Friday 2 April 2021

மலர வேண்டும் தி.மு.க.ஆட்சி - Shiva Shimbu

மலர வேண்டும் தி.மு.க.ஆட்சி - Shiva Shimbu

  • அன்பாசான் பெரியார், அறிவாசான் அண்ணா, திராவிடப் பேரரசர் கலைஞர் ஆகியோரின் கனவுகள் நிறைவேற மலர வேண்டும் திமுக ஆட்சி.
  • தங்கை அனிதா, பிரதீபா போன்றோரின் உயிர் குடித்த நீட் தேர்வு நீக்கப்பட  மலர வேண்டும் திமுக ஆட்சி.
  • அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக மலர வேண்டும் திமுக ஆட்சி.
  • தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் புதிய கல்விக் கொள்கையும், சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் EWS reservation-ம், அனைத்து விதமான  நுழைவுத்தேர்வுகளும் நீக்கப்பட மலர வேண்டும் திமுக ஆட்சி.
  • வடக்கு வாழ, தெற்கு தேய உதவிகரமாக  டெல்லிக்கு சாமரம் வீசும்  அடி ஆட்சி ஒழிந்திட மலர வேண்டும் திமுக ஆட்சி.
  • தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த, தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தைச் செயல்படுத்த மலர வேண்டும் திமுக ஆட்சி.
  • மனிதர்களின் மலத்தை மனிதர்களே கையால் அள்ளும் முறை ஒழிக்கப்பட மலர வேண்டும் திமுக ஆட்சி.
  • திருச்சி, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் இரண்டாம் கட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்திட  மலர வேண்டும் திமுக ஆட்சி.
  • முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில்  பார்த்துப் பார்த்து கட்டிய புதிய தலைமைச் செயலகம் மீண்டும் தலைமைச் செயலகமாகச் செயல்பட மலர வேண்டும் திமுக ஆட்சி.
  • தளபதி மு.க.ஸ்டாலின் அறிவித்த 7 அம்சச் செயல் திட்டங்கள் நிறைவேற மலர வேண்டும் திமுக ஆட்சி.
  • 10 ஆண்டுகளாகத் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து, பின்தங்கியுள்ளது. இந்த அவல நிலை போக்க மலர வேண்டும் திமுக ஆட்சி.
  • சென்னை மாநகராட்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில், போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ள மலர வேண்டும் திமுக ஆட்சி.
  • துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் விரைந்து  செயல்படுத்தப்பட மலர வேண்டும் திமுக ஆட்சி.
  • தமிழ்த் தேசியம் என்ற பெயரில் இளைஞர்களின் மனதில் நஞ்சை விதைக்கும் கூட்டம் ஒழிக்கப்பட மலர வேண்டும் திமுக ஆட்சி.    


நன்றி!

- Shiva Shimbu



No comments:

Post a Comment