Friday 2 July 2021

2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலும், திமுகவின் வெற்றியும் - ராஜராஜன் ஆர்.ஜெ

 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலும், திமுகவின் வெற்றியும் - ராஜராஜன் ஆர்.ஜெ


தினாறாவது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 2021 அன்று நடந்தது.


முக்கிய கட்சிகளான திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவற்றுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தல் களத்தில் இருந்தன. 


திமுக கூட்டணியான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்  காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இடது சாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.


அதிமுக கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியில்  பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.


234 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டு தேர்தலில் 72.81% வாக்கு பதிவானது. கொரோனா கொடுந்தொற்று காலத்தில் இந்த தேர்தல் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


திமுக கூட்டணியின் தலைவராக திரு.மு.க ஸ்டாலின் இருந்தார். அவரே முதல்வர் வேட்பாளராக இருந்தார். அதிமுக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி என இருவரும் இருந்தார்கள். 


 தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கணிப்புகள் அனைத்துமே திமுக கூட்டணி தான் வெற்றிபெறும் என்று சொன்னது. 

 

திமுகவின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 159 இடங்களை பெற்றது. அதில், திராவிட முன்னேற்றக்கழகம் மட்டும் 133 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. 


அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டத்தில் 75 இடங்களை பெற்றது. அதில் அதிமுக 66 இடங்களை வென்றது. 


திமுக கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் 45.39% (திமுக மட்டும் 37.7%)


அதிமுக கூட்டணி பெற்ற வாக்கு சதவிகிதம் 39.72% (அதிமுக மட்டும் 33.29%)


அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள்:


1) ஐ.பெரியசாமி (திமுக) - ஆத்தூர்  - 1,35,571 வாக்கு வித்தியாசம் 

2) எ.வ.வேலு (திமுக) - திருவண்ணாமலை - 94,673 வாக்கு வித்தியாசம் 

3) ஏ.கிருஷ்ணசாமி (திமுக) - பூந்தமல்லி - 94,110 வாக்கு வித்தியாசம் 

4) கே.பழனிசாமி (அதிமுக) - எடப்பாடி - 93,802 வாக்கு வித்தியாசம் 

5) கே.என்.நேரு (திமுக) - திருச்சி மேற்கு - 85,109 வாக்கு வித்தியாசம் 

6) மு.க.ஸ்டாலின் (திமுக) - கொளத்தூர் - 70,384 வாக்கு வித்தியாசம் 

7) உதயநிதி ஸ்டாலின் (திமுக) - சேப்பாக்கம் - 69,355 வாக்கு வித்தியாசம் 

8) தங்கம் தென்னரசு (திமுக) - திருச்சுழி - 60,922 வாக்கு வித்தியாசம் 

9) கே.பொன்முடி (திமுக) - திருக்கோவிலூர் - 59,680 வாக்கு வித்தியாசம் 

10) எஸ்.கதிரவன் (திமுக) - மண்ணச்சநல்லூர் - 59,618 வாக்கு வித்தியாசம் 


மு.க. ஸ்டாலினை முதலமைச்சராக கொண்டு மே 7ம் தேதி திராவிட முன்னேற்ற கழக அரசு ஆறாம் முறையாக தமிழ்நாட்டில் பொறுப்பேற்றுக்கொண்டது. 



மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சரவை


துறை

அமைச்சர்

பொறுப்பு

முதலமைச்சர்

மு.க. ஸ்டாலின்

பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, இந்தியக்காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத்திறனாளிகள் நலன்

நீர்வளத்துறை

துரை முருகன்

சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுசீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்

நகர்ப்புற வளர்ச்சித்துறை

கே.என்.நேரு

நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்

கூட்டுறவுத்துறை

இ. பெரியசாமி

கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலன்

உயர்கல்வித்துறை

க. பொன்முடி

உயர்கல்வி உள்ளிட்ட தொழிற்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல்

பொதுப்பணித்துறை



எ.வ.வேலு



பொதுப்பணிகள் (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)


வேளாண்மை - உழவர் நலத்துறை


எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக் கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீர்வை, கரும்புப் பயிர் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு

வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை


கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்


வருவாய், மாவட்ட வருவாய் நிர்வாகம், துணை ஆட்சியர்கள், பேரிடர் மேலாண்மை

தொழில்துறை

தங்கம் தென்னரசு

தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் பல தமிழ்ப் பண்பாட்டுத்துறை, தொல்பொருள்

சட்டத்துறை

எஸ். ரகுபதி

சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும ஊழல் தடுப்புச் சட்டம்

வீட்டு வசதித்துறை

சு. முத்துசாமி

வீட்டுவசதி, ஊரக வீட்டு வசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டு வசதி மேம்பாடு, இடவசதி கட்டுப்பாடு நகரத்திட்டமிடல் நகர் பகுதி வளர்ச்சி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்

ஊரக வளர்ச்சி துறை

கே.ஆர். பெரியகருப்பன்

ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள்

ஊரகத் தொழிற்துறை

தா.மோ. அன்பரசன்

ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உட்பட சிறு தொழில்கள், குடிசை மாற்று வாரியம்

செய்தித்துறை

மு.பெ. சாமிநாதன்

செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத் தொழில், நுட்பவியல், மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்

சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை

பி. கீதா ஜீவன்

மகளிர் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்த நிர்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மற்றும் இரவலர் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீர்திருத்தம் மற்றும் சத்துணவுத்திட்டம்

மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை

அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்

மீன்வளம் மற்றும் மீன் வளர்ச்சிக் கழகம் கால்நடை பராமரிப்பு

போக்குவரத்துத்துறை

ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்

போக்குவரத்து, நாட்டுடமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூர்தி சட்டம்

வனத்துறை

கா. ராமச்சந்திரன்

வனம்

உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை

அர. சக்ரபாணி

உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை

வி. செந்தில் பாலாஜி

மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்று கசண்டு (மொலாசஸ்)

கைத்தறி மற்றும் துணிநூல் துறை

ஆர். காந்தி

கைத்தறி மற்றும் துணிநூல், கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

மா. சுப்பிரமணியன்

மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலன்

வணிகவரி மற்றும் பதிவுத்துறை

பி. மூர்த்தி

வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

எஸ்.எஸ். சிவசங்கர்

பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றம் சீர்மரபினர் நலன்

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை

பி.கே. சேகர் பாபு

இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்

நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை

பழனிவேல் தியாகராஜன்

நிதித்துறை, திட்டம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தம், அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகள்

பால்வளத்துறை

சா.மு. நாசர்

பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சி

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை

செஞ்சி கே.எஸ். மஸ்தான்

சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வஃக்ப் வாரியம்

பள்ளிக்கல்வித்துறை


அன்பில் மகேஸ் பொய்யாமொழி



பள்ளிக்கல்வி


சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை

சிவ. வீ. மெய்யநாதன்


சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை

தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை

சி.வி. கணேசன்

தொழிலாளர்கள் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு

தகவல் தொழில்நுட்பத்துறை

த. மனோ தங்கராஜ்

தகவல் தொழில்நுட்பம்

சுற்றுலாத்துறை

மா. மதிவேந்தன்

சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

ஆதிதிராவிடர் நலத்துறை

என். கயல்விழி செல்வராஜ்

ஆதி திராவிடர் நலன், மலைவாழ் பழங்குடியினர்கள் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் நலன்


சட்டப்பேரவை தலைவர்


தமிழக சட்டமன்றத்தின் பேரவை தலைவராக ராதாபுரம் எம்.எல்.ஏ அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை பேரவை தலைவராக கீழ்பெண்ணாத்தூர் எம்.எல்.ஏ கு.பிச்சாண்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எந்த நெஞ்சார்ந்த நன்றி! - கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின்


உங்களுக்காக உழைப்பேன்!

உடன்பிறப்புகளுக்கும், கூட்டணிக்கும் நன்றி.

தமிழகம்  வெல்லும்!













தலைவர்களின் வாழ்த்துகள்:


தமிழ்நாட்டின் பதினாறாவது சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்தது. டிவிட்டரில் அவருக்கு வாழ்த்து சொன்ன தலைவர்களுக்கு நன்றிகளையும், அவரது அரசாங்கம் எப்படி இயங்கும் என்பதையும் கோடிட்டு பதில் அளித்து இருந்தார்.


டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வாழ்த்துக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்:


Thank you Hon'ble Chief Minister @ArvindKejriwal for your kind wishes. 


I hope to work towards ensuring greater federal structure within our country.


Many congratulations to @mkstalin on a resounding victory in the Tamil Nadu assembly polls. I wish him a successful tenure and the very best in fulfilling the aspirations of people of Tamil Nadu.


தேஜஸ்வியாதவ் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்:


Thank you @yadavtejashwi for your wishes. 


I will strive to usher in progressive measures and also empower the backward and downtrodden.


Congratulations to @mkstalin ji and the dedicated DMK & alliance workers for this resounding victory. TN people are desperately waiting for progressive pro-people policies under your able leadership.


அகிலேஷ் யாதவ் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்:


Thank you very much @yadavakhilesh for your wishes.


Congratulations @mkstalin on this remarkable victory!


சரத் பவார் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்:


Thank you @PawarSpeaks sir for your warm wishes. 


I hope to work hard and serve the people of Tamil Nadu as well as strengthen the secular forces in our country.


Sharad Pawar

@PawarSpeaks


Congratulations @mkstalin on your win, a truly well deserved victory! Wishing you the best to serve people who have instilled their faith in you!


இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்:


Thank you  @Jharrisjayaraj for your wishes.


Harris Jayaraj

@Jharrisjayaraj


Congratulations to Mr.Stallin @mkstalin @arivalayam #udayanidhistalin for the #victory 


காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் சர்மா அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்:


Thank you @AnandSharmaINC for your warm wishes.


Together, we will do all that we can to safeguard the founding principles of this great country - democracy, federalism and secularism.


Anand Sharma

@AnandSharmaINC


Congratulation @mkstalin ji for leading the magnificent and richly deserved victory in Tami Nadu. Leading the DMK-Congress + alliance and worsting the state power of AIADMK-BJP  is a win for the spirit of Indian democracy and federalism. @KanimozhiDMK


பஞ்சாபின் சுக்பிர் சிங் பாதல் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்:


Thank you for your wishes @officeofssbadal.


I will strive to usher in inclusive growth and prosperity in Tamil Nadu.


Sukhbir Singh Badal

@officeofssbadal


Hearty congratulations to @mkstalin on a resounding victory in Tamil Nadu assembly polls. Wishing him success in fulfilling the aspirations of people of the state.


#ElectionResults2021


காஷ்மீரின் உமர் அப்துல்லா அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்:


Thank you @OmarAbdullah and may the spirit of federalism and brotherhood prevail in our country.


Omar Abdullah

@OmarAbdullah

Warmest congratulations to @mkstalin ji for leading the DMK & allies to victory in Tamil Nadu. The people of Tamil Nadu will benefit greatly from your leadership over the next five years.


புதுவை மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்:


Thank you @VNarayanasami brother for your generous wishes and support.


Tamil Nadu will now come back onto a path of secular and inclusive growth.


V.Narayanasamy

@VNarayanasami


My heartiest congratulations to Shri @mkstalin for landslide Victory in #Tamilnadu assembly elections You led the UPA alliance got spectacular victory I am confident under your chief ministership Tamilnadu will progress.


லாலு பிரசாத் யாதவ் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்:


Thank you very much @laluprasadrjd for your very kind wishes. 


I hope to continue the work of the social justice movement and work hard to carry forward the legacy of Kalaignar.

Lalu Prasad Yadav

@laluprasadrjd


Many congratulations Thiru @mkstalin on your stupendous victory! I am sure you will carry forward the social justice legacy of respected Kalaignar Karunanidhi ji and live up to the expectations of dravidian brothers and sisters.


நிர்மலா சீதாராமன் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்:


Thank you Hon'ble Minister @nsitharaman for your kind wishes.


The people of Tamil Nadu look forward to be active partners in rebuilding this great country and reinstate the values of federalism into our public discourse.


Nirmala Sitharaman

@nsitharaman


Good wishes and congratulations @mkstalin on your success in the Assembly election in Tamil Nadu. Wishing you and @arivalayam a good tenure in the service of the people.

திரு. @mkstalin அவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்


காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் வாழ்த்துக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்:


Thank you, brother @RahulGandhi for your kind wishes and unstinted support. 


Tamil Nadu will always stand with federal, secular and egalitarian forces of the country.


Rahul Gandhi

@RahulGandhi


Congratulations to Shri MK Stalin for the victory. 


People of Tamil Nadu have voted for change and we will, under your leadership, prove to be a confident step in that direction.


Best wishes.


இந்திய ஒன்றிய அரசின் பிரதமர் மோடி அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:


Thank you Hon'ble Prime Minister @narendramodi for your kind wishes. 


I look forward to working with the Union Government to fulfill aspirations of the State. 


Through federal co-operation, I am sure we will overcome COVID-19 and chart the post-pandemic growth story.


நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:


முத்தமிழறிஞர் கலைஞர் மீது மிகுந்த மரியாதை கொண்டவரும் அன்புச் சகோதரருமான சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களது வாழ்த்துகளுக்கு இதயபூர்வமான நன்றி!


அவர் வாழ்த்தியது போல அனைத்து மக்களின் நலன் காக்கும் அரசு அமையும் என்ற உறுதியினை வழங்குகிறேன்.



நடிகர் கமலகாசன் அவர்களின் வாழ்த்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்:


அன்பு நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான @ikamalhaasan அவர்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி!


பேரிடரிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் பணியில் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் புதிய அரசு மேற்கொள்ளும் மக்கள் நலப் பணிக்குத் துணையாகட்டும்.


Kamal Haasan

@ikamalhaasan


பெருவெற்றி பெற்றுள்ள @mkstalin அவர்களுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துக்கள்.


அமித் ஷா அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:


Thank you Hon'ble Minister @AmitShah for your wishes. 


Tamil Nadu will stand with the Union Government to fulfil our federal obligations and to advance the interests of its people.


Amit Shah

@AmitShah


Congratulations to @MamataOfficial Didi, Shri @vijayanpinarayi, and Shri @mkstalin for their parties success in the assembly elections. I am sure the state governments will work shoulder to shoulder with the central government for the welfare of the people.


முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:


மூத்த அரசியல் தலைவரும் இந்திய ஒன்றியத்தின் மேனாள் நிதியமைச்சருமான @PChidambaram_IN அவர்களுக்கு நன்றி!


புதிதாக அமையும் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு, பொதுமக்களின் நலன் காக்கும் அரசாகச் செயல்படும்.


தங்களின் ஆலோசனைகள் எங்களை வழிநடத்தும்.


P. Chidambaram

@PChidambaram_IN


புதிய அரசை அமைக்கவிருக்கும் தி மு கழகத்திற்கும், அதன் தலைவர் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கும் என் உளங்கனிந்த பாராட்டுதலையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்:


இசைப்புயல் - ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி.  தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்.


A.R.Rahman #99Songs Face with medical mask

@arrahman


சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!Flag of IndiaPalms up togetherHandshake#tamilnadu


முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:


மாண்புமிகு @EPSTamilNadu அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை!


ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!


Edappadi K Palaniswami

@EPSTamilNadu


தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் @mkstalin


முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:


மாண்புமிகு  @OfficeOfOPS அவர்கள் என்னைத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அவருக்கு எனது இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களின் வளர்ச்சிக்காக கழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் அனைவர் ஒத்துழைப்பும் தேவை எனக் கேட்டுக் கொள்கிறேன்.


@OfficeOfOPS


தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்கவிருக்கும் திமுக தலைவர் மாண்புமிகு திரு.ஸ்டாலின் @mkstalin அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.


கேரளா மாநில தேர்தலில் வெற்றிபெற்ற பினராயி விஜயன் அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்:


On behalf of DMK, I congratulate Comrade @vijayanpinarayi for leading his party to victory in the Kerala State Elections. 


His measured and decisive leadership has been instrumental in helping Kerala achieve great heights and I wish him another very successful tenure.


மேற்கு வங்க தேர்தலில் வெற்றிபெற்ற மம்தா பானர்ஜிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்:


I congratulate @MamataOfficial on her re-election as Chief Minister of West Bengal. 


At a time of COVID-19 wave, I have no doubt that Didi will ensure safety of citizens and lead her state to growth and prosperity.


On behalf of DMK, I wish Didi another successful tenure.


வெற்றி பெற்றபின் கலைஞர், அண்ணா, பெரியார், பேராசிரியருக்கு மரியாதையை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்:


கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன்.


தமிழக மக்களாகிய நீங்கள் அளித்துள்ள தீர்ப்பினைக் கொண்டு உங்களுக்காக உழைத்திடும் எண்ணத்தை நெஞ்சில் ஏந்தி பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரது நினைவிடங்களில் மரியாதை செலுத்தினேன் என பதிவிட்டுள்ளார். மேலும், தந்தை பெரியார், பேராசிரியர் அன்பழகன் ஆகியோருக்கும் தனது மரியாதையை செலுத்தினார்.









No comments:

Post a Comment