Saturday 31 July 2021

இரண்டாம் இடம் என்ன அவ்வளவு இழிவா? - கவிப்பேரரசு வைரமுத்து

 இரண்டாம் இடம் என்ன அவ்வளவு இழிவா? - கவிப்பேரரசு வைரமுத்து


கலைஞர் இருந்து, பேராசிரியர் மறைந்தால் கலைஞர் என்ன செய்திருப்பாரோ அதை தன் தோள்களில் தாங்கிச்செய்தார் தளபதி ஸ்டாலின் அவர்கள்.


இரண்டாம்  இடம் என்ற சொல் இந்த சபையில் அதிகம் ஒலித்தது. இந்த இரண்டாம் இடம் குறித்து பேராசிரியரிடமே கேட்டிருந்தால் என்ன  பதில் சொல்லி இருப்பார் என்று நான் ஆய்ந்துப் பார்த்தால்..


ஒருவர் கேட்கிறார்..


ஏன்  இரண்டாம்  இடத்தில் இருக்கிறீர்கள்? ஏன் முதல் இடத்திற்கு நீங்கள் முயற்சிசெய்யக்கூடாது? 


பேராசிரியர் சொன்னப்பதில்..


எந்த இடத்தில் இருக்கிறேன் என்பது முக்கியமில்லை. எந்த இலட்சியத்தில் இருக்கிறேன் என்பது முக்கியம். 


முதல் இடத்தில இருந்து இலட்சியத்தை தொலைத்திருப்பதை விட இரண்டாம் இடத்தில் இருந்து இலட்சியத்தை காப்பது பெரிதல்லவா!


இரண்டாம் இடம் என்பது லட்சிய இடம். பேராசிரியர் தன்னை அறிந்த அரசியல்வாதிகளில் அரிதானவர். தன்னை வெல்வான் தரணி   வெல்வான். இது பேராசிரியருக்கு பொருந்தும். அதனால் தான், தன்னை விட 2 வயது குறைந்த கலைஞரை தனது தலைவராக ஏற்றுக்கொண்டார், இலட்சியத்துக்காக. அதுக்கூட முக்கியமில்லை, தன்னைவிட 31 வயது இளையவரான தளபதியை தலைவராக ஏற்றுக்கொண்டார், இலட்சியத்துக்காக. இரண்டாம் இடம் என்றால், அது என்ன அவ்வளவு இழிவா? இரண்டாம் இடம் என்றால் அத்தனை தாழ்வா!


இது கட்டை விரல், முதல் இடம்.


இது ஆட்காட்டி விரல், இரண்டாம் இடம்.


இந்த இரண்டாம் இடத்தில் இருக்கும் ஆட்காட்டி விரல் தான், வாழ்க்கை முழுவதும் இலட்சியத்தை சுட்டிக்காட்டிக்கொண்டே இருந்தது. தமிழை சுட்டிக்காட்டிக்கொண்டு இருந்தது. பகுத்தறிவை சுட்டிக்காட்டிக்கொண்டு இருந்தது. இனமானத்தை சுட்டிக்காட்டிக்கொண்டு இருந்தது.   


தமிழில் எத்தனையோ பேராசிரியர்கள் இருக்கும் போது, ஏன் அன்பழகனாருக்கு மட்டும் பேராசிரியர் என்ற சிறப்பு பட்டம்? 


மற்ற பேராசிரியர்கள் எல்லாம் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தார்கள். அன்பழகனார் மட்டும் தான் தமிழர்களுக்கு பாடம் எடுத்தார்.  


No comments:

Post a Comment