களில் உறுதியாக நிற்கச் சொல்

எதிர்ப்பு உணர்ச்சிகளின் ஸ்தாபனம் என விளக்கிச்சொல்

அண்ணாவின் எழுச்சிமிகு உரையைக் கேட்கச் சொல்

அவர் வாதத்தில் பேதமில்லை என விளங்கச் சொல்

கலைஞரின் கவிதைக்குச் செவி கொடுக்கச் சொல்

தேர்தலில் ஸ்டாலின் வருகைக்கு கரம் கோர்க்கச் சொல்

தமிழர் தலைவரின் கருத்தினை மட்டும் உறக்கச் சொல்

பிறகு திராவிடமே வெல்லும் என உறுதிகொள்.    


- கவிஞர்.சொ. கார்த்திக்



திராவிடம் வெல்லும் – கவிதை - கவிஞர்.சொ. கார்த்திக்


சூரியன் உதயமே விடியலின் கிழக்கு

உழைக்கும் மக்களுக்கோ சுடர்விட்ட விளக்கு

அநீதிகள் இழைப்போர்க்குத் தேடிவரும் வழக்கு 

இருளில் கிடக்கும் மக்களுக்கு உதிக்கும் சூரியனே விளக்கு


சமத்துவமின்றி மனிதர்களுக்குள் சாதிச்சாயம் பூசிய

சாஸ்திரங்களுக்கு முன்னால்

சமத்துவபுரத்தால் சமநிலை கொடுத்து 

சர்க்கார் அமைத்தது திராவிடமே!

மற்றோர் மனதினில் இழிதொணில் இருக்கும் பட்சத்தில்

நடப்பு அரசியலின் அரசியல் பாணியை 

மாற்றியமைத்தது திராவிடம் அல்லவா?


இவ்வுலகில் உதயமான பல மொழிகளில் 

காலத்திற்கு ஏற்று உயிர்ப்போடு என்றும் இயங்கும் மொழி என்றால் 

அது தமிழ்மொழியே என்று 

உலகிற்கு உரக்கச்சொல்லி 

தமிழின் பன்மொழியை விளக்கி 

செம்மொழியாக்கிய கழகம் 

திராவிடர் கழகம்தானே?


இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வெளியேறும்போது 

அடைக்கலம் கொடுத்து அரவணைத்து நின்றது 

திராவிட மண்தானே!


இந்தியாவை இந்து ராஜ்யமாக மாற்றத்துடிக்கும் 

சனாதனிகளை எதிர்த்து

பெரியார் மண்ணில் திராவிடர் கழகமாய் 

கருஞ்சட்டைப் படைகளாய் வலம் வருவது 

திராவிடர்கள்தானே!


பருவகால மாற்றத்தால் இலைகள் உதிர்ந்து போனாலும்

உதிர்ந்த இலைகள் துளிர்ப்பதற்கு ஊன்றுகோலாய் இருப்பது

உதிக்கும் சூரியன்தானே 


அதுபோல

சனாதனத்தின் பிடியில் இரட்டை இலை உதிர்ந்து போனாலும்

என்றும் இடைவிடாது உதித்துக்கொண்டே இருக்கும் 

சூரியனைக் கொண்டு

இந்நாட்டிற்கு வெளிச்சம் கொடுக்க 

ஒன்றிணைவோம் திராவிடர்களாய்...


- கவிஞர்.சொ. கார்த்திக்

No comments:

Post a Comment