Friday 2 July 2021

2021 சட்டமன்றத் தேர்தல் - பயணமும் அனுபவங்களும் - சிவகுமார்

 2021 சட்டமன்றத் தேர்தல் - பயணமும் அனுபவங்களும் - சிவகுமார்


50 வருட திராவிட ஆட்சியில் திமுகவின் ஆட்சி காலம் மிகக்குறைவு ஆனால் திமுகவின் சாதனைகள் மிக அதிகம் . இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குவது திமுகவால்தான். அதில் சமூக நீதி உயரிய பங்கு வகிக்கிறது ! ஆனால் கடந்த பத்துவருட  அதிமுக ஆட்சி நம் உரிமைகளை அடகு வைத்து நம்மை பின்னோக்கி இழுத்துச்சென்றுவிட்டது ! 


மீண்டும் ஒருமுறை அவர்கள் வெற்றிபெற்றால் ஒரு தலைமுறை தனக்கான உரிமையை இழக்க நேரும் !! 


ஆகையால்  இழந்த உரிமையை மீட்டெடுக்க , சமூகநீதியை நிலைநாட்ட, சனாதானத்தை வேரூன்றாமல் தடுக்க , திமுகவின் ஆட்சி தமிழகத்தில் அமையவேண்டும். அத்தகைய முக்கியமான தேர்தலில் நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் மிக அவசியம்! 


அதனால் இதில் நிச்சயம் பங்கேற்கவேண்டும் என்று முடிவு செய்தேன் !!


எனது அலுவலக வேலை மற்றும் உணவக தொழில் காரணமாக தினமும் 16  மணி நேரம் உழைப்பேன் (ஞாயிறு நீங்கலாக). இந்த சூழலில் ஒருவாரம் விடுமுறை எடுப்பது மிகவும் கடினம் எனபதால் முன்கூட்டியே திட்டமிட்டேன். மனைவி உணவகத்தை ஒருவாரம் முழுவதும் பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்தேன். குழந்தைகள் காலையில் உணவகத்திலிருந்து இணைய வகுப்பில் கலந்துகொள்ளவும் , மாலையில் நண்பர் வீட்டில் தங்கவும் ஏற்பாடு செய்தேன். 


எப்போதும் ஏர் இந்தியாவில் மட்டுமே பயணிப்பேன் !! பயணத்திற்கு முதல் நாள் அட்டவணையில் மாற்றம் செய்தனர், தேர்தல் அன்று ஊருக்கு போகமுடியாதென்ற பதற்றம். டிக்கெட்டை மாற்றி வேறு தடத்தில் பதிவு செய்து ஏப்ரல் 6 காலை சரியாக ஊருக்கு சென்றடைந்தேன் .


வீட்டில் இரண்டு மணி நேர உரையாடலிற்கு பிறகு வாக்குச்சாவடி நோக்கி சென்றேன் ! நீண்ட வரிசை , ஓட்டளிக்க ஒருமணி நேரம் ஆகும் என்பதால் நண்பர் நாம் சென்று திமுக அலுவலகத்தில் உட்காரலாம். கூட்டம் குறைந்ததும் வந்து வாக்களிக்கலாம் என்றார். சரி என்று சென்று அவர்களை சந்தித்தோம் ... பல வியக்கும் விஷயங்களை கண்டேன் !


1 மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.


2 கடும் வெயிலை யாரும் பொருட்படுத்தவில்லை.


3 .பெண்கள் சாரை சாரையாக வாக்களித்தனர்.


4 திருவிழா போல் அனைவரும் குளித்து நல்ல உடை அணிந்து வந்திருந்தனர்.


5 சிறுபான்மையினர் பெரும்திரளாக வாக்களித்தனர்,


6 ஓட்டுப்போடும் மக்களின் பாதுகாப்பிற்கு சிறப்பான ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர் ...கை உறை, sanitizer , காவல் துறை பாதுகாப்பு வழங்கியிருந்தார்கள்


7 அமைதியாக ஓட்டுப்பதிவு முடிந்தது 


திமுகவின் முக்கியஸ்தர்களை சந்திப்பது என்று முடிவெடுத்து அன்று இரவே அண்ணன் எஸ்.எஸ் சிவசங்கர் அவர்களை அரியலூர் மாவட்ட அலுவலகத்தில் அவரது கடும் வேலைகளுக்கு நடுவே சந்தித்தேன். அவர்களின்  வெற்றி உறுதி என்பது முகத்தில் தெரிந்தது !!


அடுத்த நாள் அன்பு சகோதரி சல்மா அவர்களை துவரங்குறிச்சியில் சந்தித்தேன் ! இருமுறை சீட்டு கிடைக்காத நிலையிலும் மனம் தளராமல் பல்வேறு தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்து களைப்பாக இருந்தார் ..உற்சாகமாக திமுகவின் வெற்றி மற்றும் அவசியத்தை பற்றி பேசினார்கள்.


இரண்டு நாட்கள் கழித்து, தலைவரையும் அண்ணன் உதய் அவர்களையும் சந்திக்க புறப்பட்டேன் கொரோனா காரணமாக பார்வையாளர்கள் அனுமதி இல்லை.வேட்பாளர்களையும் ,மாவட்ட செயலாளர்களையும் சந்தித்தார் தலைவர். நான் அமெரிக்காவில் இருந்து ஓட்டுப்போட வந்துள்ளேன் என்பதை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்து அனுமதி கிடைத்தது ...5  நிமிடம்  பேசும் வாய்ப்பு ...நிறைய பேசணும் என்று சென்றேன். ஆனால், தலைவரை பார்த்ததும் பேச வரவில்லை . அவர்தான் என்னிடம் விசாரித்தார். நான் பதில் கூறினேன். புகைப்படம் கூட அனுமதி இல்லை ஆனால் தலைவரே எடுங்கள் என்றார் ...இதைவிட என்ன வேண்டும் நமக்கு !! 



தலைவர் கலைஞரை கண்டதுபோல் ஒருநொடி வியந்து நின்றேன் !!


மாலை 3 .30  மணிக்கு உதய் அண்ணனை சந்திக்க நேரம் ஒதுக்கி இருந்தனர் , ஆனால் நான் சென்றடைய 4  மணி ஆகிவிட்டது..அவர் அப்போதுதான் தேர்தல் வேலை செய்தவர்களுக்கு நன்றி சொல்ல புறப்பட்டுக்கொன்றிருந்தார் !!நான் அருகே வந்துவிட்டேன் என்று கூறியிருந்தனர் ...தாமதமாக வந்ததற்கு எந்த கோபமும் காட்டாமல் நன்றாக பேசினார்கள் ...அமெரிக்காவாருங்கள் என்ற அழைப்போடு விடைபெற்றேன் !! மட்டற்ற மகிழ்ச்சி !!!



இந்த பயணம் கடும் அலைச்சல் , தூக்கமின்மை , உழைப்பு , தியாகம் நிறைந்தது. அது திமுக வெற்றிபெற்றால் மனநிறைவை தரும் !!! நன்றி !!


- சிவகுமார்

No comments:

Post a Comment